ஞாயிறு, 17 அக்டோபர், 2021

ஹரித்வார் - ரிஷிகேஷ் - ஒரு நிழற்பட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூன்று வகை தீர்வுகள் உள்ளன - மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்வது; ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்வது; மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுவிடுவது. 


******


தில்லி வாழ்க்கையில் பல முறை ஹரித்வார்-ரிஷிகேஷ் சென்று வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வித அனுபவம் கிடைக்காமல் இருந்ததில்லை.  சமீபத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சனி-ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் - சனிக்கிழமை காலை தில்லியிலிருந்து புறப்பட்டு, ஞாயிறு இரவு திரும்பி வருவதாக ஏற்பாடு செய்து கொண்டு நானும் நண்பர் பத்மநாபனும் ஹரித்வார்-ரிஷிகேஷ் சென்று வந்தோம். இந்த முறை கங்கையின் கரையில் அமைந்த ஒரு பழமையான தங்குமிடத்தில் தங்கினோம் - கங்கைக்கரையிலேயே இருக்கும் அறைகளின் பலகணி - கங்கை நதியின் மேலாகவே இருக்கிறது என்பதால் எப்போதும் பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கையின் அழகையும் ஒலியையும் கேட்டபடி இருக்க முடிந்தது.  பயணத்தில் எப்போதும் என்னுடன் இருக்கும் எனது DSLR இந்த முறை இல்லை!  தமிழகம் வந்த போது எங்கேயும் பயணிக்கப் போவதில்லையே என அங்கேயே விட்டு வந்தேன்.  அதனால் எனது அலைபேசியில் தான் சில பல படங்களையும் காணொளிகளையும் எடுத்தேன்.   பயணம், அதன் அனுபவங்கள் ஆகியவை குறித்து பிறிதொரு சமயம் எழுதுகிறேன் - எழுதலாம் என்று இருக்கிறேன்.  இப்போதைக்கு அங்கே எடுத்த படங்கள் சில நிழற்பட உலாவாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  படங்கள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


சுடச் சுட குலாப்ஜாமூன் - கடைவீதியில்...


மால்புவா - கடைவீதியில்...ரஸகுல்லாவும் மால்புவாவும் - கடைவீதியில்...மொட்டை அடிக்க காத்திருக்கும் உழைப்பாளி...
அட ஆமாங்க, முடிதிருத்தும் உழைப்பாளி இவர்! 
கங்கைக்கரையில் இது தான் கடை!கங்கா ஆரத்திக்காக காத்திருக்கும் மக்கள் - கங்கையின் கரையில்...ஹர் கி பௌடி அருகே பிர்லாக்கள் அமைத்த மணிக்கூண்டு...செல்ஃபி டைம்... கங்கைக்கரையில் கோவில் அருகே!புனித கங்கை நீரை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் குடுவைகள்...


கங்கையில் ஆரத்தி செய்து விடப்படும் பூக்கள் விற்பனைக்கு!கடைவீதியில் குதிரை வண்டி.... பயணிக்கத் தயாராக!தங்குமிடத்தில் அந்தக் கால ஸ்விட்ச்!தங்குமிடத்தின் பலகணியும் கங்கையும்...தங்குமிடத்தில் கங்கை படித்துறை - பிரவாகமாக ஓடும் கங்கை...ஹரித்வார் இரயில் நிலையம் வெளியே!  
சிவனுக்கு அருகே சுகமாக உறங்கும் ஒருவர்!


இந்தச் சிவன் சிலையும் ஹரித்வார் இரயில் நிலையம் வெளியே இருக்கிறது.... சிலை வடித்தவரின் கைவண்ணம் சுமார் தான் எனத் தோன்றுகிறது!நாங்கள் பயணித்த ஷதாப்தி கோச் வெளிப்புறத்திலிருந்து!ஷதாப்தியில் காலை உணவு....  கங்கைக் கரையில் விற்பனைக்கு வைத்திருந்த மரத்தினால் ஆன வாகனங்கள்...பாலம் ஒன்றிலிருந்து நாங்கள் தங்கிய தங்குமிடத்தின் படம்....கங்கைக் கரையில் சூரியோதயம்... 
தங்குமறையிலிருந்து எடுத்த படம்...

******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


36 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவும் அருமையாக உள்ளது. அத்தனைப் படங்களும் கைபேசியில் எடுத்திருந்தாலும், தெளிவுடன் அழகாக உள்ளது.

  இனிப்பு படங்கள் நன்றாக உள்ளன மால் புவா என்றால்...பூரியை ஜீராவில் தோய்த்ததா?

  செல்ஃபி டைமென்று ஒன்று உள்ளதா என யோசிக்க வைத்த படம். ஹா ஹா அதற்கு தங்கள் விளக்கம் ரசித்தேன்.

  அந்தக்கால வட்ட ஸ்விட்ச் என்றும் மறக்க முடியாதவை.

  பிரவாகமாக ஓடும் கங்கையின் அழகும், அதைக்காண தினமும் விரைந்து வரும் சூரியோதயமும், கண்களுக்கு விருந்தாக இருந்தது.

  அத்தனைப் படங்களும் அழகாக உள்ளது. எதையென்று விமர்சிப்பது? உங்களால் இன்று ஹரித்வார் ரிஷிகேஷை தரிசித்துக் கொண்டேன். உங்கள் பயண அனுபவங்களையும் படிக்க ஆவலாக உள்ளேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவின் வழி பகிர்ந்த படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மால் புவா - ஜீராவில் தோய்த்தது தான். சுவையாக இருக்கும். நம் ஊரிலும் கிடைக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. படங்கள் தெளிவாக வந்திருக்கின்றன. காண்பதற்கே அவ்வளவு நன்றாக இருக்கிறது.

  தங்குமிடம் என்ன, எவ்வளவு ஆயிற்று, எப்படி பதிவு பண்ணினீர்கள் என எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

  கங்கையில் புனித நீராடினீர்களா?

  இடங்கள் ரொம்ப கமர்ஷியலாக மாறிவிட்டனவா?

  இனிப்புகள் ஆஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்குமிடம் மற்ற தகவல்கள் முடிந்தால் பதிவாக எழுதுகிறேன்.

   கங்கையில் புனித நீராடினார்களா? ஆஹா... அது இல்லாமலா? மூன்று வேளைகளும் நதி நீராடினோம்!

   கமர்ஷியல் - பல இடங்கள் இப்படி ஆகிவிட்டது நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. மிக அழகிய படங்கள்.  சிவன் காவல் இருக்க அவர் ஆனந்த உறக்கம்.  அடுத்த சிவன் பாவமாய் இருக்கிறார்!  ஷதாப்தியில் என்ன சிற்றுண்டி கொடுத்தார்கள் என்று டப்பாவைத் திறந்து படம் எடுத்திருக்கக் கூடாதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷதாப்தியில் என்ன சிற்றுண்டி கொடுத்தார்கள் என்று டப்பாவைத் திறந்து படம் எடுத்திருக்கக் கூடாதோ!//

   ஹாஹாஹா அதானே!!!

   ஸ்ரீராம் அதுதான் கன்டா பொஹா/காந்தா பொஹா ந்னு மேல எழுதியிருக்கே. அது அவல் உப்புமாதான் ஸ்ரீராம். எனக்குத் தெரிந்து. நீங்க சொல்றாப்ல திறந்தால்தான் தெரியுமோ!!! ஹாஹா

   கீதா

   நீக்கு
  2. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். சிவன் பாவமாய் இருக்கிறார் - ஹாஹா.... எங்களுக்கும் தோன்றியது.

   டப்பாவைத் திறந்து படம் எடுத்திருக்கக் கூடாதோ? ஹாஹா... எடுத்திருக்கிறேன். அடுத்த ஞாயிறில் பகிர்ந்து கொள்கிறேன் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. காந்தா போஹா - அவல் உப்புமா தான் அது கீதாஜி. அடுத்த ஞாயிறில் முடிந்தால் படம் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கங்கையின் மேல் இருக்கும் தங்குமிடம் அருமை. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.. முக்கியமாக ஸ்வீட்கள்👌

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி குமார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மிகவும் அருமையான சொர்க்க பூமி என்றுதான் சொல்ல வேண்டும், இந்த ஹரித்வாரையும் ரிசிகேசையும் !!! எனக்கும் அந்த நல்வாய்ப்பு வாய்த்தது, இறைவன் அருள் !!!

  S G Shankar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொர்க்க பூமி தான் ஷங்கர் ஜி. முன்பெல்லாம் வருடா வருடம் சென்று வந்ததுண்டு - அதுவும் பலரை அழைத்துக் கொண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வெங்கட்ஜி வாவ்!!! அழகான படங்கள். கங்கை நதியின் அழகு...

  என் லிஸ்டில் உள்ள இடங்கள் எத்தனை வாய்ப்பு என்னைத் தட்டியும் போக முடியாத சூழல்.

  படங்கள் எல்லாம் அருமை. சூடான ஜாமூன், மால்புவா, ரொஸகுல்லா எல்லாம் ஈர்க்கின்றன. தள்ளி நின்று பார்த்துக் கொள்கிறேன்.

  கங்கைக்கரை ரொம்பவே வியாபாரத்தலம் ஆகிவிட்டது போன்று இருக்கிறது.

  நீங்கள் தங்கிய இடம் வாவ்! கங்கை ஒட்டி உரசி ஓடுகிறாள். செம....

  கொஞ்சம் குண்டானால் உள்ளே புகுந்துவிடுவாளோ?!!!!!

  கொஞ்ச வருடங்கள் முன் மணாலியில் பியாஸ் நதிக்கரையில் தங்கிய நினைவு....

  விரிவான குறிப்புகள் வரும் என்று நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. இனிப்புகள் - தள்ளி நின்று பார்த்துக் கொள்வதே நல்லது!

   கொஞ்சம் குண்டானால் உள்ளே புகுந்து விடுவாள் - உண்மை. பல முறை இப்படியும் ஆனதுண்டு!

   விரிவான குறிப்புகள் - வரலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. படங்கள் அருமை. கங்கை ஆறும், அதன் அருகில் தங்கும் இடங்களைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. சிவன் சிலையின் அருகே சுக தூக்கம் குடிமகனோ?!!! அப்படியிருந்தால் பரவால்ல அப்பவும் செருப்பை கழட்டிவிட்டுப் படுத்திருக்கிறாரே!!!!!

  மற்றொரு சிவன் சில ஸோ ஸோ தான் நீங்க சொல்லியிருப்பது போல்.

  கங்கை நதிக்கரையில் தங்குமிடங்கள்!!! மனதை கட்டிப் போட்டுவிட்டது. ரொம்பப் பிடித்தது.
  மணிக்கூண்டும் அழகு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிமகனோ? தெரியவில்லை கீதாஜி. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

   இரண்டாம் சிலை - சோ சோ தான்.

   கங்கை கரையின் தங்குமிடங்கள் - மிகவும் பிடித்தது எங்களுக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. //ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வித அனுபவம் கிடைக்காமல் இருந்ததில்லை.//

  ஆமாம், உண்மை. ஒவ்வொரு முறை போகும் போதும் நமக்கு புது புது அனுபவம் கிடைக்கும் தான்.
  கங்கை ஆரத்திக்கு கங்க்கை நீரில் விட மலர்கள் விற்பனைக்கு வைத்து இருக்கும் தொன்னை வித்தியாசமாக இருக்கிறது, முன்பு வேறு மாதிரி இருக்கும். அப்போது 5 ரூபாய் இப்போது எவ்வளவு ரூபாய்?

  பிளாஸ்டிக் குடுவைகள் வேறு வடிவம், வண்ணத்தில் இருக்கிறது.
  நிறைய மாற்றங்கள் தெரிகிறது.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  பழைய நினைவுகள் வந்து போகிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் தான் கோமதிம்மா. பூக்கள் வைத்திருக்கும் தொன்னை - பத்து ரூபாயிலிருந்து கிடைக்கிறதும்மா. ஐம்பது ரூபாய்க்குக் கூட பெரிய அளவில் உண்டு.

   பிளாஸ்டிக் குடுவைகள் - பால் கேன் மாதிரி இப்போது கிடைக்கிறது.

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. சிவன் சிலையின் அருகே சுக தூக்கம் குடிமகனோ?!!!""" @Geetha rangan:))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிமகனோ ? நல்ல சந்தேகம் தான் கீதாஜிக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. அருமையான வாசகம். பசுமையான காட்சிகள்.
  கங்கை வீட்டைத் தொட்டு ஓடுகிறாள்.
  கட்டிடம் புனிதமாகிறது.

  பக்தி ஸ்தலம் வியாபாரமாகி வெகு நாட்கள்
  ஆகிவிட்டன என்று நினைக்கிறேன்.
  கவலை தேங்கிய சிவனார் முகம் சொல்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   பக்தி ஸ்தலம் வியாபாரமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன - உண்மை.

   கவலை தேங்கிய சிவனார் முகம் சொல்வதும் இதைத்தானோ? இருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. Serenity Prayer .taught to us.
  God grant me the serenity
  to accept the things I cannot change
  Courage to change the things I can
  And wisdom to know the difference.


  எங்கள் மேனேஜ்மெண்ட் வகுப்பில் சொல்லும் ப்ரேயர்.
  மிகப் பொருள் பொதிந்தது நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான வழிபாடு. பொருள் பொதிந்ததே - மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. படங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. மீண்டும் ஒருமுறை பார்த்தும் படித்தும் இரசித்தேன்...வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் பதிவும் பார்த்து, படித்து ரசித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....