அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நவராத்திரி கொலு ஏற்பாடுகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழப் பழகிவிட்டால்… மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டாம்; மகிழ்ச்சியே நம்மைத் தேடி வரும்.
******
பாலா திரிபுரசுந்தரி - அலங்காரம்:
காலையில் கொலுப்படி அடுக்க ஆரம்பித்த வேலை! இன்னும் முடியலை! அம்பாளுக்கு ஓரளவு அலங்காரம் பண்ணியிருக்கேன்.. எப்படி இருக்கிறாள் என்று சொல்லுங்க!!
எங்கள் வீட்டு கொலு!
Eco friendly gift!
தொடர்ந்து மூன்று வருடங்களாக ஏதோ ஒரு காரணத்தால் கொலு வைக்க முடியாமல் போய்விட்டது. இந்த வருடம் கொலு வைக்கலாம் என்ற எண்ணம் வந்ததும் வீட்டுக்கு வருபவர்களுக்கு eco friendlyஆகவும், அதேசமயம் அன்றாட உபயோகத்திற்கும் ஏற்ற வகையில் தான் தாம்பூலம் தரணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்னவரிடம் இதை சொல்லிக் கொண்டிருந்த போது, என்ன வேணும்! என்ன பட்ஜெட்! எவ்வளவு வேணும்! என்று கேட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய ஐடியாவை சொன்னதும் அன்று மாலையே சில படங்களை அனுப்பி விட்டார். இது ஓகேன்னா சொல்லு! என் ஃப்ரெண்ட் இருக்கிற ஏரியால தான் பஜார். 'அவனையே வாங்கச் சொல்றேன்' என்றார்...:) சென்ற முறை இங்கு வரும் போது அதை எடுத்தும் வந்துவிட்டார்..:)
சணல் பை! இது எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா! சென்ற முறை கொலுவுக்கு டிசைன் செய்த மண் விளக்குகள் தான் தந்தேன்..ஒரு சில தோழிகள் அதை கார்த்திகை தீபத்திற்கு வைத்ததாகச் சொன்னார்கள்.
அருள் டிவியில் எங்கள் வீட்டு கொலு!
93 வருட பாரம்பரியம் மிக்க கோபால்தாஸ் ஜூவல்லர்ஸும், லோக்கல் சேனலான அருள் டிவியும் இணைந்து நடத்தும் Navarathri golu contestல் இன்று எங்க வீட்டு கொலுவுக்கு விஸிட் செய்தார்கள்.
கொலுவை ஃபோட்டோ, வீடியோ எடுத்தது போக அதில் என்னுடைய பேட்டியும் இடம்பெற்றுள்ளது. 8 அக்டோபர் மாலை 7மணியளவில் லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகும் என்று சொன்னார்கள்.
அம்பாளுக்கு 'பால திரிபுரசுந்தரி' அலங்காரம் செய்தது பற்றி தான் கேட்டார்கள். எவ்வளவு நேரமாச்சு! யாரெல்லாம் உதவி செய்தாங்க!
முன்கூட்டியே சேனலில் ஒளிப்பரப்பாகும் இராமாயணம் பற்றி சொல்லி விட்டு, அருள் டிவி நீங்க பார்ப்பீங்களா? எந்த ப்ரோகிராம் உங்களுக்கு பிடிக்கும்?? என்றார்கள்..:) இராமாயணம் என்றேன்..:))
இன்றைய நாள் இனிதானது.
காகம் கரையும்!!
குயில் கூவும்! மயில் அகவும்! காகம் கரையும்! என்று பள்ளிநாட்களில் பயின்றிருப்போம். கொலுவில் ஒரு குளம். அதில் இரண்டு தாமரைகளும், தாகம் தணிக்க வந்த காகம் குளக்கரையிலும் இருந்தது. நேற்று கரையில் இருந்த காகம் உள்ளே டைவ் அடித்து விட்டது போல..!!
மாலை பள்ளியிலிருந்து வந்த மகள் குளத்தில என்னது இது?? என்றாள். பார்த்தால் என்னவென்று புரியவில்லை!! பிறகு தான் தெரிந்தது..:) நிஜமாகவே காகம் கரைந்து விட்டது!!! மண் பாத்திரங்களை சூளையில் வைத்து சுடுவது போல் மண் பொம்மைகளுக்கு எதுவும் இல்லையா??
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அம்பாளின் அலங்காரம் அற்புதம்.
பதிலளிநீக்குஎல்லாமே பேஸ்புக்கிலும் படித்திருந்தாலும் அங்கேயும் ஒன்று புரியவில்லை. காகம் நிஜ காகமா, பொம்மையா? குளக்கரையில் வைத்திருந்த பொம்மைக்கு காகம். சரியா?
நிஜ காகம் இல்லை..:) மண்ணால் ஆன காகம் பொம்மையை கொலுவில் குளம் போன்ற அமைப்பில் வைத்திருந்தேன். அது தண்ணீரில் விழுந்து கரைந்து விட்டது..:)
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
கொலு மிக அழகு! அதைத்தொடர்ந்த அனைத்து விபரங்களும் சிறப்பு!!
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா.
நீக்கு//93 வருட பாரம்பரியம் மிக்க கோபால்தாஸ் ஜூவல்லர்ஸும், லோக்கல் சேனலான அருள் டிவியும் இணைந்து நடத்தும் Navarathri golu contestல் இன்று எங்க வீட்டு கொலுவுக்கு விஸிட் செய்தார்கள்.//
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
உங்கள் பேட்டியை பதிவு செய்து போடுங்கள்.
மாயவரத்தில் எங்கள் வீட்டு கொலுவை உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது நினைவுக்கு வந்தது.
நிஜமாகவே காகம் கரைந்து விட்டது!!! //
ஆஹா! ரசித்தேன்.
உங்கள் கொலு , அம்மன் அலங்காரம், கோலம் எல்லாம் அருமை
வாழ்த்துக்கள்.
உங்கள் வீட்டு கொலு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது குறித்து மகிழ்ச்சிம்மா.
நீக்குபதிவின் அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி கோமதிம்மா.
கொலு அருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
நீக்குபடங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன ஆதி.
பதிலளிநீக்குஅம்பாள் அலங்காரம் சூப்பர்ப்!!! வீடியொவும் பார்த்து ஆத்மார்த்தமாகக் கடமையாற்றிவிட்டேன்!!!!!
ஆஹா குளத்தில் காக்கா விழுந்துவிட்டதா? சிறிய காக்காய் பொம்மையோ அதனால் அது இப்படித் தயாரிக்கப்பட்டதோ? பொதுவாக மண் பொம்மைகள் சுடப்பட்டுத்தான் செய்யப்படும்.
கீதா
சிறிய மண் காகம் தான். மண் பொம்மைகள் சுடப்பட்டு தான் வருமா!! அப்படியென்றால் இது ஏன் கரைந்தது என்று தெரியலையே..:)
நீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
அருள் டிவியில் வந்தமைக்கு வாழ்த்துகள் ஆதி!
பதிலளிநீக்குகீதா
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குபாலா திரிபுரசுந்தரி அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅருள் டிவியில் உங்கள் வீட்டுக்கொலு இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
பரிசுப் பொருள் நன்றாக இருக்கிறது.
துளசிதரன்
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்குநவராத்திரி கொலு அழகோ அழகு..
பதிலளிநீக்குஎங்கும் மங்கலம் நிறையட்டும்..
நவராத்திரி கொலு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கரையும் காகம் கரைந்து விட்டது...
பதிலளிநீக்குஅதோடு கண் திருஷ்டியும் கரைந்து விட்டது..
கண் திருஷ்டியும் கரைந்து விட்டது - நல்லதே துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொலு அழகு
பதிலளிநீக்குகொலு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.