சனி, 28 ஆகஸ்ட், 2021

'தல'ஆடி வெள்ளி - ரவா டோக்ளா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சேர்ப்பது மிக்க கடினம்; செலவு செய்வது எளிது - பணம் மட்டுமல்ல அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட. 


******


'தல'ஆடி வெள்ளி:



ஆடி வெள்ளி என்பதால் இன்று மகளும், நானும் காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று அரச மரத்து நாகர்களுக்கு பால் தெளித்து விட்டு வந்தோம். அங்கே கோவில் மதிலை வலம் வந்து கொண்டிருந்தது அழகான ஆண் மயில்! பெரிய தோகையுடன். அங்கேயே ஒரு பெண்மணி கோவிலுக்கு வந்திருக்கும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமத்துடன் தாம்பூலம் தர வாங்கிக் கொண்டேன்.. வரும் வழியில் கணேஷா கோவிலையும் பிரதட்சணம் பண்ணி விட்டு வீடு திரும்பினோம்.


இன்று காலையில் கோவிலுக்கு கிளம்ப புடவை கட்டிக் கொள்ளும் போது வந்த நினைவு!  எங்களுக்கு திருமணமானதும் இரண்டே மாதத்தில் வந்த முதல் ஆடி மாத வெள்ளிக்காக என் மாமியார் சொன்ன வழக்கங்களை கடைப்பிடிக்க தயாரானேன்.


முதல் நாளே கீழ் வீட்டில் வசித்த நண்பரின் அம்மாவிடம் என்னென்ன செய்ய வேண்டும்! எப்படித் தயார் செய்ய வேண்டும்! என்று தெரிந்து கொண்டு வந்தேன். அதற்கேற்றாற் போல் அதிகாலையில் எழுந்து குளித்து, என்னவருக்காக ரொட்டி, சப்ஜி தயாரித்து, ஆடி வெள்ளிக்காக மாவிளக்கு, வடை (அது வடையாக வரவில்லை!), பாயசத்துடன் தயார் செய்து விட்டேன். நைவேத்தியமும் செய்தாச்சு.


என்னவர் தன் நண்பருடன் அலுவலகம் கிளம்ப எத்தனிக்க, இருங்க! நானும் வரேன்! என்று வீட்டில் போட்டது போட்டபடி இருக்க அவருடன் கீழே இறங்கி விட்டேன்!.செய்த பாயசத்தையும், வடையையும் நண்பர் வீட்டில் கொடுப்பதற்காக..! என்னவரும் அலுவலகம் கிளம்பி விட்டார். பை..பை..சொல்லியாச்சு..:)


வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு, மற்ற வேலைகளைப் பார்ப்போம் என்று சிந்தித்தபடி படியேறி வந்தால் வீடு பூட்டியிருக்கிறது...:) சாவி என்னவரின் சட்டை பாக்கெட்டில்..:) நம்மளை நம்பி ஒரு ஜீவன் இங்க இருக்கே என்பதே நினைவில்லாமல் போய்விட்டது..:) ம்ம்ம்!! செல்ஃபோன் இல்லா நாட்களாயிற்றே!! அலுவலகம் செல்ல ஒரு மணிநேரத்துக்கும் மேலாகும்..:) வீட்டிலிருந்து 14 கிமீ..:)


மீண்டும் நண்பரின் வீட்டிற்கே சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு மணிநேரத்துக்குப் பின் அலுவலக எண்ணிற்கு அழைத்து, "மிஸ்டர். வெங்கட்ராமன் சே பாத் கர்னா ஹே! மே உஸ்கா பத்னி ஹூம்..:) என்று சொன்னேன். Grammar mistake..:) 'உஸ்கா' என்று வராது..:) 'உன்கா' என்று தான் வர வேண்டும்..:) நான் 'அதோட'' பொண்டாட்டி என்று அர்த்தம்..:) அலுவலகத்தில் எல்லோரும் சிரித்து கலாட்டா செய்திருப்பார்கள்..:)


ஒருவழியாக என்னவரிடம் விஷயத்தை சொன்னதும் "நீ அங்கேயே இரு! நா சாயந்திரம் தான் வருவேன்' என்று சொல்லி விட்டார்..:)” அன்று ஒரு 'ஜார்ஜெட்' புடவை தான் உடுத்திக் கொண்டிருந்தேன். டெல்லி வெயிலின் கசகசப்பில் வியர்வை ஆறாக பெருக்கெடுக்க, மாலை வரை நண்பரின் வீட்டிலேயே இருந்தேன்..:) 


இப்படியாக 'நம்ம தல'யுடன் கொண்டாடிய 'தல' ஆடி வெள்ளி நினைவு...:)


******


ரவா டோக்ளா:



ரவா உப்புமா சிலருக்கு பிடிக்கும், பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை..:) ரவையில் வித்தியாசமான ஒரு ரெசிபி. பொதுவாக கேரளத்து உணவுகளைப் போல குஜராத்தி உணவுகளும் எனக்கு பிடித்தமானது. 


