மாதா வைஷ்ணோ தேவி
பயணம் – பகுதி 11
சென்ற பகுதியில் சொன்னது போல
கட்ரா அருகில் இருக்கும் சில இடங்கள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். கட்ரா நகரின் அருகிலேயே சில அருமையான இடங்கள்
உண்டு – அனைத்துமே இறைவன் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் என்றாலும், சில அருமையான
காட்சிகள் அங்கேயும் உண்டு. முதலாக நாம்
பார்க்கப் போவது “[B]பா[B]பா [DH]தன்சர்” எனும் இடம்தான்.
சொட்டுச் சொட்டாய்.....
கட்ரா நகரிலிருந்து சுமார்
15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த “[B]பா[B]பா [DH]தன்சர்”. சலால்
அணைக்கட்டு போகும் பாதையில் பயணித்து இந்த இடத்தினைச் சென்றடைய முடியும். சுமார்
200 படிக்கட்டுகள் கீழ் நோக்கி அமைந்திருக்க, சாலையிலிருந்து அந்த படிகளில் நடந்து
செல்ல வேண்டும். மலையேற்றம் முடிந்த
அடுத்த நாள் என்பதால் கணுக்கால்கள் கெஞ்சத் துவங்கின. இருந்தாலும், என்ன தான்
அங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நானும் நண்பரும் கீழே
இறங்கினோம். அப்படிச் சென்றது நிச்சயம்
நல்லதாகப் போயிற்று. செல்லாமலிருந்தால் ஒரு அழகிய காட்சியை நாங்கள் தவற
விட்டிருப்போம்.
என்ன காட்சி டே!
ஒரு குகை – அதில் இயற்கையாக
உருவான சிவலிங்கம் இருக்க, அதன் மேல் குகைக்குள்ளிருந்து தண்ணீர் சீராக விழுந்து
கொண்டிருக்கிறது. பக்கத்திலே பாறைகள்
மேலிருந்து தண்ணீர் வந்து, அந்த முகட்டில் தனித்தனியாக சின்னச் சின்ன அருவிகளாக
கொட்டி, கீழே பாய்ந்தோடி மலைகளுக்கு இடையே இருக்கும் [ch]செனாப்[b] நதியில்
சென்று கலக்கிறது. அற்புதமான காட்சியாக
அது இருந்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு
திரும்பவும் சாலை நோக்கிய பயணத்தினை – படிகள் வழியாகத் தொடங்கினோம்! 200 படிகள் ஏற வேண்டும் எனும்போதே மலைப்பாக
இருந்தாலும், கீழே பார்த்த காட்சிகளைப் பற்றி பேசிய படியே மேலே சென்று
சேர்ந்தோம். அங்கே எங்களுக்காக வாகன ஓட்டி
காத்திருந்தார்.
எங்கள் சாரதி
அவருக்கும் எங்களுக்குமாக
தேநீர் சொல்லி, அதை அருந்தியபிறகு புத்துணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் “நோ பிண்டி” என்று
அழைக்கப்படும் ஒரு குகைக் கோவில். ஒன்பது தேவிகள் இங்கே சிறிய சிறிய பிண்டங்களாக
குடிகொண்டிருப்பதாக நம்பிக்கை. ஒரு சிறிய
துவாரத்தினுள்ளே செல்ல வேண்டும் – நேராக நடந்து செல்ல முடியாது. ஊர்ந்து தான் செல்ல வேண்டும். இரண்டு மீட்டர் தொலைவு ஊர்ந்து சென்று தரிசிக்க
வேண்டிய இடம் இது. குகைக்குள் இருப்பதால்
அப்படி ஒரு குளிர்ச்சி இங்கே. நல்ல வெயில்
காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கிறது.
அருமையான ஒரு அனுபவமாக அமைந்தது இந்த நோ பிண்டி தரிசனம்.
”நோ பிண்டி” இருக்கும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் கீழே ஓடும் சிற்றோடையும்
அங்கிருந்து கீழே நோக்கினால்
[ch]செனாப்[b] நதி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்கேயும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு
வெளியே வந்தோம். வழியில் நிறைய கடைகள்
உண்டு – அங்கே இப்பகுதிகளுக்குத் தேவையான குளிர்கால உடைகள், கார்ப்பெட் போன்றவற்றை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா தளம் என்பதால் நிறைய பேரம் பேச
வேண்டியிருக்கலாம்!
என்னையும் ஃபோட்டோ புடிக்கறாங்கடோய்!
