வியாழன், 13 அக்டோபர், 2011

"ஹே, மா!"




பொதுவாக எல்லோருக்கும் தங்களது தாய்மொழி மீது அபரிமிதமான பற்று இருக்கும். மலையாளிகள், பெங்காலிகள் எங்கிருந்தாலும் தங்களது தாய்மொழியில் பேசுவதையே விரும்புகிறார்கள். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது எங்கு இருக்கிறார்களோ அந்த ஊர் மொழியிலேயே பேசுகிறார்கள்.

ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியை பார்த்தால் போதும், உடனே "KI KABOR? BALAWACHI?" என்று பெங்காலியிலும், மலையாளிகள் "எந்தா சுகந்தன்னே?" என்று மலையாளத்திலும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுடன் வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தாலும், மற்றவர்களுக்குப் புரியாதே என்றாலும் கவலையே இல்லை அவர்களுக்கு. தமிழர்கள் இந்த விஷயத்தில் இதற்கு தலைகீழ்.

தில்லியில் நான்கு தமிழ் பேசும் நண்பர்கள் கூடிப் பேசினால், அவர்களுக்குள் பேச்சு பெரும்பாலும் ஹிந்தி மொழியில் தான். அவர்களுள் ஒருவர் தமிழில் பேசினாலும் மற்றவர்கள் அவருக்கு ஹிந்தியில் தான் பதில் சொல்கிறார்கள்.

தில்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் என்றால் கூட பரவாயில்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு தமிழ் மேல் அப்படி ஒன்றும் பற்று இருக்காது. ரவி என்று எனக்கு ஒரு நண்பர். சென்னையில் தமிழ் படித்து, பேசி வளர்ந்தவர். எனக்குப் பின் தில்லிக்கு வேலை காரணமாக வந்தவர். வந்தபின்தான் ஹிந்தி மொழியைக் கற்றவர். ஆனாலும் அவருக்கு தமிழை விட ஹிந்தியின் மேல் அப்படி ஒரு காதல்.

நண்பர்கள் கூடி தமிழில் பேசும்போது அவர் ஹிந்தியிலேயே பேசுவார். நாங்கள் தமிழில் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்வார். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அதைப் பற்றி அவரிடமே கேட்டால் அதற்கும் பதில் ஹிந்தியிலேயே சொல்வார். சரி கல்யாணம் ஆன பிறகு மனைவியிடமாவது தமிழில் பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் அந்த ஆசையிலும் மண்தான் விழுந்தது..

கல்யாணத்திற்கு விசுவின் மணல் கயிறு "கிட்டுமணி" போல பதினாறு  நிபந்தனை எல்லாம் அவர் போடவில்லை. ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டார். அது -  "பெண்ணுக்கு ஹிந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும்". கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பின் அவரது மனைவி தாய்மொழிப் பற்றோடு தமிழில் பேசினாலும் அவருக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்கிறவரை என்னவென்று சொல்வது?

கடைசி கடைசியாக எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு நாள் நண்பர்கள் கூடிப் பேசும்போது, யாராவது அவருக்குத் தெரியாமல் திடீரென அவரது முதுகில் ஓங்கி ஒரு குத்து விடுவது என்றும், அப்போது வலியில் "அம்மா" என்று கத்தித்தானே ஆக வேண்டும் என்று தீர்மானித்து ஒரு குறிப்பிட்ட நாளில் அதை நிறைவேற்றியும் விட்டோம். ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!

நட்புடன்

வெங்கட்

பின்குறிப்பு: இது ஒரு மீள்பதிவு.

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் பகிர்வுகள்



55 கருத்துகள்:

  1. அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!/

    விசித்திரமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. எங்குமே இரு தமிழர்கள் சந்தித்தால் முதலில் தமிழில் பேசுவதில்லை.ஆங்கிலம்தான்.நம் சாபக்கேடு.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணம் 4

    தாய்மொழிப் பற்றைவிட தாய் நாட்டு மொழிப்பற்று அதிகம் உடைய ஆசாமி போலிருக்கு. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  4. //ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!//

    சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  5. இங்கு நேர் எதிர்...மலையாளிகளையும் தமிழ் பேச வைத்துவிடுவோம்....

    பதிலளிநீக்கு
  6. //ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!//

    நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் வெங்கட்ஜீ! அவர் ’ஹே மா!" என்று இந்தியில் அம்மாவைக் கூப்பிடவில்லை. அடித்ததும் வலிதாங்காமல் ’ஹேமா!’ என்று மனைவியை அழைத்திருப்பார்! :-)

    பதிலளிநீக்கு
  7. முன்பே வாசித்திருக்கிறேன். இப்போது வாசிக்கும் போதும் சிரிப்பு வருகிறது

    பதிலளிநீக்கு
  8. நட்சத்திரப் பதிவுகள் எல்லாம் நல்லா இருக்கு தோழரே.

    பதிலளிநீக்கு
  9. ரொம்பவும் சரியாக எழுதியிருக்கிறீர்கள்! இது ஒரு சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். 36 வருடங்கள் அந்நிய மண்ணின் வாழ்க்கையில் நான் எப்போதும் கண்டு வருவது இதைத்தான். இங்காவது பரவாயில்லை. நம் தமிழ்மண்ணில் தமிழோசையைக் கேட்கும் ஆவலில் காலெடி எடுத்து வைத்ததுமே, ஆங்கிலத்திலத்தில்தான் பேச்சே இருக்கும் நம்மிடம்! அதுவும் வெளி நாட்டில் இருப்பது தெரிந்தால் போதும், மருத்துவர்களிலிருந்து, அதிகாரிகள் வரை அத்தனை பேருமே அது வரை தமிழில் பேசிக்கொண்டிருப்ப‌வர்கள் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறி விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஹா.. ஹா. உங்க நண்பரும் உங்களைப் போலவே நகைச்சுவை மிக்கவர்..

    பதிலளிநீக்கு
  11. தனது தாய் மொழியில் பேசாது பிற மொழியில் பேசும் உங்கள் நண்பர் ரவி.

    பாவி!

    பதிலளிநீக்கு
  12. //"ஹே மா! //

    அவரோட அம்மா பேரு 'ஹேமா' வா?
    என்னதான் இருந்தாலும் அம்மாவ பேர் சொல்லி கூப்பிடுறது ஓவர் தான்..

    பதிலளிநீக்கு
  13. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது பதிவு.

    பதிலளிநீக்கு
  14. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. # சென்னைபித்தன்: நீங்க சொல்றது உண்மை ஐயா... இரு தமிழர்கள் சந்தித்தால் முதலில் வருவது ஆங்கிலம்தான் :(

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @ வை. கோபாலகிருஷ்ணன்: தாய்நாட்டு மொழிப்பற்று... இருக்கலாம்..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. # ராம்வி: //சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை..// ஏதாவது ஒண்ணை மட்டும் பண்ணுங்க.... :))))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  18. @ பத்மநாபன்: அட பரவாயில்லையே.. நான் இங்கே சில ஹிந்தி நண்பர்களுக்கு, நல்ல சில தமிழ்ச் சொற்களை அவ்வப்போது சொல்லிகொடுப்பேன்...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. # சேட்டைக்காரன்: நண்பர் மனைவியின் பெயர் ஹேமா அல்ல... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை.....

    பதிலளிநீக்கு
  20. @ கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  21. # மோகன் குமார்: இரண்டாம் முறையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி மோகன்.....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், மனக் மகிழ வைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. # மனோ சாமிநாதன்: அட 36 வருஷம் அனுபவம் உங்களுக்கு இருக்கா இந்த விஷயத்தில்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. # DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  26. @ -தோழன் மபா, தமிழன் வீதி: //தனது தாய் மொழியில் பேசாது பிற மொழியில் பேசும் உங்கள் நண்பர் ரவி.

    பாவி!//

    [பா]பாவம் [வி]விட்டுடுங்க! அப்படின்னு சொல்ல வரீங்களா? :) சரி விட்டுடுவோம்...

    பதிலளிநீக்கு
  27. # மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: முன்பே அவர் மனைவி பெயர் ஹேமா இல்லைன்னு சேட்டைக்கு பதில் சொல்லிட்டேன். இப்ப உங்களுக்கு சொல்கிறேன் - அவங்க அம்மா பேரும் ஹேமா இல்லை.... :)))

    அது சரி அம்மாவை பேர் சொல்லி கூப்பிடறது தப்புதான்... :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. @ கோமதி அரசு: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  29. சிரிப்பதா அழுவதா
    மெரியவில்லை சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  30. நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே. நம்மவீட்டிலும் அப்படியே பாக்கும்போது ரொம்பவே சங்கடமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  31. இதற்கு நேர் எதிராக வேறொரு நண்பர் இருக்கிறார். அவர் முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடுவார்; அதிலும் வன்தமிழில். இய்ல்பான தமிழ் என்றால் சரி. மேடைத் தமிழில் என்றால் அதுவும் சரியில்லை. நாமே பல நேரங்களில் வேற்று மொழி கலந்து பேசி எழுதத் தான் செய்கிறோம்.

    தில்லியிலேயே பிறந்த குழந்தைகள் என்றால் அவர்கள் வீட்டிலேயே தமிழில் பேச மாட்டேன் என்கிறார்கள். ஆனால் 1995-க்குப் பிறகு இதில் ஒரளவு மாற்றம் வந்துள்ளது என்றே கூறலாம். அப்பொழுது இதற்கு முக்கிய காரணம் சன் டீவி தான். இப்பொழுது மற்றத் தொலைக்காட்சிகளுக்கும் இதில் பங்குள்ளது. அதனால் தான் தொலைக்காட்சிகளில் சரியான தமிழில் சரிவர உச்சரிக்கப் பட்ட நிகழ்ச்சிகள் தான் இன்றைய முக்கிய தேவை.

    பதிலளிநீக்கு
  32. ஆமாம் சகோ,

    இப்படியும் ஒரு கூட்டம் இருக்கு. எங்களுக்கு ஹிந்தி மட்டும்தான் பிடிக்கும் அப்படின்னு சொல்லிக்கொள்வது பெருமை. ஆனந்தமா தமிழ்பாட்டு, மூட் இருந்தா தெலுங்கு, குஷியா இருந்தா ஹிந்தி பாட்டுன்னு வகை படுத்தி கேட்பேன். எங்க பக்கத்து வீட்டுல இருக்கும் தெலுகு தல்லி (தெலுங்குத்தாய்) நீங்க வீட்டுல தமிழ் பாட்டுதான் கேப்பீங்களான்னு என்னவோ நான் செய்யக்கூடாத குத்தத்தை செஞ்ச மாதிரி கேப்பாங்க.

    தாய்மொழி தெலுங்குன்னா தமிழ் பாட்டு கேட்கக்கூடாது. (அந்தம்மா ஒன்லி ஹிந்தியாம். இப்ப வர்ற ஹிந்தி பாடல்கள் கேட்கும் ரகமாவா இருக்கு)!!

    பதிலளிநீக்கு
  33. பை த வே ஹே...மா இதுல ஹேக்கும் மாக்கும் இடையில இருக்கும் புள்ளிகளை மறந்து ஹேமா பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன் சகோ :))

    பதிலளிநீக்கு
  34. பஞ்சாபில் இருந்த பையனுக்கு ஹிந்தி தெரிந்த பெண்தான் வேணுமுன்னு சென்னையில் இருந்து பெண் எடுத்தார் மாமா. கடைசியில் பெண், தன் புருஷனை மெதுவா சென்னைக்கே கூட்டி வந்துட்டார்.

    இங்கே ஒன்னும் சொல்றதுக்கில்லை..........

    பதிலளிநீக்கு
  35. //மனோ சாமிநாதன் said...
    அதுவும் வெளி நாட்டில் இருப்பது தெரிந்தால் போதும், மருத்துவர்களிலிருந்து, அதிகாரிகள் வரை அத்தனை பேருமே அது வரை தமிழில் பேசிக்கொண்டிருப்ப‌வர்கள் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறி விடுவார்கள்!//

    ஆமாங்க! :-((( அதோட போகுமா, ஃபீஸும் வச்சு தாளிச்சுடுவாங்க!! :-(((((

    பதிலளிநீக்கு
  36. என்ன சொல்ல இப்படியும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  37. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.....

    பதிலளிநீக்கு
  38. # அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. $ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  40. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: // தொலைக்காட்சிகளில் சரியான தமிழில் சரிவர உச்சரிக்கப் பட்ட நிகழ்ச்சிகள் தான் இன்றைய முக்கிய தேவை.// இது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் சீனு... நடக்கணுமே.... :)

    உனது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா...

    பதிலளிநீக்கு
  41. # புதுகைத்தென்றல்: உங்கள் தொடர் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....

    ஹேமாவைப் பற்றி எழுதி இருப்பேன்னு நினைத்தீர்களா? :))))

    பதிலளிநீக்கு
  42. $ துளசி கோபால்: எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்துதான் தீரும் இல்லையா டீச்சர்... :)

    உங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. @ ஹுசைனம்மா: //”ஃபீசும் வைச்சு தாளிச்சுடுவாங்க!”// அடக் கஷ்டமே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. # மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  45. நல்ல பதிவு.

    //ஹுஸைனம்மா said...

    //மனோ சாமிநாதன் said...
    அதுவும் வெளி நாட்டில் இருப்பது தெரிந்தால் போதும், மருத்துவர்களிலிருந்து, அதிகாரிகள் வரை அத்தனை பேருமே அது வரை தமிழில் பேசிக்கொண்டிருப்ப‌வர்கள் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறி விடுவார்கள்!//

    ஆமாங்க! :-((( அதோட போகுமா, ஃபீஸும் வச்சு தாளிச்சுடுவாங்க!! :-(((((//

    இருவருடைய கருத்தும் சரியே.

    பதிலளிநீக்கு
  46. @ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  47. நண்பருக்கு தாய்மொழிப் பற்றை ஊட்டணும்ன்னு நீங்க எடுத்த முயற்சி புல்லரிக்க வைக்குது :-))))

    பதிலளிநீக்கு
  48. @ அமைதிச்சாரல்: ம்ம்ம்ம்.. :))))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  49. இது போன்றவர்களை விட்டு விலகி இருத்தலே நலம்...
    இவர்கள் எல்லாம் திருந்தப் போவதில்லை....
    திரும்பத் திரும்ப அடிச்சிருந்தா ஒருவேளை அம்மான்னு சொல்லியிருப்பானோ(ரோ) என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  50. இந்தப் பதிவை நான் இப்போதுதான் படிக்கிறேன். ஹே, மா... நல்ல தலைப்பு!​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....