அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கேதார் தால் பயணம் பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உலகின் முதல் இழப்பும் நம்முடையதல்ல; கடைசி இழப்பும் நம்முடையதாக இருக்கப் போவதில்லை! எல்லோருக்கும் நேர்வதே நமக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டாலே போதும்; வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடரலாம்…
******
அவரும் நானும் தொடருக்குப் பிறகு மீண்டும் ஒரு தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தொடர் எதைப் பற்றி? பார்க்கலாம் வாருங்கள்.
யாரிவள்!
இவள் ஒரு சராசரி மனுஷி! உங்களுக்குள் ஒளிந்திருப்பவள். உங்கள் அண்டை வீட்டு பெண்ணாகவும் இருப்பாள். உங்கள் எல்லோரோடும் சேர்ந்திருப்பவள். இனி! இவளின் பார்வையில் இவள் பார்த்த காட்சிகளும், கிடைத்த அனுபவங்களும் பகிர்ந்து கொள்ள இருக்கிறாள்!
அப்பா அம்மாவின் நான்கு வருடத் தவத்துக்கு பின் உதித்தவள் இவள். இவள் பிறப்பதற்குள் இவளின் அம்மா இந்த சமூகத்தில் எல்லோரிடமும் வாங்கிய வசவுகளையும், குத்தல் பேச்சுகளையும் சொல்லிட இயலாது! கோவில்களை சுற்றி வந்தும், மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டதின் பயனாக ஒருவழியாக அம்மாவின் துயர் துடைக்க இவள் வந்தாள்!
மூன்று மாதக் குழந்தையாக கோவை மண்ணில் அடியெடுத்து வைத்தாள். அப்பாவுக்கு அரசுப்பணி. அம்மா இல்லத்தரசி. அரசுக் குடியிருப்பில் ஒரே ஒரு அறை கொண்ட மிகச்சிறிய வீடு. இனி இங்கு தான் இவளின் வாழ்வு துவங்கப் போகிறது!
அப்போது இவளுக்குத் தெரிந்தது எல்லாம் பசி வந்தால் அம்மா அவ்வப்போது தந்திடும் பாலும், நினைத்த போதெல்லாம் வந்த தூக்கமும் தான். யாரெல்லாம் வந்தார்கள்! கொஞ்சி மகிழ்ந்தார்கள்! என்னவெல்லாம் வாங்கித் தந்தார்கள்! எதுவும் இவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை!
இப்படி ஒரு நிலை தான் எத்தனை சுகமானது! எதைப் பற்றிய சிந்தனையும் இல்லை! ஆனால்! இப்படியே தான் இந்த பிரபஞ்சத்தில் இருந்து விட முடியுமா!! பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் முட்டி, மோதி, தவழ்ந்து, எழுந்து எனப் பல நிலைகளை தாண்டி வந்து தான் ஆக வேண்டும் இல்லையா!
வாழ்க்கைக்கான போராட்டத்தை அப்போதே துவங்குகிறாள் இவள்! இவள் இவ்வுலகுக்கு வருவதற்கு தான் நான்கு வருடக் காலம் தேவைப்பட்டது! இவளுக்கு ஒரு குட்டி தம்பி அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே அம்மாவின் கருவில் உருவாகி விட்டான்! இறைவனின் சித்தம்! அதனால் அம்மாவால் மூன்று மாதங்களுக்கு மேல் இவளுக்கு தாய்ப்பால் தர இயலவில்லை!
வறுமை நிலையில் இரு குழந்தைகளை வளர்க்க அம்மாவும், அப்பாவும் மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது! அதெல்லாம் எதுவும் இவளுக்குத் தெரியாது! ஓரளவு தன்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொண்டு நிலைநிறுத்திக் கொள்ளும் போது இவளுக்கு ஐந்து வயதாகி விடுகிறது!
இனி! குட்டிப் பொண்ணாக இவளைப் பார்க்கலாம்!
தொடரும்...
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
நீக்குசிறப்பான துவக்கம்....
நீக்குபடிக்கும்போது சொந்த அல்லது பார்த்த அனுபவம் போல உள்ளது.
பதிலளிநீக்குஇனி குட்டிப்பெண்ணாக...அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குயாரிவள் ?
பதிலளிநீக்குதம்பி ? சொந்தக் கதை அல்ல!
நானும் காண காத்திருக்கிறேன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதொடர்கிறேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅன்புள்ள ஆதி, ட்குட்டி ஆதியை காண காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.
நீக்கு'இவளை' அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்த தோரணை அருமை ஆ.வெ.
பதிலளிநீக்குமுதல் அத்தியாயம் போகட்டும். வரும் பகுதிகளில் கான்வர்சேஷன்களில் கெத்து காட்டுங்கள். கதையை ஒருவர் சொல்ற பிரமை போய் தத்ரூபம் தன்னாலே வந்து களை கட்டும். வாழ்த்துக்கள்
தங்கள் வழிகாட்டலுக்கு மனம் நிறைந்த நன்றி ஜீவி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆதி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உங்களுக்கு எழுத்து அப்படியே வழுக்கிக் கொண்டு வந்து விழுகிறது. நாவல் போலத் தொடங்கியிருக்கீங்க ஆதி. கவித்துவமா, அழகான நடையில். நீங்கள் நாவல் எழுதலாமே தொடங்கிடுங்க சீக்கிரம்.
பதிலளிநீக்குஆதி பிறந்தாச்சு! அடுத்து 5 வயதில் என்ன சொல்லப் போகிறாள் என்று அறிய தொடர்கிறேன்!
கீதா
பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
முதலில் வாசித்த போது தொடர்கதை என்று தோன்றியது. அதன் பின்னர் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் கொஞ்சம், முன்பு உங்களைப் பற்றிய தொடரில் வாசித்த நினைவு வர இதுவும் உங்களைப் பற்றிய தொடர் என்பது புரிந்தது. அருமையாகத் தொடங்கியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்குதொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
நீக்குமுக நூலில் படித்து வருகிறேன். மிக அருமையாக இளமைகாலங்களை சொல்லி வருகிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தொடர்கிறேன் ஆதி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குபாகுபலி பானியில் புதுக் கதை தொடங்கி இளமையைச் சொல்லத் தொடங்கியிருப்பது அருமை.
பதிலளிநீக்குதொடர்கிறோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.
நீக்குகுட்டிப் பெண்ணின் கதை கேட்க தொடர்கிறோம் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு