எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 13, 2014

செல்ஃபி புள்ள!

செல்ஃபி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு – அலைபேசி [அ] டிஜிட்டல் கேமரா கொண்டு தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தினை தான் செல்ஃபி என்று சொல்கிறார்கள் – அதுவும் அந்தப் புகைப்படத்தை முகரகட்ட பொஸ்தகத்துல போடுவதற்கு மட்டுமே எடுக்கப்படும் புகைப்படங்களை செல்ஃபி என்று சொல்கிறார்கள்!

தன்னைத் தானே எடுத்துக் கொண்ட புகைப்படம் முதன் முதலாக வெளி வந்தது 1839-ஆவது வருடம் என்று சொல்கிறது விக்கிபீடியா. இருந்தாலும், சில வருடங்களாகத் தான் இது ரொம்பவும் அதிகரித்து இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்ற ஒரு பயணத்தில் நண்பர் எங்கே சென்றாலும், அவரது சாதா அலைபேசியில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து எங்களிடம் காண்பித்து நான் நல்லா இருக்கேனா!என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  எத்தனை முறை “நீ ரொம்ப அழகா இருக்கே!என்று சொல்லிவிட்டாலும் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டிருந்தது! தில்லியில் உள்ள வணிக வளாகங்களாகட்டும், விமான நிலையமாகட்டும், பூங்காக்களாக இருக்கட்டும், எங்கே போனாலும் இப்படி தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் ரொம்பவே அதிகமாகி விட்டார்கள். சமீபத்தில் குஜராத் சென்று தில்லி திரும்புவதற்காக அஹமதாபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். இரவு 07.45 மணிக்கு தான் விமானம் என்றாலும், 06.15 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்தாயிற்று.  அங்கே உள்ள இருக்கைகளில் கண்களை மூடியபடியே அமர்ந்து, அப்பயணம் தந்த அனுபவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது தன்னுடைய சிறுபையை முதுகில் மாட்டிய இளைஞர் எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.  அந்த சப்தத்தில் கண் விழித்து பார்த்தேன். எதிரே வந்தமர்ந்த இளைஞர் தனது பையை கழட்டி பக்கத்து இருக்கையில் தொப்பென்று போட்டார். பிறகு தனது நவீன அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டார்! கிராமங்களில் கண்டதுண்டா? – வெற்றிலையை எடுத்து புறங்கையால் துடைத்து – ஆள்காட்டி விரலால் மீண்டும் மீண்டும் சுண்ணாம்பு தடவுவார்கள்! – அதே போல அந்த சக்ரீன் டச் அலைபேசியில் ஆள்காட்டி விரலால் தடவித் தடவி தனக்கு வந்த இற்றைகளைப் பார்த்தார்.  அதில் கொஞ்சம் நேரம் சென்ற பிறகு அவருக்கே போரடித்து விட்டது போலும்!

அதன் பிறகு தான் எனக்கு ஆரம்பித்தது பயங்கர தொல்லை! அலைபேசியை சற்றே தொலைவில் ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்ற கையின் விரல்களால் துப்பாக்கி போல கேமரா நோக்கி காண்பித்து படம் எடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் சுடுவதும் தொடர்ந்தது! – தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறாரா? விமான நிலைய காவலதிகாரி பார்த்தால் ஏதோ இவரால் பிரச்சனை வரக்கூடும் என்று நினைத்திருக்கலாம்!! இது மட்டுமாவது செய்தால் பரவாயில்லை – கூடவே அவர் செய்த மற்றொரு சேஷ்டை – ஒவ்வொரு முறை செல்ஃபி எடுத்துக் கொள்ளும்போது முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டார் - அதில் எதிரே அமர்ந்திருந்த அனைவருமே டரியல் ஆகிப் போனோம்!எத்தனை விதமாய் தனது முகத்தினைக் கோணலாக்கி புகைப்படம் எடுத்திருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். பொதுவாக Mr. Bean பார்க்கும்போது அவரது முகத்தினை அஷ்டகோணலாக ஆக்கி பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பார்.  அதை ரசிப்பதுண்டு.  ஆனால் ரொம்பவும் அருகிலே ஒருவர் இப்படி செய்தால், அவர் நம்மை நோக்கி சுடுகிறாரா?, எதற்கு இப்படி முகத்தினை அஷ்டகோணலாக்குகிறார் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குள் ஒரு வழி ஆகிவிடுவோம் நாம்!

