வியாழன், 30 செப்டம்பர், 2021

பதிமூன்றாம் ஆண்டில்… - தொடரும் வலைப்பயணம்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தமிழகப் பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


KEEP YOUR EYES OPEN AND YOUR FEET MOVING FORWARD… YOU WILL FIND WHAT YOU NEED.


******

இதே நாளில் 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த வலைப்பூ பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது… இந்த வலைப்பூவில் தொடர்ந்து எழுத ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாள் வரை இவ்வலைப்பூவில் எழுதி வெளியிட்ட பதிவுகள், கிடைத்த கருத்துரைகள், பக்கப் பார்வைகள் என அனைத்தும் பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது.  இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் அவ்வப்போது மனதில் எழுந்தாலும், இது வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் - இன்னும் பயணிப்பேன் என்ற நம்பிக்கையுடன்.  இந்த நாள் வரையிலான இந்த வலைப்பூவின் பயணத்தில் கிடைத்த நட்பு இனிமேலும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசையும்.  தொடர்ந்து சந்திக்கலாம்.  இந்தப் பதிவினை நன்றியுடன் முடிக்கும் முன்னர், இந்த வலைப்பூ குறித்த சில கணக்கு வழக்குகள் உங்கள் பார்வைக்கு! 


இந்த பதிவு உட்பட, வெளியிட்ட மொத்த பதிவுகள் : 2631


மொத்த பக்கப் பார்வைகள்:  18.90 லட்சம்


மொத்த கருத்துரைகள்:  90400


வலைப்பூவினை தொடரும் நண்பர்கள் எண்ணிக்கை:  379.


அதிகமாக படிக்கப்பட்ட/பார்க்கப்பட்ட பதிவு:  சாப்பிட வாங்க - குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி (மொத்தப் பக்கப் பார்வை - 15000)


இந்த வலைப்பூவில் எழுதுகின்ற/எழுதியவர்கள் (11): 


வெங்கட் நாகராஜ்

ஆதி வெங்கட்

ரோஷ்ணி வெங்கட்

திரு பத்மநாபன், புது தில்லி

திரு ரங்கராஜன், புது தில்லி

        திருமதி நிர்மலா ரங்கராஜன், புது தில்லி

        திருமதி சுதா த்வாரகாநாதன், புது தில்லி

        திரு சுப்ரமணியன், புது தில்லி         திரு இரா. அரவிந்த், சென்னை

        செல்வி ஷ்வேதா சுப்ரமணியன், புது தில்லி

        செல்வி பார்கவி ரங்கராஜன், புது தில்லி


தொடர்ந்து எழுதும் எண்ணம் உண்டு.  உங்கள் ஆதரவும் உண்டு என்பதால் இன்னும் எழுத உத்வேகமும் இருக்கிறது.  முடிந்த வரை எழுதலாம் தானே!  

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக் கொண்டு, நாளைய பதிவில் மீண்டும் சந்திப்போம் என்பதையும் சொல்லி விடுகிறேன். 


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


24 கருத்துகள்:

 1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  மென்மேலும் உயர பிரார்த்தனைகள். இந்த வாரம் இந்த மாதம் என்று எண்ணாமல் அடுத்த நாளை பற்றி மட்டும் மனதில் கொண்டு பதிவு செய்தால் நிறைய பதிவுகள் போடலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   இந்த வாரம், இந்த மாதம் என்று எண்ணாமல் அடுத்த நாளைப் பற்றி மட்டும் மனதில் கொண்டு பதிவு செய்தால்... அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. அருமையான எழுத்துக்களையும், ஆக்கபூர்வமான பல கருத்துகளையும் தந்து வரும் தங்கள் வலையுலக பதிமூன்றாம் ஆண்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் வரும் பல ஆண்டுகள் தொடர்ந்து,பல நூறு பதிவுகள் தந்து எழுத்துலகில் சாதனை பெறவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். சிறப்பாக உங்களுடனிருந்து பணியாற்றும் உங்கள் வலையுலக ஆசிரியர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நிச்சயம்..சீரான வேகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் தொடர்வது பெரும் சாதனையே..நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. மனமார்ந்த் வாழ்த்துகள் வெங்கட்ஜி! அருமையான சுவாரஸ்யமான பதிவுகளைத் தரும் உங்களுக்கு உங்கள் வலைத்தளம் மேலும் உயரும்! பாராட்டுகளுடன் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 8. பிரமிப்பாக இருக்கிறது வெங்கட்ஜி!

  மேலும் பல படைப்புகள் படைத்து உங்கள் எழுத்து ஓங்கி வளர்ந்திட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். இத்தனை சாதனை படைத்தமைக்குப் பாராட்டுகள்.

  படைப்பில் பங்கெடுத்தவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 9. வாசகம் அருமை.
  பதிமூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

  நானும் 2009 ஜூன் மாதம் ஆரம்பித்தேன்.

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  உங்கள் வலைத்தளத்தில் எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. அன்பு வாழ்த்துகள் வெங்கட். தங்கள் 13 வருடப் பயணம் பிரமிக்க வைக்கிறது.

  கணக்கு வழக்குகளும் ,பார்வைகளும்,பின்னூட்டங்களும்
  தங்களின் அருமைப் பயணத்துக்குக் கிடைத்த பாராட்டுகள்.
  பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
  மென் மேலும் இந்தக் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும்,
  இனிய வாழ்த்துகள். மென்மேலும் வளர்ச்சி இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....