வியாழன், 23 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பதினான்கு - வேலைதேடல் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்… கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை - விவேகாநந்தர்.


******


கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை சில பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதினொன்றாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பன்னிரெண்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பதிமூன்றாம் பகுதி


சென்ற பகுதியில் கல்லூரிக்கு பின் சேர்ந்த CADD கோர்ஸ் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். முதல் இரண்டு லெவல்களை முடித்து சான்றிதழும் பெற்ற பின் அடுத்த இரண்டு லெவல்களை  சேர்வதற்கு ஓரிரு மாதங்கள் ஆனது. அப்பாவும் பணத்தை ஏற்பாடு செய்த பின் ஒருவாறு சேர்ந்து அதையும் வெற்றிகரமாக முடித்தோம். 


அன்றாடம் வீட்டிலிருந்து கொண்டு போன லஞ்ச் பாக்ஸை நானும் தோழியும் தனியே அமர்ந்து  தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கோர்ஸ் நிறைவடைந்த அன்று மட்டும் ஏனோ கல்லூரிக்கு எதிரே இருந்த பேக்கரியில் ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.





அங்கே 'பர்கர்' என்ற ஒன்று தான் கிடைத்தது. பர்கரை அதுவரை நான் சுவைத்ததில்லை. பொதுவாகவே நான் ரொம்ப அசூயை பார்ப்பவள்..:)  வெளிச் சாப்பாட்டை பெரிதாக விரும்பாதவள்! இது சைவம் தானா என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்து கொண்டிருப்பேன்..:) இப்படியிருக்க பன்னிற்குள் வெஜிடபிள் கட்லெட் ஸ்டஃப் செய்த அந்த பர்கரை அன்று வேறு வழியில்லாமல் பிடிக்காமல் தான் சாப்பிட்டேன்..:) வயிறும் நிரம்பவில்லை..:)  ஏதோ ஒத்துக் கொள்ளாமல் மறுநாளே Food poisonம் ஆகிவிட்டது..:) குடலே வெளியே வந்து விடுமளவு..:) 


ஒருவழியாக கோர்ஸும் முடித்தாயிற்று. அடுத்த வாரமே எனக்கு ஒரு வேலை கிடைத்தது. CADD கோர்ஸ் முடித்திருந்ததால் கோவையிலேயே வேலாண்டி பாளையம் என்ற இடத்தில்  Submersible pump தயாரிக்கும் கம்பெனியில் Designing Engineer ஆக வேலை கிடைத்தது. அது தான் என் முதல் வேலை.. எங்கள் பகுதியிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும்..அங்கே சில நாட்கள் தான் பணியிலிருந்தேன்! ஒத்து வராததால் விட்டுவிட்டேன்..:)


பின்பு தூரத்து உறவினரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு சென்று CNC (Computer Numerical Control) Turning & Milling முடித்த அனுபவங்களையெல்லாம்  'வாழ்க்கை பாடம்' என்ற தலைப்பில் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இதில் அதைப் பற்றி எழுதவில்லை. 




சென்னையிலும் ஆறுமாதங்கள் போல என் மாமா வீட்டில் தங்கியிருந்து  நிறைய வேலைகளுக்கு விண்ணப்பித்தேன்.  இடையில் Saint Gobain எழுத்துத் தேர்வு ஜெயின் காலேஜில் எழுதினேன். அங்கே பழக்கமான தோழி மூலம் திருப்பூரிலும் கூட  வேலைக்கு முயற்சித்தேன்.


அதன் பின்பு கோவையிலேயே நிறைய கம்பெனிகளுக்குச் சென்று வேலைக்கு விண்ணப்பித்தேன்..காலையில் சென்றால் மாலை வரை சுற்றித் திரிந்தேன். Resume உடன் டிப்ளமோ சான்றிதழ், CADD சான்றிதழ்கள், CNC சான்றிதழ் என்று எல்லாவற்றையும் இணைத்து அப்ளை செய்தேன். ஏனோ வேலை தான் கிடைக்கவில்லை.


தூரத்து உறவினர் ஒருவர் Air forceல் அப்போது பணியில் இருந்தார். ஏதோ ஒரு ட்ரெயினிங்கிற்காக கோவை வந்த அவர் அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். கல்லூரி முடித்திருந்ததால் தொழில்நுட்ப பிரிவில் நீ விண்ணப்பிக்கலாமே என்று சொன்னார். எனக்கு எப்போதுமே இராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேல் மிகுந்த மரியாதையும், பெருமையும்  உண்டு. நானும் சேரலாம் என்ற எண்ணத்தில் அதற்காக புத்தகம் எல்லாம் வாங்கிப் படிக்கத் துவங்கினேன். அதிகாலை நாலு மணிவாக்கில் எழுந்து வாக்கிங் ரோட்டில் மூன்று ரவுண்ட் அடிப்பேன்..:) எங்கள் வீட்டிலிருந்து வாக்கிங் ரோடு வரை அப்பா துணைக்கு வருவார். வாக்கிங் ரோட்டில் அந்த சமயத்திலேயே எல்லோரும் நடைப்பயிற்சி செய்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருப்பார்கள்.


படிப்பு விஷயத்தில் பார்ட் டைம் B.E பண்ண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். அப்ளிகேஷன் வாங்க என் வகுப்புத் தோழர் வந்து எனக்காக சொல்லியும் அப்பா சம்மதிக்கவில்லை. கல்கத்தா University மூலம் A.M.I.E பண்ண டி.டி எடுக்க முயற்சித்தும் ஒத்துக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Bsc Computer Science சேர அப்ளிகேஷன் வாங்கியும் பணம் கட்ட மறுத்து விட்டார். படித்தது போதும் இனி திருமணத்திற்கு தான் செலவு செய்யணும் என்ற எண்ணம் தான் அதற்கான காரணம்.


அதன் பிறகு ஒரு FMCGல் மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். ஓரிரு மாதங்கள் ஒரு ஃபேன்சி ஸ்டோரிலும் கூட பணியிலிருந்தேன். அங்கே தான் என் சுக துக்கங்களில் உடனிருக்க நல்லதொரு வாழ்நாள் நட்பும், திருமணத்திற்காக ஒரு ஜாதகமும் கிடைத்தது! Employment Exchangeல் பதிவு செய்திருந்ததால் ஃபேன்சி ஸ்டோரில் வேலையிலிருந்த போது Tamilnadu State Transportல் Apprentice ஆக பணிபுரிய Interview Card வந்தது. நானும் அட்டெண்ட் செய்தேன். 


'இம்புட்டு  ஒசரமா போனா உனக்கு எங்கேர்ந்துடி மாப்பிள்ள கிடைப்பான்! கடசில நீ இடுப்புல தூக்கி வெச்சுக்கற மாதிரி தான் ஒருத்தன் கெடைக்கப் போறான்!' என்று என் கோமதி பாட்டி எப்பவும் சொல்வார்..:) ஜாதகம் வந்தது என்று சொன்னேனே! இருவருக்கும் பொருத்தமும் பார்த்தாச்சு. திருமணமாகப் போறதே என்று ஃபேன்சி ஸ்டோர் வேலையையும் விட்டுவிட்டேன்.  ஆனால் அந்த வரனுக்கு ஏனோ என் வயது தான் தடை போட்டது!!! பதினோரு வருட வித்தியாசம்! வேண்டாமென சொல்லி விட்டார்!!


மீண்டும் வேலை கிடைத்ததா?? வேலை பார்த்தேனா?? அப்புறம் என்ன தான் செய்தோம் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


26 கருத்துகள்:

  1. அனுபவங்கள் சுவாரஸ்யம்தான்.  அப்பா மேலே படிக்க சம்மதித்திருக்கலாம்.  ஆனால் வெங்கட் உங்களுக்காக காத்துக்கொண்டிருந்தாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..நிறைய படித்து விட்டால் அதற்கேற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்று யோசித்திருக்கலாம்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. சுவாரசியமான அணுபவங்கள்.
    பர்கரில் சைவம் சாத்தியமில்லை என்பதும் உள்ளே உள்ள சுவையான வட்டப்பகுதியைச் செய்ய மாட்டுக்கரி பயன்படுத்தப்படுவதாகவும் சொல்வதுண்டு.
    தந்தையின் கவலையும் நியாயமாகவே படுகிறது, அக்காலத்தில் கல்யானம் பண்ணி பெண்களை அணுப்புவதே பெற்றோரின் முதல் தலைவலியாக இருக்கும்.
    இன்று தற்போது அச்சூழல் மாறி வருகிறது, தம் குழந்தையின் படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் எண்ணிக்கை பெருகியுள்ளது.
    சுவாரசியமாக தங்கள் அணுபவங்களை தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! அன்று நான் சாப்பிட்டது வெஜிடபிள் கட்லட் வைத்த பர்கர் தான்.

