ஒரு நாள் அலுவலகம்
முடிந்து
வீடு
திரும்பியபோது
என்
இல்லத்தரசி தொலைக்காட்சியில்
கமல்ஹாசன்,
சுகன்யா,
கொச்சின்
ஹனீபா
மற்றும்
பூர்ணம்
விஸ்வநாதன்
நடித்த
மகாநதி
திரைப்படத்தை
பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு
சாதாரண
கிராமத்து
விவசாயி
எப்படியெல்லாம்
ஏமாற்றப்பட்டு
தனது
குடும்பம்,
சொத்து,
நிம்மதி
என்று
எல்லாவற்றையும்
இழக்கிறார்
என்பதை
படம்பிடித்துக்
காட்டிய
தேசிய
விருது
பெற்ற
ஒரு
நல்ல
படம்.
நிறைய
முறை
இந்த
படத்தை
பார்த்திருந்தாலும்
திரும்பவும்
பார்க்க
ஏனோ
வெறுப்பு
ஏற்படவில்லை.
கடைசி
15 நிமிடங்கள்
பார்த்துக்
கொண்டிருந்த
போது
இந்த
படத்தை
முதன்
முதலாக
பார்த்த
நினைவுகள்
எனது
மனதில்
வந்து
அலைமோதியது.
அந்த
படம்
வெளியானபோது
நான்
தில்லி
வந்து
மூன்று
வருடங்கள்
ஆகியிருந்தது.
சில
சமயங்களில்
தில்லி
தமிழ்
சங்கம்
அருகில்
உள்ள
"சங்கம்"
திரை
அரங்கில்
தமிழ்ப்
படங்கள்
திரையிடுவார்கள்.
அது
தவிர
TYCA [Tamil Youth Cultural Association] என்ற
ஒரு
அமைப்பு
மாதம்
ஒரு
முறை
அல்லது
இரண்டு
மாதங்களுக்கு
ஒரு
முறை
Pahar Ganj பகுதியில்
உள்ள
மகாராஷ்டிரா
ரங்கராயன்
அரங்கில்
தமிழ்ப்
படங்கள்
திரையிடுவார்கள்.
மற்ற
எந்த
திரை
அரங்குகளிலும்
தமிழ்ப்
படங்கள்
திரையிடப்படுவதில்லை.
அந்த
அமைப்பின்
உறுப்பினர்
என்றால்
கட்டணம்
25 ரூபாய்
இல்லையெனில்
அதிகம்
[சரியாக
நினைவில்லை].
மகாநதி
திரைப்படம்
அந்த
அரங்கினில்
திரையிடப்பட்டது.
எனது
அண்ணனால்
[தாய்
வழி
உறவினர்]
அவரது
அலுவலகத்திலிருந்து
வர
இயலாததால்,
நானும்
எனது
அண்ணியும்
படம்
பார்க்கச்
சென்றோம்.
படம்
பார்த்து
கனத்த
மனதுடன்
படத்தில்
உள்ள
நிகழ்வுகளை
நினைத்தபடி
வெளியே
வந்து
ஆட்டோவில்
கரோல்
பாக்
சென்றோம்.
எனது
அண்ணி
ஆட்டோவில்
வரும்போது
சினிமாவின்
தாக்கத்தினால்
அழுது
கொண்டே
வந்தார்.
அவரை
எப்படி
சமாதானப்படுத்துவது
என்று
எனக்குப்
புரியவில்லை.
ஆட்டோ
ஓட்டுனர்
வேறு
திரும்பித்
திரும்பி
பார்த்துக்
கொண்டேயிருந்தார்.
வீட்டிற்கு
சென்ற
பிறகும்
அவரது
அழுகை
நின்றபாடில்லை.
அண்ணனும்
எவ்வளவோ
சொல்லியும்
அரை
மணி
நேரம்
கழித்தே
அவரது
அழுகை
நின்றது.
என்னதான்
இது
ஒரு
சினிமாதானே
என்றிருந்தாலும்
நமது
மனம்
அதில்
ஒன்றிவிட்டால்
என்னவோ
இது
நிஜமாகவே
நடந்த
ஒரு
நிகழ்ச்சி
போல
ஏனோ
வருந்துகிறோம்.
நமது
மனதில்
இந்த
நிகழ்ச்சிகள்
அத்தகைய
தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன.
ஆனால்
நிஜமாகவே
இந்த
படத்தில்
காட்டப்பட்ட
நிகழ்ச்சிகள்
நடக்கும்
போது
பாதிக்கப்பட்டப்
பெண்களுக்கு
எந்த
விதமான
உதவியும்
சமூகத்திலிருந்து
கிடைப்பதில்லை.
மாறாக
அவர்கள்
மேலும்
காயப்படுத்தப்
படுகிறார்கள்.
