வியாழன், 13 அக்டோபர், 2011

வருமுன் காப்போம்...



சில நாட்களுக்கு  முன் தில்லியில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி [பத்மாவதி-ஸ்ரீனிவாச கல்யாண மஹோத்சவம்] நடந்தது.  சனி மதியம் தொடங்கி, ஞாயிறு மாலை வரை நடந்த அந்நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன்.  அங்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவர் மிகவும் சோகமாகவும் ஆழ்ந்த கவலையிலும் இருப்பதாகத் தோன்றியதுஅப்போது நான் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை.   

ஞாயிறு காலை நிகழ்ச்சியின் நடுவே வெளியே வந்தபோது அவரும் பின்னே வந்தார்.  அவரது  மன அழுத்தத்திற்கான காரணமாக சொன்ன விஷயம் பற்றியது தான் இப்பகிர்வு

பத்தாவது படிக்கும்  மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை என வருத்தப்பட்ட அம்மா, “நீ ஒண்ணும் ஒழுங்காப் படிச்சு, மார்க் வாங்கற மாதிரி தெரியல… ஏதோ 70% எடுத்தா பெரிசு!” என்று பையனிடம் சொல்லி இருக்கிறார்.  அதற்கு மகன், அப்படி நான் 90% அல்லது அதற்கு அதிகமாய் எடுத்துக் காட்டிவிட்டால் எனக்கு என்ன தருவீர்கள் என்று  கேட்க அம்மாவோ "சரி அப்படி அதிக மதிப்பெண் எடுத்தால், நீ எதைக்  கேட்கிறாயோ அதைத் தருகிறேன்!" என்று சொல்லிவிட்டார்.  இந்த இடத்திலேயே தொடங்கி விட்டது பிரச்சனை


மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவன் எடுத்தது 93.5% மதிப்பெண்கள்அது தெரிந்ததும்  பையன் அம்மாவிடம் கேட்டது என்ன தெரியுமா?  பதினாறு வயதே ஆன, இன்னும் ஓட்டுனர் உரிமம் கூட வாங்க முடியாத வயதில் அவன் கேட்டது 135 சிசி பல்சர் பைக்
  
அவனை 18 வயசு வரை பொறுத்திருக்கச் சொன்னதற்கு  முடியாது என பிடிவாதம் பிடிக்க, அவர்களும் வேறு வழியின்றி  வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.  இப்போது ட்யூஷன் செல்லும்போது பைக்கில் தான் செல்கிறாராம் அந்த பையர்… அத்தனை வேகமாக, அதுவும் பல லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் தில்லியில் பைக்கில் சாகசங்கள் செய்கிறார். இப்போது பின் சக்கரம் கீழே இருக்க, முன் சக்கரத்தை மேலே தூக்கியபடி எல்லாம் செய்து காண்பிக்க, அவரது தம்பி அதைப் படம் பிடிக்கிறார்.  அப்பா-அம்மா இருவரும் அலுவலகம் சென்றுவிட, ஓரிரு முறை பள்ளிக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இப்படி வண்டி ஓட்டுவதால் என்ன பிரச்சனை வருமோ, பையனுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்று இப்போது பயந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்

சமீபத்தில் ஹைதையில் நடந்த விபத்தில் மரணமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகன் பற்றிச் சொல்லி, பையனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச்சொன்னதற்கு அவர் பையன் சொன்ன பதில்… “அப்பா, அந்த பையனுக்கு அப்படி நடந்ததுன்னா எனக்கும் அப்படி நடக்குமா என்ன? மேலும் எனக்கு வாங்கியது வெறும் 135 சிசி, அந்த பையன் வைத்திருந்தது 1000 சிசிஅவ்வளவு வேகமா எல்லாம் இந்த பைக் போகாது!”. 

இவ்வாறெல்லாம் என்னிடம் சொல்லி புலம்பிய அவரிடம் நான் கேட்டேன், “இப்ப மனசால  கஷ்டப்பட்டு என்னங்க புண்ணியம், வாங்கிக் கொடுத்தது உங்க தப்பு, கண்டிப்பாக 18 வயது முடிந்தபின் தான் வாங்கிக் கொடுப்பேன்என்று அப்போதே  சொல்லி இருக்க வேண்டியது தானே!" என்றேன். வாங்கிக் கொடுப்பதையும் கொடுத்துவிட்டு இப்போது மன அமைதி இழந்து சஞ்சலப்பட்டு என்ன பலன்வருமுன் காப்பதல்லவா விவேகம்.

15-20 வருடங்களுக்கு முன் கூட சிறுவர்களுக்கு கேட்டதல்லாம் கிடைத்ததில்லை பெற்றோர்களிடமிருந்துகுழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்களின் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன்.  என்னதான் 16 வயது ஆகிவிட்டாலும், நல்லது-கெட்டது தெரியாத வயது தான் அதுபெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.  அதை விட்டு, கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டு, பிறகு கஷ்டப்பட்டு என்ன ஆகப்போகிறது

அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்என்னால் வேறு என்ன செய்ய முடியும்?

