புதன், 19 நவம்பர், 2014

கதையல்ல நிஜம்




தானம்



வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில இருக்கைகளையும் போட்டு இருந்தனர்.  ஊரில் உள்ள பல பேர் வருவதும் போவதுமாக இருந்தனர்.  தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வந்தவர்க்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு. 

சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்.  வாங்கிக்கொண்டு சென்ற அனைவரும் அவரை வாயார வாழ்த்திக்கொண்டு இருந்தார்.  ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்னது மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது. 

அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள்.  ஒரு மாதமாகவே படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம்.  கடந்த இரு நாட்களாக பேச்சு இல்லை, உடம்பில் அசைவும் இல்லை.  உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.  மனது மட்டும் முழித்துக்கொண்டு இருக்கிறது. 

பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது.  எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ தெரியல?  வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல.

இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு.  காரியமெல்லாம் தடபுடலா செய்யணும். கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும்.  என்ன பண்றதுன்னு தெரியல.  ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்! என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்து தொல்லைப்படுத்தியது. 

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து போயிற்று.  கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய பொறுப்பில் அமர்த்தி நல்ல நிலையில் வைக்க, தான் இழந்தது எத்தனை எத்தனை. 

வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம் செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம் செய்ய வேலையாளை அனுப்புகிறான்.  வேணு, நான் செத்த பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு ஈடாகுமா என்று கடைசியாக சொல்லிவிட்டு தலைசாய்த்தாள்.

கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர்இந்த தானங்களை விட நீ உனது தாயார் முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம் என்று சொல்ல துக்கம் பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.


டிஸ்கி:  நெய்வேலி நகரில் இருந்தபோது நேரில் கண்ட ஒரு நிகழ்வு.  கதை என்ற பெயரில் எப்போதோ எழுதி வைத்தது.  இது கதை மாதிரி இல்லாததால் வெளியிடாமல் விட்டுவிட்டேன்! 

மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

இன்று வலைச்சரத்தில்: [DH]தண்டவத் பரிக்ரமா – படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!




24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. நிகழ்வை கதையாகி மனதை கனக்கவைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  4. மனது கனத்து விட்டது வெங்கட் ஜி. வார்த்தைகளே இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  5. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
    உம். பெற்றோரின் அருமை அவர்கள் இருக்கும்போது தெரியாது, நம்மை விட்டு நீங்கிய பின் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  6. வணக்கம்
    சார்! தங்களது படைப்புகள் அருமை. முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு
    வருகிறேன். அறியாத பல தகவல்களை பதிவு செய்திருக்கிறீர்கள் அதற்கு எனது
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வலைச்சரத்தில் எனது வலைப்பூவை
    அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள்... பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.

      உங்கள் வலைப்பூவினை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. வலைச்சரம் அறிமுகம் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சரம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள சீனா ஐயாவின் இந்தப் பதிவினைப் படித்துப் பாருங்கள் ஸ்ரீ சந்த்ரா

      http://cheenakay.blogspot.com/2014/11/blog-post.html

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாழ்க்கையின் யதார்த்தங்கள் கதை வடிவில். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. பாவம். பொறுமை இல்லாமல் ஏதாவது பேசி விட்டு மன அவஸ்தைப் படுவது என்பது இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. உண்மைதான் இறந்தபின் தானங்கள் செய்வது பெரிதல்ல! இருக்கும்போது செய்யும் பணிவிடைகளே சிறந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

      நீக்கு
  12. கதைக் கரு இன்னும் உயிர்ப்போடு இருக்கும் விஷயம் தான்! இதே கான்செப்ட் வைத்து இன்றைய தங்கள் எழுத்தாற்றலில் மறுபடி ஒரு கதை எழுதினால் இன்னும் செறிவாக இருக்கும் சகோ... எழுதப் பழகிய காலத்து எழுத்தைப் பதிவிடும் போது ஒரு மராமத்து செய்து பதியலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்திருக்க வேண்டும்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....