வியாழன், 7 அக்டோபர், 2021

முகப் புத்தகத்திலிருந்து - இருமலும் கணேஷாவும் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE WORLD IS FULL OF NICE PEOPLE.  IF YOU CAN’T FIND ONE, BE ONE!


******


21 செப்டம்பர் 2021:





மகளுக்கு இருமல் இருந்ததால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். "எத்தனை வருஷமா இருமல் இருக்கு" !! தலையில பேன், பொடுகு இருக்கா?? என்று பல கேள்விக் கனைகளுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு மருந்து எழுதி கொடுத்திருக்கிறார்...:)


அருகில் இருந்த மருந்துக்கடையில் மருந்து வாங்கியதும், '+2 படித்த பெண்கள் வேலைக்கு தேவை' என்ற அட்டையை பார்த்து விசாரிக்கவும், 7000 ரூ சம்பளம் தருவாராம். தெரிந்தவர்களிடம் சொல்கிறேன் என்று சொல்லி வந்தேன்.





அங்கிருந்து திருவரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.. எனக்கு இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளும் நாள் நெருங்கி விட்டது.. ஆதார் கார்டும் எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் மருந்து ஸ்டாக் இல்லை! எப்போது வரும் என்பது தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.


வரும் வழியில் ஒரு இடத்தில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க சென்று பார்த்து வந்தேன். 'வீடியோ எடுத்துக்கலாமாங்க!' சம்மதித்ததும் எடுத்திருக்கிறேன்..:) பகலில் என்பதால் லைட்டிங் சரியாக இல்லை..:) Adhi's kitchenல் லீவு விட்டு ஒரு மாசமாச்சே..:) அதனால் வரும் வாரங்களில் அதில் பகிர்ந்து கொள்கிறேன்.





மற்றொரு கடையில் நவராத்திரிக்காக அம்பாள் முகம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். 


****


28 செப்டம்பர் 2021:



மகளுக்கு கடந்த பத்து நாட்களாகவே வறட்டு இருமல்! வீட்டு வைத்தியங்கள் எதற்கும் கேட்கவில்லை. என்ன செய்தாலும் பயனில்லை.. திடீரென எதற்காக இந்த இருமல் என்றே புரியவில்லை! இதனால் மனதும் சரியில்லை.


டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட்டும் குறையவில்லை. அடுத்த கட்டமாக Blood testம் எடுத்துப் பார்த்தார். நேற்று இரண்டு விதமான X rayக்கள் எடுத்துப் பார்த்ததில் 'சைனஸ்' இருப்பது தெரிய வந்தது.


இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு பிள்ளைகள் சென்று வருவதே பெரிய விஷயம்! இதில் உடல்நலக்குறைவுடன் பள்ளிக்குச் சென்றாலும் அங்கே சந்திக்கும் ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபடுகிறது. 


நேற்று மருந்துக்கடையில் கூட மகளும், நானும் நின்று கொண்டிருந்த போது கடைக்காரர் எங்களிடம்...


'தப்பா எடுத்துக்காதீங்க! இரண்டு அடி தள்ளிப் போய் ரோடு பக்கம் பார்த்து இருமு!' என்றார்.


நான் அமைதியாக மருந்துகளையெல்லாம் வாங்கி விட்டு அவரிடம் 'சைனஸ் இருக்கறதால தான் இருமறா' பயப்படாதீங்க! என்றேன்.


'இல்ல! இல்ல! நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிருக்கீங்க! என்றார்.


இல்ல! பரவாயில்ல! அவங்கவங்க பயம் அவங்கவங்களுக்கு! என்று சொல்லி நகர்ந்தேன்.


ஒரு அம்மாவாக எனக்கு வலிக்கத் தான் செய்தது!


சீதோஷ்ண மாற்றத்தால் வரும் சாதாரண இருமல், சளி, ஜூரம் என்பதெல்லாம் இந்தக் கொரோனாவால் பூதம் போல் பார்க்கப்படுகிறது..:)


நீ ரொம்பநாளா கணேஷாவ வரையறதே இல்ல இல்லையா! அதான் அவருக்கு கோவம் போலிருக்கு!ன்னு மகளிடம் சொன்னேன்!


என் உடம்ப சரி பண்ணிடுங்க கணேஷா! இருமல் நிக்கணும்! என்று சொல்லியபடியே வரைந்த கணேஷா இது!


******

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்



22 கருத்துகள்:

  1. தற்போது மகளுக்கு இருமல் சரியாகி விட்டதா?  கீதா அக்கா சொன்ன வைத்தியம் செய்து பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மகளுக்கு விரைவில் சரியாகிவிடும்... கவலை வேண்டாம்.

