அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கேதார் தால் பயணம் பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
பூத்துக் குலுங்கினால் பறித்து விடுவார்கள் என்று மலர்கள் ஒரு நாளும் பூக்காமல் இருந்தது இல்லை; நாம் தான் பல பேருக்காக பல நேரங்களில் பச்சோந்திகள் போல வேஷத்தினை மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே!
யாரிவள்! பகுதி நான்கு:
குழந்தைப் பருவத்தில் தான் கவலைகளோ, சிந்தனைகளோ, பொறுப்புகளோ, கடமைகளோ இருக்காது! கள்ளமில்லா மனது என்பதும் குழந்தைப்பருவத்தில் தான் இருக்கும்! அதனால் தான் பெரியவர்களான பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்! என்று சொல்கிறோம் போல..!
சரி! நாம குட்டிப்பொண்ணு என்ன பண்ணுகிறாள் என்று கொஞ்சம் பார்ப்போம்!
அவள் இப்போது இன்னும் கொஞ்சம் வளர்ந்து எல்கேஜியிலிருந்து யூகேஜிக்கு சென்றிருந்தாள். அந்த வகுப்பின் ஆசிரியர் மிகவும் கண்டிப்புடன் இருந்ததால் அவரைக் கண்டாலே இவளுக்கு மனதுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டது!
காலையில் பள்ளிக்கு அப்பா சைக்கிளில் கொண்டு வந்து விட்டுச் செல்வதும், மாலையில் அம்மா குட்டித்தம்பியை இடுப்பில் சுமந்து கொண்டு நடை பயணமாக வந்து அழைத்துச் செல்வதும் வழக்கமாகிப் போனது. அவளுக்கும் ஸ்கூலுக்குச் சென்று வருவது பிடித்துப் போனது.
குட்டிப்பொண்ணு அன்றாடம் சாப்பிடத் தான் மிகவும் அடம் பிடிப்பாள்! அவளுக்கு உள்ளேயே இறங்காது! லஞ்ச் பாக்ஸில் கொடுப்பதும் அப்படியே தான் வரும்! பசியா வரம் வாங்கி வந்தவள்! இந்த இடத்தில் அவளின் அப்பா, அம்மாவைப் பற்றி கொஞ்சமாக சொல்றேன். அப்பாவுக்கு குழந்தைகளை கடிந்து கொள்ளவோ, அடிக்கவோ தெரியாது. ஆனால் அம்மா அதற்கு எதிர்ப்பதம்! அடித்து விட்டு தான் என்ன நடந்தது என்றே கேட்பாள்..🙂 இப்போது உங்களால் யூகிக்க முடிகிறதல்லவா!
வழக்கம் போல ஒருநாள் சாப்பிடுவதற்கு இவள் மிகவும் அடம் பிடிக்க, அம்மாவுக்கு கோவம் வந்துவிட்டது! இன்னிக்கு உனக்கு லஞ்ச் பாக்ஸே கொடுக்கப் போறதில்லை! கிளம்பு! என்று அனுப்பி விட்டார்! அம்மாவுக்கு மட்டும் தான் கோபமெல்லாம் வருமா!! இவளுக்கும் அம்மா மீது கோபம் வந்துவிட்டது...🙂 ரோஷத்துடன் கிளம்பி விட்டாள்! மதியம் எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்க இவளோ அவர்களோடு உட்காராமல் அப்படியே உலாவிக் கொண்டிருந்தாள்!
அந்த ஐந்து வயதில் எதையும் வெளியே காண்பித்துக் கொள்ளக்கூடாது என்பதெல்லாம் எப்படி கற்றுக் கொண்டாள் என்பது ஆச்சரியம்! இவளின் வகுப்புத் தோழி ஒருத்தி ஆசிரியரிடம் இவள் மதியம் சாப்பிடவே இல்லை என்று சொல்லி விட, ஆசிரியர் அழைத்து விசாரித்தார். ஆயாம்மாவிடம் பணம் தந்து எதிர்ச்சாலைக்கு சென்று பாலும், பிஸ்கட்டுகளும் வாங்கி வரச் சொன்னார்.
வகுப்பு நடக்கும் போது இவளை மட்டும் தனியே அமர வைத்து பாலையும் பிஸ்கெட்டுகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். மாலை வழக்கம் போல மகளை அழைத்துக் கொண்டு போக வந்த அம்மாவை ஆசிரியர் திட்டி அனுப்பினார். பாவம்! இவளால் அம்மாவுக்கு திட்டு கிடைத்தது!
இன்னும் என்னென்ன வாங்கித் தர போகிறாளோ இந்தப் பெண்?? அடுத்த பகுதியில் சொல்கிறேனே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ஹா.. ஹா.. ஹா...
பதிலளிநீக்குசுவாரஸ்யமான நிகழ்வு!
தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
// பூத்துக் குலுங்கினால் பறித்து விடுவார்கள் என.. //
பதிலளிநீக்குநல்ல கருத்து..
வாழ்க நலம்..
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
நீக்குஇன்றைய வாசகம் அருமை.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக இருந்தது.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் சிறு வயது நினைவுகள் அருமை ஆதி. முகநூலில் தொடர்ந்து படித்து வருகிறேன்.
முகநூலிலும், இங்கேயும் தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
வாசகம் செம....
பதிலளிநீக்குஹாஹாஹா ஆதி கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து சிரித்துவிட்டேன்...ஃபோட்டோவில் இருக்கும் குட்டி ஆதி எப்படி கோபித்துக் கொண்டு முகத்தை வைத்திருந்திருப்பார் என்று!!!
இன்னொன்று குட்டி ஆதி போலத்தான் நான் சிறு வயதில் கொஞ்சம்... என் சிறு வயது ப்ஃபோட்டோ பார்த்தால், இப்படித்தான் நான் உட்கார்ந்திருப்பேன் அதில் ஜாடையும் கூடக் கொஞ்சம் சகோதரிகளோ என்று சொல்லலாம். அப்படி இருக்கிறது இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது. தேடிப் பார்க்கிறேன் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.
சிறு வயது நிகழ்வுகள் சுவாரசியம்தான்
கீதா
குட்டி ஆதிக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது! வந்தால்..:))
நீக்குவாவ்!ஜாடை ஒத்திருக்கிறதா! மகிழ்ச்சி.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசிறுமியாக இருந்த போதான நிகழ்வுகளை நினைவு வைத்து அதை அருமையாக எழுதி வருகின்றீர்கள். கள்ளம் கபடமில்லா வயது. திரும்பி வராத மகிழ்வான பருவம்.
பதிலளிநீக்குதொடர்கிறேன் சகோதரி
துளசிதரன்
உண்மை தான். திரும்பி வராத மகிழ்வான பருவம்!
நீக்குதொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
அமைதியானவர்களுக்குத்தான் ரோசம் அதிகம் என்பார்கள் குட்டி ஆதிக்கும் கோபம் வந்ததே.
பதிலளிநீக்குஅப்போது வந்திருக்கிறது..:)) இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை..:)
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
சுவாரசியமான நினைவுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.
நீக்குபடிச்சுட்டேன் முகநூலில் :)
பதிலளிநீக்குமுகநூலில் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.