அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
MIND IS NOT A DUSTBIN TO KEEP ANGER, HATRED AND JEALOUSY; BUT IT'S A TREASURE BOX TO KEEP LOVE, HAPPINESS AND SWEET MEMORIES.
******
நவராத்திரி நெருங்கிக் கொண்டே இருக்கிறது (முகநூலில் எழுதிய போது!). கடைத்தெருவுக்குச் சென்று மாதாந்திர மளிகைக்கு லிஸ்ட் கொடுத்துட்டு அப்படியே வெற்றிலை, பாக்கு, மஞ்சள் குங்குமம், பூ, சுண்டலுக்கு தொன்னை, கொலுப்படி அலங்காரத்திற்காக தோரணங்கள், சீரியல் லைட் என எல்லாவற்றையும் வாங்கி வந்தேன். பழம் மட்டும் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பாட்டி விற்கிறார். அவரிடம் தேவைப்படும் போது வாங்கிக்கலாம் என விட்டுவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் கொலுப்படி அமைக்க ஒரு ஆளை அனுப்பி விட கடையிலும் சொல்லியிருக்கிறேன். பரணிலிருந்து படியை எடுத்து அமைத்த பின், பரணிலிருந்து பொம்மை பெட்டிகளையும் இறக்கி வைக்க சொல்ல வேண்டும். எல்லாம் நல்லபடியாக நடைபெற கடவுள் அருள வேண்டும்.
கொலுப்படிகளை அமைத்துத் தர ஒரு ஆளை அனுப்பி விடும்படி படிகளை வாங்கிய கடையிலேயே சொல்லியிருந்தேன். இதற்கு முந்தைய வருடங்களிலும் இப்படித்தான் சொல்வேன். விரைவாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் அமைத்து தருவார்கள்.
மாலை 6:30 மணியளவில் ஒரு ஆள் வந்திருந்தார். அவர் படிகளை பரணிலிருந்து எடுத்துத் தர அதை வாங்கி ஹாலில் கொண்டு வந்து வைத்தேன். பிறகு frame செட் செய்து பார்த்தார். சரி வரவில்லை! 5 அடியில் 2 Rod இல்லங்க! Bolts எல்லாம் குறைவா இருக்குங்க! என்று எதையாவது மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
சென்ற முறை என்னவர் தான் படிகளை கழற்றி செட்டு செட்டாக கட்டி பரணில் வைத்திருந்தார். அதன் பின் அதை எடுக்கவே இல்லை..பரணிலும் நம்ம வீட்டில் அடைசல் இருக்காது. அதுவும் இந்தக் குறிப்பிட்ட பரணில் கொலுப்படிகளைத் தவிர எதுவுமே இல்லை..:)
இப்படியே எதையாவது சொல்லி 8 மணி வரை அவருக்கு படிகளை எப்படி பொருத்துவது என்றே புரியவில்லை...:) கூகிளில் தேடி Imageஉம் காண்பித்தேன். கடையிலேயே கேளுங்க! என்றும் சொன்னேன். ஒரு வழியாக 8:45 க்கு படிகளை பொருத்தி விட்டார். ஆனாலும் கொஞ்சம் கோணலாக தான் இருக்கு! இந்த வருடம் இப்படித்தான் போல!! எல்லாவற்றையும் தடால் தடால் என கீழே போடுவது! சுவற்றில் கீறல் போடுவது! என்று வேலையில் சுத்தமில்லை!
இவர் வருவதற்கு முன்பே சின்ன சின்ன பொம்மை பெட்டிகளையெல்லாம் மகள் ஒரு ஸ்டூலில் ஏறி எடுத்துக் கொடுக்க அதையெல்லாம் வாங்கி கீழே இறக்கி வைத்திருந்தேன். இரண்டு கனமான பெட்டிகள் மட்டும் பரணில் இருக்க அதை அந்த ஆளிடம் சொல்லி அவர் எடுத்துத் தர மகளும், நானும் வாங்கி வைத்தோம்.
