வெள்ளி, 8 அக்டோபர், 2021

கதம்பம் - தோசா எக்ஸ்பிரஸ் - தடுப்பூசி - ஓலா - கொலு பொம்மைகள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட இருமலும் கணேஷாவும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


JUST LIKE HOW BADLY YOU NEED YOUR PARENTS IN CHILDHOOD, YOUR PARENTS NEED YOU WHEN THEY GROW OLD.


******


தோசா எக்ஸ்பிரஸ் - காணொளி:சென்ற வாரத்தில் ஒருநாள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் Dosa Express என்ற நடமாடும் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டோம். இவர்களிடம் 150 வகையான தோசை கிடைக்கும் என்று சொன்னார்கள். Dessert dosa கூட உண்டு. 


நாங்கள் என்ன ஆர்டர் செய்வது என்று முழித்தோம். என்னை விட்டால் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரதுக்குட்டி புளிப்பு மிட்டாய் என்று சொல்வதைப் போல் 'மசால் தோசை' என்று ஆர்டர் கொடுப்பேன்..:) 


அந்த உணவகத்தை நடத்துபவரே ஒரே தோசையை மூன்றாக ஆர்டர் கொடுப்பதை விட நானே மூன்று வித தோசைகளை ஆர்டர் எடுத்துக்கறேன் என்று சொல்லி தயார் செய்யச் சொன்னார். Hatric dosa, All rounder dosa, Pizza dosa என நாங்கள் மூன்றை சுவைத்தோம்..நன்றாகவே இருந்தது. 


அன்று காற்றே இல்லாமல் வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருக்க நான் வீடியோ எடுப்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை..:) என்னவர் தான் வீடியோ எடுத்தார்.


Adhi's kitchenல் பகிர்ந்து கொண்டுள்ளேன். வீடியோவைக் காண இணைப்பு கீழே. நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் இங்கு முயற்சி செய்து பாருங்கள்.


Dosa Express/150 varieties of dosa/In Srirangam/Mobile Restaurant/Hatric/All rounder/Pizza Dosa!! - YouTube


******


மெகா கேம்ப் - தடுப்பூசி:


காலையில் எழுந்ததுமே இன்னிக்கு Mega camp இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். 90 நாட்களுக்கு மேலாகியும் மெசேஜ் ஒண்ணும் வரலை. திருவரங்கத்தில் எங்கே தடுப்பூசி போடுகிறார்கள்?? என்ற தகவல்களை நம்ம Rajeswari Periyaswamy கிட்ட வாட்ஸப் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 'பத்திரமா போய் போட்டுட்டு வாங்க ஆதி' என்று மெசேஜ் அனுப்பினாங்க.. 


மகளின் பள்ளியில் தான் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அப்போது வாசல் கேட் வரை கும்பல் இருந்தது. டோக்கன் நம்பர் 471.. இன்றும் மகளின் பள்ளியில் தான் போட்டுக் கொண்டேன். பத்து பேர் கொண்ட வரிசை தான்...:)


******


ஓலா பயணங்கள்:


வீட்டின் வெளியே வந்து ஓலா ஆட்டோ புக் செய்தேன்.. ஓட்டுனருக்கு கால் செய்ததும், 'என்ன அமெளண்ட் வந்திருக்கு மேடம்'? என்றார் ஓட்டுனர். சொன்னதும் அதை விட மூன்று மடங்கு அதிகம் கேட்டார். எதுக்குங்க எக்ஸ்ட்ரா குடுக்கணும்? என்றேன். 


Empty ஆக திரும்பணும்! அதுக்கு தான் அந்தக் காசு! என்றார்!! போற வழியிலேயே அடுத்த புக்கிங் வந்துடுமேங்க! என்றாலும் கேட்கவில்லை..:) கேன்சல் செய்துவிட்டேன்.


இதுக்காக இன்னும் ஒருமுறை நாம சவாரி செய்ய முடியுமா!!..:)


நேற்று தான் என்னவரிடம், 'நீங்க ஓலா அநியாயங்களை பத்தி ஃபேஸ்புக்ல எழுதினது கேட்டுடுத்து போலிருக்குன்னு சொல்லிக் கொண்டிருந்தேன்..:)


******


கொலு பொம்மை கண்காட்சி - காணொளி:ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கொலு கண்காட்சி.. பாண்டிச்சேரியிலிருந்து பொம்மைகளை கொண்டு வந்து இங்கே விற்பனை செய்கிறார்கள். இவர்களிடம் 10 ரூ முதல் 5000ரூ வரை பொம்மைகள் உள்ளன. இந்த கண்காட்சி விஜயதசமி வரை இருக்கும்.

இவர்களிடம் மண் பொம்மைகளும் உள்ளன..பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் செய்த பொம்மைகளும் உள்ளன.  வரப்போகும் நவராத்திரியில் கொலுவில் வைக்க ஐடியா கிடைக்கலாம்.


Adhi's kitchenல் இங்கே நான் பார்த்த கொலு பொம்மைகளின் காணொளியைப் பார்க்கலாம். இணைப்பு கீழே!


ஸ்ரீரங்கத்தில் கொலு பொம்மை கண்காட்சி/நவராத்திரி/Navarathiri Golu Exibition!! - YouTube******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

 1. தோசை படங்கள் கவர்ச்சி.  காணொளி இரண்டும் முன்னரே பார்த்து விட்டேன்.  இந்தப் பதிவும் தடுப்பூசிப் பதிவும் கூட பேஸ்புக்கில் பார்த்தேன்.
  சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் அன்று மூலைக்கு மூலை கொட்டகை போட்டு ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அதில் எனக்கொரு சந்தேகம் உண்டு. வேக்சின் வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து ஐஸ் பாக்சில் வைத்தாலும் நான்கு மணிநேரத்த்தில் அதைச் செலவு செய்துவிட வேண்டும் என்றார்கள்.  இது மாதிரி இடங்களில் மாலை வரை அமர்ந்து ஊசி போடுகிறார்கள்.  என் நண்பரிடம் அப்படி முகாமைப் பார்த்தால் காலையில் முதல் ஒருமணி நேரத்துக்குள் போட்டு விடுங்கள் என்றேன்!  இடையில் சென்று வேறு செட் ஊசி எடுத்து வருவார்களா, ஐஸ் மாற்றுவார்களா, தெரியவில்லை!

  கொலு பொம்மைகள் வித்தியாசமாய் அழகாய் இருக்கின்றன.

  ஓலா, ஊபர் போன்றவை நாம் கேன்சல் செய்ய சற்று நேரமாகிவிட்டால் அடுத்த ட்ரிப்பில் நம்மிடம் அபராதம் பிடிப்பார்கள்.  இதில் நடக்கும் வேறொரு ஊழல் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் தெரிய வந்ததது.  விரைவில் அதை எழுத வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசை படங்கள் - சுவையும் நன்றாகவே இருந்தது ஸ்ரீராம்.

   தடுப்பூசி - சந்தேகங்கள் நிறையவே உண்டு.

   ஓலா ஊபர் நிறைய பிரச்சனைகள் - குறிப்பாக தமிழகத்தில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதிவு ரசனைதான். தோசா எக்ஸ்ப்ரஸில் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்க்கிறேன் (அதுக்கு ஶ்ரீரங்கத்தில் தங்கும்படியான வாய்ப்பு வரணுமே.... பார்ப்போம்)

  தலைப்பைப் படிக்காமல் வெங்காயத்தைப் பார்த்து, ரொம்ப நல்ல க்வாலிட்டி வெங்காயமாக இருக்கிறதே என்று நினைத்தேன். கிலோ எவ்வளவு இருக்கும்னு தோன்றியது. சம்பந்தமில்லாத பழமும் காயும் பார்த்த உடனே சந்தேகம் வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். முடிந்தபோது, திருவரங்கம் வரும் வாய்ப்பு இருந்தால் சுவைத்துப் பார்க்கலாம்! புதிய புதிய வகை என்பதால் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஆதி அன்ட் வெங்கட்ஜி

  நேற்று இரவிலிருந்து எபி, உங்கள் தளம், பானுக்கா தளத்திலும் துளசியின் கருத்துகளைப் போட்டால் கருத்து வரவே இல்லை.

  இப்போதும் மீண்டும் முயற்சி செய்தேன் நேற்றைய பதிவுகளுக்கு. ஆனால் கமென்ட் பதிவாகவில்லை என்பது அங்கு தெரிந்தது.

  இன்றைய உங்கள் பதிவிற்கும் கொடுத்துப் பார்த்திருக்கிறேன் இன்றைய பதிவுக்கு போகிறதா என்று பின்னர் தான் தெரியும்.

  வருகிறதா என்று பார்க்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி.

   சில சமயங்களில் கருத்திடுவதில் பிரச்சனைகள் வரவே செய்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அங்கு கமென்ட் பதிந்துவிட்டது எனவே இங்கும் பதிவாகும் என்று நினைக்கிறேன்.

  ஆதி தோசா எக்ஸ்ப்ரஸ் உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றாக இருக்கிறது. படங்கள் தெளிவா இருக்கு இதில். நல்ல வெரைட்டிஸ்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசா எக்ஸ்பிரஸ் - காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கொலு பொம்மைகள்...கும்பகோணத்தில் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட இளமைக்கால கொலு நினைவுகளை மீட்டெடுத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொலு பொம்மைகள் - உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கொலு பொம்மை வீடியோ பார்த்த நினைவிருக்கிறது. கமென்ட் போட்டேனா ? நினைவில்லை. பார்க்கிறேன் ஆதி.

  ஓலாவும் ஊபரும் அதிகம் பயன்படுத்துவதில்லை என்றாலும் பயன்படுத்திய போது பிரச்சனைகள் வரத்தான் செய்தது. கேன்சல் செய்தால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டுமே இல்லையா? சிலர் இப்படி டிமான்ட் செய்ததுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓலா ஊபர் - பயன்படுத்தாத வரை நல்லதே. அதிலும் குறிப்பாக தமிழகத்தில்! நிறைய பிரச்சனைகள் தற்போது கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இரண்டாவதும் போட்டுக் கொண்டாச்சா!! சக்ஸஸ்ஃபுல்!!!!! ஆமாம் இரண்டாவது போடப் போன போது கூட்டம் இல்லை அவ்வளவாக

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு டோஸ் - வீட்டில் அனைவரும் போட்டுக் கொண்டாயிற்று! மகளைத் தவிர!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 8. கொலு பொம்மைகள் அழகாக இருக்கிறது.
  தோசைகளின் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொலு பொம்மைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அறிந்து மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு தவணையும் போட்டுக் கொண்டாயிற்று! நல்லதே! அடுத்தது Booster போடச் சொன்னாலும் சொல்லலாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. ஓலா. இத்தனை அட்டகாசமா? அநியாயமா இருக்கே. தோசை பார்க்கவே ஆசையாக இருக்கிறது. இரண்டாவது ஊசி போட்டுக் கொண்டதற்கு வாழ்த்துகள். ஶ்ரீரங்கம் கொலு சிறப்பாக இருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓலா - ஊபர் இரண்டுமே கொஞ்சம் அட்டகாசம் தான் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....