வியாழன், 21 அக்டோபர், 2021

குறும்படம் - ZAAYKAஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்க்கை ஓர் புள்ளி போல… தன் கவலையை மறந்து முன்னேறுபவனுக்கு அது துவக்கப்புள்ளி… அக்கவலையில் மூழ்குபவனுக்கு அதுவே முற்றுப்புள்ளி…  வாழ்க்கையை கவலையின்றி வாழ பழகுவோம்.


******
இந்த நாளில் மீண்டும் குறும்படம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் காணொளி ஒரு மூதாட்டி - தனது வயது காரணமாக உணவுக் கட்டுப்பாடுடன் இருக்க, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் காரசாரமான (ஹிந்தியில் சட்பட்டா கானா) உணவு உண்கிறார்கள்.  மருமகள் என்னதான் மாமியாருக்கு தாங்கள் சாப்பிடும் உணவை கொஞ்சமேனும் கொடுக்கலாம் என்றாலும், மகன் அப்படிச் செய்ய ஒப்புக் கொள்வதில்லை.  மருமகள் ஒரு முடிவு எடுக்கிறார் - அந்த முடிவு என்ன? என்பதை  காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  பாட்டியின் நடிப்பு கலக்கல் - அதிலும் உணவு குறித்து அவர் சப்புக்கொட்டி சாப்பிடுவது போல பாவனை செய்யும் இடங்கள் செம! பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், இந்த இணைப்பு வழி பார்க்கலாம்!


நண்பர்களே இன்றைய குறும்படம்/காணொளி குறித்த உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

 1. மிக அருமை. பாட்டி அருமையாக நடித்திருக்கிறார். மருமகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. ஆஹா... பாட்டி நடிப்பில் நம்ம சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடுவார்போல... எனக்கு அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி புரியாவிட்டாலும்கூட தன்னுடைய அபார நடிப்பால் கடைசியில் மகனையும் மருமகளையும் "களி" தின்ன வைப்பதில் வெற்றியடைந்துவிடுகிறார் என்பது மட்டும் நன்கு புரிகிறது... அப்பத்தாவுக்கு வாழ்த்துக்கள்!!!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

   நீக்கு
  2. தாய் உள்ளம் தான் சாப்பிடும் உப்பு உறைப்பு இல்லா சாப்பாட்டை தன் குழந்தைகள் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.

   மருமகள் மாமியாரின் உடல் நிலை சரியாகும் வரை தாங்களும் இப்படி சாப்பிட முடிவு செய்து இருக்கலாம். தன் குழந்தைகளின் நல்ல உள்ளத்தை நினைத்து நெட்டி முறிக்கிறார்.

   நீக்கு
  3. விளக்கம் நானே தந்திருக்க வேண்டும் - :( நீங்கள் விரிவாக இங்கே விளக்கம் தந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. மிக அருமையான காணொளி.
  மனதை நெகிழ வைத்து விட்டது.
  பாட்டி நடிப்பு மிக அருமை.
  மருமகள் நடிப்பும் அருமை., மகனும் நன்றாக நடித்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பாட்டியின் நடிப்பு எனக்கும் பிடித்தது கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நடிப்பது போலவே இல்லை..நடப்பதை பதிவு செய்தது போல மிக இயற்கையாய்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் ஜீ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. குறும்படத்தில் பாட்டி, மகன், மருமகள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். இறுதியில், மருமகள் எடுத்த முடிவு நெகிழ வைக்கிறது. அதற்கு மகன் ஒத்துக் கொண்டதும் அவர்களை வாழ்த்த நமக்கே ஒரு எண்ணம் வருகிறது. அவர்களை வாழ்த்தும் பாட்டியின் நல்ல மனதும் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. நெகிழ்ச்சி. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....