அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
விஷமும் வேஷமும் ஒன்று தான்… விஷயம் உயிரைக் கொல்லும்… வேஷம் மனதைக் கொல்லும்.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் டெய்சி ஜோசப்ராஜ் அவர்கள் எழுதிய “விழியோரமாய் ஓர் கண்ணீர் துளி” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!
வகை: நாவல்
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: 298
விலை: ரூபாய் 300/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
'விழியோரமாய் ஓர் கண்ணீர் துளி' (Tamil Edition) eBook : Daisy Josephraj, டெய்சி ஜோசப்ராஜ்
*******
ஒரு வாசிப்பாளனாக நாம் படிக்கும் நாவல் என்பதில் என்னென்ன இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அவை அனைத்தும் கிடைத்து விட்டால் படிப்பவருக்கு மகிழ்ச்சி. பெரும்பாலும் அந்த மகிழ்ச்சி எல்லா நாவல்கள்/நூல்களிலும் கிடைத்து விடுவதில்லை. சினிமாவிலும் எல்லாம் கலந்த ஒரு திரைக் கதை அமைந்துவிட்டால் அந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சஹானா இணைய இதழின் மார்ச் மாத வாசிப்புப் போட்டியில் பங்கு பெறும் ஒரு மின்னூலான டெய்சி ஜோசப்ராஜ் அவர்கள் எழுதிய “விழியோரமாய் ஓர் கண்ணீர் துளி” படித்த போது பல எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டன.
ஜாதிகளை வைத்து பிரித்தாளும் சில மனிதர்கள், அவர்களுக்கு எதிரான புரட்சி, திருமணம், கடத்தல், நட்பு, கணவன் - மனைவிக்கு இடையிலான சரியான புரிதல், காதல் திருமணம் சரியானதா? பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் சரியானதா என்ற விவாதங்கள், இளமை ததும்பும் சொல்லாடல்கள், காதல் - ஊடல், கோபம், காமக் கொடூரனாக இருக்கும் சில ஆண்கள் என பல விஷயங்களை இந்த நாவல் வழி சொல்லி இருக்கிறார். அனைத்து விஷயங்களையும் ஒரே நாவலில் கொண்டு வருவது கொஞ்சம் சவாலான முயற்சி - அந்த முயற்சியில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவு காதலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கதையின் வழி சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. அதைப் போலவே பாட்டிக்கும் பேரனுக்கும் இருக்கும் புரிதல் சிறப்பான வகையில் சொல்லி இருப்பதும் எனக்குப் பிடித்திருந்தது. சரியான புரிதல் மட்டும் இருந்து விட்டால் உறவுகள் பலமாக அமையும் என்பதனை பல முறை கண்டிருக்கிறேன்.
நாவலில் குறையே இல்லையா? குறை என்று சொல்வதற்கில்லை! ஆனாலும் தற்போது எழுதும் பலருக்கும் இருக்கும் ஒரு குறைபாடு - Proof Reading-இல் அதிக கவனம் செலுத்தாதது. இவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும் - சில இடங்களில் வரும் எழுத்துப் பிழைகளை கவனித்து திருத்தி இருக்கலாம். In any Publishing Industry, Proofreading is an important part to play என்பதை நம்மில் பலரும் உணர்ந்து கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம்.
நல்லதொரு கதையைப் படிக்க ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? சுமார் 300 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவலை நீங்கள் வாசிக்கலாம்! வாசித்து தான் பாருங்களேன்! நூலை சிறப்பாக எழுதி இருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். மேலும் பல நூல்களை எழுதி வெளியிட அவருக்கு எனது வாழ்த்துகள்.
*******
இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களால் வெளியிடப்பட்ட நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
கிண்டில் வழி நிறைய புத்தகங்கள் வாசிக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குகிண்டில் வழி வாசித்துக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வாசிக்க இயலவில்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய பொன்மொழி அருமை ஜி
பதிலளிநீக்குவிமர்சனம் உண்மையை அழகாக பிரதிபலிக்கிறது வாழ்த்துகள்.
பொன்மொழியும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமையாகவும், விமர்சனம் நூலை படிக்கத் தூண்டும் வகையிலும் உள்ளது சார்.
பதிலளிநீக்குவிரைவில் நூலை வாசிக்கிறேன்.
விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனம் அருமை...
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நூலின் மதிப்புரை நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்தஉங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குநூலின் மதிப்புரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனம்! படித்துப்பார்க்கிறேன்!!
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா. முடிந்த போது நூலினை வாசியுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிக அருமை வெங்கட்ஜி.
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனம் அருமை.
// ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவு காதலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கதையின் வழி சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. அதைப் போலவே பாட்டிக்கும் பேரனுக்கும் இருக்கும் புரிதல் சிறப்பான வகையில் சொல்லி இருப்பதும் எனக்குப் பிடித்திருந்தது. சரியான புரிதல் மட்டும் இருந்து விட்டால் உறவுகள் பலமாக அமையும் என்பதனை பல முறை கண்டிருக்கிறேன்.//
அதே ஜி..
கீதா
வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குஆமாம்,ப்ரூஃப் ரீடிங்க் மிக முக்கியம்.
துளசிதரன்
ப்ரூஃப் ரீடிங் மிக முக்கியம் - உண்மை. இதை பலரும் உணர்வதில்லை துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
விமர்சனம் அருமை.
//சரியான புரிதல் மட்டும் இருந்து விட்டால் உறவுகள் பலமாக அமையும் என்பதனை பல முறை கண்டிருக்கிறேன்.//
சரியான புரிதல் அவசியம் உறவுகளில் என்பது உண்மை.
வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதோர் விமர்சனம்.
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல விமர்சனம் ...நானும் டவுன்லோட் செய்து வைத்துள்ளேன் ...இனி தான் வாசிக்க வேண்டும்..
பதிலளிநீக்குவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி. முடிந்தபோது நூலினை வாசியுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.