எனக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது! இப்படி எடுத்த புகைப்படங்களை தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டு அதைப் பார்க்கும் நண்பர்களின் நிலை என்னவாகும்! கண்டிப்பாக வேப்பிலை அடிக்க வேண்டி வந்தாலும் வரலாம்! முகப்புத்தகத்தில் இப்படி ப்ரொஃபைல் படம் போடுகிறார்களே....  ஒரு சில படங்கள் பார்க்கும்போதே பயம் வருவதுண்டு – தாடி மீசை தெரிந்தால் பரவாயில்லை, மூக்குக்குள் இருக்கும் முடி தெரியும் அளவிற்கு ஒரு க்ளோஸ் அப் படம் போட்டால் பார்க்கறவங்களுக்கு பயமா இருக்காதா!

அங்கே இருந்த ஒரு மணி நேரத்திற்கு மேலான சமயத்தில் இப்படி செய்த கொனஷ்டைகளை கவனித்ததிலேயே அரை மணி நேரத்திற்கு மேல் சென்றது.  மீதி இருந்த நேரத்தில் விமான நிலையத்தில் கண்களைச் சுழற்றினால் எங்கே பார்த்தாலும் ஒரே செல்ஃபி புள்ளகள் தாம் ஆக்ரமிப்பு செய்திருந்தார்கள். 

அப்படிப் பார்த்த இன்னுமொரு செல்ஃபி புள்ள – தனது தாயின் முகத்துடன் முகம் ஈஷிக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார்! – மகளை விட தாய் ரொம்பவே அழகாய் இருந்தார் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்!

உங்களுக்கும் இப்படி செல்ஃபி புள்ளகளின் நடுவே மாட்டிக் கொண்ட அனுபவம் உண்டா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   ஆல்-இன்-ஆல் அழகுராஜா - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!

50 comments:

 1. செல்ஃபி பற்றி பதிவு போட்டது சரி ஆனா அதுக்கு நீங்க எடுத்த செல்ஃபி போட்டோவை அல்ல போட்டு இருக்கனும்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... உங்களுக்கு பயமே இல்லையா! :

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. பார்த்திருக்கிறேன். அவர்களை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு ஒரு பதிவு எழுத வாய்ப்பு தந்தமைக்காகவாவது! :))))

  ReplyDelete
  Replies
  1. அதானே..... இப்படி ஒரு பதிவு எழுத வைத்தது அவர் தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அங்க நிக்கிறார் தமிழன்!! நானும் இதைதான் கேட்கனும்னு நினைச்சேன்:))) அண்ணா!! இந்த செல்போன் இளைஞர்கள் பற்றி தான் என் அடுத்த குறும்பா!! எப்படித்தான் வலைச்சரமும் பார்த்துகொண்டு இங்கும் பதிவிடுகிரீர்களோ!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   உங்கள் குறும்பாவினைப் படிக்கும் ஆர்வத்துடன் நானும் காத்திருக்கிறேன்!

   Delete
 4. "முகரகட்ட பொஸ்தகத்துல" இதுதான் டாப்.

  ஆனால் கரெக்ட் வார்த்தை "மொகரக்கட்ட பொஸ்தகத்துல". ரொம்ப நல்லா இருக்குங்க

  ReplyDelete
  Replies
  1. மொகரகட்ட பொஸ்தகம் - சரிங்க :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
 5. இந்த செல்ஃபி கலாச்சாரம் ஒரு தொற்று நோய் போல் பரவிக் கொண்டிருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம். பல பேர் இதுபோல் படம் எடுக்க இரயில் மேல் நின்று இரயில் அருகே நின்று உயிரை விட்டிருக்கிறார்கள் என்பதை கேட்கும்போது கவலையாய் இருக்கிறது.
  ஆனாலும் இந்த செல்ஃபி பற்றிய உங்கள் பதிவை இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நட்ட நடு சாலையில் நின்று செல்ஃபி எடுப்பவர்களையும் இங்கே பார்க்க முடிகிறது - விபத்தினை வரவேற்கும் படியாக அல்லவா அவர்கள் செயல்படுகிறார்கள்! புரிந்து கொள்வதில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. Mr. Bean அவர்களை ரசிக்க முடிந்த மனம் - இந்த செய்கைகளை ரசிக்க மறுக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 7. முதல் செல்பி எடுத்த நம்ம மிஸ்டர் பீன் அவர்களையும் உங்க செல்பி பதிவில் குறிப்பிட்டு பெருமைபடுத்தீட்டீங்க.

  அந்த நண்பரை போன்றோர் இங்கே நிறைய இருப்பதால் ஆச்சர்யப்படுத்தவில்லை. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. மகளை விட தாய் ரொம்பவே அழகாய் இருந்தார் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்!

  உங்களுக்கும் இப்படி அனுபவம்..!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. "//மகளை விட தாய் ரொம்பவே அழகாய் இருந்தார் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்!//"

  - இதுக்கு பேர் தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுறது என்பதா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 10. படங்களும், செல்ஃபி பற்றிய செய்திகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 11. //கிராமங்களில் கண்டதுண்டா? – வெற்றிலையை எடுத்து புறங்கையால் துடைத்து – ஆள்காட்டி விரலால் மீண்டும் மீண்டும் சுண்ணாம்பு தடவுவார்கள்!//

  எவ்ளோ வெல கொடுத்து, ஸ்டைலா வச்சுகிட்டு நடக்கிற ஸ்மார்ட் ஃபோனை ஆஃப்டரால் வெத்திலை-சுண்ணாம்புக்கு ஒப்பிட்டுச் சொல்லிட்டீங்களே..... விழுந்து விழுந்து சிரிச்சேன்... நல்லவேளை என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. என்னிடமும் ஸ்மார்ட் ஃபோன் இல்லை! - அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
 12. தேவையில்லாத விஷயம்!.......எங்களுக்கு தேவையான விஷயம்தான்.
  ”மொகரகட்ட பொஸ்தவம் “------ வதன புஸ்தகத்தை விட நன்றாக உள்ளது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன் சந்தர்.

   Delete
 13. டெல்லி அண்ணா! மகளை விட அம்மா சூப்பர்!னு நீங்க சொன்னதை உங்களோட தங்கமணி பாக்காம இருக்கனும்! :P

  ReplyDelete
  Replies
  1. தங்கமணி பார்க்கணும்னே சொல்ற மாதிரி இருக்கே தக்குடு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. நானும் உங்கள் செல்பி படங்கள் பற்றிய பகிர்வு என்று நினைத்தேன்! சுவாரஸ்யமான தகவலுடன் இளைஞனை பற்றி விவரித்தமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 15. எங்கு திரும்பினாலும் செல்ஃபிதான்:).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. இதுவும் கடந்து போகும் என்றே தோன்றுகிறது. அவர்கள் முகங்கள் அவர்களுக்கே வெறுக்கத் துவங்கி விடும் அபாயம் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் நடக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 17. செல்ஃபிபுள்ளகள கல்யாண வீடுகளிலும் நிறைய பார்க்க முடிகிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 18. ரொம்பவும் சிரிப்பை வரவழைத்தது உங்களின் பதிவு! கொஞ்ச நாட்களாகவே இந்த செல்ஃபி என்ற வார்த்தை அனைத்து வார, மாத இதழ்களில் வந்து கொண்டிருப்பதைப்படித்து நானும் சமீபத்தில் தான் அதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 19. செல்ஃபி பதிவுக்கு உம்மா உம்மா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிங் ராஜ்.

   Delete
 20. செல்பி அதிகக் எடுப்பவர்கள் மன இறுக்கம் நிறைந்தவர்கள் என்கிறது ஆய்வு ...
  நல்ல கட்டுரை
  தம நான்கு (பணத்தை அனுப்பிடுவேள்னு நம்பரன்)

  ReplyDelete
  Replies
  1. அனுப்பிட்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 21. முகரகட்ட புத்தகமா
  புதுப் பெயர் சூட்டியுள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   இந்தச் சொல்லை நண்பர் ஆர்.வி.எஸ். தனது தளத்தில் அறிமுகப்படுத்தினார்!

   Delete
 22. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 23. சுய விளம்பரம் , தம்பட்டம் செய்ய மட்டுமே உதவும் இந்த படங்கள் . முகரகட்ட கிராமிய வட்டார வழக்கு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 24. முகநூல் தானே முகரக்கட்டப் புத்தகம்...ஹஹஹஹ் அருமை

  செல்ஃபி பத்திய பதிவு அருமை! தகவல் புதியது! அது சரி செல்வி?!!! அட ஆமாம் ல!!??ஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 25. குமுதத்துல கூட இப்ப செல்ஃபி போட்டு கமென்ட் போட ஆரம்பிச்சுருக்காஅங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன். ஜி!

   குமுதம், விகடன் படித்து ரொம்ப மாதங்களாகி விட்டன. ஊர் வரும் போது படித்தால் உண்டு!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....