ஞாயிறு, 24 அக்டோபர், 2021

ஹரித்வார் - ரிஷிகேஷ் - ஒரு நிழற்பட உலா - பகுதி இரண்டு



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ALWAYS SMILE BACK AT SMALL CHILDREN; IGNORING THEM WILL DESTROY THEIR BELIEF THAT THE WORLD IS GOOD.


******


சென்ற ஞாயிறன்று ஹரித்வார் - ரிஷிகேஷ் சென்று வந்த போது எடுத்த படங்களை நிழற்பட உலாவாக பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். முதல் பகுதியை பார்க்காதவர்கள், இங்கே பார்க்கலாம்! இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக நிழற்பட உலா பகுதி இரண்டாக இன்னும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!  முன்னர் சொன்னது போல, இந்தப் படங்கள் அனைத்தும் எனது அலைபேசியில் எடுக்கப்பட்டவையே. வாருங்கள் படங்களை ரசிக்கலாமே!



படம்: காந்தா போஹா - ஸ்ரீராம் அவர்களின் வேண்டுகோளுக்காக!


படம்: மரத்தில் ஒரு மகிழுந்து! பொம்மை கார் விற்பனைக்கு!




படம்: ஆலூ ஜீரா - சப்பாத்தியுடனான தொட்டுக்கை...


படம்: கச்சோடி - பக்கத்தில் இருப்பது தொன்னைகள்!


படம்: கூண்டுக்குள் கச்சோடி - இன்னுமொரு கடையில்...


படம்: கோட்டா சிக்கா எனப்படும் செல்லாக் காசு!
செல்லாக் காசும் இங்கே செல்லும்! 
எத்தனை விதமான நாணயங்கள்...


படம்: அழகான விளக்குகள்...


படம்: சங்குகள் - ஒரிஜினலா இல்லையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்....


படம்: ஐம்பது ரூபாய் மதிப்புள்ள இந்தப் பொருள் என்ன என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!


படம்: இதுவும் இங்கே பிரபலம்... 
இவையும் எதற்கு என்று சொல்ல முடியுமா?



படம்: பாலங்களில் சோலார் விளக்குகள்... 
அதிலும் கும்பம்...


படம்: பாலங்களிலும் வில் - அம்பு! 


படம்: மரத்தடியில் இறைவன் சிலைகள்...


படம்: இன்னும் விதம் விதமாக தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் கேன்கள்...


படம்: இன்னுமொரு மரத்தடி கோவில்!


படம்: மாலைகள் மற்றும் சில பொருட்கள் விற்பனைக்கு...  ஃபோன்பே வசதியும் உண்டு! 



படம்: பாசி மணிகள்... விற்பனைக்கு!


படம்: மாலை நேரத்தில் இரை தேடி வரும் பறவையும் இயற்கையும்...


படம்: கங்கைக் கரையில் காலைச் சூரியன்...


படம்: தங்குமிடத்தில் செடி ஒன்றின் இலைகள்...


******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. சாந்தா போஹா... ச்சே.... காந்தா போஹா படத்துக்கு நன்றி. ஸ்ரீராமின் போதுமே அவர்களின் எல்லாம் வேண்டாமே...

    தொட்டுக்கையில் சீரகம் போட்டால் எனக்கு பிடிபப்தில்லை!


    செல்லாக்காசு செல்லுமென்றால் வாங்கி கொள்வார்களா?

    சங்குகள் - அதில் ஒன்றிரண்டு ஒரிஜினலாகவும் இருக்கலாம்!

    அவை ஊதுகுழல் போல தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்தா போஹா - ஹாஹா....

      சீரகம் அதிகம் இருந்தால் எனக்கும் பிடிக்காது ஸ்ரீராம்.

      செல்லாக்காசு - சிலர் அதனை வாங்கிக் கொள்வதுண்டு - குறிப்பாக அப்படியான பழைய நாணயங்களைச் சேகரிப்பவர்கள் - குறிப்பாக வெளிநாட்டவர்கள்.

      சங்குகள் - ஒன்றிரண்டு ஒரிஜினல் - ஹாஹா....

      ஊதுகுழல் அல்ல! கம்பியால் செய்திருப்பது சிகரெட் ஹோல்டர். மற்றவை சில்லம் என அழைக்கப்படும் - அவையும் புகை பிடிக்க உதவுபவை - கஞ்சா உட்பட! :( அதனை வாங்குபவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வட இந்தியப் பயணத்தில் நான் ரசித்த இடங்களை உங்கள் பதிவு மூலம் கண்டேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் பிடித்த இடங்களை பதிவு மூலம் மீண்டும் நீங்களும் கண்டு ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படங்களை மிகவும் ரசித்தேன்.

    படங்களே இடத்தைப் பற்றின நல்ல அறிமுகத்தைக் கொடுக்கின்றன.

    கஞ்சா புகைக்கும் சல்லாக்கள் விதவிதமாக இருக்கின்றன. அந்த பித்தளை போன்ற குழலும் அதுக்குத்தானோ? அதை வைத்து (50ரூபாய்தானே). சோப்புத் தண்ணிரை வைத்து குமிழ் விட முடியுமா என யோசிக்கிறேன்.

    முதல் கச்சோடிகளுடன் சமோசா இருப்பதுபோல இருக்கிறதே

    லக்ஷ்மன் ஜூலாவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      சில்லம் என்று இங்கே அழைக்கிறார்கள். பித்தளை குழல் - சிகரெட் ஹொல்டர்.

      சமோசா தனியாக இருந்தது நெல்லைத் தமிழன்.

      லக்ஷ்மண் ஜூலா அல்ல! புதிதாக ஹரித்வாரில் - ஹர் கி பௌடி அருகே அமைத்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குழல் - சிகரெட் ஹொல்டர் மற்றும் சில்லம் என அழைக்கப்படும் சிறு ஹூக்காக்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் தெளிவுடன்,கண்களுக்கு விருந்து.

    விமானத்தில் தந்த உணவுகள் பார்க்க நன்றாக உள்ளது. அது சாப்பிடவும் நன்றாக இருந்ததாவென உங்களுக்குத்தான் தெரியும்.:)

    மற்றும் அங்கு விற்பனைக்கு உள்ள படங்களும் நன்றாக உள்ளது. மரத்தில் வேலைப்பாடுடன் செய்யப்பட்ட மகிழுந்து பார்க்க அருமையாக உள்ளது.

    செல்லாக் காசுகள் பழங்கால நினைவு சின்னங்களாக விற்பனைக்கு போகிறதோ..?அதில் பழைய கால ஓட்டை காலாணாவும், பத்து பைசாக்களும் உள்ளதே..! ஒரு பைசா, இரண்டு, ஐந்து பைசாக்கள் என்று கூட முன்பு இருந்தது. நினைவுப் பொருளாக சேகரிக்க தவறி விட்டோம்.

    கும்பம் வைத்த சோலார் விளக்குகளும், வில், அம்பு பாலமும் அழகாக உள்ளது. ஹனுமானுடன் சவால் விட்டு அர்ச்சுனன் கட்டிய வில், அம்பு பாலம் கதை நினைவுக்கு வருகிறது.

    இயற்கை காட்சிகள், சூரியோதயம், இலைகளின் அழகான தோற்றம் அனைத்துமே கண்களை கவர்கிறது. அழகான படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உணவு - சஷாதாப்தி இரயில் வாங்கியவை. ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது - விலை தான் அதற்கான விலை அல்ல! அதிகம்!

      செல்லாக் காசுகள் - பழைய ஓட்டை காலணா இருந்தது.

      பதிவில் பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்கள் எல்லாம் மிக அருமை.
    கங்கை கரயில் காலைச்சூரியன் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அது செல்லாக்காசுகள் அல்ல... வரலாறு சொல்லும் காசுகள்... அதனாலேயே இன்றளவும் நம்மை விட்டு செல்லா காசுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு சொல்லும் காசுகள் - உண்மை தான் நாஞ்சில் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....