புதன், 8 செப்டம்பர், 2021

கதம்பம் - சாக்லேட் குக்கீஸ் - பூக்கோலம் - வரலக்ஷ்மி விரதம் - அலங்காரம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்க்கையில் பின்னோக்கி தள்ளப்படும் போது மனம் உடைந்து விடக்கூடாது. பின்னோக்கித் தள்ளப்படும் அம்பு தான் வேகத்துடன் நீண்ட தூரம் செல்கின்றது.


******


சாக்லேட் குக்கீஸ்:
டெல்லியில் நாங்கள் இருந்த அரசுக்குடியிருப்பு பகுதியில் Amar bakery இருக்கிறது. அங்கே இருந்த போது அவ்வப்போது Cookies வாங்கி சுவைத்திருக்கிறோம். சாக்லேட் குக்கீஸ், ஜாம் குக்கீஸ், பாதாம் குக்கீஸ், அஜ்வைன்(ஓமம்) குக்கீஸ் என்று விதவிதமான குக்கீஸ்கள்(பிஸ்கட்கள்) அங்கே கிடைக்கும். இப்போதும் எப்போதாவது என்னவரிடம் வாங்கி வரச் சொல்வதுண்டு..:)


இன்று என்ன குக்கீஸ் புராணம்????


Adhi's kitchen சேனலில் இந்த வாரம் சாக்லேட் குக்கீஸ் தான் செய்து காண்பித்திருக்கிறேன்.


காணொளிக்கான இணைப்பு கீழே..


Homemade Chocolate Cookies/No Oven/No Maida/No Egg/Tasty/சாக்லேட் குக்கீஸ்/பேக்கரி பிஸ்கட்ஸ்!! - YouTube


******


ஓணப்பண்டிகை பூக்கோலம் - 18 ஆகஸ்ட் 2021: 

மகளின் பள்ளியில் ஓணப்பண்டிகை கொண்டாட்டமாம்! எல்லோரையும் அவரவர் வீட்டில் பூக்கோலம் போட்டு இன்று காலைக்குள்  புகைப்படமெடுத்து அனுப்பச் சொல்லி இருந்தார்கள்...🙂 


நேற்று மாலை கடைத்தெருவுக்குச் சென்று கிடைக்கும் மலர்களை வாங்கி வந்து நாங்கள் முதன்முறையாக போட்ட பூக்கோலம்! கோவையில் இருந்தவரை ஓணம் சமயத்தில் மலையாளிகள் இல்லத்தில் பார்த்திருக்கிறேன். மகள் படங்களில் பார்த்தது தான்...🙂


******


வரலக்ஷ்மி விரதம் ஆயத்தம் - 19 ஆகஸ்ட் 2021: 

நாளைய வரலக்ஷ்மி நோன்புக்கான ஏற்பாடு! முதல்முறையாக ஒரு முழு புடவையே கட்டி விட்டுருக்கிறேன். பழைய பீங்கான் ஜாடி ஒன்றின் மேல் கலசம் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இதை என் மாமியார் வீட்டுக்கு பத்திரமாக எடுத்துக் கொண்டு போக வேண்டும். நாளை என் மாமியாருடன் நோன்பு பண்ணலாம் என்றிருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்க அம்பாள் அருள்புரிய வேண்டும்.


******


வரலக்ஷ்மி விரதம் - 20 ஆகஸ்ட் 2021:


வரலஷ்மி நோன்பு சிறப்பாக நடைபெற்றது. எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். 


அம்பாளுக்கு நான் புடவை கட்டியதைப் பார்த்து என் மாமியாரும், நாத்தனாரும் கேட்க, அவர்களின் அம்பாளுக்கும் நேற்று புடவை கட்டி விட்டு அலங்காரம் செய்து தந்தேன். 


சமையலை மாமியார் செய்ய, நைவேத்தியங்களுக்காக கொழுக்கட்டையும், சர்க்கரைப் பொங்கலும் நான் செய்ய, வேலையும் விரைவில் முடிந்தது. 


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

 1. குக்கீஸ் முன்னரே பார்த்தேன்.

  பூக்கோலம் அறுபுதம்.  நல்ல கற்பனை.

  அதைவிட வரலக்ஷ்மி விரத அலங்காரம் டாப்.  முழுப் புடைவையே கட்டி விட்டிருப்பது சாதனை.  ​அலங்காரம் மிக அருமை. வெகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகளை பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 3. அம்பாளுக்குப் புடவை... நெகிழ்ந்துவிட்டேன். இளமைக்காலம் முதலாக நான் பட்டீஸ்வரம் செல்லும்போது துர்க்கையின் அலங்காரத்தைக் கண்டு மெய்ம்மறந்து நின்று வருகிறேன். குறிப்பாக துர்க்கை அணிந்திருக்கும் ஆடையின் வண்ணம் மற்றும் விதத்தை ஒவ்வொரு முறையும் ரசிப்பதுண்டு. கடவுள் என்ற நிலைக்கும் அப்பாற்பட்டு துர்க்கை எங்கள் மனதில் இடம் பெற்றதற்குக் காரணம் அவளின் அழகும், எல்லையில்லாக்கருணையும். இதனை நினைவுபடுத்தியது அன்னையின் அலங்கார ஆடை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துர்க்கையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 5. பதிவும் அழகு..
  படங்களும் அழகு..

  வாழ்க வளமுடன்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

   நீக்கு
 6. அம்மனுக்கு அலங்காரம் மிகச் சிறப்பு.
  சாக்லேட் குக்கீஸ் செய்முறையும் படமும் விளக்கமும்
  அருமை.

  ஓணக் கோலம் வர்ணக்களஞ்சியம்.
  எத்தாய் அழகாகச் செய்திருக்கிறீர்கள். ரோஷ்ணிக்கும் உங்களுக்கும் மனம் நிறை
  பாராட்டுகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 7. பூக்கோலம் வரலஷ்மி அலங்காரம் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 8. குக்கீஸ் பற்றியும் அம்மன் அலங்காரங்களும் முகநூலிலும் கண்டு களித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....