      ஆமாம்! திருமணம் செய்து வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய டாஸ்க் தான்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  5. வாசகம் செம! முன்பு என் மகனின் புக் ஷெல்ஃபில் இந்த வாசகம் ஒட்டியிருந்தேன். அவன் இப்போது எனக்கே இதைத் திருப்பி எய்கிறான்!!!!!!!

    ரொம்பவே சுவாரசியம்! அட ஆதி பாருங்க பர்கரா இருக்கும்னு எனக்குச் சந்தேகம். சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன்.

    ஆமாம் கல்லூரியில் எதிரில் ஒரு பேக்கரி உண்டு. ஆனால் நான் அங்கு ப்ரெட் மட்டுமே வாங்கியதுண்டு. நானும் பொருட்கள் எது வாங்கினாலும் ஆராய்ச்சி செய்துதான் வாங்குவது வழக்கம். இப்போது பச்சை டாட் ரெட் டாட் எல்லாம் போடுவதால் (கம்பெனி தயாரிப்புகளில்) எளிதாக இருக்கிறது. இல்லை என்றால் கேட்டுவிடுவேன் முட்டை போட்டிருக்கா என்றெல்லாம்.

    இப்ப நீங்களே பேக்க்கிங்க எல்லாம் செய்வதால் வீட்டிலேயே பர்கர் செய்யலாம். நன்றாகவே வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சரியாக தான் சொல்லியிருந்தீர்கள்..ஆமாம் பச்சை டாட் பார்த்து தான் வாங்குவேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. கிட்டத்தட்ட படிப்பும், வேலை தேடியது எல்லாம் உங்கள் அனுபவங்களே எனக்கும். மேலே படிக்க வீட்டில் போராட்டம்.

    உங்கள் திறமைக்கு உங்களை மேற்கொண்டு படிக்க அனுமதித்திருக்கலாம்...ஆனால் அப்போதெல்லாம் கல்யாணச் செலவைப் பற்றித்தான் பெற்றோர் பெரிதாக நினைப்பார்கள் எனவே ஓரளவு படித்தால் போதும் என்று...

    உங்கள் அனுபவங்கள் எனது அந்தக்காலக்கட்டத்தின் நினைவுகளை எழுப்புகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி. இருவரின் அனுபவங்களும் ஒத்திருப்பதில் ஆச்சரியம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  9. யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ - என்ற பாடல்தான் என் நினைவுக்கு வந்தது.

    11 வயது வித்தியாசமா? எங்களிருவருக்கும் வித்தியாசமான 6 1/2 வருஷத்துக்கே என் பெண், இவ்வளவு வித்தியாசமா என்று கேட்கிறாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலை தன் சிறுவயதில் பாடி அவர் அப்பாவிடம் திட்டு வாங்கியதாக என் மாமியார் சொல்வார்..:)

      இப்போது இந்த வித்தியாசம் சாதாரணம். நடிகர்களே அப்படித்தான் செய்து கொள்கிறார்கள்..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    தங்கள் அனுபவ பதிவாக, கல்லூரியில் படித்த நாட்களையும், படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற நாட்களையும், விபரங்களையும் சுவையாக கூறி வருகிறீர்கள். நடுவில் இந்த தொடரில் பல பகுதிகளுக்கு என்னால் வர இயலவில்லை. ஆனால், அனைத்தையும் படித்து வருகிறேன். மேலும் தங்கள் வேலை, மற்றும் வாழ்க்கைத் துணை கிடைத்தது பற்றிய அனுபவங்களை தொடர ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  11. மிக அருமையாக அனுபவங்களை சொல்லி வருகிறீர்கள்.

    ஏதோ ஒத்துக் கொள்ளாமல் மறுநாளே Food poisonம் ஆகிவிட்டது..:) //
    மனது பிடிக்கவில்லை என்றால் வயிற்றுக்கும் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் உடம்புக்கும் பிடிக்காது போல..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. உங்கள் அனுபவங்கள் பல அந்த வருடங்களில் ஆண் பிள்ளைகளுக்கும் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எனக்கும் கூட மேலே நான் மேலே படிக்க ஆசைப்பட்ட போது படிக்க வைக்க அப்பா ரொம்ப யோசித்தார். வேலைக்குப் போனால் நல்லது என்று நினைத்தார். வீட்டின் நிலைமை அப்படி. அப்புறம் எப்படியோ சம்மதம் கிடைத்தது.

    தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண் பிள்ளைகளுக்கும் இந்த நிலை...குடும்பச் சூழல் காரணமாக இருக்கலாம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....