எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 7, 2014

ஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ரே – ஓஷோ கதைஇந்த வார செய்தி:

மகாராஷ்டிரத்தில் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். இவரது செயலை அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.

வாஷிம் மாவட்டத்தில் உள்ள சைகேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற இந்தப் பெண்ணை, மகாராஷ்டிர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கவுரவித்தார்.

"நகை உள்ளிட்ட ஆபரணங்களை விட கழிப்பறை அத்தியாவசியமானது, நான் எனது ஆபரணங்கள் அனைத்தையும் விற்று, கழிப்பறையைக் கட்டினேன்" என்று முண்டேயின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சங்கீதா.

"நாட்டில் பல இடங்களில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பெண்களுக்கே அதிக பிரச்சினை ஏற்படுகிறது. நான் எனது அமைச்சர் பதவிக் காலத்தின் முதல் கட்டத்தில் கழிப்பறைக் கட்டுவதற்கு 25% நிதி ஒதுக்கினேன் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்தார்.

மேலும், அதிக கழிப்பறைகளைக் கட்டி பெண்களை இந்த இடர்பாட்டிலிருந்து நீக்கவும் தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தாலியை விற்று கழிப்பறை கட்டிய சங்கீதாவுக்கு புதிய தாலியையும் அளித்து கவுரவித்தார் அமைச்சர் பங்கஜா.

-   நன்றி: தி இந்து நாளிதழ்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படி கழிவறைக்காக போராடும் நிலை தான் உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களில் தங்களது காலைக்கடன்களைக் கழிக்க – இரவு நேரத்தில் ஒதுக்குப்புறமான இடங்களுக்குச் சென்று, பல இன்னல்களை அடைய வேண்டியிருக்கிறது. எப்போது தான் இந்த அடிப்படை வசதிகளை கொண்ட வீடுகளை அமைக்கப் போகிறார்களோ?  கழிப்பறை வசதி இல்லாத வீட்டில் வாழ்க்கைப்படமாட்டோம் என்று இப்போதெல்லாம் இந்த மாநில பெண்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

டீச்சர்:    உங்க மனைவியையும், மாமியாரையும் ஒரு புலி தாக்க வருகிறது.  நீங்க யாரைக் காப்பாத்துவீங்க....

மாணவன்:     நான் புலியை தான் காப்பாத்துவேன் டீச்சர்.

டீச்சர்:     அதிர்ச்சியோடு, ஏம்பா?

மாணவன்:      ஏன்னா அதுல ஒரு சிலது தான் மீதி இருக்கு!

டீச்சர்:     அவ்வ்வ்..... 

இந்த வார குறுஞ்செய்தி:

A GREAT THINKER WAS ASKED “WHAT IS THE MEANING OF LIFE?”  HE REPLIED, “LIFE ITSELF HAS NO MEANING.  LIFE IS AN OPPORTUNITY TO CREATE A MEANING.”

இந்த வார ரசித்த பாடல்:

நுஸ்ரத் ஃபதே அலி கான் அவர்களின் “பியா ரே பியா ரேபாடலை நீங்கள் கேட்டதுண்டா? கேளுங்களேன்.

 

 
இந்த வார புகைப்படம்:

சென்ற வாரத்தின் ஃப்ரூட் சாலட்-ல் சொன்ன சிவனின் படம் இந்த வார புகைப்படமாக. 85 அடி உயரமும், 40 அடி அகலமும் கொண்ட இந்த சிவபெருமானின் சிலை பார்க்கவே பிரம்மாண்டமாக – இதோ உங்கள் பார்வைக்கு!இந்த வார காணொளி:

விதை விதைத்தவன்....
   
படித்ததில் பிடித்தது:

இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் பிரமச்சாரி இன்னொருவர் திருமணமானவர்.

அவர்கள் இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து தானியங்களை சமமாக பங்கிட்டு கொள்வார்கள்.

