அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
தவறை செய்தால் ஒத்துக் கொண்டால் தவறை சரி செய்து விடலாம்! ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று நிரூபிப்பவர்களை என்றுமே சரி செய்ய முடியாது!
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
யாரிவள்! பகுதி இருபத்தி ஒன்று - வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொரு பருவத்திலுமே அதற்குண்டான ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் தோன்றிக் கொண்டே தான் இருக்கும். அதற்கு எந்த வரையறையும் யாரும் வகுத்து வைக்கவில்லை!
சுட்டிப்பெண்ணும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே தான் இருந்தாள். மெலிந்த தேகமாகவும், உயரமாகவும் இருந்தாள். அவள் கனவு கண்ட விதமாக மிடுக்கான தோற்றத்தில் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் இந்த சமுதாயத்தில் வளைய வரணும் என்று விரும்பினாள்.
பள்ளிப்படிப்புடன் வீட்டு வேலைகளையும் செய்து பழகணும் என்று அம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள். வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, உலர்த்த, மடித்து வைக்க, கல்லுரலில் அரைக்க, இடிக்க, கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வர, தண்ணீர் பிடித்து குடத்தில் தூக்கி வர என்று எல்லாவற்றையும் செய்ய வைத்தாள்.
அம்மாவிடம் வேலைகளை தவிர்க்க முடியாது! செய்யாமல் விட மாட்டாள்! அப்போது கடினமாக இருந்தாலும் பின்னாளில் எந்த வேலைக்காகவும் யாரையும் சார்ந்திருக்காமல் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்பதெல்லாம் அப்போது இவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை!
அம்மா இவளை செல்லமாகவோ சொகுசாகவோ வளர்க்கலை! தன்னால் முடிந்ததையே வாங்கிக் கொடுத்து பழக்கியிருக்கிறாள். அதனால் இவளுக்கும் இவர்களின் குடும்பச்சூழல் புரிந்தது! 'இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வது' 'Minimalism' எளிமையான வாழ்க்கை! இவை எல்லாவற்றையும் அம்மா தன் செயல்களால் உணர வைத்தாள்!
உடன்பிறந்தவர்கள் புடவை எடுத்துக் கொடுத்தாலும் அப்பா வாங்கித் தந்த புடவையைத் தான் பண்டிகை நாளில் உடுத்துவாள்! இதுவே அப்பாவுக்குத் தரும் மரியாதை! என புரிய வைத்தாள். எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு வாழப் பழகணும் என்பதும் புரிந்தது!
தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து எப்படியாவது குடும்பத்தை முன்னேற்றணும் என்ற வெறி கொண்டவள் அம்மா. அக்கம் பக்கத்து வீடுகளுக்கும், உணவகத்துக்கும் மாவரைத்துக் கொடுத்தாள், சந்தையிலிருந்து பூ வாங்கி வந்து அதைக் கட்டி விற்றாள்! ஊறுகாய் மற்றும் வற்றல்கள் தயாரித்தும் விற்பனை செய்தாள்.
எல்லா வேலைகளிலுமே இவளையும், இவள் தம்பியையும் உடன் வைத்துக் கொண்டாள். உதவியாகவும் அதேசமயம் அவர்களுக்கும் கற்றுத் தந்தாள். இவளும் அம்மாவுக்கு உதவியாக மாவரைத்து, பூ விற்று வந்து, வற்றல் தயாரிக்க, எடை போட்டு பாக்கெட் பண்ண என்று எல்லாம் செய்தாள்.
நேர்மையான முறையில் உழைத்து சம்பாதிக்கும் எந்தத் தொழிலும் குறைச்சலில்லை என்ற வாழ்க்கைப் பாடமும் கற்றுக் கொண்டாள்.
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தப் பெண்?? தொடர்ந்து பார்க்கலாம்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அம்மாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇளவயதில் குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எல்லோருக்கும் வராது....
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குவாழ்க்கைப் பாடம் அருமை .தொடருங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குஆதி உங்கள் அம்மாவின் உழைப்பு அசாத்தியம். நீங்களும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருப்பதும் தெரிகிறது. நல்ல விஷயம். அதே தான் ஆதி சிறு வயதில் கஷ்டப்பட்டால் அதிலிருந்து பாடமும் கற்றுக் கொண்டால் நாம் பிற்காலத்தில் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கும் பக்குவம் வந்துவிடுகிறதுதான்.
