அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்க்கைப் பாடம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உங்கள் பலவீனத்தைக் குறி வைப்பவன் நண்பன் அல்ல; நண்பன் எனும் போர்வையிலிருக்கும் எதிரியே!.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் யோனா அக்ரிபா (Yona Agrippa) அவர்கள் எழுதிய “யுகங்களைக் கடந்த அக்னி” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: 295
விலை: ரூபாய் 49/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
யுகங்களை கடந்த அக்னி: காதலையும் கர்மாவையும் கடவுளால் கூட மாற்ற இயலாது (Tamil Edition)
*******
யுகங்களைக் கடந்த அக்னி - இல்லை இல்லை யுகங்களைக் கடந்த காதல்! காதலித்துப் பார் அதன் சுகமும் வலியும் புரியும் என்று என் நண்பர் ஒருவர் சொல்வார்.இந்த வாழ்க்கையில் கிடைக்கும் காதலும் அதன் இனிமையும் காதலில் பிரிவு ஏற்பட்டால் உண்டாகும் மன வருத்தமும் வலியும் குறித்து நீங்கள் நிறைய அனுபவங்களைக் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம்! ஏன் நீங்களே கூட காதலித்து அது குறித்த பட்டறிவு உங்களுக்குக் கிடைத்திருக்கலாம்! இந்தக் காதல் இந்த ஒரு பிறவியில் மட்டுமல்லாது பல பிறவிகளுக்கு, இல்லை இல்லை பல யுகங்களுக்கு முன்னதான ஒரு பிறவியில் வந்திருந்து, அதில் காதலித்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தப் பட்டு காதலியை எங்கே சென்றாள் என்று தெரியாதபடி பிரிய நேர்ந்தால்….. நினைக்கும் போதே அந்த காதலனின் வேதனை, (திருமணத்திற்கு முன்னர்) காதலித்திருக்காத எனக்கே புரிகிறது! :) திருமணத்திற்குப் பின்னர் நான் யாரைக் காதலிக்கிறேன் என்ற கேள்வி அர்த்தமற்றது! :)
யுகங்களைக் கடந்த அக்னி: காதலையும் கர்மாவையும் கடவுளால் கூட மாற்ற இயலாது என்று தலைப்பில் சொல்லும் Yona Agrippa என்ற நூலாசிரியரின் இந்த நூல் நல்லதொரு கற்பனை. பல யுகங்களுக்கு முன்னர் அக்னி தேவனுக்கு ஏற்பட்ட காதல், அவரது பெற்றோர்கள், அக்னிதேவன் பிறப்பதற்கு முன்னரே “ஸ்வாஹா”வுடன் திருமணத்தினை நிச்சயித்துவிட, லோகத்தின் பலன் கருதி பெற்றோர் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். ஆனாலும் காதலித்த தேவமாலினி எங்கே சென்றாள் என்பதை தனது தேவசக்திகளைக் கொண்டு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உயிருக்குயிராக காதலித்தவரை காணாமல் மனவேதனையில் நீடிக்கிறது அக்னிதேவனின் நிலை. பல யுகங்களைக் கடந்த பிறகு அக்னி தேவனுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது - பூலோகத்தில் தனது காதலி தேவமாலினி “சித்ரா” என்ற பெயருடன் பிறந்திருக்கிறார் என்பது தான் அந்தத் தகவல்.
தனது யுகங்களைக் கடந்த காதலிக்காக, அக்னி தேவன், தேவலோகத்தினை விட்டு மானிட உருவில் பூலோகத்திற்கு வருகிறார் - சித்ரா நடத்தும் ரிசார்ட்டில் பணியாளராகச் சேர்ந்து கொள்கிறார். அக்னி தேவன் தனது காதலியுடன் சேர நடத்தும் முயற்சிகள், யுகங்களைக் கடந்த அவர்களது காதல் வெற்றி பெற்றதா என்பதை எல்லாம், 298 பக்கங்களில் சுவை குன்றி விடாமல் தொடர்ந்து பயணித்து படிப்பவரை தொடர்ந்து படிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர். நடுநடுவே தேவர்களின் சக்திகள், பல உலகுகளில் நடக்கும் விஷயங்கள் - தலாதல லோகம், பாதாள லோகம், தேவ லோகம் - அங்கே இருக்கும், நடக்கும் செய்திகள் என லோகம் விட்டு லோகம் செல்ல நமக்கு வாய்ப்பை அளித்திருக்கிறார் ஆசிரியர் யோனா அக்ரிபா.
கனலன், அகண்டன், சூரபதி, மச்சினி என கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயர்களும் நமக்குப் பிடித்த விதத்தில் இருக்கிறது. பல யுகங்களுக்கு முன்பு தோல்வியில் முடிந்த காதல் இந்த யுகத்தில், அதிலும் பூலோகத்தில் ஜெயித்ததா? காதலர்கள் என்ன பிரச்சனைகளை அனுபவிக்க நேர்ந்தது - தேவலோகப் பிறவியான அக்னிதேவன் பூலோகத்தில் வந்து காதலிப்பது சரியா, அதற்கு தண்டனை என்ன என பல விஷயங்களைக் கதையின் வழி சொல்லி இருப்பது ஸ்வாரஸ்யம். நிச்சயம் அனைவரும் வாசித்து ரசிக்கலாம் - கதையில் நடப்பது போல நிஜத்தில் நடக்குமா என்ற கேள்வி இருந்தாலும், நடக்காத ஒன்றை புனைவாகச் சொல்லி இருப்பது சிறப்பாக இருக்கிறது. நூலை வாசித்து நீங்களும் ரசிக்கலாமே!
*******
எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
நல்லதொரு அறிமுகம்.
பதிலளிநீக்குநூல் அறிமுகம் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனம்...
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியமாந புணைவாக தோன்றுகிறது சார்.
பதிலளிநீக்குவிமர்சனமும் அருமை.
நூலை விரைவில் வாசிக்கிறேன் சார்.
முடிந்த போது வாசித்துப் பாருங்கள் அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனம் அருமையாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வித்தியாசமான கற்பனையில் உதித்த நாவலின் கதை சுவாரஸ்யமூட்டுகிறது...வாசித்துப் பார்க்கிறேன்...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனம் அருமை.படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல மதிப்புரை, ரசித்தேன்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதோர் அறிமுகம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு