திங்கள், 17 நவம்பர், 2014

கையைப் பிடி காலைப் பிடி



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 10

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9

சென்ற வாரத்தில் பதிவினை முடிக்கும் போது இப்படி இயற்கை காட்சிகளை ரசித்தபடி மலையேற்றத்திற்கு எடுத்துக் கொண்ட நேரத்தினை விட கொஞ்சம் சீக்கிரமாகவே கட்ரா வரை வந்து விட்டோம்.  இத்தனை நேரம் தெரியாத கால்வலி தெரிய ஆரம்பித்தது. நுழைவாயில் அருகே வந்ததும் தங்கும் விடுதி வரை இருக்கும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவினை ஆட்டோவில் பயணிக்கலாமே என்று தோன்றியது!  ஆனாலும் ஆட்டோக்களுக்கான காத்திருப்பினை விட நடப்பது மேல் என நடந்தோம்என்று சொல்லி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

இப்படி மலைப்பாதையில் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது உங்கள் கால்கள் உங்களைக் கெஞ்சக் கூடும் – “டேய் கொஞ்சம் நேரம் எனக்கு ஓய்வு கொடு!என்று கூப்பாடு போடும். ஒவ்வொரு வைஷ்ணவ தேவி பயணத்தின் போதும் இந்த மாதிரி என் கால்களும் என்னைக் கெஞ்சும்.  சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த கட்ரா நகரில் மலைப்பாதை முடியும் இடங்களில் கைகளில் ஒரு எண்ணைக் குப்பியோடு நிறைய ஆண்களையும் பெண்களையும் பார்க்க முடிந்தது.  யார் அவர்கள்?

வலியோடு வரும் பக்தர்களின் கால்களில் எண்ணை தடவி நன்றாக பிடித்து விடுவார்கள். கால்களை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டால் போதும் – அவர்கள் கைகளின் மூலம் நடந்து வந்த பாதங்களுக்கு இதமாய் பிடித்து விடுவார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைக்கப் போகும் தொகை அப்படி ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே – பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று தான் கிடைக்கும்.  ஆனாலும் மகிழ்ச்சியோடு செய்வார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்குப் பெண்களும் பிடித்து விட்டு தங்களுக்குக் கிடைக்கும் பணத்தினைப் பெற்றுக் கொண்டு அடுத்த பக்தரை நோக்கி நகர்வதைப் பார்க்க முடியும்.


 நன்றி: இணையம்.

பெரும்பாலான தங்கும் இடங்களின் வாயிலில் இப்படி நிறைய பேரைப் பார்க்க முடியும். நடந்து வந்தவர்களுக்கும் இது மிகவும் இதமான ஒன்றாக இருந்தது. முதல் முறையாக பார்த்தபோது பாவம் இவர்கள் – அடுத்தவர்கள் கால்களைப் பிடிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைதேன். ஆனால் அவர்களுக்கு இது தொழில் அதனால் தவறில்லை என்றும் தெரிந்தது. நான் முதல் முறை இப்படி ஒருவரிடம் எனது கால்களை ஒப்படைத்தேன் – ஆஹா என்ன ஒரு சுகம்!  அப்படியே நீவி விட்டு, பிடித்துவிட்டு, கால்களில் இருந்த வலியை வெகுவாக குறைத்து விட்டார் அந்த மனிதர்.

இவர்கள் போன்றவர்களின் பிழைப்பிலும் இப்போது மண். வெகுவான தங்குமிடங்களில் இப்போதெல்லாம் இயந்திரங்களை வைத்து விட்டார்கள் – நாற்காலியில் அமர்ந்து கொண்டு பொத்தானை அமுக்கினால் அதுவாகவே Massage செய்து விடுகிறது! மலைப்பாதையிலும் இப்படி ஐந்தாறு இயந்திரங்களைக் கொண்ட Parlour-களையும் காண முடிகிறது. இம்முறை பயணித்தபோது கால் பிடித்து விடும் மனிதர்களைக் காண முடியவில்லை.

நாங்கள் தங்குமிடத்திலும் அப்படி ஒரு இயந்திரம் இருந்தது. அரை மணி நேரத்திற்கு 75 ரூபாய் வாங்கிக் கொண்டார் அங்கே இருந்த பெண். அரை மணி நேரத்திற்குப் பிறகும் ஏனோ கால் வலி குறையவில்லை – அதிகமாகிவிட்டதோ என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது! என்ன தான் இயந்திரம் என்றாலும், அது மனிதர்கள் பிடித்து விட்டது போல இருப்பதில்லை!

அறைக்குச் சென்று சுடு நீரில் நீண்ட நேரம் குளித்து கால்வலியையும் உடல் வலியையும் போக்கிக் கொண்டோம். பிறகு இரவு உணவு உண்டு படுக்கையில் படுத்தது தான் தெரியும். அதன் பிறகு பூகம்பமோ, பிரளயமோ வந்திருந்தால் கூட எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அப்படி ஒரு அசாத்திய தூக்கம். அடுத்த நாள் காலை எழுந்திருக்கும்போது பத்தரை மணி! மாலை ஆறு மணிக்கு மேல் தான் தில்லி திரும்ப வேண்டி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம்.

அதுவரை என்ன செய்வது? பொதுவாகவே வைஷ்ணவ தேவி வருபவர்கள், இருக்கும் கால்வலியினால், தேவியைத் தரிசித்த பின்னர் நேராக தாங்கள் இருக்குமிடம் திரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும், பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வருவார்கள்.  கட்ராவிற்கு அருகிலேயே பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு. அப்படி மூன்று நான்கு இடங்களைப் பார்க்க நாங்களும் முடிவு செய்தோம். அங்கே இருந்த ஒரு Tour and Travels மூலம் ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு சில இடங்களுக்குச் சென்று வந்தோம்.

அவை என்ன, அங்கே நாங்கள் பார்த்தது என்ன எனும் விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

எச்சரிக்கை!: வலைச்சரத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு அடியேன் தான் ஆசிரியர்!  ஆமாங்க, இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து ஆசிரியர் பதவி! இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் தினம் ஒரு பதிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்! இப்பக்கத்திலும் அவ்வப்போது பதிவுகள் முடிந்த போது வெளியிடலாம்!

வலைச்சரத்தில் இன்று:   விடாது கருப்பு – வலைச்சரத்தில்! படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!

28 கருத்துகள்:

  1. கால் வலிக்கு இதமளித்த மனிதர்களைத் துரத்தி, இயந்திரங்களைப் புகுத்தி மனிதத்தன்மை இல்லாமல் செய்து விட்டார்கள் போல!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வலைச்சரம் இன்னும் ஒரு வாரம்... வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. வலைச்சரத்தில் இரண்டாம் வாரம்
    மிக்க மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இப்பதிவிற்கான தமிழ் மண மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா

      நீக்கு
  5. இயந்திர மஸாஜ், பாதங்களை அளவுக்கு அதிகமாக அமுக்கிவிட்டுருது:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. பாவம் அவர்களின் தொழிலில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்கள்.
    தொடருங்கள், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. அருமையான பயண அனுபவம், நாங்கள் போய் இருந்த போதும் கடுகுஎண்ணெய் கொண்ட பாட்டில் வைத்துக் கொண்டு அழைத்தார்கள் நாங்கள் போகவில்லை.

    மனிதகைகள் போல் இயந்திரம் செய்யுமா?

    மீண்டும் வலைச்சர பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. உழைத்து சம்பாதிக்கும் சாமான்யர்களின் வயிற்றில் அடிப்பது வேதனையான ஒன்று! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. அம்மக்கள் பாவம் தான் பிழைப்பு போய் விட்டதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  10. என்னதான் பணம் வாங்கிக் கொண்டு கால் பிடித்து விட்டாலும் அதிலொரு மனித நேயம் இருக்கும் என்று தோன்றுகிறது. மெஷின்களுக்கு ஏது.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  11. ஒகேனக்கலில் முன்பு மசாஜ் செய்வார்கள்.. தலைக்கு எண்ணை வைத்து ! டப் டப்பென்று தட்டியதும் அது ஒரு சுகமாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  12. கால் பிடிப்பதற்கும் இயந்திரமா? பயணக் கட்டுரை அருமை! வலைச்சரத்திற்கும் வருகை தருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  13. கட்ராவுக்கு அருகில் என்ன பார்த்தீர்கள் என அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க நிறைய இடங்கள் இங்கே உண்டு..... நான் பார்த்தவை அடுத்த பதிவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. இயந்திரங்களினால் மனித சக்திக்கு மதிப்பே இல்லாமற் போய்விட்டது பாருங்களேன்..!

    அதிலும் இப்படி ஐந்தோ பத்தோ அவரவர் வயிற்றுக்குக் கஞ்சிக்கென்றாலும் உதவக் கூடிய ஊதியத்தை இப்படிச் சூறையாடுதல் வேதனையாயிருக்கின்றது..:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....