'டோக்ளா' நான் அவ்வப்போது செய்வதுண்டு. புகைப்படங்களையும் இங்கு பகிர்ந்திருக்கிறேன். அது ஒரு Steamed food என்பதாலேயே எனக்குப் பிடிக்கும்...:) பொதுவாக டோக்ளா என்றால் கடலைமாவில் செய்வது தான் வழக்கம். இன்று ரவையை உபயோகித்து டோக்ளா செய்து காண்பித்துள்ளேன். வழக்கமான உப்புமாவிலிருந்து சற்றே வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்..:) உப்புமா பிடிக்காதவர்களுக்கு கூட இது பிடிக்கலாம்..:)


முதல்முறையாக செய்ததில் நன்றாகவே வந்துள்ளது. ஆறினப் பின்னும் soft ஆகவே இருந்தது. Adhi's kitchenல் இந்த ரெசிபியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.


How to make Rava dokla recipe by Adhi venkat/snack/Breakfast/Gujarati dish/Steamed food/ரவா டோக்ளா! - YouTube


******


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்

21 கருத்துகள்:

  1. தல ஆடிவெள்ளி அனுபவம் புன்னகைக்க வைத்தது.  ரவா டோக்ளா ஒருமுறை முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவா டோக்ளா மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருந்தது சார். செய்து பாருங்கள். பதிவு குறித்த தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. சாவி தொலைந்த அனுபவத்தை முன்பே படித்திருக்கிறேன்.

    ரவா டோக்ளா எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எல்லா நேரங்களிலும் சரியாக வராது. எபிக்கு அனுப்ப எடுத்துவைத்திருக்கிறேன்.

    பஹ்ரைன்ல உ பி வாலா கடைகளில் செய்வார்கள். நன்றாக இருக்கும். (கடலைமா கிலோ 110 ரூபாய்னா கிலோ ரவை 20 ரூபாய்தான்). ரவா டோக்ளாவிற்கும் கமன் டோக்ளாவிற்கும் ஒரே விலை நிர்ணயம் செய்திருந்தது கடுப்பாக இருக்கும்.

    பெங்களூர்ல கமன் டோக்ளாவில் சீனித் தண்ணீரை ஊற்றிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நினைவாற்றலை நினைத்து வியக்கிறேன் சார். டெல்லியிலும் சீனித் தண்ணீர் தெளித்து தான் கிடைக்கும்.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  5. ரவா இட்லிக்கும் ரவா டோக்லாவுக்கும் ஆறு வித்யாசங்கள் கூறுக.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. ஆடி வெள்ளி அனுபவம் புன்னகைக்க வைத்தது. அந்த சமயத்தில் கஷ்டமாக இருந்திருந்தாலும் இப்போது நினைக்கும்போது இனிய அனுபவமாக மாறியிருக்கும்!
    ரவா டோக்ளா அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோம்மா..அப்போது சங்கடமாக இருந்தது இப்போது சிரிப்பை தான் வரவழைக்கிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு
  7. ஆடிவெள்ளி அமர்க்களமா நடந்திருக்கு.
    நெனச்சுபாத்தா இனிச்சுகெடக்கு என்று பாடலாம். டன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சிம்மா..

      தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ருக்மணி அம்மா.

      நீக்கு
  8. தல ஆடி அனுபவம் மறக்கவே மறக்காது.
    அனைத்தும் முகநூலில் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. தல ஆடி நினைவுகள் அருமை:).

    ரவா டோக்ளா புதுமையான செய்முறை. முயன்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள்.மிகவும் சுவையாக இருந்தது.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி.

      நீக்கு
  10. தல ஆடி வெள்ளி...தலைப்பே சூப்பர். திருமணமான
    புதிதில் எல்லாமே புதிது தான்:)
    வெகு சுவாரஸ்யம்.ஆனாலும் அந்த ஜார்ஜெட்
    புடவையில் வெய்யில் தாங்குவது கடினம். அதுவும் கோயம்பத்தூர்
    பொண்ணு!!!
    கோவிலுக்குப் போய் வந்தது
    மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜார்ஜெட் புடவையில் அன்று ஒருவழியாகி விட்டேன்..:) வியர்வையே பார்த்திராத குளுகுளு பொண்ணு..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  11. தல ஆடி வெள்ளி...தலைப்பே சூப்பர். திருமணமான
    புதிதில் எல்லாமே புதிது தான்:)
    வெகு சுவாரஸ்யம்.ஆனாலும் அந்த ஜார்ஜெட்
    புடவையில் வெய்யில் தாங்குவது கடினம். அதுவும் கோயம்பத்தூர்
    பொண்ணு!!!
    கோவிலுக்குப் போய் வந்தது
    மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....