நம்ம 'தல' இரு வாரங்களுக்கு முன்பே ஊருக்கு கிளம்புவதற்குள் படியை இறக்கி fix பண்ணிடறேன்! பொம்மை பெட்டி எல்லாமும் இறக்கிடறேன்! என்று தான் சொன்னார். நான் தான் அவ்வளவு சீக்கிரம் எதற்கு! நான் பாத்துக்கறேன்! என்று சொன்னேன்...:)
என்னவரிடம் இந்தக் கதையெல்லாம் சொன்னதும் 'நான் ஒருத்தன் எதையாவது சொன்னா கேட்டாத் தானே!' என்றார்..:)
என்னவரிடம் பேசுவதற்கு முன்பே 'அப்பாட்ட சொன்னா என்ன சொல்வான்னு தெரியுமா?? இப்படித்தான் சொல்லுவா! மகளிடம் சொன்னதும், அம்மா! நீ அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன்னு நினைக்கிறேன்! அடிக்கடி அப்பா இப்படி பண்ணுவா! இத செய்வான்னு சொல்லிண்டே இருக்க!! என்று கலாய்க்கிறாள்...:)
ஆல் இன் ஆல் அழகுராணியாக எல்லா வேலையும் செய்வது போல் இந்த படி வேலையையும் நானே செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது!
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
//அம்மா! நீ அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன்னு நினைக்கிறேன்!/
பதிலளிநீக்குபின்னே மிஸ் பண்ணாமல் இருக்க முடியுமா?!
கொலுப்படி அமைக்கும் சிரமங்கள் எங்களுக்கில்லை. இந்த வழக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பாஸ் பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறார் - விசிட் செய்ய.
கொலு வழக்கம் - எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வேலை அதிகம் தான் ஸ்ரீராம். ஆனாலும் அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கத்தானே செய்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் 1960கள் தொடங்கி கொலு வைத்துள்ளார்கள். முதலில் கள்ளிப்பெட்டியை அடுக்கி அதன்மேல் வைத்தார்கள். பின்னர் ஒன்பது படிகள் வாங்கி, செருகும் அமைப்புடன் அமைத்தார்கள். இப்பதிவு அதனை நினைவூட்டியது. கும்பகோணத்தை விட்டு வெளியே வந்த சூழலில் தற்போது அந்த நினைவுகள் மட்டும்.
பதிலளிநீக்குஉங்கள் கொலு நினைவுகள் - சிறப்பு. பதிவு உங்களுக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கார் என்ஜினை அக்கு வேறு ஆணி வேறு பிரித்து பூட்டிய கைகளோ இன்று கொலுப்படி பூட்ட ஆளைத் தேடுகிறது. ஆம் வயசாகி விட்டது.
பதிலளிநீக்குJayakumar
வயதாகிவிட்டது! ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
அருமை
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை... 'தல' சொல்வதை கேட்கணும்...
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதல சொல்வதை கேட்கணும் - அதானே! ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரோஷினி கரெக்ட்டாதான் சொல்லியிருக்கிறா. பின்ன நீங்க ஜி ய மிஸ் பண்ணாம இருக்க முடியுமா....அதானே உங்க தல சொன்னத கேட்டிருக்கலாம்ல!!! ஹாஹாஹஹ
பதிலளிநீக்குஅடுத்து கொலு போட்டோ...இனிதான் உங்க வீடியோ பார்க்கணும் ஆதி...நவராத்திரி நல்லபடியா நடக்கும்...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்கு//என்னவரிடம் பேசுவதற்கு முன்பே 'அப்பாட்ட சொன்னா என்ன சொல்வான்னு தெரியுமா?? இப்படித்தான் சொல்லுவா! மகளிடம் சொன்னதும், அம்மா! நீ அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன்னு நினைக்கிறேன்! அடிக்கடி அப்பா இப்படி பண்ணுவா! இத செய்வான்னு சொல்லிண்டே இருக்க!! என்று கலாய்க்கிறாள்...:)//
பதிலளிநீக்குமகள் சொல்வது உண்மைதானே!
நவராத்திரி வாழ்த்துக்கள் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு