வெள்ளி, 25 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்து வந்த பின் தான் புரிகிறது இன்னும் அழகாய், வந்த பாதையை கடந்திருக்கலாமோ என்று மீண்டும் நடக்க நினைக்கையில் பயணம் முடிவடைந்து விடுகிறது நடக்கும்போது அழகாய் கடந்திடுவோம் நமக்கான பாதைகளில்

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே!

 

யாரிவள்! பகுதி எட்டு



 

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தனக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபாடு உருவாகி விடும். அவர்களுக்கு எதில் விருப்பமும், ஈடுபாடும் இருக்கிறதோ பெற்றோர் அதைக் கண்டறிந்து ஊக்குவித்தால் நிச்சயம் அவர்கள் அந்தத் துறையில் மிளிறுவார்கள் என்பது உறுதி! 

 

குட்டிப்பொண்ணுக்கு ஏனோ விளையாட்டில் அத்தனை ஆர்வம் இருந்ததில்லை! மாலைநேரங்களில் குடியிருப்பில் உள்ள இவள் வயதை ஒத்த சிறுவர் சிறுமிகள் வெளியில் விளையாடும் போது கூட அம்மா இவளை வற்புறுத்தி தான் விளையாடச் சொல்வாள்! 

 

சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி, ஓடிப் பிடித்தல், ரிங்பால், Flying Frisbee, ஸ்கிப்பிங், நொண்டியடித்தல், 7 ஸ்டார், பம்பரம் விடுதல் என்று விளையாடியிருக்கிறாள். இவள் தம்பியோ பெரும்பாலான நேரம் மைதானத்திலேயே தான் இருப்பான். அம்மா அவனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு தான் வர வேண்டும்..🙂

 

இப்படியிருக்க இவள் இரண்டாம் வகுப்பில் இருந்த போது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிட்ட விநாடிகளுக்குள் ஊசியில் நூல் கோர்த்து விட்டு ஓடிச்சென்று நீளம் தாண்டும் போட்டியில் முதல் பரிசு வாங்கினாள்!! அவளுக்கே அது மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது..🙂 

 

பரிசாக சிவப்பு நிறத்தில் வெள்ளை மூடி போட்ட லன்ச் பாக்ஸ் ஒன்று கிடைத்தது! அந்த பாக்சின் மேலே ஸ்கேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்! அதை இழுத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு ஸ்பூன் இருக்கும்! முதல் முறையாக வாங்கிய பரிசு என்பதால் அதை அவள் மிகவும் பத்திரமாக வைத்திருக்கத் துவங்கினாள்!

 

அந்த வருட சுதந்திர தின விழாவில் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியாரின் பாடலுக்கு வகுப்புத் தோழிகளுடன் கோலாட்டம் ஆடினாள்! அன்று ஒரு தீபாவளிக்காக கோ ஆப் டெக்ஸில் வாங்கிய தேன் நிறத்தில் கருநீல பார்டர் போட்ட  பட்டுப்பாவாடை சட்டை அணிந்திருந்தாள்!

அதற்காக குஞ்சலம் வைத்து பின்னிய பூப்பின்னலும், வெல்வெட்டை போன்று பளபளவென்று இருந்த ஜடை வில்லைகளுடன், புருவத்தின் மேல் சிகப்பும், வெள்ளையுமாக பொட்டுகள் வைக்கப்பட்டு அலங்கரித்துக் கொண்டு சென்றிருந்தாள்..🙂 அப்போது அவளுக்கு தலைமுடியும் நிறைய இருந்தது!

 

அந்த நிகழ்ச்சிக்காக முதல் நாள் மாலை கோலாட்டக் குச்சியைத் தேடிச் சென்று அப்பா பல கடைகளில் ஏறி இறங்கி தான் வாங்கி வந்தார்..🙂 அவளின் சாகசங்களைப் பற்றியெல்லாம் பார்த்தாச்சு!

 

 சரி! இப்போது அவள் அடுத்த வகுப்புக்குச் சென்ற கதைகளைப் பார்க்கலாம்!

குட்டிப்பொண்ணு மூன்றாம் வகுப்பிற்குச் சென்று விட்டாள்! இந்த மூன்றாம் வகுப்பில் அவளின் நீளமான தலைமுடியும் காற்றோடு பறந்து போய்விட்டது! ஏன் என்று அப்புறம் பார்க்கலாமா??

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. இளமை நினைவுகள், இனிமை நினைவுகள்... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் தொடர்வதற்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  3. தலைமுடி காற்றோடு பறந்து போயிற்று சவுரி முடியா ? தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றோடு பறந்து போன தலைமுடி - தொடர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. நினைவுகள் தொடரட்டும் . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை வாசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  5. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தனக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபாடு உருவாகி விடும். அவர்களுக்கு எதில் விருப்பமும், ஈடுபாடும் இருக்கிறதோ பெற்றோர் அதைக் கண்டறிந்து ஊக்குவித்தால் நிச்சயம் அவர்கள் அந்தத் துறையில் மிளிறுவார்கள் என்பது உறுதி! //

    கண்டிப்பாக! ஆனால் கூடவே அதிர்ஷ்டம் எனும் தேவதைக்கும் பிடிக்க வேண்டும் ஆதி. அது நடக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே நடக்கிறது. அனுபவம் தந்த தரும் பாடம்,!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்ஷ்டம் எனும் தேவதைக்கும் பிடிக்க வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை தான் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. ஆதி, நல்ல மெமரி உங்களுக்கு! எல்லாமே நினைவு வைத்திருக்கிறீர்கள்.

    அருமை...அது சரி ஏன் முடி வெட்டப்பட்டு விட்டதா? தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் நினைவாற்றல் - பிரமிக்க வைக்கக் கூடியது தான் கீதா ஜி :) அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேனே! :) ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அருமையாக இருக்கிறது மலரும் நினைவுகள்.
    குட்டி ஆதி படம் அழகு .

    முடி எப்படி பறந்தது என்பதை அறிய
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலரும் நினைவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தொடர்ந்து வாசிப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. நினைவுகள் இனிமையானவை தான் தனபாலன். தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. சிறு வயதிலேயே ஆர்வமும் திறமையும் இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....