    கொரோனா காலத்திற்குப் பின், யார் இருமினீலும் தும்மினீலும் எச்சரிக்கை உணர்வும் பயமும் கடுப்பும் வரத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி.

    சீதோஷ்ண மாற்றத்தால் வரும் சாதாரண இருமல், சளி, ஜூரம் என்பதெல்லாம் இந்தக் கொரோனாவால் பூதம் போல் பார்க்கப்படுகிறது..:)//

    அதே அதே...எனக்கும் சைனஸ் பிரச்சனையால் வருவதுண்டு..அப்போது இதே கதைதான். வறட்டு இருமல் இருந்தால் மிளகாய்ப்பொடி தவிர்க்கலாம், அதிகக்காரம் தவிர்ப்பதும் நல்லது

    இப்போது தேவலாமா?

    கணேஷ் படம் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் ரோஷிணிக்கு!

    //ஒரு அம்மாவாக எனக்கு வலிக்கத் தான் செய்தது!//

    புரிந்து கொள்ள முடிகிறது ஆதி. இந்தக் கொரோனா உறவுகளுக்குள்ளும் பிரச்சனைகளை வளர்த்திருக்கிறது. புரிதல் இல்லாமல் என்ன செய்ய?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////ஒரு அம்மாவாக எனக்கு வலிக்கத் தான் செய்தது!/// உண்மைதான். எனக்கு ஜலதோஷம் இருக்கறவங்க 10-15 அடிக்குள்ள வந்தாலே எனக்கு சட்னு ஜலதோஷம் வந்துடும் (I think before Feb 2018). ஜலதோஷம் வந்தால் இரண்டு இரவுகள் தூக்கம் போயிடும். அதனால ஆபீஸ்ல, யாருக்கு ஜலதோஷம் இருந்தாலும் ரூமுக்குள் வரக்கூடாதுன்னு சொல்லிடுவேன். சில சமயம் மீட்டிங்க்லயும் டக்னு ஒருத்தருக்கு ஜலதோஷம் இருக்குன்னு தெரிந்துவிடும்.

      துபாய்ல வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஆபீஸ்ல சிந்தி நண்பனுக்கு ஜலதோஷம் இருந்ததைக் கண்டு நான் தள்ளிப் போனேன், தும்மும்போது நான் கர்சீப்பை வைத்து என் மூக்கை மூடிக்கொள்வேன். என் boss தனியாக என்னைக் கூப்பிட்டு, அப்படிச் செய்யக்கூடாது, அவனுக்கு hurt ஆகும்னு சொன்னார்.

      அதனை நினைத்துக்கொண்டேன்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பொம்மைகள் நன்றாக இருக்கின்றன.

    ரோஷிணிக்குச் சீக்கிரம் சரியாகிவிடும் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நானே கேட்க நினைத்து விட்டது. ஏன் ஆதியின் அடுக்களையில் பதார்த்தங்கள் எதுவும் வரவில்லை என்று?

    நேரம் சரியாக இருக்கிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் சரியில்லை! நிறைய வேலைகள் என்பதால் ஆதியின் அடுக்களை காணொளிகள் வருவதில்லை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கணேஷா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆம் இன்றைய நிலையில் சாதாரண இருமலைக்கூட தவறாகததான் நினைக்கத்தான் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருமல், தும்மல் என்றால் கொஞ்சம் பயம் தான் எல்லோருக்குமே கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பொம்மைகள் அருமை. ரோஷ்ணியின் படம் பிரமாதம். ரோஷ்ணி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மைகளும், ஓவியமும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முகநூலில் படித்தேன்.
    இப்போது ரோஷ்ணிக்கு இருமல், தும்மல் சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
    இந்த கொரோனா காலம் நிறைய பயத்தை மக்களுக்கு கொடுத்து இருக்கிறது.

    மகள் வரைந்த ஓவியம் அருமை.
    கொலு பொம்மைகள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம்.
    எனக்கு வறட்டு இறுமல் போன ஆண்டு வரை இருந்துச்சு.
    சில ஆழ்ந்து சுவாசிக்கும் முறைகளால் அதை குணப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளேன்.
    என் அடுத்த நூல் அறிமுகமும் அது குறித்து தான் பேசப்போகிறது.
    சைனஸ் என மருந்து சாப்பிட ஆரம்பித்தால் வாழ்வு முழுதும் அதை சாப்பிட வைத்து விடுவார்கள்.
    எனவே, சில சுவாசப் பயிர்ச்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுப்பதுடன் உடலுக்கு ஒவ்வாதவற்றை சாப்பிடாமல் நிறுத்தவும் வைய்யுங்கள்.
    சரி ஆயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாசிக்கும் முறைகள் பயனுள்ளவை தான் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....