அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கேதார் தால் பயணம் பகுதி இர்ண்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
காத்திருக்கக் கற்றுக் கொள்வோம்; எல்லாவற்றிற்கும் ஒரு உரிய நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே!
யாரிவள்! - பகுதி இரண்டு
ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை யாரென்று இந்த சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு! அது குழந்தையே ஆனாலும் கூட! அந்தந்த பருவத்துக்கு ஏற்றாற் போல தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அசடு என்ற பட்டம் கொடுக்கப்படும்!
இவள் பிறந்தது வீரத்தின் விளைநிலமான சிவகங்கை மண்ணில்! வீரமங்கை வேலுநாச்சியாரைப் போல தைரியசாலியாக இருப்பாளா! இல்லையென்றால் சாத்வீகமாக இருப்பாளா! என்பதெல்லாம் போகப் போகத் தான் தெரியும்!!
மூன்று மாதக் குழந்தையாக கொங்கு மண்ணில் கால் பதித்தாள்! கைக்குழந்தையாக கால் எப்படி பதிக்க முடியும் இல்லையா!! அம்மாவின் கைகளிலோ, அம்மாவைக் கொண்டு விட வந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கடைக்குட்டிகளான இரு மாமாக்களின் கைகளிலோ தவழ்ந்து வந்திருப்பாள்! கொங்கு மண்டலத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை!
அந்தந்த வயதிற்கே உண்டான விஷமங்களைச் செய்து கொண்டும் அவளின் குட்டித் தம்பியுடன் விளையாடிக் கொண்டும் குட்டிப்பொண்ணு வளர்ந்து மூன்று வயதில் எல்.கே.ஜி சேர்வதற்கு இப்போது தயாராகி விட்டாள். அழகாக Frock எல்லாம் போட்டுக் கொண்டு தயாரான அவளை அப்பா அவரின் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு விடுவார்.
அன்றாடம் ஸ்கூலில் கொண்டு விட்டதும் 'அப்பா! நானும் உன் கூட வரேன்!' என்று சொல்வாள். அப்பாவும் இப்போ நான் போயிட்டு அம்மாவை அனுப்பி விடறேன்! அம்மாவோட கிளம்பி வந்துடு! சரியாடா செல்லம்! இப்ப வந்துடுவா அம்மா! நீ போய் உட்காரு! என்பார்..🙂
அங்கிருந்த ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர் இவளின் பாட்டியைப் போல பஞ்சுப் பொதியைப் போன்ற தலைமுடியுடன் இருந்தார்! அழுத குழந்தைகளை தன் இடுப்பிலும், தோளிலும், தலை மீதும் அமர வைத்து பாடிக் கொண்டே ஆடவும் செய்வார்!
வீட்டுக்குப் போகணும்! அம்மாவைப் பார்க்கணும் என்று அழுதாலும் மெல்ல மெல்ல அந்தப் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியை துவக்கி விட்டாள்! மதியம் சாப்பிட்டதும் எல்லாக் குழந்தைகளும் அங்கேயே பாய் போட்டு தூங்க வைக்கப்படுவர்!
சரி! இந்தக் குட்டிப்பொண்ணும் சற்றே ஓய்வெடுக்கட்டும்! அப்புறம் இவள் என்னவெல்லாம் செய்தாள்! என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
கோரஸாக எல்லா குழந்தைகளும் அழும் இடத்தில் ஆசிரியராக இருப்பது எவ்வளவு கடினம்? இந்தப் பொறுமையான வேலையில் ஆண்களை நான் பார்த்ததே இல்லை.
பதிலளிநீக்குஅதீத ஈடுபாடு உடையவர்கள் மட்டுமே இந்த மாதிரி குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியும். எனது ஆசிரியர் நாமகிரி நினைவில் இன்றும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
அம்பத்தூரில் மாடல் ஸ்கூலில் எங்க பையரைச் சேர்த்திருந்தோம். மூன்று வயது முடிந்திருந்தது, பேச்சு சரியா வரதுக்காகப் பள்ளியில் சேர்த்தோம். அங்கே இருந்த "சாயி" என்னும் இளம்பெண் மிக அருமையாகக் குழந்தைகளைப் பழக்கினாள். எங்க பையருக்குப் பேச்சு வந்ததோடு அல்லாமல் விரைவில் பள்ளி சென்று படிக்கும் ஆர்வமும் மிகுந்தது. ஞாயிறன்று கூடப் பள்ளிக்குப் போகணும் என அடம் பிடிப்பார். :)))) இப்போக் கு.கு.வும் சொல்கிறது.
நீக்குஉங்கள் நினைவலைகளை இப்பதிவு மீட்டு எடுத்திருக்கிறது - மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
போகப் போகத் தான் தெரிவதை அறிய காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
நீக்குசுயசரிதம் சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குதொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இவள் பிறந்தது வீரத்தின் விளைநிலமான சிவகங்கை மண்ணில்! வீரமங்கை வேலுநாச்சியாரைப் போல தைரியசாலியாக இருப்பாளா! இல்லையென்றால் சாத்வீகமாக இருப்பாளா! என்பதெல்லாம் போகப் போகத் தான் தெரியும்!!//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஆதி!, கொஞ்சம் கொஞ்சம் தெரியுமே நீங்க முன்னர் பதிவுகளில் சொன்னதை வைத்து...
தொடர் நல்லாருக்கு. தொடர்கிறேன்.
கீதா
தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிகவும் சுட்டிக்குழந்தையாக இருப்பார் போலுள்ளது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஉங்களைப் பற்றிய விஷயங்கள் சுவாரசியமாக இருக்கிறது தொடர்கிறேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சாத்வீக குழந்தை என்ன எல்லாம் செய்தது என காண வருகிறோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு//இந்தக் குட்டிப்பொண்ணும் சற்றே ஓய்வெடுக்கட்டும்! அப்புறம் இவள் என்னவெல்லாம் செய்தாள்! என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்!//
பதிலளிநீக்குமுகநூலில் படித்து விட்டேன். குட்டிப்பெண் என்னவெல்லாம் செய்தாள் என்று.
முகநூல் பக்கத்திலும் இங்கேயும் படித்து வருவதற்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமை
பதிலளிநீக்குதொடர்கிறேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநானும் கொஞ்சம் கொஞ்சம் சுயசரிதை எழுத ஆரம்பிச்சுப் பாதியில் இருக்கு. போடணுமா/வேண்டாமா என யோசனை. :)))) ஆதி எழுதுவதை முகநூலிலும் அவ்வப்போது படித்து வருகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் சுய சரிதை - எழுதி இருப்பதை பதிவிடுங்கள் கீதாம்மா. முகநூலிலும் இங்கேயும் படித்தமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.