பதிலளிநீக்குஆதி இந்தப் பகுதி வாசித்ததும், என் சிறு வயது நினைவுக்கு வந்தது. டிட்டோ கிட்டத்தட்ட. சுயசார்பு வாழ்க்கை. உழைத்தல். எல்லாமே. கூட்டுக் குடும்பம் வேறு. எனவே நிறைய பாடங்கள்.
கீதா
பதிவு குறித்த தங்கள் கருத்துகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குஉங்கள் சிறு வயது உழைப்பு, தன்னம்பிக்கை, Minimalism எல்லாம் உங்களை நன்றாகத் தயார்படுத்தியிருக்கும். பல வருடங்களாக வெங்கட்ஜி தில்லியில் நீங்கள் திருச்சியில் எனவே எல்லாமும் சமாளிக்க அந்த அனுபவங்கள் கைகொடுக்கும். சிறு வயதிலேயே நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி. மனம் நிறைந்த நன்றி.
நீக்குஜி எல்லார் தளத்திலும் இந்த One line கருத்துப் பெட்டி வந்துவிட்டது!! முதலில் அட என்ன இது one line answer போல எழுதணுமோ என்று தோன்றியது ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
One Line கருத்துப் பெட்டி! ஹாஹா... ஒரு வரி இருந்தாலும் நிறைய எழுத முடிகிறது கீதா ஜி. கவலை இல்லை!
நீக்குஆதி, நானும் இப்படி சின்ன வயதில் பெரிய பானைக்குள் நின்று கொண்டு அதை ஆட்டி விளையாடியதுண்டு!!!
பதிலளிநீக்குகீதா
பெரிய பானைக்குள் நின்று விளையாடுவது சிறு வயதில் அப்படி ஒரு ஆனந்தமான விளையாட்டு தான் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. இத் தொடரை அருமையாக எழுதி வருகிறீர்கள். நான் சிலதை படிக்க தவறியிருந்தாலும், . இத்தொடரை அன்றைய நாளுக்கு பின் தவறாது படித்து வருகிறேன். உங்கள் அம்மாவின் வளர்ப்பு செயல் முறைகள் நல்லதாக அமைந்துள்ளது. நீங்களும் முகஞ்சுளிக்காமல், அவர்களின் அறிவுரைகளை ஏற்றபடி வாழ்க்கைப் பாடங்களை கற்று வந்ததற்கு வாழ்த்துகள் அடுத்தப் பகுதிக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இங்கும் க. பெட்டி புது மாதிரியே வந்து விட்டது போலும். இனி அனைவரது வலைப்பூவிலும் இம் மாற்றந்தான் நிரந்தரமோ.. என்னவோ.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட இதுவும் வந்து விட்டதே.... சந்தோஷமாக உள்ளது... இந்தப்பதிவுக்கும் நேற்று எழுதிய கருத்துரை எங்கோ மாயமாகி விட்டதே, வேறொன்றையாவது எழுதி அனுப்பலாம் என்று வந்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி. நன்றி.
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. தொடரின் பகுதிகளை அவ்வப்போது படித்து கருத்துகளை தெரிவிக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. கருத்துரைப் பெட்டி எல்லா தளங்களிலும் மாறிக் கொண்டு வருகிறது. இது Blogger தளம் செய்யும் மாற்றம் என்பதால் இப்படித்தான் இருக்கப் போகிறது!
நீக்குமுன்பு கமெண்ட் மாடரேஷன் வைத்திருந்தேன். இப்போது அதுவும் எடுத்தாயிற்று. அதனால் கருத்துரைகள் போட்ட உடன் வந்து விடும்! முந்தைய பதிவுகள் - மூன்று நாட்களுக்கு முந்தைய பதிவுகள் எனில் கமெண்ட் மாடரேஷன் இருக்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குசிறுவயதிலேயே வாழ்க்கை எப்படிபட்டது என்பதை நீங்கள் உணர்ந்தது வியப்பை அளிக்கின்றது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅம்மாவிடம் கற்றுக் கொண்ட பாடம் அருமை.
பதிலளிநீக்குஅம்மாவை பின் பற்றி காரியம் யாவிலும் நீங்களும் வெங்கட்டுக்கு உதவியாக இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஆதி, வாழ்க வளமுடன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குஉங்கள் அம்மா எந்த சூழலையும் சமாளிக்க நன்றாகவே தயார்படுத்தி இருக்கிறார்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு