ஒவ்வொரு நகருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அங்கே இருக்கும் கட்டிடமோ ஓடும் நதியோ, அல்லது அந்த நகரில் நடந்த புராதன நிகழ்ச்சியோ மிகவும் பிரசித்த பெற்றதாக இருக்கும். தில்லி நகருக்கும் அப்படி சில தனித்தன்மைகள் இருக்கின்றன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த செங்கோட்டை, குதுப்மினார் போன்ற இடங்கள் அவைகளில் சில.
தில்லி வந்த புதிதில் எனக்கு அதிசயமாக இருந்த சில விஷயங்களை இங்கு கொடுத்திருக்கிறேன்...
காது அழுக்கு எடுப்பவர்கள்: தமிழகத்தில் நீங்கள் இதை பார்த்திருக்கமாட்டீர்கள். பழைய தில்லி பகுதிகளில் கக்கத்தில் ஒரு தோல் பையும், தலையில் ஒரு சிகப்பு துணியும் கட்டி, கையில் ஊசி, பஞ்சுடன் சிலர் சுற்றுவார்கள். அவர்களது தொழிலே மனிதர்களின் காது அழுக்கு எடுப்பதுதான். ஊசி முனையில் பஞ்ஜை சுற்றி காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வார்கள். காதை சுத்தம் செய்ய காட்டிக் கொண்டிருக்கும் ஆசாமியோ பயம் கலந்த சுகத்தில் உட்கார்ந்திருப்பார். உங்களுக்கு காது அழுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்களிடம் தாரளமாக போங்க. ஆனா அதுக்கப்புறம் காது பஞ்சர் ஆகி செவிடானா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சரியா?
BKKKK சலூன்: தமிழகத்தில் சில கிராமங்களில் நாவிதர்கள் வீட்டுக்கு வந்து முடி வெட்டிவிட்டு போவதை பார்த்திருக்கிறோம். தில்லி போன்ற பெரு நகரங்களில் Modern Saloons நிறைய வந்துவிட்டன. அங்கே விதம் விதமாக கட்டிங், ஷேவிங் செய்யும் வசதிகள் உள்ளன. உங்கள் தலையை மட்டும் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தா போதும், மற்றதை அவர் பார்த்துக்கொள்வார். அவர்களோடு போயிற்றா? இங்கே ரோடு ஓரங்களில் கற்களை அடுக்கி வைத்துக் கொண்டு பக்கத்தில் கத்திரி, கண்ணாடி, சீப்புடன் சில நாவிதர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இவர்களிடம் முடி வெட்டிக்கொள்ள நீங்கள் சென்றால், உங்களை அந்த கல்லில் உட்கார வைத்து, கையில் கண்ணாடியை கொடுத்து அவர் பாட்டுக்கு தன் வேலையை ஆரம்பித்து விடுவார். ரொம்ப சீப் தான். கட்டிங் - 15 ரூபாய், ஷேவிங் - 5 ரூபாய். BKKKK சலூன் = Buttocks கீழே கல் கையில கண்ணாடி சலூன். என்ன சார் உங்க அடுத்த கட்டிங் அவரிடம்தானா?
பல்/கண் மருத்துவர்கள்: பழைய தில்லியின் சதர் பஜார் பகுதி. நிறைய நடைபாதை கடைகளும், பெரிய பெரிய பலசரக்குக் கடைகளும் நிறைந்த ஒரு வியாபார ஸ்தலம். போலி பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இங்கே நடைபாதையில் கடை விரித்துள்ளார்கள். அப்படியாகப்பட்ட ஒரு சர்தார் பல் மருத்துவரிடம் தன் பல்லைப் பிடுங்க சென்றார் தெரு சுத்தம் செய்யும் ஒரு பெண் தொழிலாளி. பிடுங்கும்போது, அந்த பெண்மணிக்கு வலித்துவிட, அவள் அந்த சர்தாரை ஓங்கி ஒரு அறை விட்டாள். சர்தாருக்கு வந்ததே கோபம். அவரும் அந்த பெண்மணியை ஒரு அறை விட்டார். பிறகு இருவரும் அழுத்திப் பிடித்து, கட்டிப்புரண்டு ஒரு பெரிய யுத்தமே நடத்தினார்கள். கடைசியில் சர்தார்தான் வெற்றி பெற்றார். கையில் பிடுங்கிய பல்லோடு அவர் ஒரு "பாங்க்ரா" நடனமே ஆடி முடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இது எப்படி இருக்கு?
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வேடிக்கையாக இருக்கிறது.
பதிலளிநீக்குநாம் மாட்டி விடக்கூடாது.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
வெங்கட்ஜீ! மே ஆகயா ஹூன்! பஹூத் அச்சா! தர்யா கஞ்ச், பஹாட் கஞ்ச், ஷாதரா பத்தியெல்லாம் எழுதாம விட்டிட்டீங்களே! :-)))))))
பதிலளிநீக்குபுதுமை அறிமுகங்கள்!
பதிலளிநீக்குஇது நல்லா தான் இருக்கு வெங்கட்ஜி...
பதிலளிநீக்குசார், ரெண்டு மூணு பதிவுல நீங்க 'தலைப்பு' இல்லாம பப்ளிஷ் பண்ணிட்டதா தெரியுது.. டாஷ்போர்டுல பதிவு தலைப்போட வரல. கவனமா இருங்க..
பதிலளிநீக்குகுறை ஒன்றும் இல்லை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன.
பதிலளிநீக்கு@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....
பதிலளிநீக்கு# சேட்டைக்காரன்: ஆயியே சேட்டைஜி! பாஹர்கஞ்ச், ஷாஹ்தரா எல்லாம் எழுதிடுவோம்.... :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....
@ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...
பதிலளிநீக்கு# ரெவெரி: பதிவினை படித்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே....
பதிலளிநீக்கு@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //சார், ரெண்டு மூணு பதிவுல நீங்க 'தலைப்பு' இல்லாம பப்ளிஷ் பண்ணிட்டதா தெரியுது.. டாஷ்போர்டுல பதிவு தலைப்போட வரல. கவனமா இருங்க..//
பதிலளிநீக்குஅவை நான் பப்ளிஷ் செய்தவை அல்ல... என்னுடைய பழைய, முந்தைய பதிவுகள் தானாகவே வருகின்றன, என்னைத் தொடரும் நண்பர்களின் பக்கத்திலே. உங்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறேன்....
# JOTHIG ஜோதிஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....
பதிலளிநீக்கு1) காது அழுக்கு எடுக்கும் ஆட்களுடன் எனக்கும் அனுபவம் இருக்கு.. அதுபற்றி ஒரு பதிவில் சுருக்கமாக சொல்கிறேன் (ஒரு பதிவுக்கு ஐடியா கொடுத்த உங்களுக்கு நன்றி)
பதிலளிநீக்கு2)NDLSலிருந்து (நடந்து) பாலிகா பஜார் போகும் வழியில், தொருவோர நாவிதர்களை பார்த்திருக்கிறேன்
3)போலி டாக்டர் ஜாக்கிரதைனு சொல்லுறதுக்கு (சண்டை) வேற அர்த்தம் கூட இருக்குதா.. ?
கடைசியில் சர்தார்தான் வெற்றி பெற்றார். கையில் பிடுங்கிய பல்லோடு அவர் ஒரு "பாங்க்ரா" நடனமே ஆடி முடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இது எப்படி இருக்கு?
பதிலளிநீக்குவேடிக்கையாகத்தான் இருக்கிறது.
காது சுத்தம்...கட்டிங் .பல்லு பிடுங்கல் மூன்றும் தலை நகரத்தில் சுவாரசியமா இருக்கே...
பதிலளிநீக்குகாது, பல், கண், தலைமுடி எல்லாவற்றையும் ஒருவ்ழியாக ஒர்ரே வழிசெய்து அனுப்பிவிடுவார்கள் போல.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தலைநகர்தான்!
// இங்கே ரோடு ஓரங்களில் கற்களை அடுக்கி வைத்துக் கொண்டு பக்கத்தில் கத்திரி, கண்ணாடி, சீப்புடன் சில நாவிதர்கள் உட்கார்ந்திருப்பார்கள்//
பதிலளிநீக்குஎன் டெல்லி நண்பர் இவர்களிடம் முடி வெட்டிக்கொண்டு வந்த பின், எந்த கடையில் என்று கேட்டால் இடாலியன் ஹேர் டிரெசரிடம் பண்ணிக்கொண்டேன் என்பார். அதன் விளக்கம்.. இந்தியில் இடா என்றால் செங்கல் .. இதனால் இவர்கள் இடாலியன் ஹேர் டிரெசர்!
எப்படில்லாம் பிழைப்பை நடத்துறாங்க..!
பதிலளிநீக்குஅட... கேட்குறதுக்கே ஆச்சர்யமா இருக்குது
பதிலளிநீக்குமருத்துவர்கள் கூட கடை விரித்திருப்பதுதான் மிகுந்த
ஆச்சர்யம்..
காதில் அழுக்கு எடுப்பவர்களை நம்பி காதை கொடுக்ககூடாது..
உலகத்தில் எப்படி எல்லாம் பிழைக்கிறாங்க பாருங்க...
சுவார்சயாமன் புதிய தகவல்கள்
பதிலளிநீக்குதலை நகர விஷயம் சுவாரஸ்யமாக இருக்கு
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள் த.ம 11
பலமுறை டெல்லி வந்தும்
பதிலளிநீக்குசில இடங்களை பார்க்க இயலவில்லை
புலவர் சா இராமாநுசம்
ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குமும்பையிலே கூட காது அழுக்கு எடுக்கும் டாக்டர்ஸ் நடைபாதையில் இருக்காங்களே!
15 ரூ ரொம்ப ஜாஸ்தி. பேசாம சண்டிகர் கிளம்பிப்போங்க. மரத்தடியில் நார்காலியில் உக்காரவச்சு தலை முடி வெட்டிங்கோ ஷேவிங்கோ செஞ்சுக்கலாம். வெட்டிங் பத்து. ஷேவிங் அஞ்சு. கொள்ளை மலிவு:-)
*oops. நார்காலி = நாற்காலி ன்னு இருக்கணும்.
பதிலளிநீக்கு@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அட ஒரு பதிவுக்கு ஐடியா கிடைச்சுதா உங்களுக்கு.... :) நல்லது சீக்கிரம் பகிருங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
# இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ பத்மநாபன்: ஸ்வாரசியம்தான்.... தங்களது வருகைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி பத்துஜி!
பதிலளிநீக்கு# பந்து: இடாலியன் ஹேர் ட்ரஸ்ஸர்.... வாவ்... நல்லாத்தான் சொல்லி இருக்கார் உங்க நண்பர்...
பதிலளிநீக்குதங்களுடைய வருகைக்கும் ரசனையான கருத்திற்கும் நன்றி.
@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....
பதிலளிநீக்கு# மகேந்திரன்: மருத்துவர்கள் - கடை விரித்திருக்கிறார்கள்... :)
பதிலளிநீக்குகாது குடைவது நிச்சயம் ஆபத்தான விஷயம்...
தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
@ கலாநேசன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றி சரவணன்....
பதிலளிநீக்கு# ரமணி: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....
பதிலளிநீக்கு@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....
பதிலளிநீக்கு# துளசி கோபால்: மும்பையிலும் டாக்டர்ஸ்... :)
பதிலளிநீக்குசண்டிகர் போய்ட்டு வரதுக்கும் அவங்களே சார்ஜ் தந்துடுவாங்களா டீச்சர்.... :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
பல்லுடன் சர்தார் ஆடிய " 'பல்'லே .. 'பல்'லே அருமை" :-))
பதிலளிநீக்கு@ அமைதிச்சாரல்: பல்லுடன் ஆடியே பல்லே... பல்லே... :) ரசித்தேன்...
பதிலளிநீக்குஉங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
காதில் அழுக்கு எடுப்பவர்கள்,நடைபாதை மருத்துவர்கள் -- படிக்கும்போதே பயமாக இருந்தது.
பதிலளிநீக்குஆனால் சர்தாரின் பாங்ரா நடனத்தை பற்றி படித்தவுடன் சிரித்துவிட்டேன்.
ஏற்கனவே இந்த பதிவை படித்தது போல் உள்ளதே ............அப்படியா சார்.....அப்படிதான்.!!
பதிலளிநீக்குதவிர தில்லியில் தேநீர் கடையென்றால் அது தெரு ஓரத்தில், ஒரு Kettle வைத்து ஒரு பாட்டிலில் “மட்கி” வைத்துவிட்டால் போதும்.
பதிலளிநீக்குமீள் பதிவு தான் என்றாலும், நல்ல Recall.
கையில் பிடுங்கிய பல்லோடு அவர் ஒரு "பாங்க்ரா" நடனமே ஆடி முடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இது எப்படி இருக்கு?//
பதிலளிநீக்குஅவருக்கு மகிழ்ச்சி அந்த அம்மாவுக்கு எப்படி?
டெல்லியின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொண்டேன் நன்றி வெங்கட்.
நடைபாதை வியாபாரிகளுடன் இந்த டாக்டர்களும் போட்டி போடுராங்களோ. பாவம் டில்லிவாழ் ஜனங்கள்.
பதிலளிநீக்குடெல்லியின் காதைப்பிடித்துத் திருகி
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு இட்டுள்ளீர்களே!
பாராட்டுக்கள்.
தமிழ்மணம் 15
சுவாரசிய டில்லி . அகப்படாமல் ஓடுகின்றேன் :))
பதிலளிநீக்கு# ராம்வி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்கு@ அப்பாஜி: அப்படியா... அப்படித்தான்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
# வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆமாம் தில்லி தேநீர் கடை கூட இப்படித்தான்... :)
பதிலளிநீக்குஉனது வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றிடா....
@ கோமதி அரசு: தில்லியின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொண்டீர்களா? நல்லதும்மா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....
# லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...
பதிலளிநீக்கு@ வை. கோபாலகிருஷ்ணன்: ///டெல்லியின் காதைப்பிடித்துத் திருகி
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு இட்டுள்ளீர்களே!///
காதைப் பிடித்து திருகிவிட்டேனா! :)))
தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்...
# மாதேவி: தப்பித்து ஓடும் அளவுக்குப் பயப்படாதீங்க! சரியா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வித்தியாசமான தகவல்கள்.
பதிலளிநீக்கு@ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு