எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 16, 2014

QUILLING STUDS மோகம்

சில நாட்களாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இந்த Quilling மேல் அப்படி ஒரு மோகம்.  ஒரே Quilling தோடுகளாக செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.  ஓவியம் மற்றும் நுண்தொழில் வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இப்படி எதையாவது செய்து கொண்டிருப்பது மகளுக்கு வழக்கமாகி விட்டது.  அதைச் சொல்லித் தரும் Aunty அதற்கு தேவைப்படும் பொருட்களை அவராகவே தந்து விடுகிறார்.  ஆனால் வீட்டிற்கு வந்து செய்து பார்க்க வேண்டும் என்றால் பொருட்களை நாம் தான் வாங்கிக் கொள்ள வேண்டும்!

சமீபத்தில் Quilling காகிதங்களை இணையம் மூலம் மகளுக்காக வாங்கிக் கொடுத்திருந்தேன். அதிலிருந்து ஆரம்பித்தது இவர்களின் மோகம்! தினமும் இப்படி தோடுகளாக, மாலைகளுக்கு pendent ஆக செய்து தள்ளுகிறார்.  மகள் செய்வதைப் பார்த்துப் பார்த்து அம்மாவுக்கும் ஆசை. அவரும் செய்ய, இரண்டு பேருக்கும் போட்டி - சர்ச்சை! அப்பா எனக்கு தான் வாங்கிக் கொடுத்தாங்க, நீங்க ஏன் அதை எடுத்தீங்க!

திருவிளையாடல் சிவபெருமான் – நக்கீரன் அளவிற்கு போட்டி!   மன்னன் மாதிரி புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்....  புலமைக்கு சர்ச்சை தேவை தான்... ஆனால் அது சண்டையாக மாறிவிடக்கூடாதுஎன்று மத்யஸ்தம் செய்ய வேண்டியிருக்கிறது!

தீர்வு ஒன்றையும் அவர்களாகவே சொல்லி விட்டார்கள்! Quilling Set பேப்பர்களை இனிமேல் வாங்கும்போது இரண்டு இரண்டாக வாங்க வேண்டுமாம் – அம்மாவுக்கு ஒன்று மகளுக்கு ஒன்று!  நல்ல யோசனையாகத் தான் தெரிகிறது!

சரி இன்றைய ஞாயிறில் அவர்கள் இருவரும் செய்த Quilling Studs மற்றும் Pendent ஆகியவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் [இதைப் பதிவிடும்போது செய்தது இரண்டு பேரும் தான் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும் என்பது கட்டளை! மீறினால் கடும் தண்டனை கிடைக்கும்!]. என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   மனிதர்கள் பலவிதம்..... - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!


32 comments:

 1. ”புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்.... புலமைக்கு சர்ச்சை தேவை தான்... ஆனால் அது சண்டையாக மாறிவிடக்கூடாது” என்று மத்யஸ்தம் செய்ய வேண்டியிருக்கிறது//

  அருமை.

  இருவர் செய்ததும் அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் உங்களுக்கும் வாழத்துக்கள்.

  என் மருமகளும் இணையத்தில் பார்த்து இது போல் வித விதமாய் செய்கிறாள். இளமதி, ஏஞ்சலின் அதிரா, இது போல் அழகாய் செய்வார்கள், வாழ்த்து அட்டைகள் எல்லாம் செய்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. கைவினைப் பொருட்கள் அருமை. வலைப்பூவில் தமிழ் முகில் ப்ரகாசம் என்பவர் இம்மாதிரிக் கைவினைப் பொருட்களைச் செய்து அசத்துகிறார்.எனக்கும் கற்றுக் கொள்ள ஆசை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார். பதிவுலகில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.

   Delete
 4. கைத்தொழில் ஒன்றை அருமையாக கற்றுக்கொண்டு செய்தும் காட்டி இருக்கிறார்கள்! அனைத்தும் அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 5. sabaash, sariyana potti! sariya ezuthi irukkena??? No kannaadi. athan ketkiren. :D

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.... சரியாத்தான் எழுதி இருக்கீங்க!

   Delete
 6. க்வெல்லிங் ஒவ்வொன்றும் அத்தனை அழகு!! இருவருக்கும் என் வாழ்த்துக்கள். என் பள்ளி மாணவிகள் சிலரும் தாங்களே செய்த காதணிகளை அணிந்து வருகிறார்கள். என்னை பொறுத்தவரை நான் தோழி இளமதி அவர்களிடம் பார்த்து கற்றுகொண்டது தான்:) அடுத்த படங்களுக்காக வெய்டிங்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 7. கைவேலைப்பாடு அழகு..

  வாழ்த்துக்கள் சொன்னேன் என அவர்களுக்கு சொல்லிடுங்க சகோ...

  ஊக்கப்படுத்துங்கள் தொடர்ந்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 8. அம்மாவும் மகளும் அருமையாக அசத்தியிருக்கிறார்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. கைவினைப் பொருட்கள் மிக அழகு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. அழகு.. அனைத்தும் அழகு.. நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு.

   Delete
 11. Quilling தோடுகள் அனைத்தும் அருமை. அதைச் செய்த தங்களின் துணைவியார் மற்றும் மக்களுக்கு எனது பாராட்டுக்கள். தங்க நகைகள் அணிந்து வழிப்பறி திருடர்களிடம் நகையோடு காதை பறிகொடுப்பதை இவைகள் தடுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. அவர்களது ரசனை, படங்களில் தெரிகிறது ஐயா. அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

   Delete
 13. அனைத்துமே ரொம்ப அழகாக செய்து இருக்காங்க...வாழ்த்துகள் ...இப்ப என் பொன்னும் அதே மாதிரி நாமும் செய்யலாமா அம்மா என்று கேட்கிறாள்...

  கம்மலில் உள்ள கலர் Combination எல்லாம் அழாக இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மகளையும் செய்யச் சொல்லுங்கள் கீதா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. ஆஹா, பார்க்காவே அழகாக இருக்கிறது.
  தங்கள் துணைவியாருக்கும், செல்ல மகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. இருவர் படைப்புகளும் அருமை! எப்படியோ தண்டனையிலிருந்து தப்பித்தீர்கள்! இருவருக்கும் எங்கள் பாராட்டுகள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 16. வாவ் !! எல்லாமே அருமை அழகு :) கலர் காம்பினேஷன் சூப்பர்ப் ..ஆதிக்கும் Roshiniக்கும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....