மலைப்பகுதிகளில் விளையும் பல
பொருட்களையும் ஏதேதோ பெயர் சொல்லி, “இதற்கு நல்லது, அதற்கு நல்லது” என்று பார்ப்பவர்களின் தலையில் கட்டப்பார்க்கும் வேலைகளும்
நடந்து கொண்டிருந்தது. அருமையான சில
காட்சிகளைக் கண்ட திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தோம். வழியில் இன்னுமொரு
பாபாவின் கோவில் இருக்கிறது என்று சொல்ல, அங்கே புல்வெளிகளும் இருந்தமையால் அங்கே
அமர்ந்து கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.
இந்த இரண்டு மூன்று இடங்களும் பார்த்து முடிக்கும்போது மணி மூன்று.
நோ பிண்டி - குகை வாயில்.
படம்: இணையத்திலிருந்து....
வழியில் இருக்கும் வேறு சில
இடங்களையும் பார்த்து விட்டு கட்ரா நகரில் எங்கள் பேருந்து புறப்படும் இடத்திற்கு
வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றி இந்த தொடரில்
இதுவரை பார்த்தோம். நாங்கள் பார்க்காத,
பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
ஜெய் மாதா [dh]தி!
தொடர்ந்து பயணிப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
அருமை
பதிலளிநீக்குதொடர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறேன் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதம 2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஉங்கள் பதிவை படங்களோடு படிக்கும்போது நேரில் அந்த இடங்களைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்ந்து பயணிக்கிறேன் உங்களோடு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இரசிக்கவைக்கும் படங்கள் எங்களுக்கு சென்று வந்த ஒரு உணர்வுதான்... பகிர்வுக்கு நன்றி
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅருமையான காட்சிகள்... அதுவும் முதல் இரு படங்கள் - ஆகா...!
பதிலளிநீக்குநேரில் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். படங்களிலும் அழகு தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அந்த முதல் இரு படங்கள் அழகான கண்கொள்ளா காட்சி.
பதிலளிநீக்குதொடருங்கள் தொடர்ந்து வருகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஇயற்கையின் கூரையில் சொட்டும் நீரின் அழகில் சொக்கினேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குஆஹா! வெங்கட்ஜி மிக மிக அருமையான ஒரு இடத்திற்கு நீங்கள் சென்று பார்த்துக் களித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மிக்க நன்றி முதலில்....அந்தப் படங்கள் இருக்கின்றதே....ஆஹா! ஆஹா! என்ன அருமையான இயற்கை அன்னையின் படைப்பு அழகு! சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை அருமை அருமை.....மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்றதே...அதை சேவ் செய்து வைத்துக் கொண்டோம்....தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குநம் நண்பரையும் ரசித்தோம். அவரை எப்பவுமே ரசிக்கலாம்தான்...
பதிலளிநீக்குநம் நண்பரை எப்போதும் ரசிக்கலாம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
ஹைய்யோ!!!!!!
பதிலளிநீக்குநேரில் போகும் வாய்ப்பில்லை. தரிசனம் செஞ்சு வச்ச புண்ணியம் உங்களுக்கே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குட்யரி குறிப்புகளா அல்லது நினைவேட்டிலிருந்தா? படங்களுடன் பதிவு அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குவைஷ்ணவ தேவி தொடரின் பகுதியாக - நினைவேட்டிலிருந்து!
சிவலிங்கம் கண்ணில் தெரியவில்லையே...
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
சிவலிங்கம் படம் எடுக்கவில்லை. மலையின் ஒரு பகுதி தான் நீங்கள் பார்ப்பது
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமையான இயற்கை காட்சிகள் ! கண்ணைப் பறிக்குது அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குபடங்களுடன் பயணப்பகிர்வு இரசிக்க வைத்தது! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குபடத்திலேயே மனதைக் கொள்ளை கொள்ளுகிறதே அந்த அருவி ,நேரில் பார்த்தால் இன்னும் அழகாய்தான் இருந்திருக்கும் !
பதிலளிநீக்குத ம 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஇயற்கை காட்சிகள் கண்களையும், மனதினையும் கட்டிப் போடுகின்றன. அதிலும் அந்த சின்ன சின்ன அருவிகளாய் பாயும் பசேலென்ற மலை முகடு படம் அருமை!
கண்களை கொள்ளை கொண்ட படங்களுடன் பயணம் இனிமையாக உள்ளது.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குமுதலாவது படம் வியப்போடு அள்ளிச் சொரிந்த அழகு!
பதிலளிநீக்குஅது மட்டுமல்ல கோயிலும், மலையும், காட்சிகளும் அனைத்துமே இயற்கையின்
அற்புதப் படைப்பே! மிக அருமை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஅழகான இயற்கை காட்சிகளுடன் பதிவு அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்கு