எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 3, 2014

அம்மாவிற்கு முன் அனைவரும் சமம்


மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 8

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7

இந்த வார பதிவிற்குள் செல்வதற்கு முன் சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்!

அத்குவாரி குகைக்குள் ஒன்பது மாத காலம் இருந்த பிறகு வெளியே பைரோன் நாத் வந்ததைத் தெரிந்து கொண்ட வைஷ்ணவ தேவி தன்னுடைய சூலாயுதம் கொண்டு ஒரு துளை செய்து அங்கிருந்தும் புறப்பட்டாள்.  அங்கிருந்து அவள் சென்று சேர்ந்த இடம் அத்குவாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னுமொரு குகை.  பைரோன் நாத் தொடர்வதையும் விடவில்லை.  மேலும் தொடர்ந்து அன்னைக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தான். 

அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத வைஷ்ணவ தேவியும் தனது உண்மையான ஸ்வரூபத்தினை, தானும் தேவியின் ஒரு அம்சம் என்பதனை நிரூபிக்க வேண்டிய அவசியமும் காலமும் வந்து விட்டதை உணர்ந்து கொண்டாள்.  தன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு பைரோன் நாத்தினை தாக்கி அவனை அழித்தாள். அன்னையின் ஆற்றலினால் பைரோன் நாத்தின் தலை துண்டிக்கப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலைப்பகுதியில் விழுந்தது.

தான் மோகம் கொண்டது இறைவியின் மேல் என்று தனது தவறினை உணர்ந்து கொண்டான் பைரோன் நாத். மன்னிப்பு கேட்ட அவனுக்கும் அருள் புரிந்தாள் அன்னை வைஷ்ணவ தேவி – அது என்ன அருள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

அத்குவாரியில் தரிசனம் செய்யாது எங்கள் நடையைத் தொடர்ந்த நாங்கள் சில மணிநேரத்தில் [b]பவன் என்று அழைக்கப்படும் கோவில் இருக்கும் இடத்தினை அடைந்து விட்டோம். கோவிலுக்குள் கேமரா, மொபைல், தோல் பொருட்கள் [பெல்ட்] போன்றவை அனுமதி இல்லாததால் அவற்றை நாங்கள் கொண்டு பையில் போட்டு “பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு நுழைவாயில் அருகே சென்றோம்.  இந்த பொருட்கள் பாதுகாப்பு அறையில் உங்கள் உடைமைகளை வைக்க எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. 

பொதுவாகவே இந்த கோவில்களின் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் CRPF தான் கவனித்துக் கொள்கிறது.  ஒவ்வொரு இடங்களிலும் சில சோதனைகளும் முடித்தபிறகு குகையில் குடிகொண்டிருக்கும் அன்னையினை தரிசிக்க செல்கிறோம்.  இங்கே எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தினைச் சொல்லியே ஆக வேண்டும்.  தமிழகக் கோவில்களில் இருக்கும் சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம், ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தரிசனம் போன்ற வேலைகளெல்லாம் கிடையாது இங்கே – அன்னையின் முன் அனைவரும் சமம் தான். எல்லோருக்கும் ஒரே வழி தான். 

இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் உண்டு – சிபாரிசு! CRPF அதிகாரிகளுக்கு அரசு அதிகாரிகள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்கள் – அவற்றைக் கொண்டு வரும் பக்தர்கள் – கோவிலின் அருகே இருக்கும் நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதையும் தவிர்த்தால் நல்லது.  நாங்கள் இம்முறை சென்றபோது அத்தனை பக்தர்கள் இல்லை. அதனால் மிகச் சுலபமாக அன்னையின் குகை வரை செல்ல முடிந்தது. அதிகமாய் மக்கள் கூட்டம் இருக்கும் போது மிகவும் குறைவான நேரம் மட்டுமே அங்கே இருக்க முடியும். 


 படம்: இணையத்திலிருந்து....

இங்கே ஒரு விஷயத்தினை தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.  மற்ற கோவில்கள் போலே இங்கே அன்னையின் சிலை கிடையாது.  குகையில் இருக்கும் மூன்று “பிண்டிதான் அன்னையின் உருவம்.  திரிகூட மலைக்கு ஒரு சிறப்பு உண்டு.  அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும் மூன்று மலைகளாக காட்சி அளிக்கும் – அதனால் தான் இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர். 

 படம்: இணையத்திலிருந்து....

போலவே, அன்னை இந்த குகையில் தரிசனம் தருவதும் மூன்று கற்களாகத் தான்.  அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும், மூன்று தனித்தனி கற்கள் போலவே காட்சி தரும் இவற்றுக்கு மூன்றுமே மூன்று வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் நாம் பார்க்கும்போது இவற்றின் மேலிருக்கும் தங்கத்தால் ஆன தகடுகள் மறைத்திருப்பதால், வண்ணங்களைக் காண இயலாது.  மூன்று பிண்டிகளை பக்தர்கள் – அதுவும் புதிதாய் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதால் வழியிலேயே இதற்கான அறிவிப்புக்ளை வைத்திருப்பார்கள்.  கோவிலில் உள்ளே இருக்கும் அர்ச்சகர்களும் இறைவி இந்த “பிண்டிவடிவத்தில் இருப்பதைச் சொல்லியபடியே இருப்பார்கள். 

 படம்: இணையத்திலிருந்து....

இவை மூன்றுமே அன்னையின் மூன்று வடிவங்களான மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ஆகியோரைக் குறிக்கும் – மூன்று பேருமே தேவியின் அம்சம் தான் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக அமைத்திருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.

முன்பெல்லாம் குகைக்குள் சென்று திரும்பி வருவது கொஞ்சம் கடினம்.  குகைக்குள் ஏழெட்டு பேருக்கு மேல் நிற்க முடியாது. வெளியே வருவதும் கொஞ்சம் சிரமப்பட்டு, அங்கே இருக்கும் காவலாளிகளின் உதவியோடு தான் வெளியே வர முடியும். ஏனெனில் குகையின் வெளியே வரும் வழி அத்தனை சிறியது.  கொஞ்சம் ஊர்ந்து தான் வர வேண்டியிருக்கும்.  இப்போதெல்லாம் அந்த மாதிரி கடினமெல்லாம் கிடையாது. போவதற்கும் வருவதற்கும் தனித்தனி பாதைகளை அமைத்து வசதி செய்து விட்டார்கள்.  அதனால் கொஞ்சம் நிதானமாக தரிசனம் செய்து வெளியே வர முடியும்.

பழைய குகைவழிகளை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும்.  உள்ளே தேங்காய் உடைப்பது, நீங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை படைப்பது போன்ற எதற்கும் அனுமதி கிடையாது.  நீங்கள் உள்ளே நுழையும்போதே உங்களிடமிருந்து “Baintஎன அழைக்கப்படும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு ஒரு சீட்டு தருவார்கள்.  அவை பெற்றுக் கொள்ளப்பட்டு, முன்னரே இறைவிக்குப் படைக்கப்பட்ட வேறொரு பிரசாதம் உங்களுக்கு அன்னையை தரிசித்து வெளியே வரும் வழியில் கொடுக்கப்படும்.

இம்முறை நாங்கள் சென்ற போது அத்தனை பக்தர்கள் இல்லாததால் மிகவும் நின்று நிதானித்து இறைவியை தரிசிக்க முடிந்தது. என்னுடன் வந்திருந்த நண்பருக்கு இது முதலாம் முறை என்பதால் நின்று நிதானமாக தரிசித்து மகிழ்ச்சி அடைந்தார்.  திரும்பி வெளியே வரும்போது மக்களே இல்லாமையால், இன்னுமொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமானால் செய்யலாம் என்று சொல்ல, இல்லை மனதுக்கு திருப்தியாக தரிசனம் கிடைத்தது என்று சொல்ல நாங்கள் மனதில் ஒரு அமைதியுடன் வெளியே வந்தோம். 

முன்பெல்லாம், இப்படி வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக, அன்னையின் அருளாக, ஒரு 25 பைசா நாணயம் வழங்குவார்கள்.  சில வருடங்களாக ஒரு அன்னையின் உருவம் பொறித்த ஒரு சிறிய வெள்ளி நாணயத்தினை வழங்குகிறார்கள்.  நாங்களும் ஆளுக்கொன்று என வாங்கிக் கொண்டு நடந்தோம்.  அடுத்ததாய் என்ன என்று கேட்பவர்களுக்கு.....  அடுத்த வாரம் வரை காத்திருங்கள் என்பது தான் பதில்!

அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. எல்லோருக்கும் ஒரே வழி - ஒரே தரிசனம் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நம் ஊரிலும் இருக்கிறார்களே...!!

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. த்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பல கேள்விகளை எழுப்பிய அருமையான கட்டுரை...
  வாழ்த்துக்கள் வெங்கட்ஜி
  தம மூன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 3. #அது என்ன அருள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!#
  அருள்கூர்ந்து அதை சீக்கிரம் சொல்லுங்கள் :)
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

 4. //இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர்.’’ இந்த வரிக்குப்பின் வரும் வரிகளில் முதல் சொற்றொடர், தட்டச்சு செய்யும்போது விடப்பட்டுவிட்டதென நினைக்கிறேன். விட்டுப்போன சொற்றொடரை சேர்க்கவும்.

  அடுத்து என்ன நடந்தது என அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. நடந்தது என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்....

  முதல் சொற்றொடர் - விடுபட்டது? புரியவில்லை ஐயா.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. //முதல் சொற்றொடர் - விடுபட்டது? புரியவில்லை ஐயா.//

   ‘இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர்’ என்ற வரிக்குப் பின் உள்ள படத்திற்கு கீழே ‘போலவே, அன்னை இந்த குகையில் தரிசனம்’ என சொற்றொடர் உள்ளது. இதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா. பார்க்கிறேன்.

   Delete
 6. உங்கள் பதிவின் மூலம் பல்வேறு தலங்களை நேரில் தரிசனம் செய்ததுபோல் உணர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 7. நேரில் தங்களுடன் பயணித்த உணர்வு
  தொடர்கிறோம் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் தனிச் சுகம்! அதிலும் ஆன்மீகப் பயணங்கள்! பதிவும் படங்களும் எங்களையும் அந்த அருளனுபவத்தை உணரச் செய்வதாய்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 10. மன நிறைவுடன் தரிசனப்பகிர்வுகள்.. அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. //அன்னையின் முன் அனைவரும் சமம் தான்.
  எல்லோருக்கும் ஒரே வழி தான்..//

  தங்களுடன் நானும் பயணிக்கின்றேன்.. மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 12. நேரில் பார்க்க ஆசை! ஆனால் இயலாதே! பதிவு நேரில் கண்டது போல் உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. ஹர்த்வாரில் இந்தக் கோவிலின் மாதிரியில் ஒரு கோவில் இருக்கிறதா. ஹர்த்வார் சென்றிருந்தபோது ஊர்ந்து சென்று ஒரு சன்னதியை அடைந்த நினைவு. பெயரும் மறந்து போய்விட்டது. பணம் இல்லாமல் நம்மூர்களில் சுவாமி தரிசனம் கிடையாதுபோல் இருக்கிறதே.

  ReplyDelete
  Replies
  1. இப்போது பல இடங்களிலும் இந்த மாதிரி மாதா மந்திர் என்று அமைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.... ஹரித்வாரிலும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்

   Delete
 14. இங்கே – அன்னையின் முன் அனைவரும் சமம் தான். எல்லோருக்கும் ஒரே வழி தான்.

  கேட்கவே ஆனந்தமாய் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.

   இக்கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த விஷயம் தான்.

   Delete
 15. தமிழக கோவில்களில் கட்டண தரிசனங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும்! மிகச்சிறப்பான பயணத்தொடர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. குகை வழியாக சென்றதில் நாங்கள் தான் கடைசி என்பதால் நின்று நிதானமாக தரிசனம் செய்தோம்.
  நீங்களும் வெகு நேரம் அம்மனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி.

  ஜெய் மாதா [dh]தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 17. வணக்கம்
  ஐயா.

  ஆலயம் சென்று வழிபட்ட ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 18. பரவாயில்லையே! ஒரே வழி தரிசனம்! ஆம் அன்னையின் முன் எல்லோரும் சமம் தானே! நல்ல முறை. நம் ஊர்களில்தான் அதாவது தென்னகத்தில் தான் இந்த காசு கொடுத்து அதற்கேற்றார் போன்ற வழிகளோ? ஏனென்றால்,மஹாராஷ்ட்ராவில் ஞானேஷ்வர் கோயிலிலும் ஒரே வழி வரிசைதான். மற்ற கோயில்கள் பற்றித் தெரியவில்லை.

  தொடர்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   தமிழகக் கோவில்களில் மட்டும் தான் இப்படி இருக்கிறது. வடக்கில் பல கோவில்களில் ஒரே வழி தான்.....ஆனாலும் சில கோவில்களில் காசு பிடுங்கும் கும்பல்கள் உண்டு! அதுவும் பிரபல கோவில்களில். வைஷ்ணவ தேவி கோவிலில் அதுவும் கிடையாது.

   Delete
 19. அம்மனின் அருளைப் பெற்றதையும்...
  குகைக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதையும்...
  பொருட்களுக்கு பாதுகாக்க காசில்லை என்பதையும் சொல்லிய பகிர்வு அருமை...

  எங்கள் மாவட்டத்தில் பிள்ளையார் பட்டி கோவிலில் தரிசனத்துக் என்று எந்த காசும் வசூலிப்பதில்லை... கூட்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் சாமிக்கு முன்பாக நின்று தரிசிக்க முடியும்...

  ReplyDelete
  Replies
  1. பிள்ளையார்பட்டி - அருமையான கோவில். இரண்டொரு முறை திருச்சியிலிருந்து சென்று வந்ததுண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே.குமார்.

   Delete
 20. இந்த பதிவுக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல தலைப்பு. நம் ஆட்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?
  கதையின் அடுத்த் அபகத்தை சிக்க்ரியம் சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 21. வணக்கம் சகோதரரே.!

  அன்னை வைஷ்ணவ தேவியை பற்றிய கதையை ௬றிக்கொண்டே, செல்லும் வழிகளின் சிரமத்தை அறியாமல், அன்னையின் தரிசனத்தை காண பாங்காய் எங்களை அழைத்துச்சென்று அன்னையை தரிசிக்க வைத்து விட்டீர்கள்.! நன்றி.! தொடர்ந்து வர நாங்களும் ஆவலாய் இருக்கிறோம்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 22. நான் காசு கொடுக்காமல் உங்களின் பதிவின் மூலமே அம்பாளைத் தரிசித்துவிட்டேன் நாகராஜ் ஜி.
  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 23. தரிசனத்தில் நானும் உள்ளம் ஒன்றி வணங்கினேன் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....