திருமணமான சகோதரன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்து யோசிப்பான். இது அழகல்ல! என்னுடைய சகோதரன் பிரம்மச்சாரி. விளைச்சலில் பாதிப்பங்கு அவனுக்குச் செல்கிறது. இங்கு நான், என் மனைவியோடும் ஐந்து குழந்தைகளுடனும், என் முதுமைக்காலத்திற்கு தேவையான சகல பாதுகாப்புடன் இருக்கிறேன். ஆனால், என் சகோதரன் வயோதிகப் பருவத்தில் கவனிக்க யார் இருக்கிறார்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு, என்னை விட அவனுக்குதான் அதிகமாக இருக்க வேண்டும். என்னை விட அதிகமான பங்கினை தருவதுதான் முறை".

இந்த சிந்தனையில் படுக்கையை விட்டு எழுந்த அவன், தன்னுடைய தானிய களஞ்சியத்தில் இருந்து மூட்டை நெறைய தானியங்களை எடுத்து போயி தன் சகோதரன் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்து விட்டான்.

இதே போன்ற எண்ணம் பிரமச்சாரி சகோதரனுக்கும் அடிக்கடி ஏற்பட்டது. அவனும் தூக்கத்தில் இருந்து எழுந்து இப்படி சொல்வான்.

இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. மனைவியோடும் ஐந்து குழந்தையோடும் வாழும் என் சகோதரனுக்கும் விளைச்சலில் பாதி போகிறது. நான் தனிக்கட்டை. எனக்கென்று யாரும் இல்லை. அதனால் குடும்பஸ்தனான என் சகோதரன், என்னை விட அதிகமாக தானியங்கள் பெறுவதுதான் நியாயம். "இப்படி நினைத்த அவன் படுக்கையை விட்டு எழுந்து தன் களஞ்சியத்திலிருந்து மூட்டை நெறைய தானியங்களை எடுத்து, சகோதரனின் களஞ்சியத்தில் வைத்து விட்டான்.

இதே போல், ஒவ்வொரு விளைச்சல் முடிந்தபின்பும், இருவரும் பங்கிட்டுக்கொண்ட பிறகு தான்யங்களை சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர், மாற்றிவைத்து கொண்டு இருந்தனர். ஒரு சமயம் இருவரும் எதிர் எதிராக சந்தித்து கொண்ட பொழுது இருவர் கண்களும் கலங்கி போயிருந்தன - அந்த அன்பு என்ற கண்ணீர் துளியில்தான்.

     நன்றி:  ஆன்மீகம் வலைப்பூ

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 comments:

 1. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் கழிவறை வசதியில்லா கிராமங்கள், வீடுகள்
  வருத்தமாகத்தான் இருக்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. கதை பிரமாதம்.
  அந்தப் பெண் மிக சிறந்த முன்னாதரணம்.கழிப்பறையில் அலட்சியம் கூடாது. அரசு அதிக கவனம் எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. நஸ்ரத் படே அலி கான் எனக்கு மிகவும் பிடித்த பாடகர்.. அவர் பாடிய மஸ்த் கலந்தர் அற்புதமான பாடல் (அதன் காபி தான் து சீஸ் படி ஹை மஸ்து மஸ்து)

  அவர் குரலில் அனாயசமாக தொடும் உச்சஸ்தாயி பிரமிக்க வைக்கிறது. இன்னும் சில வருடம் இருந்திருக்கலாம். நமக்குக் கொடுத்து வைக்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. அவரது குரல் எனக்கும் பிடித்தமான ஒன்று. தில்லி வந்த புதிதில் அவரது பாடல்களை கேசட்டுகளில் கேட்டு ரசிப்பேன். இப்போது youtube-ல்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி bandhu ஜி!

