திங்கள், 10 அக்டோபர், 2011

எதிர் வீட்டு தேவதை




கதிருக்கு இரவு உணவுக்கு பிறகு தன் வீட்டு மொட்டை மாடியில் உலாத்துவது மிகவும் பிடித்தமான விஷயம். எப்போதும் போல அன்றும் பத்து மணிக்கு மாடிக்கு சென்று உலவ ஆரம்பித்தான். அவனுடைய வீடு நூறு அடி ரோடின் ஒரு பக்கத்தில் இருந்தது. எதிர் பக்க வீட்டின் மாடியில் நீண்ட கூந்தலை உலர்த்தியபடி இருட்டில் ஒரு அழகிய உருவம் தெரிவதை பார்த்ததும் அவனுக்கு எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று மனசு குறுகுறுத்தது. சிறிது நேரம் கழித்து அந்த உருவம் கீழே இறங்கி சென்று விட ஏமாற்றத்துடன் கீழிறங்கிய அவன் அவள் நினைவாகவே தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.

அடுத்த நாளும் மொட்டை மாடிக்கு அவன் சென்று காத்திருந்தான். எதிர்பார்த்தபடியே இன்றும் அந்த எதிர் வீட்டு தேவதை வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து சென்றது.

இதே காட்சி மேலும் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்தது.

கதிருக்கு அந்த கூந்தல் அழகியின் மேல் காதல் வர எப்படியாவது அந்த அழகியைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஒரு மறைவிடத்தில் காத்திருந்தான்.

அப்போது அங்கே வந்த சர்தார் சத்னாம் சிங் தன் தலைப்பாகையை [பகடி] கழற்றி அவனுடைய நீண்ட கூந்தலை உதறியபடி நடக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த கதிர் மயங்கி விழாத குறைதான். எப்படியோ தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தான்.

இப்போதெல்லாம் எந்த பெண்ணையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்த பிறகே அவர்களிடம் பேசவே ஆரம்பிக்கிறான் அவன்.


நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

குறிப்பு-1: முன்னெச்சரிக்கையாக சொல்லி விடுகிறேன்.  இது என் சொந்த அனுபவம் அல்ல... கரோல் பாகில் இருந்தபோது என்னுடன் இருந்த ஒரு அறை நண்பரின் அனுபவம்.  

குறிப்பு-2: இது ஒரு மீள்பதிவு....  தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்காக திரும்பவும் பதிவு செய்கிறேன்.


51 கருத்துகள்:

  1. //எந்த பெண்ணையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்த பிறகே அவர்களிடம் பேசவே//

    நண்பருக்கு இப்படி ஒரு போபியாவை எற்படுத்திவிட்டாரே சிங்...

    பதிலளிநீக்கு
  2. என் நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தபோது, பக்கத்து பெட்டில் ஒரு சர்தார் படுத்து இருந்தான் கமந்து, நான் பெண்ணென்று ஒரு மாதிரியா நண்பனை பார்க்கவே, நண்பன் லேசாக போர்வையை நீக்கி காட்டினான் அவ்வ்வ்வ் சர்தார், நொந்து போனேன்...!!!

    பதிலளிநீக்கு
  3. கமலின் பஞ்சதந்திரத்திலும் இப்படி காட்சி ஒரு வரும்.
    எளிமையான நடை! தமிழ் மணம் நட்சத்திர எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
  4. குரி பஞ்சாபன் தில் சுராக்கே லேகயீ...தோபா..தோபா...! :-))

    பதிலளிநீக்கு
  5. கரோல் பாகில் இருந்தபோது என்னுடன் இருந்த ஒரு அறை நண்பரின் அனுபவம்.

    அனுபவம் புதுமை! அருமை.

    நட்சத்திர பதிவுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.நடக்ககூடிய ஒரு விஷயம்.நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவையான அனுபவக்கதை. இருட்டில் பார்த்த உருவத்தைக் கூந்தல் அழகி என்று கற்பனை செய்துகொண்டு, 15 நாட்களாகத் தூங்காமல் உங்கள் நண்பர், பாவம் என்னபாடு பட்டாரோ! கடைசியில் கதை இப்படி ஆகிவிட்டதே!! நான் யாராவது ஒரு கிழவியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனாலும் பதிவினில் நல்ல ஒரு விறுவிறுப்பு.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 2 to 3 in INDLI &
    2 to 3 in Tamilmanam also. vgk

    பதிலளிநீக்கு
  8. சரியா போச்சு.
    வாழ்த்துக்கள் சார்..

    பதிலளிநீக்கு
  9. சிரிக்க வைத்த சிறுகதை
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  10. தமிழ் மணம் நட்சத்திர எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
  11. அட (தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக) ஒரே நேரத்துல கணவர் தமிழ்மண நட்சத்திரம் மனைவி வலைச்சர ஆசிரியர். கலக்குங்க கலக்குங்க...வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. // இருட்டில் ஒரு அழகிய உருவம் தெரிவதை பார்த்ததும் அவனுக்கு எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று மனசு குறுகுறுத்தது. //

    வித்தியாசமான கான்செபட்தான்..
    இருந்தாலும் படிக்கும்போது, above line makes the reader biased(towards expecting a beautiful girl). So, making it a sardar(can't be so beautiful) looks like some continuity/link is missing.

    பதிலளிநீக்கு
  13. சிரிக்க வைத்த சிறுகதை
    ...தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்காக வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. @ பத்மநாபன்: அந்த ஃபோபியாவை விட நாங்கள் ஓட்டியதில் தான் அவர் அதிகம் நொந்து போனார்....

    தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!

    பதிலளிநீக்கு
  15. # MANO நாஞ்சில் மனோ: அட உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைச்சுதா... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  16. @ -தோழன் மபா, தமிழன் வீதி: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    வாழ்த்துகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. # சேட்டைக்காரன்: குரி[டி] தில் சுராகே லே கயி... ஓ பல்லே பல்லே ந்னு கதிர் நினைக்க, அது வேறு மாதிரி ஆகிப் போனது..

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை..

    பதிலளிநீக்கு
  18. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. # சென்னைபித்தன்: தங்களது வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும், தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  20. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும், பதிவினைப் படித்து கருத்துரை இட்டமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. # அமுதா கிருஷ்ணா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ வைரை சதிஷ்: தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. # புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி புலவரே...

    பதிலளிநீக்கு
  24. @ S. குமார்: வாழ்த்திய உங்களது நல்லெண்ணம் எனக்குப் பிடித்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. # கலாநேசன்: தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும், எங்கள் இருவரையும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சரவணன்....

    பதிலளிநீக்கு
  26. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது கருத்திற்கு மிக்க நன்றி மாதவன். அழகிய சர்தார்! - காதல் மயக்கம் அப்படி அந்த நண்பரை யோசிக்க வைத்தது....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. # துளசி கோபால்: தங்களது வருகைக்கும், பதிவை ரசித்து ‘ஹாஹா---ஹாரம்’ செய்தமைக்கும் நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  28. @ DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  29. # வல்லிசிம்ஹன்: வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  30. @ ரெவெரி: தங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  31. # மோகன்குமார்: :)) ஸ்மைலிக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  32. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  33. நல்ல நகைச்சுவை நண்பரே..

    கண்ணை நம்பாதே..
    உன்னை ஏமாற்றும்..

    என்பதை அழகாக அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  34. @ முனைவர். இரா. குணசீலன்: தங்களது வருகைக்கும், இனிய வாழ்த்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி முனைவரே...

    கண்ணை நம்பாதே.... உன்னை ஏமாற்றும்... அற்புதமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  35. ஹாஹாஹா நன்றி!..வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  36. நேரில் தான் அவ்வளவு ஓட்டியாகிவிட்டதே. பதிவிலாவது அவரை நிம்மதியாக விடக் கூடாதா? படித்தால் நொந்து விடுவார்.

    பதிலளிநீக்கு
  37. சரியா போச்சு. இதுபோல ஒவ்வொருவரிடமும் சிரிக்கவும் சிந்திக்கவும் நிறைய அனுபவங்கள் கொட்டிக்கிடக்கு. நாமாலாம் ப்ளாக்கில் எல்லாருடனும் அதை பகிர்ந்துகொள்கிரோம்.

    பதிலளிநீக்கு
  38. அருமை வெங்கட்.ஒரு காதல் கதை போல ஆரம்பித்து நகைசுவை கதையாக முடிந்து விட்டது.நீங்கள் அதை சொல்லியிருக்கும் விதம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  39. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.

    தலைப்பே சூப்பர்.,

    பதிலளிநீக்கு
  40. # விக்கியுலகம்: தங்களது வருகைக்கும், பகிர்வை ரசித்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: அட அவர் படிக்க மாட்டார் என்ற தைரியம் தான் டா!

    உனது வருகைக்கும், நண்பர் மேலுள்ள பாசத்திற்கும் [!] நன்றிடா....

    பதிலளிநீக்கு
  42. # லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும், பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  43. @ ராம்வி: தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. # வேடந்தாங்கல் கருன்: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  45. @ மாதேவி: ஹிஹிஹி... தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்து சிரித்தமைக்கும் மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....