அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ZAAYKA பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
LIFE IS LIKE A SEA; WE ARE MOVING WITHOUT END - NOTHING STAYS WITH US! WHAT REMAINS IS JUST THE MEMORIES OF SOME PEOPLE WHO TOUCHED US AS WAVES.
******
நவராத்திரி: மகிழ்வான தருணங்கள்:
மனதுக்கு நெருக்கமானவர்களுடனான சந்திப்பு என்றும் மகிழ்வையேத் தரும்.. நேரம் போவதே தெரியாத பேச்சும், சிரிப்பும் அன்றைய பொழுதை இனிமையாக்கி விடும். நேற்றைய மாலை நேரம் தோழிகள் Uma Sundar & Rajeswari Periyaswamy இருவருடனும் இனிமையாகச் சென்றது.
******
மகளின் இருமல் - நவராத்திரி முடிவு:
நவராத்திரி கொண்டாட்டங்கள், வேலைகள் என்று ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் 'இந்த குழந்தைக்கு இன்னும் சரியாகலையே! என்று தோன்றிக் கொண்டே தான் இருந்தது.
இரண்டு நாட்களாக Chest specialistஇடம் அப்பாயிண்மெண்ட் வாங்கி அழைத்துச் சென்று Lungs scanம் எடுத்து பார்த்து ஒண்ணும் பிரச்சனையில்லை! என்ற சொல்லில் தான் நிம்மதி வந்தது! அலர்ஜியால் ஏற்பட்ட இருமல் தான் என்றும், மருந்து சாப்பிட்டால் சரியாயிடும்! என்றும் மன நிம்மதி தந்தார்.
அவரிடம் Hair wash பண்ணலாமா! என்று தான் முதலில் கேட்டேன். தாராளமா! என்றார். மூன்று வாரங்களுக்கு மேலாகி விட்டதே..:)
இதனிடையே நேற்று பொம்மைகளையெல்லாம் பத்திரமாக பேக் செய்து பெட்டிகளில் வைத்து பாகுபலி போல தூக்கி பரணில் வைத்தோம்! மாலை முதல் நல்ல மழை! இந்த இரண்டு நாட்களில் ஓலாவில் கிடைத்த அனுபவங்களையெல்லாம் தனிப்பதிவாகவே எழுதலாம்.
நேற்று இரவு நெடுநாட்களுக்குப் பின் ஆழ்ந்த தூக்கம் வாய்த்தது.
இதுவும் கடந்து போகும்! இனி எல்லாம் சுகமே!
******
நவராத்திரி கொலு - அருள் டிவி ஒளிபரப்பு - காணொளி:
நவராத்திரி கொலு சமயத்தில் Golu contestக்காக லோக்கல் சேனலில் இருந்து வந்து எங்கள் வீட்டு கொலுவை வீடியோ எடுத்திருந்தார்கள். அதற்கான இணைப்பு இன்று தான் கிடைக்கப் பெற்றது..:) டிவியில் ஒளிப்பரப்பான போது நாங்கள் பார்த்த காணொளியை இதோ உங்கள் பார்வைக்காக..
ARUL TV GOLU KONDATTAM - 2021 - YouTube
******
போட்டது போட்டபடி - மாஸ்க்:
எங்கேயாவது ஒரு இடத்துக்கு போகணும்னா போட்டது போட்டபடி கிளம்ப மாட்டேங்கிற! ரொட்டீன் வேலைகள முடிச்சுட்டு தான் வரேங்கிற!
எப்போதும் என்னவரின் குற்றச்சாட்டு இது தான்..:)
இன்று ஒரு வேலையாக போட்டது போட்டபடி கிளம்பி விட்டேன். வீட்டை பூட்டி வெளியே வந்து சிறிது தூரத்தில் தான் மாஸ்க் போடலங்கிற உணர்வு வந்தது. திரும்பிப் போய் எடுக்க சோம்பல். சரி! கிட்டக்க தானே போறோம்! என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு நடையைத் தொடர்ந்தேன்..:)
சோதனையாக, ஏனோ! இன்று மட்டும் எதிரே வருவோர் எல்லாம் மாஸ்க் அணிந்த முகங்களாக வந்தனர்...:) குற்றவுணர்ச்சி தான் மேலிட்டது!
******
மொபைல் கடையில் சில உரையாடல்கள்:
அண்ணே! இந்த மொபைல் ஃபோன் எவ்வளவுண்ணே??? பழச எவ்வளவுக்குண்ணே எடுத்துக்குவீங்க???
தம்பி! USB இருக்கா? கேபிளோட இல்லப்பா! (ஆள்காட்டி விரலை காண்பித்து) USB இருக்காப்பா!
மாப்ள! ஃபோன் கவர சீக்கிரம் போட்டுக் குடுய்யா! சாயங்காலம் ஊருக்கு போகணும்!
தம்பி! ஃபோன் தண்ணிக்குள்ள விழுந்திடுச்சி! பாரு! தண்ணி ஆடுது! பையன் ட்ராயர் பாக்கெட்ல வெச்சிருப்பான் போல! வாஷிங் மெஷின்ல போட்டு ஒரு சுத்து சுத்திடுச்சி!
அப்பவே எடுத்தாந்திருப்பேன்! பையன் தான் அரிசில போட்டு வெக்க சொன்னான்! ஈரத்த இளுத்திடுமாமே! யூட்டியூப்ல போட்டிருந்திச்சாம்!!
கொண்டாக்கா! எல்லாரும் யூட்டியூப பார்த்தே மேதாவிகளாயிட்டா என்ன செய்யறது!!
பிரித்து உள்ளே இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டே, ஒரு மணிநேரம் கழிச்சு வாக்கா! என்றார்..:)
நெடுநாட்களாக பிய்ந்து போன ஃபோன் கவருடன் இருந்த என் செல்ஃபோனுக்கு இன்று புது சொக்காவும், புதுக் கண்ணாடியும் மாட்டியாச்சு..:) அங்கே கேட்ட உரையாடல்கள் தான் இவை...:)
ஒரு செல்ஃபோன் கடைக்காரரின் அன்றாட வாழ்க்கை இப்படியாக!
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பேஸ்புக்கில் அத்தனையையும் படித்தேன். இங்கும்! தோழிகள் படத்தை இங்கு ஷேர் செய்ய மறந்து விட்டீர்கள்! ரோஷ்ணியின் இருமல் முற்றிலும் குணமாகி விட்டதா?
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//கொண்டாக்கா! எல்லாரும் யூட்டியூப பார்த்தே மேதாவிகளாயிட்டா என்ன செய்யறது!! // ஹாஹஹா
பதிலளிநீக்குரோஷ்னிக்கு ஒன்றுமில்லை என்று படித்து மகிழ்ச்சி..நன்றாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கிரேஸ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நவராத்திரி கொலு பற்றி சொன்ன பேட்டி கேட்டேன். நன்றாக இருந்தது உங்கள் பேச்சு.
பதிலளிநீக்குமகள் உடல் நலம் அடைந்து விட்டது மகிழ்ச்சி.
பாகுபலி போல//
ரசித்தேன். கஷ்டபட்டு செய்த வேலையை சிரித்து இலகுவாக மாற்றி விட்டீர்கள்.
மொபைல் கடை உரையாடல் அருமை.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குநவராத்திரி கொலு வெகு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் நன்பர் Sripathi அவர்களின் வீட்டிற்கு சென்று பார்ப்பது வழக்கம், அவர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம், நண்பரின் திருமதி அவர்களும் வெகு நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, டெல்லியில் Sripathi வீட்டு கொலு பார்க்காத ஏக்கத்தை இந்த காணொலி நிவர்த்தி செய்தது. அவர்களும் காணொலி அனுப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக்க மகிழ்ச்சி, நன்றி.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.
நீக்குஇருமல் நீங்கியது மகிழ்ச்சி...
பதிலளிநீக்குகொலு அருமை... வாழ்த்துகள்...
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குகதம்பம் நன்று. இருமல் சரியாயிடும். க்ளைமேட் மாறுதலாக இருக்கும்.
பதிலளிநீக்குகொலு நல்லா இருந்தது.
செல்போன் கடை உரையாடல்கள்..ஹாஹா
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குமகள் பூரண குணமாகியிருப்பார் என நம்புகிறேன். பேட்டி அருமை. கொலுவும் சிறப்பு. மொபைல் கடை உரையாடல்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குமுகநூலில் படித்தேன். ரோஷ்ணியின் உடல்நிலை இப்போது பூரண குணமடைந்திருக்கும் என நம்புகிறேன், உங்கள் பேட்டியைப் பார்த்தேன். கொலுவும் நன்றாக இருக்கிறது. ஆனால் பொம்மைகள் குறைஞ்சாப்போல் இருக்கே!
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குமகள் பூரண குணமடைந்து குறித்து மகிழ்ச்சி. நீங்கள் மாஸ் போடாமல் போகும்போது எதிரே வருபவர்கள் எல்லாம் மாஸ் அணிந்து வரும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நானும் அனுபவித்திருக்கின்றேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்கள் மகள் இருமலில் இருந்து குணமடைந்ததில் மகிழ்ச்சி
பதிலளிநீக்குஸ்கேன் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநவராத்திரி கொலு மிக மிக அருமை. சிந்தையை கவரும் விதத்தில் அமைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி!
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.
நீக்கு