   Delete
 5. சிவன் சிலை உண்மையிலேயே பிரம்மாண்டம் தான். படித்ததில் பிடித்தது மனதை நெகிழச் செய்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 6. இந்த வார பழக்கலவையில் நான் மிகவும் இரசித்தது குறுஞ்செய்தியையும், படித்ததில் பிடித்ததையும் தான். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. கதை கண்ணீர் வரவைக்கிறது..
  த.ம இரண்டு ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 8. பெண்கள் எடுத்திருப்பது நல்ல முடிவுதான். பிரம்மாண்டமான சிவபெருமான், விதை விதைத்த‌வன், கதை என எல்லாமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...

  படித்ததில் பிடித்தது மிகவும் பிடித்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. கழிவறை தகவல் திடுக்கிட வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 11. கதையில் லாஜிக் பார்க்கக் கூடாதோ?

  ReplyDelete
  Replies
  1. கூடாது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 12. ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...ஃப்ரூட் சாலட் என்பதை நான் பார்க்கும் போது நாளை வெள்ளிக்கிழமை என்று ஞாபகம் வருகிறது இப்படியே நீங்கள் எழுதி கொண்டிருந்தால் வருங்காலத்த்தில் வெள்ளிக்கிழமை என்பது மறந்து போய் ஃப்ரூட் சாலட் என்பது மட்டும் ஞாபகம் வரும்... பாராட்டுக்கள் வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. ஃப்ரூட் சாலட் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 14. அனைத்தும் அருமை.
  அன்பு என்ற கண்ணீர் துளியில் கரைந்து போனேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 15. ஃப்ரூட் சேலட்டில் இடம்பெற்றவற்றை வெவ்வேறு இடங்களில் படித்திருந்தாலும் ஒன்றாக இணைத்தது அருமை.. முகப்புத்தக இற்றை ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 16. நானும் இந்த செய்தி படித்தேன். பொதுக் கழிப்பறை கட்டி, அதற்காகப் பாராட்டு பெற்றிருந்தால் சரி, தனது வீட்டுக்கு தங்கத்தை விட கழிப்பறை அவசியம் என்று முடிவு எடுத்தது சரிதான், ஆனால் அரசாங்கமே பாராட்டும் அளவு அல்ல என்று தோன்றியது!

  மற்ற அனைத்துமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்ணின் செய்தியை நானும் செய்தித்தாளில் படித்தேன்! இது போன்ற முன்னுதாரணங்கள் கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும்! கதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. சுவையான பழக்கலவை நண்பரே...
  பகிர்வுக்கு நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 19. சிவன் சிலை அழகு. தொகுப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...
  மற்ற அனைத்தும அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 21. கழிப்பறை வசதி எங்கும் தேவை இன்று ஒரு கானொலி பார்த்தேன் சென்னையிலும் அதே நிலை!ம்ம் பகிர்வுக்கு நன்றி இன்னும் இந்தியா முன்னேற வேண்டும் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 22. வணக்கம் சகோதரரே.!!

  கழிப்பறையின் முக்கியத்துவம் உணர்ந்த அந்தப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.!
  முகப்புத்தக இற்றை, பிரம்மாண்ட சிவன் சிலை அனைத்தும் அருமை.!
  சகோதரர்களின் அன்பு ,தியாகம்,படித்ததும் பிடித்து விட்டது.
  ஃப்ரூட் சால்ட் இந்த வாரமும் இனித்தது.
  பகிர்ந்தமைக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 23. கழிப்பறை கட்டுவது பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன....மிக நல்ல விஷயம்! சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பெருகுகின்றதெ! ஆனால், அரசாங்கமே இந்தக் கிராமங்களுக்குச் செய்ய வேண்டாமோ?!!!

  இற்றையும், குறுன்செய்தியும் அருமை!

  பாடல் மிக அருமை! பிடித்த குரல்!

  கதை மனதை என்னவோ செய்கின்றது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. கதை மனதை என்னவோ செய்கிறது ஏனென்றால் இப்போதுள்ள மனிதர்களை நினைத்து! சுயநலம் மிகுந்த...

  காணொளியும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....