அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கையில் கற்றுக் கொள்வதை ஒரு போதும் நிறுத்திவிடாதீர்கள். .. ஏனென்றால்… வாழ்க்கை கற்றுத் தருவதை ஒரு போதும் நிறுத்துவதில்லை…
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
யாரிவள்! பகுதி ஐந்து:
குழந்தைகளின் குட்டி உலகம் மிகவும் அழகானது! மென்மையானது! அவர்களுக்குள்ளும் திட்டமிடல்களும், குறிக்கோள்களும், நம்பிக்கைகளும் இருக்கும். தனக்குப் பிடித்தது, பிடிக்காதது என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களால் உணர்ந்து கொள்ளவும் முடியும். இதையெல்லாம் புரிந்து கொள்வோரிடம் அவர்களால் இன்னும் ஒட்டுதலுடன் பழகவும் முடியும்!
குட்டிப்பெண்ணின் அப்பா அரசுப்பணியில் இருந்தார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தான் அவருக்கு அரசுக்குடியிருப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்புகள் என்பது மூன்று அடுக்கு வீடுகள் கொண்ட ப்ளாக்குகளாக பிரிக்கப்பட்ட ஃப்ளாட் சிஸ்டமாக இருக்கும்!
ஹால், படுக்கையறை, சாப்பிடும் அறை என்பதெல்லாம் தனித்தனியாக இல்லாத ஆல் இன் ஒன் அறையாக இருக்கும்! இதனுடன் சிறிய சமையலறையும், குளியலறையும், கழிப்பறையும் இருக்கும்! பால்கனி, சமையலறை சிங்க் வசதி அதெல்லாம் அப்போது கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் உண்டு! அதன் வழியே வேடிக்கை பார்ப்பது என்பது பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது இவளுக்கு!
பொதுவில் 9 வீட்டுக்கு ஒரு குழாய் என நிர்ணயிக்கப்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாளாக கற்கண்டை போன்ற சுவையான சிறுவாணித் தண்ணீர் விநியோகம் அதில் இருக்கும்! ஒரு நடைக்கு இரண்டு குடம் தண்ணீர் அதில் பிடித்துக் கொள்ளலாம். மீண்டும் நம் நடை வர வரிசையில் நிற்க வேண்டும்!
இப்படி வரிசையில் நின்று பிடிக்கும் சிறுவாணித் தண்ணீர் தான் குடிக்க, குளிக்க, சமைக்க, தோய்க்க என்று எல்லாவற்றுக்கும் உபயோகம் செய்யப்படும். டேங்கிலிருந்து வீட்டிற்குள் விநியோகம் செய்யப்படும் உப்புத்தண்ணீர்(!) பாத்ரூம் உபயோகத்துக்கு மட்டும் தான்!
இப்படியாக இருந்த வட்டத்துக்குள் தான் வளர ஆரம்பித்தாள் அவள்! அப்பாவும், அம்மாவும், குட்டித்தம்பியும் தான் அவள் உலகம்! இந்த சின்னஞ்சிறிய உலகத்துக்குள் அவளுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று எல்லாவற்றையும் உணர முடிந்தது!
அம்மாவின் மேல் இரு கால்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்க இவளுக்கு மிகவும் பிடிக்கும்! பீரோவை ஒட்டிய இடம் இவளுக்கானது! அங்கு படுத்தால் தான் தூக்கம் வரும் என்று நினைப்பாள்! ஆனால் அம்மா சாப்பிட்டு வருவதற்குள் எங்கேயாவது ஒரு ஓரமான இடத்தில் தன்னை மறந்து தூங்கி விடுவாள்...🙂
தன்னுடைய போர்வை, தலையணை, சாப்பாடு தட்டு, டம்ளர் என்று எல்லாவற்றையும் தனியே வைத்துக் கொள்வாள்! அதை யாரும் உபயோகிக்கக் கூடாது! இப்படியெல்லாம் இருக்கணும் என்று யாரும் சொல்லித் தராமலேயே இவளுக்குள் உதித்த எண்ணங்கள்!
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்! அடுத்த பகுதியில் சொல்கிறேனே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
வாசகம் - கற்றுக்கொடுக்காமல் விடுவதில்லை வாழ்க்கை!
பதிலளிநீக்குகோவை ரேஸ்கோர்ஸ் குடியிருப்பு போலவே நாங்களும் தஞ்சையில் ஹவுசிங் யூனிட் எனப்படும் அரசுக்கு குடியிருப்பிலும், மதுரையில் ரேஸ் கோர்ஸ் காலணியிலு குடியிருந்திருக்கிறோம். தண்ணீர் பிடிக்கும் முறை சேம்! பெரும்பாலான சமயங்களில் எங்கள் முறை வரும்போது நான்தான் பிடிப்பேன்.
//மதுரையில் ரேஸ் கோர்ஸ் காலணியிலு//
நீக்கு* காலனியிலும்
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம். நெய்வேலியில் இப்படி தண்ணீர் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. பாலுக்கு வரிசையில் நின்ற அனுபவம் உண்டு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஒரே எழுத்தில் அர்த்தம் மாறி விடுகிறது! :) மீள் வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாசகம் அருமை
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வருகிறேன்...
வாசகமும் பதிவின் வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இப்படி வரிசையில் நின்று பிடிக்கும் சிறுவாணித் தண்ணீர் தான் குடிக்க, குளிக்க, சமைக்க, தோய்க்க என்று எல்லாவற்றுக்கும் உபயோகம் செய்யப்படும். டேங்கிலிருந்து வீட்டிற்குள் விநியோகம் செய்யப்படும் உப்புத்தண்ணீர்(!) பாத்ரூம் உபயோகத்துக்கு மட்டும் தான்! //
பதிலளிநீக்குஆமாம் ஆதி! நாங்கள் இருந்த போதும் இந்த தண்ணீர் பிடித்தல் அப்படித்தான். வேறு சில ஊர்களிலும் கூட நல்ல தண்ணீர் என்பது கஷ்டமாக இருந்ததுண்டு. என் சிறு வயதில் அப்படி வள்ளியூரில்.
சுவாரசியாமாகச் செல்கிறது உங்கள் சிறுவயது நினைவுகள். கவலை இல்லா வயது இல்லையா!!
கீதா
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. தொடரை தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை. வாழ்க்கைதான் அது தரும் அனுபவங்கள்தான் உண்மையான ஆசிரியர். நாம் விழிப்போடும் இருந்து கற்கவேண்டும். அது மிகப் பெரிய பரீட்சை!
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமை. நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குநானும் இதேபோல்தான் குட்டித்தட்டும் குட்டி ரம்ளரும் இருந்தது.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.
நீக்கு