அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
What is the “most easy” and “most
difficult” thing in life?
Answer is “Mistakes”. Easy to judge
when others do it and difficult to realise when we do it.
******
சமீபத்தில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய நந்திபுரம் என்ற இந்த நூலை டிஜிட்டல் ரூபமாய் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. திருவரங்கம் வந்தது முதல் பக்கத்து வீட்டுத் தோழியின் பரிந்துரையில் தான் இவரின் எழுத்தை வாசிக்கத் துவங்கினேன்! சிவத்தைப் பற்றியும், சித்தர்களின் வாழ்க்கை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள், மர்மங்கள் என பக்கத்து பக்கம் விறுவிறுப்பைத் தரும் எழுத்தாக இருக்கும்.
அப்படியொரு நூல் தான் நந்திபுரம்! நந்திபுரக் கோவிலும் , ஜீவமந்திரத்தைச் சொன்னால் உயிர்பெறும் அபூர்வ நந்தியும், அக்கோவிலில் உள்ள பொக்கிஷங்களை எடுக்கத் துடிக்கும் கும்பலும், அதற்கானத் தேடலும், பட்சி ரூபமாய் பொக்கிஷத்தைக் காப்பாற்றும் கொங்கணச் சித்தரும் என நம்மை நூலுக்குள் ஆழ்ந்து போகச் செய்யும் ஆயிரம் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
திசைக்கொரு கோவிலாக முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு கோவில் என்பது எங்கு அமைய வேண்டும்! என்னென்ன விதிகள் அதற்கு உண்டு! எந்த திசையில் குளம் இருக்கணும்! கிணறு இருக்கணும்! சிலா ரூபங்கள் எப்படி அமையணும்! பூஜை விதிகள் என்ன! என்பது போன்ற தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வழிநடத்துகின்றன.
கொங்கணச் சித்தர் என்பவர் குறுநில மன்னனான மணவாளதாசனின் உதவியுடன் உருவாக்கிய கோவில் தான் நந்தீஸ்வரர் ஆலயம்! சித்தர்களின் வாழ்க்கையில் தவத்தால் கற்றுக் கொள்ளும் ஒரு வித்தை தான் செப்பைத் தங்கமாக்கும் ரசமணிவாதம். அந்த வித்தையில் உருவாக்கிய பொக்கிஷங்களை சிவன் சொத்தாக ஆலயத்துக்குள் புதைத்து வைக்கிறார் கொங்கணச் சித்தர்!
சிவன் சொத்து குல நாசம்! என்பது ஆன்றோர் வாக்கு! அப்படியிருக்க கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளாக பொத்திப் பாதுகாக்கும் சிவன் சொத்தை கொள்ளையடிக்க கும்பல் திரண்டு வருகிறது. அவர்களின் முயற்சிகள் மர்மமான முறையில் முறியடிக்கப்படுகிறது.
இந்த நூலை வாசிக்கும் போது இந்திரா செளந்தர்ராஜன் சார் அவர்களின் 'கல்லுக்குள் புகுந்த உயிர்' என்ற நூலை வாசித்தது நினைவுக்கு வந்தது. வாசித்து வருடங்கள் பல ஆனாலும் மனதை விட்டு நீங்காத கதை! விடைதாங்கி என்ற ஊரும் 108 வருடத்துக்கொரு முறை திருநட்சத்திரத்தன்று உயிர் பெறும் நந்தீஸ்வரர் பலரின் செயல்களுக்கு பாடம் புகுட்டுவதாக சொல்லிச் சென்றிருப்பார்.
#Bynge Appல் வாசித்த இந்த நூலை நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன். அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கிறேன்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நானும், என்னவரும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இந்திரா சௌந்தரராஜன் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. நல்ல அறிமுகம்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குநூலின் விடயங்கள் வியப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குமிக அருமையான புத்தக விமர்சனம்.
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஇந்திரா சௌந்தரராஜன் கதைகள் எல்லாமே அமானுஷ்யம் நிறைந்தவையாய் சுவாரசியமாய் இருக்கும். நான் அதிகம்வ் வாசித்ததில்லை. விடாது கறுப்பு, ருத்ரவீணை, அதன் பின் போகர் சித்தர் பத்தி ஒரு கதை வந்ததே மறந்துவிட்ட்டது....அது போன்ற சீரியல்கள் எப்போதேனும் ஒரு சில பகுதிகள் பார்க்கக் கிடைத்த போதும் அறிந்தது..
கீதா
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநல்ல விமர்சனம் ஜி...
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குபுத்தகம் பற்றி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல அறிமுகம்
பதிலளிநீக்குதுளசிதரன்
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குவாசகமும் விமர்சனமும் அருமை.
பதிலளிநீக்குவிடாது கருப்பு புதினத்தை வாசித்திருக்கிறேன்.
சிவன் குறித்து அவர் வழங்கும் அறிவியலோடு கூடிய ஒப்புமைகள் சிறப்பாக இருக்கும்.
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குவித்தியாசமான நூல் .
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி மாதேவி.
நீக்கு