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்


இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்



45 கருத்துகள்:

  1. உங்கள் பகிர்வுக்கு நன்றி.....,....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  2. பெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதை விட்டு, கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டு, பிறகு கஷ்டப்பட்டு என்ன ஆகப்போகிறது.

    விழிப்புணர்வு தரும் எச்சரிக்கைப் பகிர்வுகுப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சின்னக்குழந்தையோ, வய்சு பசங்களோ கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் மறு பரிசீலனை செய்யத்தான் வேனும்.

    பதிலளிநீக்கு
  4. //15-20 வருடங்களுக்கு முன் கூட சிறுவர்களுக்கு கேட்டதல்லாம் கிடைத்ததில்லை//

    Nuclear குடும்பங்களின் மிகப் பெரிய் பிரச்சனையே ஒரே குழந்தை, போதா குறைக்கு இருவரும் வேலைக்கு செல்வதால் - அதிக செல்லம், கவனிப்பின்மை - கேட்டதெல்லாம் உடனே கொடுத்துவிடுவது.

    //அதிக மதிப்பெண் எடுத்தால், நீ எதைக் கேட்கிறாயோ அதைத் தருகிறேன்!//
    ம்ம். லஞ்சத்தை (கொடுக்க/வாங்க) வீட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. இப்படி கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களால், அவசியமற்றதை மறுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் ’பிள்ளையின் உரிமைகளை மறுக்கிறோமோ, நான் நல்ல தாய் இல்லையோ’ என்ற “குற்ற உணர்ச்சி”யால் புழுங்க வேண்டி வருகிறது. :-((((

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மணம் 3 to 4 [Indli 2 to 3 ? doubtful]

    இந்தக்கால பையன்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் தான். பிடிவாத குணம் உள்ளவர்கள். அனுபவம் வாய்ந்த பெற்றோர்கள் சொல்வதை எளிதில் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களைக் கையாள்வது பெற்றோர்களுக்கும் மிகவும் சிரமம் தான்.

    நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்வு. vgk

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு...


    வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக கவனம, பொரும, விழிப்புணர்வு தேவை இல்லையென்றால் இழப்புகள் அதிகமாகவே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  8. வெங்கட்ஜீ! இளங்கன்று பயமறியாது என்பது இயல்பு. ஆனால், ஓட்டுனர் உரிமத்துக்குரிய வயதை எட்டியவர்களும் கூட கையில் ஒரு ஸ்பீட்-பைக் கிடைத்தால் கண் மண் தெரியாமல் ஓட்டுகிறார்களே! ஓட்டுனர் உரிமத்துக்கான விதிமுறைகளை மேலும் கடுமைப்படுத்த வேண்டும். மீறுபவர்களுக்கான தண்டனையையும் கடுமையாக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல விழிப்புணர்வளிக்கும் தேவையான பகிர்வு..

    அழகாகச் சொன்னீர்கள்..

    வருமுன் காப்போம்......

    பதிலளிநீக்கு
  10. தங்கள் நட்சத்திர வாரத்தைப் பயனுள்ள வாரமாக்கியுள்ளீர்கள்..


    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. பெற்றோர்கள் ......அந்த காலம் போல் பிள்ளைகளை ...வளர்க்க ஆசை படுகிறார்கள்...ஆனால்...முடிவதில்லை..!
    ஒரு வயதுக்கு அப்புறம்...பிள்ளைகளிடம்...நட்பாய் பழக வேண்டும்...(>>>காட்சி 1 : அம்மா : சமையலறையில்...இருந்து வந்து....ஏங்க...அவன்தா..கேட்குற இல்ல...வாங்கி கொடுங்கள ..என்பார்..>>>காட்சி 2 : அப்பா : பேப்பர் அல்லது டிவி பார்த்துக்கொண்டே...ஏதோ சிந்தனையில்...சரி..சரி...என கூறுவார். .. ------------இப்படி குடும்பம் நடந்தால் எப்படி..? தாய் தந்தை இருவரும்....பிள்ளையிடம்...நிகழ் கால நடப்புகளை எடுத்து சொல்லி..."கொஞ்சம் பொறு" இதை விட latest model...
    வரும்..வாங்கி கொள்ளலாம் ...என அன்பாய் கூறினால்...கேட்பார்கள்.)------------.:(((((((((((((((

    பதிலளிநீக்கு
  12. குழந்தை வளர்ப்பில் மிகவும் சிக்கலான கட்டம் ..ஆமாம் வரு முன் காப்பதற்கு நன்றாக திட்டமிடவேண்டும்...

    பதிலளிநீக்கு
  13. ஐயோ அநியாயம் என்னன்னா கன்னியாகுமரி மாவட்டத்துல ஒருத்தனும் பைக்ல சைட் மிரர் இல்லாம பைக் ஓட்டுறாங்க!!!!

    பதிலளிநீக்கு
  14. பெற்றோர் குழந்தை சொல்படி ஆடுகிறார்கள் இந்த காலத்தில்.

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணும் நினச்ச ...<<<<<<<<<<<< குறை நிறை இருப்பின் சொல்லிட்டு போங்களேன்..>>>>>>>>>>>>>
    ஏன் ...ஏன் இந்த வரி....sorry இந்த ____றி?...ஆனாலும் மண்ணின் மைந்தன்னுக்கு ..இவ்வளவு...கூடாது...உ ஊ ஆஅ

    பதிலளிநீக்கு
  16. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு. பெற்றோர்கள் சிந்திக்க வேண்டியது.

    பதிலளிநீக்கு
  17. பெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதை விட்டு, கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டு, பிறகு கஷ்டப்பட்டு என்ன ஆகப்போகிறது.

    தேவையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  18. விழிப்புணர்வு தரும் எச்சரிக்கைப் பகிர்வு...

    பதிலளிநீக்கு
  19. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, எப்போதும் தம் பிள்ளைகளுக்கு எது தேவை என்று அறிந்து செயல்பாட்டால் பின்பு வருந்த தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  20. பிள்ளைகள் அப்படி இருக்கிறார்கள் இக்காலத்தில்.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  21. //நல்லது-கெட்டது தெரியாத வயது தான் அது. பெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதை விட்டு, கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டு, பிறகு கஷ்டப்பட்டு என்ன ஆகப்போகிறது. //

    ஆம் நல்லது கெட்டது நாம்தான் சொல்லி புரிய வைக்க வேண்டி. கேட்டதெல்லாம் வாங்கி தருவது மிகப்பெரிய தவறுதான்.

    பதிலளிநீக்கு
  22. @ துளசி கோபால்: அட ராமா.... இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு....

    உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  23. # கண்ணன்: உங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  24. @ இராஜராஜேஸ்வரி: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. # லக்ஷ்மி: சரியாச் சொன்னீங்கம்மா... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  26. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //ம்ம். லஞ்சத்தை (கொடுக்க/வாங்க) வீட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறோம்.// உண்மை.... பிறகு புலம்புகிறோம்..

    உனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...

    பதிலளிநீக்கு
  27. # ஹுசைனம்மா: குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றையும் வாங்கித் தராமல் இருப்பதும் நல்லதுதான்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @ வை. கோபாலகிருஷ்ணன்: //இந்தக்கால பையன்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் தான். //

    உண்மை.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. # கவிதை வீதி சௌந்தர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @ சேட்டைக்காரன்: //ஓட்டுனர் உரிமத்துக்கான விதிமுறைகளை மேலும் கடுமைப்படுத்த வேண்டும். மீறுபவர்களுக்கான தண்டனையையும் கடுமையாக்க வேண்டும்.//

    சரியாகச் சொன்னீர்கள் சேட்டை...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. # முனைவர் இரா. குணசீலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  32. @ அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. # கோபிராஜ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  34. @ பத்மநாபன்: //குழந்தை வளர்ப்பில் மிகவும் சிக்கலான கட்டம் ..ஆமாம் வரு முன் காப்பதற்கு நன்றாக திட்டமிடவேண்டும்...//


    உண்மை. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  35. அவசியமான பதிவு. நட்சத்திர வாரத்தில் எழுதியதால் நிறைய பேரை சென்று சேரும்

    பதிலளிநீக்கு
  36. # மோகன்குமார்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

    பதிலளிநீக்கு
  37. அருமையா யோசனை இதைதான் நானும் விரும்புகின்றேன் .பிள்ளைகள் எவ்வளவு வசதியான இடத்தில்ப் பிறந்தாலும் எந்தப் பெற்றோரும் இந்த விசயத்தில்க் கொஞ்சம் கண்டிப்பாக நடப்பதே சாலச் சிறந்தது .இளமையில்க் கல்வி சிலையில் எழுத்து .
    அதேபோன்று பழக்கவழக்கம் என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று .மனக் கட்டுப்பாடோடு பிள்ளைகளோ பெற்றோரோ வாழப் பழகிக்கொண்டால் எதிர்காலத்தில் எல்லா விசயத்திலும் நல்லபடியாக
    வாழலாம் .வரும் திடீர் கஸ்ரங்களையும் தாங்கும் பக்குவம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதே என் பணிவான கருத்து .அருமையான உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் ஐயா .ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக் கவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம் கருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு
    கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி ஐயா தாங்கள் எனக்கு இதுவரை வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .

    பதிலளிநீக்கு
  38. @ அம்பாளடியாள்: என் பகிர்வினை படித்து உங்கள் கருத்தினைச் சொன்னமைக்கு மிக்க நன்றி. தமிழ்10 இன்று பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  39. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_9.html?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வலைச்சர அறிமுகத் தகவலுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  40. நல்ல கருத்துள்ள தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நந்தா கவின் மாணிக்கம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....