அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நடக்காது எனத் தெரிந்தாலும், கிடைக்காது எனப் புரிந்தாலும்... மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதேயில்லை.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
யாரிவள்! பகுதி பதினேழு - லீடர் போஸ்ட் ரிசைன்!
இவள் வெற்றிகரமாக ஐந்தாம் வகுப்பை முடித்ததும் , ஆறாம் வகுப்புக்காக கோவையின் அவினாசி சாலையில் உள்ள பிரபலமான அந்தப் பள்ளியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதினாள். அந்தப் பள்ளி அப்போது கோவை மாவட்டத்திலேயே மூன்றாம் இடத்தில் இருந்ததாக பேசப்பட்டது! இந்தியாவின் முதல் நிதியமைச்சர் உருவாக்கிய பள்ளி என்பது சிறப்பு!
அட்மிஷன் போடும் போது அன்று நுழைவுத் தேர்வு எழுதிய மாணாக்கர்களில் இவளே சிறப்பாக எழுதியிருந்ததாக தலைமையாசிரியரால் பாராட்டு கிடைத்தது! ஆறாம் வகுப்பிலும் பெண்களுக்கான லீடர் பதவி இவளுக்கு தரப்பட்டது!
ஆண்களுக்கான லீடருடன் அவ்வப்போது ஏற்பட்ட சண்டையின் போது இருவருமே தங்கள் பதவிகளை ரிசைன் செய்வதாக வகுப்பாசிரியரிடம் புகார் தெரிவிப்பார்கள்...🙂 ஆசிரியரும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பின், 'நீங்க ரெண்டு பேரும் லீடர் பதவியை ரிசைன் செய்தால் நானும் டீச்சர் பதவியை ரிசைன் பண்றேன் என்று சொல்வார்..🙂 உடனே இருவரும் சிரித்துக் கொண்டே சமாதானமாகி விடுவார்கள்!
அந்தப் பள்ளியில் இவளுக்கு கிடைத்த அன்பான ஆசிரியர்கள் வாழ்வுக்கு உதாரணமாக என்றும் மனதில் பசுமையாய் பதிந்து போனார்கள். அவர்களிடம் கற்றுக் கொண்டது ஏராளம். வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான கனவுகளும், திட்டமிடலும் அவர்களால் உருவாகின.
அப்போது இவளுக்கு இருந்த கனவில் மிடுக்கான தோற்றத்துடன் கண்ணாடி அணிந்த பெண்ணாக தன்னை காட்சிப்படுத்திக் கொண்டாள். நல்லதோர் பதவியில் இருந்து கொண்டு சமுதாயத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யணும் என்ற எண்ணம் உருவானது! அதனால், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உருவாகணும் என்று நினைத்தாள்!
ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் பிறந்த மண்ணான சிவகங்கைக்குச் சென்ற போது மாமா வீட்டில் இவளுக்கு மூக்கு குத்தப்பட்டது. மாங்காய் பிஞ்சு வடிவத்தில் இருந்த அந்த மூக்குத்தியின் நடுவில் முத்து வைக்கப்பட்டிருக்கும்! இவளின் அப்பா வழிப் பாட்டி தன் ஐந்து பேத்திகளுக்கும் ஒரே மாதிரியான மாங்காய் பிஞ்சு அப்போது வாங்கித் தந்திருந்தார். மூக்கு குத்திக் கொள்ளும் போது இவளின் வயது பத்து!
கோடை விடுமுறையெல்லாம் முடிந்து ஊருக்கு வந்து புதிய பள்ளியில் ஆறாம் வகுப்பும் சேர்ந்தாகி விட்டது! பள்ளிக்குச் சென்ற ஒரு வாரத்தில் Value education periodல் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியை சுத்தம் செய்யணும் என்று சொல்லப்பட்டது!
இவளும் சக மாணாக்கர்களுடன் வேலை செய்யத் துவங்கினாள். எதற்காகவோ இடையில் கையை முகத்தின் குறுக்கே வேகமாக கொண்டு போகவும் கையில் அணிந்திருந்த வளையல் மூக்குத்தியில் மாட்டிக் கொண்டு இழுத்த வேகத்தில் மூக்கிலேயே உடைந்து போனது! மூக்குத்தியைச் சுற்றிலும் ரத்தம் கொப்பளித்துக் கொண்டு நிற்கவும் பயந்து போய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்!
அம்மா என்ன செய்தாள்! என்ன கிடைத்தது! என்பதெல்லாம் அப்புறம் சொல்றேன்..🙂
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
லீடர்ஷிப் இங்கும் தொடர்ந்தது பாராட்டத்தக்கது. மூக்குத்தி அனுபவ பயங்கரம் என்ன ஆனது என்று காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதொடரின் பகுதிகளை தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குமூக்குத்தியின் மீது வளையல்// ரொம்ப வலித்திருக்குமே.
பதிலளிநீக்குஎனக்கு துடைத்துக் கொள்ளும் துண்டின் நூல், வளையல் போடும் பழக்கம் இல்லாததால் அப்படி மாட்டியதில்லை. அது ஒரு வேதனை. அதுவும் கல்யாணத்திற்காகக் குத்திக் கொண்டது.
உங்களின் தலைமைப் பண்பு நீடித்தது மகிழ்வான விஷயம்.
கீதா
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குசிறு வயதில் நல்ல அனுபவங்கள். அதை நினைவு வைத்துச் சொல்வதும் சிறப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குதொடர்கிறேன்
துளசிதரன்
தொடர் வழி பகிர்ந்து கொள்ளும் தகவல்களுக்கு உங்கள் கருத்துரை பகிர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஎன் மகள் சமீபத்தில் ஆசைப்பட்டு மூக்குக் குத்திக் கொண்டாள். நீங்கள் சொல்லியிருப்பது போன்று ஏதேனும் மாட்டிக் கொண்டால் வலிக்குமோ என்று அவள் குத்திக் கொண்ட போது தோன்றியது.
பதிலளிநீக்குதுளசிதரன்
மகளுக்கு மூக்குக் குத்தியபோது நீங்கள் எப்படி சிந்தித்தீர்கள் என்று பகிர்ந்து கொண்டது சிறப்பு. என் மகளுக்கு காது குத்தியபோது பார்க்க வேண்டாம் என நான் போகவே இல்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
பழைய நினைவுகள் என்றும் மகிழ்ச்சியைத் தரும்.
பதிலளிநீக்குஆமாம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. பழைய நினைவுகளை மீட்டு எடுத்து மீண்டும் உணர்வது ரசனையான விஷயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மூக்குத்தி வளையல் மாட்டி உடைந்தது என்றால் மூக்கு எப்படி வலித்து இருக்கும். அந்த காயம் ஆற எத்தனை நாட்கள் ஆகி இருக்கும்! அம்மாவிடம் திட்டு விழுந்து இருக்கும்.
பதிலளிநீக்குஅப்புறம் மீண்டும் மூக்கு குத்தினீர்களா? எப்போது என்பதை படிக்க தொடர்கிறேன்.
பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி கோமதிம்மா.
நீக்குமூக்குத்தியும் காயம்பட்டதும் நன்கு வலித்திருக்குமே.
பதிலளிநீக்குஐந்தாம் வகுப்பில் எனது கம்பாஸ் பாக்சை ஒருபிள்ளை பையிலிருந்து எடுக்கபோக நான் பாய்ந்து ஓடியதில் வாங்கில் மூலை புருவத்தில் வெட்டி இரத்தம் ஓடியதில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அப்போது நான்கு தையல் போடப்பட்டது நினைவுக்கு வந்தது.
இப்பதிவு உங்கள் இளைய வயது நினைவுகளை மீட்டு எடுத்திருக்கிறது. பதிவு குறித்த எண்ணங்களையும் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.
நீக்கு