அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தல ஆடி வெள்ளி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவத்தனும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழ பழகிக் கொள்ளுங்கள் - சாணக்கியர் நீதி.
******
ஆங்கிலத்தில் “Themed Restaurant” என்று சொல்வார்கள். ஏதாவது ஒரு particular theme கொண்டு உணவகங்களை வடிவமைப்பதுண்டு. ஏற்கனவே எனது பக்கத்தில் “Horn OK Please” என்ற பதிவில் இப்படி ஒரு உணவகம் குறித்து எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்! தலைநகர் தில்லியிலும் இப்படியான உணவகங்கள் சில உண்டு. சமீபத்தில் நண்பர்களின் மகள்கள் மூவராகச் சேர்ந்து அந்த உணவகத்திற்குச் சென்று வந்தார்கள். அவர்கள் அங்கே எடுத்த சில படங்களும், ஒரு காணொளியும் இதோ உங்கள் பார்வைக்கு - ஒரு நிழற்பட உலாவாக! பார்த்து ரசிக்கலாமே! படங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி.
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட படங்களும் காணொளியும் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவு வழி உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
படங்கள் ரசித்தேன். பிசா ஒன்றுதான் சாப்பிடும் பண்டம் போல இருக்கிறது. அப்புறம் அந்த ஐஸ்க்ரீம் போன்ற வஸ்துகள்! சாப்பிடுவதைவிட பார்க்கத்தான் அதிக சான்ஸ் போல..!
பதிலளிநீக்குசாப்பிடுவதற்கு வேறு உணவுகளும் உண்டு ஸ்ரீராம். ஆனால் அங்கே சென்றபோது இவர்கள் சாப்பிட்டது பிசா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அட்டகாசம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்குபடத்தில் பார்த்தவைகளை நேரில் சென்று பார்க்கவும் முடிவாகி விட்டது👍🙏
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன்.
நீக்குமுடிந்த போது சென்று வாருங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் நன்றாக இருக்கு.... ஆனால் ஹாரி பாட்டர் - outdated theme இல்லையோ? இன்னமுமா பசங்க இதனை லைக் பண்ணறாங்க?
பதிலளிநீக்குசென்னையில் கைதி கிச்சன் என்ற தீம் ரெஸ்ட்ராண்ட் இருக்கு. அது சிறையில் இருக்கும் ஃபீல் கொடுக்கும், சேவை செய்பவர்களும் சிறைக்கைதி, ஆபீசர் உடையில் இருப்பாங்க.
Outdated Theme - இன்றைக்கும் சிலர் ரசிக்கிறார்கள். சென்று வந்த இளைஞிகள் வளர்ந்த சூழலில் Harry Potter படித்து வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் பிடித்திருந்தது நெல்லைத் தமிழன்.
நீக்குகைதி கிச்சன் பற்றி படித்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குஅழகிய படங்கள்.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு