செவ்வாய், 18 நவம்பர், 2014

அஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்!





இரண்டு நாட்களுக்கு முன்னர் தினசரி ஒன்றில் வந்திருந்த செய்தி படித்ததும், வலைப்பதிவர் நண்பர் மதுரைத் தமிழன் நமக்குச் சொல்லாமல் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டாரே என்று தோன்றியது.  என்னதான் எனது பல பதிவுகளில் கருத்துரை எழுதாவிட்டாலும், படித்துவிடுவாரே....  நல்ல நண்பராயிற்றே.... இந்தியா வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டாரே என்று எண்ணத்துடன் மேலே படித்தேன்!

அது என்ன செய்தி என்று ஆர்வத்துடன் கேட்கும் நண்பர்களுக்கு செய்தி இதுதான்!



நன்றி: இணையம்

சபர்மதி தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்யும் 40 வயது தீயணைப்பு வீரர் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி தனது மனைவியிடம் உணவு கேட்க, இரண்டே இரண்டு சப்பாத்திகளை, அதுவும் சின்னதாய் இருந்த இரண்டு சப்பாத்திகளைக் கொடுத்திருக்கிறார் மனைவி. இன்னும் வேண்டும் என்று கேட்க, இவ்வளவு தான் இருக்கு! வேணும்னா நீயே செஞ்சு சாப்பிடு!என்று சொல்ல, இவரும் விடாது இன்னும் சப்பாத்தி வேண்டும் என்று கேட்டாராம்!

கோபம் கொண்டு எழுந்த மனைவி பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து கணவனின் மண்டையில் போட்டாராம் ஒரு போடு! மண்டையை உடைத்ததோடு மட்டுமிலாது ஜன்னல் கண்ணாடிகள், வீட்டில் இருந்த கடிகாரம் போன்றவற்றையும் உடைத்ததாக பார்தத பக்கத்து வீட்டினர் சொல்லி இருக்கிறார்கள். மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த செய்தி முழுவதும் படித்த பிறகுதான் இது நம்ம மதுரைத் தமிழனாக இருக்க முடியாது என்று புரிந்து கொண்டேன் – ஒரு முறை கேட்டு, மனைவி சப்பாத்தி செய்து தரவில்லை எனில், தானாகவே செய்து சாப்பிட்டு இருப்பார் – பூரிக்கட்டையில் பல முறை அடி வாங்கிய அனுபவசாலியாயிற்றே மனிதர்!  அதான் அவரது வலைப்பூவில் பலமுறை சொல்லி இருக்கிறாரே என்று தெரிந்து கொண்டேன்! முதலில் நினைத்த மாதிரி மதுரைத் தமிழன் அஹமதாபாத் வரவில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்!

இது இப்படியே இருக்கட்டும் – அந்தச் செய்தி வெளியிட்ட பிறகு கூடுதலாக சில தகவல்களும் வெளிவந்தன – தவறு அந்த மனைவி மீது மட்டுமல்ல கணவனின் தொந்தரவினால் தான் வெகுண்டு எழுந்திருக்கிறார் மனைவி என்பதும் தெரிந்திருக்கிறது.  சம்பவ தினத்தன்று வீட்டிற்கு வந்த தீயணைப்பு வீரர், படுத்துக் கொண்டிருந்த தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட தற்காப்பு முயற்சியாகத் தான் அவர் கல்லைக் கொண்டு கணவரைத் தாக்கி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. 

மனைவியின் தரப்பிலும் இப்போது காவல் நிலையத்தில் அவரது கணவர் மீது  புகார் கொடுத்திருக்கிறார்களாம்! 

ஆனாலும், சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம்! அது என்ன சந்தேகம்!

சமீபத்தில் குஜராத் – அஹமதாபாத் சென்று வந்த மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை சம்பவங்களை தொடர்ந்து படித்து வரும் வலைப்பதிவர் ஒருவர் தான் இப்படியும் செய்யலாம் என தீயணைப்பு வீரரின் மனைவிக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாரோ? சந்தேகத்தினை நிவர்த்தி செய்து கொள்ள வலைப்பதிவரை வலை வீசித் தேடி வருவதாகத் தகவல் – தெரிந்தவர்கள் போட்டுக் கொடுத்துவிட வேண்டாம் என்று அந்த வலைப்பதிவர் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறாராம்!

என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

டிஸ்கி: இன்றைய வலைச்சரத்தில் - [B] ப்ரஜ் பரிக்ரமா - தெரிந்து கொள்ள உங்களை அழைக்கிறேன்!

38 கருத்துகள்:

  1. அந்த மனைவியே படித்து விட்டு தான் அடித்திருப்பாரோ.....

    ஐ.... பெண்கள் எல்லாம் மதுரைத் தமிழனால் வீராங்கனைகளாக ஆவதால் நான்
    அவர் இருக்கும் இடத்தை சொல்ல மாட்டேன்ப்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

      நீக்கு
  2. தங்களின் ஐயத்தை திரு மதுரைத் தமிழன் அவர்கள் போக்குவார் என எண்ணுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. சத்தியமாக நான் சொல்லித்தரலைங்க. கண்டிப்பாக ஆண்கள் யாரும் சொல்லிக்கொடுத்திருக்க மாட்டார்கள். சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக்கொள்வார்களா என்ன!!!

    போகிற போக்கைப் பார்த்தா, வீட்டுல இனிமே சாப்பாடு செஞ்சுக்குடுன்னு சொல்லக்கூட முடியாது போல இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மேலும் தப்பு இருப்பதாக மனைவி அளித்திருக்கும் புகார் தெரிவிக்கிறது நண்பரே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  4. உணர்வுகள் அறிவைத் தின்னும் என்பதற்கு இது சாட்சி...
    யப்பா ரொம்ப கொடுமைப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வுகள் அறிவைத் தின்னும்! ..... என்ன செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கோபம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. ஹஹாஹ்ஹ மதுரைத் தமிழனைப் பற்றிய செய்தியை தங்கள் நகைச் சுவையை (நண்பர்) மிகவும் ரசித்தோம்!

    கோபம் மட்டுமல்ல! பாவம் பெண்கள்! பெண்களுக்கு ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளும் (மாதவிடாய், ஹார்மோன், பிரசவம், மெனொபாஸ்) அவர்களுக்கு அவர்களது சுய உணர்வை சில சமயம் மீற வைத்துவிடுகின்றது. அது போன்றும் அட்நப் பெண்ணிற்கு இருந்திருக்கலாம்....நம் ஊரில கண்டிப்பாகப் பெண்களுக்கு ஆரோக்கியம் குறித்த கவுன்சலிங்க் தேவை. மனதை அழுத்தத்திலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்ற. பின்னே இது போன்ற வக்கிர புத்தி உள்ள ஆண்கள் இருந்தால் ........ஆண்களுக்கும் தேவையே! ஆண்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். ஆண்களுக்கு வரும் பிரச்சினைகளைக் குறித்த உணர்வு பெண்களுக்கும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  7. ரொட்டிக்கட்டையால் மதுரைத்தமிழன் அடிவாங்கினாலும் வாங்குவானே தவிர ரொட்டிக்காக வாங்கமாட்டன் இந்த மதுரைத்தமிழன் காரணம் இந்த மதுரைத்தமிழன் சோத்துபண்டாரம் அவனுக்கு பிடித்தது தயிர்சாதம் ஊறுகாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்கள் சோத்துப் பண்டாரமா! தில்லி வாழ்க்கையில் நான் ரொட்டிப் பண்டாரமாக மாறி விட்டேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. இந்த செய்தி வந்ததும் ஒரு பெண்மணி இதே படத்தை எனக்கு முகநூலில் டேக் செய்து போட்டு இருந்தார்கள் மேலும் இரண்டு பேர் இமெயிலில் தகவல் சொல்லி இருந்தார்கள்.. பரவாயில்லை நான் அடி வாங்குவது உலகம் முழுவதும் பாப்புலர் ஆகி இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்கள் முன்னர் இப்படம் பார்க்கும் போது எனக்கும் உங்கள் நினைவு தான் வந்தது!

      நீங்கள் உலகம் முழுவதும் பாப்புலர்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. வலைப்பதிவரை வலை வீசித் தேடி வருவதாகத் தகவல் – தெரிந்தவர்கள் போட்டுக் கொடுத்துவிட வேண்டாம் என்று சொல்லி நீங்களே பலரிடம் போட்டுக் கொடுத்துவிட்டீர்களே வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

      நீக்கு
  11. ரசித்தேன். மதுரைத் தமிழனுக்கு இன்று பிறந்தநாள் இல்லையோ? அவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எனது முக நூலில் இல்லை என்பதால் அவரது பிறந்த நாள் என்று எனக்குத் தெரியவில்லை....

      பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. நானும் இந்த செய்தியை படித்ததும் மதுரை தமிழன் நினைவுதான் வந்தது! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  14. சில உண்மைகளே பதிவாக எழுதப் படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  15. தமிழனுக்கு நல்ல பிறந்த நாள் பரிசுதான். அப்புறம் ஒரு சின்ன தகவல் நான் ரெண்டு வாரமா புதுக்கோட்டையில் தான் இருக்கிறேன், அந்த பதிவர் நான் இல்லிங்கோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  16. #தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து #
    அவருக்கு தீயையும் அணைக்கத்தெரியாது,மனைவியையும் அணைக்கத் தெரியாது போலிருக்கே ,இப்படிப்பட்டவர் அடிபடவேண்டியவரே :)
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  17. ஹா... ஹா... ஹா.... சூப்பருங்கண்ணா...
    மதுரைத் தமிழனை கட்டிக் கொடுத்தால் நாம் மறத்தமிழர்களாக இருக்க முடியாது... எனவே மதுரையைக் காட்டிக் கொடுக்க மாட்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  18. மதுரை தமிழன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    தினசரி செய்தி அதிர்ச்சி தரும் விஷ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....