எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 6, 2014

கட்டில் சப்ஜி! பட உதவி: கூகிள்

பல சமயங்களில் நாம் நினைப்பது ஒன்றாக இருக்க, பேசுவது வேறாக இருக்கும். சொல்ல வந்த வார்த்தைக்கு ஒத்துப் போகும், அதே மாதிரி ஒலிக்கும் வார்த்தைகளைச் சொல்லி, கேட்பவர்களை குழப்பி விடுவோம் – “என்ன சொல்ல வராங்க, ஒண்ணுமே புரியலை, மறை எதும் கழண்டுச்சா?என நினைக்கவும் வைத்து விடுவது வழக்கம். அப்படி நான் குழம்பிய சில விஷயங்களை இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  முதலில் வருவது – ஸ்காட்ச் ப்ரைட்..

ஸ்காட்ச் ப்ரைட்:

தில்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அதே வண்டியில் எனக்கு தெரிந்த ஒருவரும் பயணம் செய்தார். அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தோம்.  உணவு சாப்பிடும் போது இருவருமாக சேர்ந்து சாப்பிட்டோம்.  நாக்பூர் சமீபத்தில் வரும்போது அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது – நாக்பூரில் ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கும், சாப்பிடுங்க!என. நாக்பூர் ரயில்நிலையத்தில் நடைமேடையில் இறங்கி ஐஸ்க்ரீம் விற்பனை செய்யும் தள்ளுவண்டி அருகே சென்றோம். அவரிடம் என்னுடன் வந்தவர் கேட்டது – “இரண்டு ஸ்காட்ச் ப்ரைட் கொடுப்பா”. ஐஸ்க்ரீம் வியாபாரி பலமாக முழித்தார் – ஐஸ்க்ரீம்ல இந்த பெயர்ல ஒண்ணும் இல்லையே என முழித்து, என்ன வேண்டும் எனக் கேட்க, மீண்டும் அதே “ஸ்காட்ச் ப்ரைட்கேட்க, அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் அதிகரித்தது! அதற்குள் சுதாரித்த நான் “அட அவங்க கேட்டது பட்டர் ஸ்காட்ச்எனும் கோன் ஐஸ்க்ரீம் எனப் புரிய வைத்தேன்.

உடன் வந்தவருக்கும் அவரது தவறு புரிய, “எப்பவும் பாத்திரம் தேய்க்கற நினைவு!என்று சொல்லிக் கொண்டார்! சிரித்தபடியே “ஸ்காட்ச் ப்ரைட்”-ஐ அட அதாங்க “பட்டர் ஸ்காட்ச்”-ஐ சுவைத்தோம்!

இரண்டாவது நிகழ்வு எனது அலுவலகத்தில் – அது சக்ரீன் டச்

சக்ரீன் டச்:

அலுவலகத்தில் ஒரு ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர் இருக்கிறார். ஒரு நாள் காலை என்னிடம் வந்து என் மகள் சக்ரீன் டச் வேணும்னு அடம் பிடிக்கிறா. எவ்வளவு விலை ஆகும்?எனக் கேட்க என்னிடம் பதில் இல்லை! அவர் என்ன கேட்கிறார் என்பது புரிந்தால் தானே பதில் சொல்ல!  கொஞ்சம் சமாளித்துக் கொண்டு பார்த்து சொல்றேன், என்ன வேணும்னு சொன்னீங்க?என்று திரும்பவும் கேட்டேன். அதற்கு அவரும் “அதாம்பா, சக்ரீன் டச்! அந்த மாடல் மொபைல் தான் வேணுமாம்!என்று சொல்ல, அப்போது தான் எனக்குப் புரிந்தது, அவர் கேட்டது டச் ஸ்க்ரீன்வசதி கொண்ட மொபைல் என்பது.  இணையத்தில் தகவல்கள் தேடி அவருக்குச் சொன்னேன்.  இப்போதும் “டச் ஸ்க்ரீன்விளம்பரங்களைப் பார்க்கும்போது அவர் நினைவு தான் வரும்!

சரி மூன்றாவதாக இந்தப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கும் விஷயத்திற்கு வருகிறேன்....

கட்டில் சப்ஜி:

தில்லியில் இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு நாள் அவரது வீட்டிற்கு உணவு உண்ண அழைத்திருந்தார்.  நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்று சில நிமிடங்கள் பேசியதும், “அண்ணே, சாப்பிட வாங்கண்ணே!, உங்களுக்காக ‘கட்டில் சப்ஜி’ செய்து வைத்திருக்கேன்!எனச் சொன்னதும் எனக்குள் அதிர்ச்சி.  கட்டில் காலை கொஞ்சம் கொஞ்சமா நறுக்கி சப்ஜி செய்து இருப்பாரோ? எனக்கு மரக்கறி சாப்பிட்டு பழக்கம் இல்லையேஎன யோசித்தபடி, சரி வருவது வரட்டும் பார்த்து விடலாம்! என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ”கொஞ்சம் போகட்டும், சாப்பிடலாம்எனச் சொல்லிவிட்டு என்னவாக இருக்கும் என யோசித்தபடியே பேசிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அழைக்கவே, சரி வந்தது வரட்டும் என சாப்பிட அமர்ந்தேன். வந்தது கட்டில் சப்ஜி!அட இது தானா என யோசிக்க வைத்தது அந்த உணவுப் பண்டம் – கட்டல் கா சப்ஜி! ஹிந்தியில் பலாவினை ‘கட்டல்என்று அழைப்பார்கள். பலாப்பிஞ்சு போட்டு சப்ஜி செய்வார்கள். அதைத்தான் நண்பரின் மனைவி “கட்டில் சப்ஜிஎன்று சொல்லி என்னைக் குழப்பி விட்டார்கள்!

என்ன நண்பர்களே, பதிவினை ரசித்தீர்களா?

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....

62 comments:

 1. அனைத்தும் ஹா... ஹா...

  சில நேரம் இப்படித்தான், கழுத்து வரை வார்த்தை இருக்கும்... வெளியே வரும் போது இது போல் வேற மாதிரி... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  தங்களின் அனுபவ பகிர்வு சூப்பர் ஐயா.
  பொருள் ஒன்று வார்த்தைகள் வித்தியாசம் என்பதை அழகாக சொல்லியுள்ளிர்கள் “கட்டில் சப்ஜி”.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. பதிவை இரசித்தேன்!
  ‘சகராம் என்றால் தெரியுமா?’ என்ற என் பதிவையும் பார்க்கவும் (http://puthur-vns.blogspot.com/2013/08/blog-post.html)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் படித்தேன்..... ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. “எப்பவும் பாத்திரம் தேய்க்கற நினைவு!” என்று சொல்லிக் கொண்டார்!//

  சிரிக்கவைத்த பகிர்வுகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. என்னது, மரக்கறி சாப்பிடும் பழக்கம் இல்லையா? வெறும் நான்-வெஜ் தானா?
  சைவ உணவைத் தான் தமிழில் மரக்கறி என்பார்கள் இலங்கைத் தமிழர்கள்

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் மரக்கறி என்றால் சைவம் தான்! :) இங்கே குறிப்பிட்டது ‘மரத்தால் செய்யப்பட்ட கட்டில் என்பதால்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 6. சக்ரீன் டச் நல்லாயிருக்கு..அவசரமா சொன்னதா இல்லை அவர் உச்சரிப்பு தெரியாமல் சொன்னதா??

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகவே ஹரியானா மாநிலத்தவர்கள் ஸ்கூல் என்பதை சகூல் என்றும், ஸ்கூட்டர் என்பதை சகூட்டர் என்றும் தான் சொல்வார்கள். அப்படித்தான் இதுவும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 7. Tongue twisters மாதிரி இது ஒரு ட்விஸ்ட்டர்ஸ். நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 8. ஹாஹாஹா ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. ரசிக்கவைத்த பதிவு. சென்னைக்கு வந்த புதிதில் பட்டாசை டப்பாஸ் என்று சொல்லக் கேட்டு விழித்திருக்கிறேன். கட்டில் சப்ஜி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 10. ரசிக்க வைத்த நிகழ்வுகள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 11. ஒவ்வொரு நிகழ்வும் சிரிக்க வைத்த நிகழ்வுகள். படிக்கும் எங்களுக்கே சிரிப்பு வந்தது என்றால், அந்த இடத்தில் இருந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. மிக அழகாக platformக்கு தமிழாக்கம் சொல்லியிருக்கிறீர்கள் - "நடைமேடையில்". நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   அடிக்கடி பயணிப்பதால் சென்னை ரயில் நிலையத்தில் கேட்டிருக்கிறேன்! :)

   Delete
 13. பட்டர் ஸ்காட்ச்”-
  >>
  எனக்கும் இப்படி நேர்வதுண்டு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 14. பல்ல பதிவு! இல்லை இல்லை நல்ல பதிவுன்னு சொல்ல வந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. சிரிக்க வைத்த பதிவு.
  பயணத்தில் நல்ல அனுபவம்.
  .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 16. மிகவும் ரசித்தோம்! இழயோடியிருந்த நகைச்சுவையையும் ரசித்தோம்!!

  நல்ல பகிர்வு1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 17. iஇத்வும் ஒரு வகை tongue of the slip.... I mean slip of the tongue ஆக இருக்குமோ. ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 18. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி என்ன சார் நீங்கள் எப்பவும் பயன்படுத்துகிற சொற்றொடரை நான் எழுதிவிட்டேன் என்று பார்க்கிறீர்களா? அட .. உண்மையில் நீங்கள் செவ்வாய் அன்று எங்கள் இல்லத்துக்கு வந்திருந்து உங்கள் நிமிடங்களை செலவிட்டமைக்கு மிக்க நன்றி அடுத்தமுறை தில்லி வரும்போது அவசியம் கட்டில் சப்ஜி சாப்பிட்டு பாத்துடுவோம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இல்லத்திற்கு வந்து உங்களுடன் சில மணித்துளிகள் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார் ஜி!

   Delete
 19. ஹா... ஹா.... எல்லாமே ரசிக்க வைத்தது அண்ணா...

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 20. கட்டில் என்னவாய் இருக்கும்னு யோசித்தபடியே படித்துச் சிரித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 21. ஒவ்வொரு நிகழ்வும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்.அருமை.

  அருமை.

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 22. மரக்கறிக்கு கொடுத்த அர்த்தம் ஜூப்பர் :-))

  கட்டில், நாற்காலி.. இன்னும் என்னென்ன சப்ஜியெல்லாம் செஞ்சு வெச்சிருக்காங்களோ :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 23. படித்து சிரித்தேன் சார்..... நீங்க முழித்த முழியை போட்டோ போட்டு இருக்கலாம் :-)

  ReplyDelete
  Replies
  1. அட நான் முழித்ததை நானே படமெடுக்க பயந்து தான் எடுக்கவில்லை. அடுத்தவர்களையும் பயமுறுத்த முடியுமா :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 24. Nangu siriththu rasikkumbadiyaga irundhadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 25. ரசிக்க வைத்த பதிவு வெங்கட்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 26. ஆஹா! என்னைப்போல நிறையப் பேரு திரியறாங்கப் போல. சந்தோஷம். சந்தோஷம்.

  காய்கறியை ‘மரக்கறி’ என்றும் காய்கறிக் கடையை ‘மரக்கறிக் கடை’ என்றும் சொல்வது வழக்கம்தான். என்ன கொடுமை என்றால் பேச்சு வேகத்தில் மரக்கறி, மலக்கறியாய் மாறி விடுவதுதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 27. //பேச்சு வேகத்தில் மரக்கறி, மலக்கறியாய் மாறி விடுவதுதான்.//

  கன்யாரி மாவட்டத்துல இப்பவும் அப்படித்தானே சொல்றாங்க :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 28. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 29. அனைத்தையும் இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 30. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கு நன்றி தனபாலன்.

   Delete
 31. ஸ்காட்ச் பிரைட்டும் ஸக்ரீன் டச்சும் சிரிக்க வைத்தது. கடல் கா சப்ஜி சாப்பிட்டதில்லை. பலாப் பிஞ்சில் பண்ணுவாங்கனு இப்போத் தான் முதல்முறையாக் கேள்விப் படறேன். ஆறாம் தேதி ஶ்ரீரங்கத்தில் இருந்திருக்கீங்க, உடனே டெல்லி??????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....