வியாழன், 14 அக்டோபர், 2021

நவராத்திரி - அனுபவங்கள் - கீதாம்மா வீட்டு கொலு:அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மீன் செத்தா கருவாடு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அரியவை ஐந்து: போலித்தனம் இல்லாத புன்னகை; சுயநலம் இல்லா உறவு; கைமாறு கருதாத உதவி; கவலைகளை மறக்க வைக்கும் நட்பு; எதிர்பார்ப்பு இல்லாத அன்பு.


******


ஒரு குட்டி தேவதை கொலுவுக்கு வந்தாள். கையில் பாட்டு புத்தகம் வைத்திருந்தாள். கொலுவின் அருகே அமர்ந்து கொண்டு பாடட்டுமா? என்றாள். 


பாடேன்! என்றேன்.


இரண்டு, மூன்று பாட்டுகள் பாடினாள்.  அத்தை! இது என்ன வார்த்தை! என்றாள். படித்து சொன்னேன்..:)


பிறகு பேசிக் கொண்டிருந்தவள், நான் எத்தனை பாட்டு பாடினேன்! என்று என்னிடம் கேள்வியெல்லாம் கேட்டு என்னை சோதனை செய்தாள்..:)


அவளுக்கு வெற்றிலை தாம்பூலம் தரலாம் என்று நான் கிச்சனுக்குள் போனதும் பின்னோடு வந்தாள்.


உங்ககிட்ட லிப்ஸ்டிக் இருக்கா! என்றாள்.


அதெல்லாம் நான் போட்டதே இல்லையே! என்றேன்..:)


சே! லிப்ஸ்டிக் கூட இல்லியா!! சரி! இந்த குட்டி கண்ணாடி எனக்கு வேணும்! என்றாள்.


இரு! இரு! தரேன்! என்று சொல்லி வெற்றிலை தாம்பூலத்துடன் கண்ணாடி, சீப்பு, தோடு செட் என்று எல்லாவற்றையும் கொடுத்ததும் ஓட்டம் பிடித்தாள்..:)


சிறிது நேரத்தில் அவள் அம்மாவோடு வந்தவள், அத்தை! இதோ பாருங்க என்று நான் தந்த தோடு செட்டை அணிந்து கொண்டதை காண்பித்தாள்..:)


புடிச்சிருக்கா! என்றேன்.


ம்ம்ம்! எனக்கு அக்கா போட்டிருக்கிற மாதிரி பெரிய ஜிமிக்கி வேணும்! என்றாள்...:)


சரி! அடுத்த தடவை வாங்கித் தரேன்!


******


நேற்று மகள் பள்ளியிலிருந்து வந்ததும் தெரிந்த ஆட்டோ ட்ரைவரிடம் அம்மா மண்டபம் படித்துறை அருகே ஒரு அபார்ட்மெண்ட் வரை போகணும் என்று வரச் சொல்லியிருந்தேன். 

நம்ம Geetha Sambasivam மாமி வீட்டு கொலுவுக்கு தான் சென்றிருந்தேன். நாங்கள் இங்கே வீடு வாங்குவதற்கும், நான்காம் வருடமாக கொலு வைப்பதற்கும் மாமியின் வழிகாட்டல்கள் தான் காரணம். மாமியின் உடல்நிலை காரணமாக அவரால் எங்கள் வீட்டு கொலுவுக்கு வர இயலாததால் வெற்றிலைத் தாம்பூலமும், சுண்டலும் எடுத்துச் சென்று கொடுத்து விட்டு ஆசிகளைப் பெற்றோம். நாங்கள் சென்ற சமயம் தான், அவர்களின் ஒருசில உறவினர்களும், அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்திருந்தனர். அவர்களிடம் 'என்னோட இண்டர்நெட் ஃப்ரெண்ட்' என்றும் 'ஃபேமிலி ஃப்ரெண்ட் மாதிரி பத்து வருஷமா பழக்கம்'  என்றும் அறிமுகப்படுத்தினார்...:)
சிறிது நேரம் அங்கே பேசிக் கொண்டிருந்து விட்டு மாமியிடமும் தாம்பூலம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். ஓலா ஆட்டோ புக் செய்து விட்டு காத்திருந்தோம். சிறிது நேரத்தில் ட்ரைவர் கால் செய்து 'இதோ எதிர்த்தாற் போல டீ குடிச்சிட்டு வரேன்' என்று சொல்லவே காத்திருந்தோம்.

அருகே இருந்த femina shopping mallலின் வெளியே தரையில் ஒரு விளக்கு போல கடையின் பெயரோடு சுற்றிக் கொண்டேயிருந்தது. மகள் அதற்கு கனெக்‌ஷன் எங்கிருந்து வருகிறது என்று பார்த்துக் கொண்டே இருந்தாள்.


அதற்குள் ஆட்டோ வந்துவிடவே ஏறி வந்து கொண்டிருந்தோம். வழியில் என்னுடைய அலைபேசியில் ஒரு கால்! எங்கள் அசோசியேஷன் செகரட்டரி தான் கால் செய்திருந்தார்.. 'ஆதிலஷ்மி தானம்மா' ??? 


சொல்லுங்க சார்!


என்னைத் தேடி நட்புவட்டத்தில் ஒரு குடும்பம் வந்திருப்பதாக தகவல் சொன்னார். அவங்கள வெயிட் பண்ண சொல்லுங்க சார்! அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்! என்றேன்.


வீட்டுக்கு வந்ததும் அவர்களை வரவேற்று அமர வைத்தேன்! அவர்களும் கொலுவை பார்த்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பின் இங்கே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சிலரும் வந்திருந்தனர்.


எல்லோரின் பேச்சும் கொலு ஆரம்பித்தது பற்றியும், வீட்டை பராமரிப்பது பற்றியும், இத்தனை வருடங்களாய் தனியே சமாளிப்பது பற்றியும் தான் என இருந்தது. அவர்களிடம் என்னைப் பற்றி நான் பகிர்ந்து கொண்ட போது 'நான் ஒரு பக்குவப்பட்டவளாக' உணர்ந்தேன். எனக்கே என்னைப் பிடித்திருந்தது.


எதையும் எதிர்பார்க்காத வாழ்க்கை! வாழ்வின் ஓட்டத்துக்கு ஏற்றாற் போல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நடப்பது எல்லாம் நன்மைக்கே! என்று நினைக்கிறேன். இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

 1. கீதா அக்கா வீட்டு கொலு அழகு. இன்னும் கொஞ்சம் படங்கள் சேர்த்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படம் பொம்மைக் கடை ஒன்றில் எடுத்தது. இரண்டாவதும், மூன்றாவதும் தான் கீதா மாமி வீட்டு கொலு. மாமியின் உடல்நிலை காரணமாக ஒரே படி கொலு தான்.

   தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. கொலு படங்களும் நிகழ்வும் ரசிக்கும்படி இருந்தன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 3. இனிய வாழ்த்துகள் மா. கீதா கொலு வைத்திருப்பதே
  தெரியாது.
  மிக நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.

   தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 6. படங்களும் கொண்டாட்டமும் சிறப்பு.
  விழாக்கள் மூலம் இதுபோன்ற உறவுகள் மேன்படுவதும் அருமை.
  உங்களுக்கு உங்களையே பிடிப்பது மகிழ்ச்சியின் முக்கியமான அங்கம்.
  அதை வாழ்வு முழுவதும் கடைபிட்ப்பது அணைவருக்கும் சிறப்பானது.
  வாசகமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கொலுவைப் பார்த்தாலே குதூகொலு !
  சுண்டல் இப்போதானே ரெகுலராக் கிடைக்குது!
  கண்ணுக்கும் வயித்துக்கும் விருந்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ரிஷபன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. சிறப்பான பதிவு..

  அருள்நிறை சரஸ்வதி பூஜை
  நல் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. முகநூலில் படித்து விட்டேன்.
  கொலு படங்கள் எல்லாம் அழகு.


  //நடப்பது எல்லாம் நன்மைக்கே! என்று நினைக்கிறேன். இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.//

  வாழ்த்துக்கள்.! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. கீதாக்காவின் வீட்டுக் கொலு அழகாக இருக்கிறது. அதாவது அந்தக் கால கொலு பொம்மைகள் அது தனி அழகு.

  வாழ்த்துகள் ஆதி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கொலு படங்களும் உங்கள் அனுபவங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....