இங்கே
ஒரு
விஷயத்தை
உங்களுடன்
பகிர்ந்து
கொள்ளலாம்
என
நினைக்கிறேன்.
இவர்களைப்
போன்றவர்களுக்காக
உழைக்கும்
ஒரு
நல்ல
உள்ளம்
சுனிதா
கிருஷ்ணன்.
இவரை
பற்றி
தெரிந்து
கொள்ள
ஆர்வமுள்ளவர்கள்
இங்குசெல்லவும்.
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
தமிழ்மணம் இந்த வார நட்சத்திர பகிர்வுகள்:
நிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை./
பதிலளிநீக்குyes.True.
இவர்களைப் போன்றவர்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் சுனிதா கிருஷ்ணன்./
பதிலளிநீக்குபாராட்டுக்கள்....
பெயருக்கு ஏற்ற படம் .....மகாநதி....`ஸ்ரீரங்க ரங்க நாதனின்...பாடல்." இன்றெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம்..ரெங்க...ரெங்க...!
பதிலளிநீக்குஇந்த பதிவும் Ok.....நட்சத்திர பதிவுககாக்...அண்ணன் எப்படி எல்லாம் சிரம படறாரு....வாழ்க...வாழ்க...
தமிழ்மணம் 4
பதிலளிநீக்குஎன்னைக் கண்கலங்கச்செய்த மிகச்சிறந்த திரைப்படம்.
பாடல்களும் அருமை. மிகவும் நல்ல கதை. வாழ்க்கை எப்படியெல்லாம் ஒரு நல்ல மனிதனை மாற்றி சீரழித்து விடுகிறது என்பதை மிகச்சிறப்பாக எடுத்துச் சொல்லிய படம். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைக்க வேண்டும். யாரையும் நம்பி இருக்கும் சந்தோஷம் எதையும் இழந்துவிடலாகாது என்ற நல்லதொரு கருத்தை மனதில் பதியவைக்கும் அற்புதமான கதை. vgk
@ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு# அப்பாஜி: //இந்த பதிவும் Ok.....நட்சத்திர பதிவுககாக்...அண்ணன் எப்படி எல்லாம் சிரம படறாரு..../// :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிஜி.
@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார். என்னையும் பாதித்த படங்களில் ஒன்று இது....
பதிலளிநீக்குஎன் மனதையும் மிகவும் பாதித்த படம், அதுவும் அந்த விபச்சார விடுதியில் தன் மகளை தூக்கி கொண்டு வரும் காட்சி மனதை பிசைந்து பிழிந்து எடுத்து விடும்.
பதிலளிநீக்கு“ நல்லவனுக்கு கிடைக்கிற அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைச்ச்சுடுதே” என்ற வசனம் நிதர்சனம்
# A.R. ராஜகோபாலன்: உண்மை... நிறைய வசனங்கள் நிதர்சனம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
நெஞ்சை வெள்ளாவியில் போட்டு வெளுத்தேடுத்த
பதிலளிநீக்குஒரு அற்புதமான காவியம் மகாநதி திரைப்படம்.
பெற்ற குழந்தைகள் சீரழிவை கண்டு மனம் வெதும்பும்
தந்தையின் மனோபாவத்தை அற்புதமாக செய்திருப்பார்
நடிப்பின் இமையம் கமலஹாசன்.
இளையராஜாவின் மெல்லிசை படம் முழுவதும் தாலாட்டும்.
பெண்மகவைப் பெற்று வளர்த்து இடையில் தவறவிட்டு
பாலியல் தொழிலாளியாய் பார்க்கையில் அவர்காட்டும் இடம்
ஐயோ.... சொல்லொணாத துயரம்..
அப்படிப்பட்டவர்களுக்காக மனம் இறங்கி உழைக்கும் சகோதரி
சுனிதாகிருஷணன் அவர்களுக்கு நெஞ்சம் கனிந்த சிரம் தாழ்ந்த
நன்றிகள்.
//நிஜமாகவே இந்த படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு எந்த விதமான உதவியும் சமூகத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மேலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.//
பதிலளிநீக்குஇது தான் சாபக்கேடு வெங்கட்ஜீ! தடித்த வார்த்தைகளின் பிரயோகங்களினால், ஆறிய புண்களைக் கீறுவதும், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்குச் செல்ல எத்தனிப்பவர்களைக் கடந்தகாலம் என்னும் பாழுங்கிணற்றுக்குள் திரும்பத் திரும்பத் தள்ளிவிட முயல்வதும் தான் பரவலாக நடைபெறுகிறது. இங்கே ஒழுக்கம் என்பதற்கான விதிமுறைகள் எருமைத்தோலில் வடிகட்டி முழுக்க முழுக்க பலவீனமானவர்களுக்குப் பாதகமாகவே வடிக்கப்படுகின்றன.
இதையும் மீறி, துணிந்து வாழ்க்கையை எதிர்கொண்டு வென்றுகாட்டிவரும் சகோதரிகள் இன்னும் இருக்கின்றனர். அதுவே மீதமிருக்கும் நம்பிக்கைக்கீற்று!
மற்றபடி மகாநதி படம் குறித்து சொல்ல எதுவுமில்லை. நான் சூப்பர் ஸ்டார் ரசிகன்! :-)
பதிலளிநீக்குஎத்தனை முறை பார்த்தாலும் மனதில் கனமேற்றும், உலகநாயகனின் கிரீடத்தில் மற்றுமொரு ரத்தினம் மகாநதி... நல்ல விஷயம் பகிர்ந்து இருக்கீங்க... கிரேட்
பதிலளிநீக்குஅதென்னவோ ஒரு தடவைக்கு மேல் பார்க்க மனசுல த்ராணி இல்லை.. மனசை ரொம்ப கனமாக்கிடுச்சு..
பதிலளிநீக்குதமிழ் படங்களில் தரமான படங்கள் என
பதிலளிநீக்குபட்டியல் இட்டால் நிச்சயம் மகா நதியை
தவிர்க்க முடியாது த.ம 7
மகாநதி...என் மனதையும் மிகவும் பாதித்த படம்
பதிலளிநீக்குசகோதரி சுனிதாகிருஷணன்...நல்ல விஷயம்...
@ மகேந்திரன்: தன் மகளை மீட்டு வரும் காட்சிகள் நிச்சயம் காண்பவர் அனைவருடைய மனதிலும் சலனம் ஏற்படுத்தி இருக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்...
# சேட்டைக்காரன்: //இது தான் சாபக்கேடு // மிக உண்மையான கூற்று... நொந்த நெஞ்சில் கூர்மையான வேல் கொண்டு பிளக்கும் வார்த்தைகளைச் சொல்லி மேலும் வருத்துவார்கள்.... :(
பதிலளிநீக்குநீங்கள் ரஜினி ரசிகர் :) நல்லது நான் உங்கள் எழுத்தின் ரசிகர்...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ அப்பாவி தங்கமணி: பிசியான நேரத்திலும் வந்து பகிர்வினைப் படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி அப்பாவி...
பதிலளிநீக்கு# அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. படத்தில் சில காட்சிகள் எனக்கும் பார்க்க முடிவதில்லை....
பதிலளிநீக்கு@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. கமலின் படங்கள் வரிசையில் நல்ல படம் என்று இது நிச்சயம் பெயர்பெறும்...
பதிலளிநீக்கு# ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்குதுக்கம் தொண்டையடைக்கிறதாலேயே சில நல்ல படத்தை திரும்ப பாக்கமுடியாம போய்டுது..
பதிலளிநீக்கு@ முத்துலெட்சுமி: //துக்கம் தொண்டையடைக்கிறதாலேயே சில நல்ல படத்தை திரும்ப பாக்கமுடியாம போய்டுது..//
பதிலளிநீக்குஉண்மைதான்...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
முதல்முதலில் இந்தப் படத்தை'கேட்டது' BTM Layout ஏரிக்குப் பக்கத்தில் பெஞ்சில் மாலை நேரத்தில் காத்தாட உக்கார்ந்துருந்த போது.
பதிலளிநீக்குஅத்தை பேரன் (21 வயசுக்காரன்) சென்னையில் இந்தப் படத்தைப் பார்த்துட்டு, தமிழ் சினிமா இல்லாமக் காய்ஞ்சு போயிருந்த எங்க ரெண்டு பேருக்கும் ஃப்ரேம் பை ஃப்ரேம் கதை சொல்லிக்கிட்டு இருக்கான். தப்பித்தவறி அவன் சொல்ல மறந்த ஸீன்களை எடுத்துக்கொடுக்க அவன் தம்பி தங்கை பட்டாளமே உதவிக்கிட்டு இருக்கு.
நிமிசத்துக்கு ஒரு தடவை பட் பட்ன்னு கை தட்டறோம். ஏகப்பட்ட கொசு கடிச்சு உசுரை வாங்குது. ஆனாலும்..... படத்தைப்பாதியில் நிறுத்த முடியுமா? அண்ணன் மகள் கல்யாண ரிஸப்ஷன் பெங்களூரில். சென்னையில் இருந்து கல்யாண வீட்டின் மொத்த உறவும் அப்படியே அஞ்சுநாள் மாப்பிள்ளை ஊருக்கு இடம் பெயர்ந்துருந்தோம்.
அதுக்கப்புறம் நியூஸி வரும் வழியில் சிங்கையில் மஹாநதி வீடியோ டேப் வாங்கி வந்து வீட்டில் பார்த்தோம். அப்புறம் நிறையதடவைகள் பார்த்துட்டோம். ஆனாலும் அத்தை பேரன் சொன்ன கதைதான் இன்னும் மனசுலே நிக்குது. இப்ப அவனுக்கே ரெண்டு பிள்ளைகள்.
ஏற்கனவே தெரிந்த நாம் பேசியிருக்கும் விஷயம் என்றாலும் படிக்கும் பொழுது வேறு dimension-களைத் தருகிறது.
பதிலளிநீக்குசுனிதா கிருஷ்ணனைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும் நன்றிகள்.
எப்போதோ நான் பார்த்த நல்லபடம்
பதிலளிநீக்குநன்றி!
புலவர் சா இராமாநுசம்
இந்தப் படம் முதல்முறை பார்த்தபின், மறுபடி டிவியில் பார்க்க நேர்ந்தால், உடனே டிவியை சேனல் மாற்றிவிடுவேன் அல்லது அணைத்து விடுவேன். துக்கத்தில் மகள் புலம்புவதை இரு சூழல்களில் கேட்பது - இப்பவும் நெஞ்சில் நடுக்கத்தையேற்படுத்தும்.
பதிலளிநீக்கு//நிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை.//
பதிலளிநீக்குஉண்மைதான்...
மகாநதி மறக்க முடியாதபடம்.. கமல் படும் கஷ்டங்களை தத்ருபமாக நடித்திருப்பார்..
பதிலளிநீக்குகமலின் நடிப்பு அருமையாக இருக்கும், தன் மகளை பார்த்து கமல் அழும் காட்சிகள், இன்னும் ரணமாக மனசில் இருக்கு!!!!
பதிலளிநீக்குஎன்னைக் கண்கலங்கச்செய்த மிகச்சிறந்த திரைப்படம்.
பதிலளிநீக்குமனம் மிக பாரமாகி விடும் இந்த படத்தை நினைத்தாலே.மிக அருமையாக கமல் நடித்து இருப்பார்.
பதிலளிநீக்குசிறந்த படங்களுள் இதுவும் அடங்கும்.
பதிலளிநீக்குசுனிதாகிருஷணன் அவர்களைப் பாராட்டுவோம்.
# துளசி கோபால்: சில சமயங்களில் படத்தைப் பார்ப்பதை விட, ஒரு நல்ல கதைசொல்லியின் மூலம் கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி டீச்சர்....
@ வேங்கட ஸ்ரீனிவாசன்: உனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...
பதிலளிநீக்கு@ புலவர் சா. இராமாநுசம்: தங்களக்கும் இந்தப் படம் பிடிக்குமா?
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே...
# ஹுசைனம்மா: பல காட்சிகள் நடுக்கம் ஏற்படுத்தக்கூடியது தான்....
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ சே. குமார்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு# பத்மநாபன்: உண்மை.. கமல் நன்றாக நடித்திருப்பார் இப்படத்தில்.
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!
@ MANO நாஞ்சில் மனோ: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்கு# வேடந்தாங்கல் கருன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ அமுதா கிருஷ்ணா: பாரம் ஆகிவிடும் என்பது நிஜம்....
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
# மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஆம் வெங்கட் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கும் வெறுப்பு ஏற்பாடாது.ஆனால் உங்க அண்ணிய மாதிரி அழுகையை நிறுத்த முடியாது.அதனால் இப்பொழுது அந்த படம் போட்டால் நான் பார்ப்பதே இல்லை.
பதிலளிநீக்கு//பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு எந்த விதமான உதவியும் சமூகத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மேலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.//
மனதை கனக்க வைக்கும் உண்மை.
@ ராம்வி: நீங்கள் சொல்வது போல மனதை கனக்க வைக்கும் உண்மை தான்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
சுனிதாகிருஷணன் அறிமுகத்துக்கு நன்றி
பதிலளிநீக்குமகாநதி மறக்க முடியாத வடு....
பதிலளிநீக்கு# மோகன் குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
பதிலளிநீக்கு@ மாய உலகம்: உண்மை தான் நண்பரே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மகாநதி ஒட்டு மொத்த சோகம்,ஒட்டுமொத்த ரௌத்திரம்,ஒட்டு மொத்த நெகிழ்வு எல்லாம் க்லந்த ஒரு ஓவியம். பாதிப்படத்திற்கு மேல் என்னால் பார்க்க முடியாது.பகிர்வுக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குமகாநதி படத்தில் உங்கள் மனதுக்கு பிடித்த வசனம் சொல்லவும்
பதிலளிநீக்கு