வெள்ளி, 14 நவம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம் – சொல்லாயோ...



இந்த வார செய்தி:

சந்தன் – 14 வயது சிறுவன் – நேற்று இந்திய விமான படையின் அம்பாலா கிளையில் போர் விமானம் ஒன்றின் விமானியறையில் அமர்ந்து பாவனையாக அதனை செலுத்தி இருக்கிறார் – அதாவது Simulator கொண்டு அந்த போர் விமானத்தினைச் செலுத்தி மகிழ்ச்சி பெற்றிருக்கிறார். 

14 வயது சிறுவனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை, இவரை எப்படி இந்திய விமான படை அனுமதித்தது என்ற கேள்விகளை நீங்கள் கேட்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தினை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது..

இந்த வாய்ப்பினைக் கோரி ஒரு தொண்டு நிறுவனம் விமானப் படையை அணுகிய போது அவர்கள் உடனேயே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பலத்த ஒரு காரணமும் இருந்திருக்க வேண்டும் தானே!

சந்தன் – பிற்காலத்தில் ஒரு போர் விமானத்தினைச் செலுத்த வேண்டும் என்ற ஆசைகளை அதிகம் கொண்டிருந்தவர். அதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தவர்.  ஆனால் அவர் இப்படி நினைத்திருக்க படைத்தவன் வேறு விதமாய் அல்லவா யோசித்திருக்கிறார்! 

சிறுவனுக்கு எலும்புகளில் புற்று நோய் – அதுவும் முற்றிய நிலையில் – எப்போது வேண்டுமானாலும் இறைவனின் பாதங்களைச் சரணடையலாம் எனும் நிலை.  தனது கடைசி ஆசையாக இந்த போர் விமானத்தின் விமானியறையில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்ல, தொண்டு நிறுவனமும், விமானப் படையும் ஒன்று சேர்ந்து சிறுவன் சந்தனுக்கு இந்த வாய்ப்பினை அளித்திருக்கிறது.  நேற்று போர் விமானத்தில் அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான் சிறுவன் சந்தன்!

தான் விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இறைவன் தனக்கு விமானியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும்!

சிறுவனின் ஆசையைப் பூர்த்தி செய்த தொண்டு நிறுவனத்திற்கும், இந்திய விமானப் படை அதிகாரிகளுக்கும் இந்த வாரப் பூங்கொத்து!


இந்த வார முகப்புத்தக இற்றை:

அடிக்கடி அழகு நிலையம் போக வேண்டாம்னு சொன்னா கேட்டாத்தானே – இப்ப பாரு, என்ன ஆச்சு!என்று சொல்லும் இந்த முகப்புத்தக இற்றை! இன்றைய பழக்கலைவையில் ஒரு பகுதியாக!




இந்த வார குறுஞ்செய்தி:

WHEN YOU TALK YOU ARE ONLY REPEATING WHAT YOU ALREADY KNOW….

BUT IF YOU LISTEN, YOU MAY LEARN SOMETHING NEW…..  KEEP LISTENING!

இந்த வார ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக மோகமுள் படத்திலிருந்து “சொல்லாயோ வாய் திறந்துபாடல் – இளையராஜாவின் இன்னிசையில் ஜானகி அவர்களின் இனிய குரலில் – இதோ உங்கள் ரசனைக்கு....




இந்த வார புகைப்படம்:

குஜராத் பயணத்தில் எடுத்த ஒரு சிறுவனின் படம் - இன்று குழந்தைகள் தினம் - ஒரு குழந்தையின் பகிர ஆசைப்பட்டது இக்குழந்தை! :)





படித்ததில் பிடித்தது:

இரண்டு நாட்களுக்கு முன்னர், கவிதை எழுதச் சொல்லி கேட்டிருந்த படத்திற்கு கேரள நண்பர் ஜெயபிரகாஷ் எழுதிய ஆங்கிலக் கவிதை – இன்றைய படித்ததில் பிடித்த பகுதியாக!

A river

I am a river
Blue, Deep, Enchanting
Like an avian dream to sail far
I too try to rise with the tides
Being born each moment

I am a river
Spiralling through the gorges
Like a Piscean longing
I too try to hide between the pockets
Of rocky marsh
Manoeuvring each droplet of strife

While the world atop the green pockets
Of heavenly mountains peers down
I look Happy, calm, Serene
Can it fathom my sorrows?
Silt the filthy death, I am destined to carry
In my belly
Every moment

I am a river
I cannot afford to die
For each frail pigment of pain flowing in me
Takes birth a million cells of life
Let me sail, Let me fly
Let me drown the sins of humanity
In my haloed waters of Life

I am a river
Let me survive
Chained within the chasm of fragile human mocking
Let me love, Give birth-
Cascade, Smile.

Jpkallikkal/a river/©2014

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வலைச்சரத்தில் இன்று:   சாலையோர உணவகங்கள் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!
 

44 கருத்துகள்:

  1. முதல் செய்தி. இது போல கொஞ்சநாள் முன்பு இன்னொரு செய்தி. எனக்கு இதில் ஒரு மாறுபட்ட கருத்து. சொன்னால் தவறாகும்.

    இற்றை புரியவில்லை.

    குறுஞ்செய்தி அருமை.

    பாடல் இனிமை.

    அழகிய குழந்தை.

    ப.பி யும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தினையும் சொல்லுங்கள்.

      இப்போது இற்றைக்கான படம் சேர்த்திருக்கிறேன் -

      த்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. இற்றைக்கான படம் பார்த்து ரசித்தேன்.

      நீக்கு
    3. இரண்டாம் முறை வந்து படத்தினை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. குழந்தைகள் தின புகைப்படம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஜி!

      நீக்கு
  4. சாலட் சுவையாய்...
    சொல்லாயோ வாய் திறந்து பாடலின் வீடியோ கடந்த வாரம் பதிவிறக்கம் செய்து பல முறை கேட்டேன்... இன்று உங்கள் பகிர்வில்
    குழந்தை அழகு...
    கவிதை அருமை...
    கலக்கல் காக்டெயில் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. சிறுவன் சந்தன் குணம் பெற வேண்டுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. அழகான குழந்தை படம் உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. இவ்வளவு நல்ல பாடலை அறிமுகம் செய்ததற்கு நன்றி ...
    இசை ரகளை..
    குரல் எத்துனை ஜாலம் செய்கிறது.. வாவ்
    நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  10. பாடல்கள் கேட்க மட்டும் அருமையாக இருக்கிறது
    வரிகளுக்கேற்ப காட்சியில் மோகம் தாபம் வழிகிறது
    காலையில் ப்ளே செய்துவிட்டு பணிகளைப் பார்த்தவன் இப்போது காணொளியை பார்த்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பாடல்களில் இப்படித்தான் - கேட்க மிக அருமையாக இருந்தாலும் பார்க்கப் பிடிப்பதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  11. இந்த வார பழக்கலவையில் சந்தனின் ஆசை நிறைவேற உதவிய தகவல் படித்தபோது மகிழ்ச்சி அடைந்தாலும் அந்த சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய செய்தி மனதை ஏதோ செய்தது.

    குழந்தைகள் தின புகைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  13. முதல் செய்தி கலங்க வைத்தது.
    முகநூல் பட நகைச்சுவை சட்டென சிரிப்பை வரவழைத்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  14. குறுஞ்செய்தியும் படித்ததில் பிடித்ததும் பழக்கலவையில்அதிக மாக ரசித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  15. சிறுவனின் சீரிய ஆசை நிறைவேற்றிய விமானப்படை அதிகாரிகளுக்கு நன்றி! சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  16. அனைத்தும் அருமை .
    குழந்தை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  17. முதல் செய்தி அந்தச் சிறுவனப் பற்றியய்து மனதை பிசைந்தது.

    இற்றை ஹஹஹஹஹ்...

    குறுன்செய்தி...அருமை! கேட்கும் பொறுமை மிகவும் அவசியம்!

    சொல்லாயோ....சண்முகப் பிரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடல்...ராஜாவின் ஒரு மாஸ்டர் பீஸ்! மிகவும் ரசித்தோம்!

    குழந்தைப் படம் ஆஹா!!! எப்பவுமே குழந்தைகள் ரசிக்க வைப்பவர்கள்!

    கேரளத்து நண்பரின் கவிதை அருமை! பாராட்டுக்கள்!

    I am a river
    I cannot afford to die
    For each frail pigment of pain flowing in me
    Takes birth a million cells of life
    Let me sail, Let me fly
    Let me drown the sins of humanity
    In my haloed waters of Life//

    விஷயங்கள் நிறைய சொல்கின்றதெ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலக் கவிதை எழுதிய நண்பர் ஒரு நல்ல கவிஞர். ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  18. ஃப்ரூட் சாலட் அருமை. குழந்தை படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  19. சந்தன் ஆசையை நிறைவேற்றியவர்களுக்குப் பாராட்டுகள். சிறுவன் நலமுடன் இருக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....