இரு மாநில பயணம் –
பகுதி – 16
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஆய்னா மஹால் - உள்ளே....
Bபுஜ் நகரில் இருக்கும் ப்ராக்g
மஹால் பக்கத்திலேயே இருக்கும் இன்னுமொரு அரண்மனை ஆய்னா மஹால். ஹிந்தி மொழியில்
ஆய்னா என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி. இந்த ஆய்னா மஹால் உள்ளே இருக்கும் ஒரு
அறையின் சுவர் முழுவதுமே கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் இந்த மாளிகைக்கே ஆய்னா
மஹால் என்ற பெயர் வந்து விட்டது. ப்ராக்g மஹால் பார்த்த பிறகு அந்த ஆய்னா
மஹாலுக்குத் தான் நாங்கள் சென்றோம். இரண்டுமே பக்கம் பக்கமாக இருப்பதால் தனியே
பயணிக்க வேண்டாம். இரண்டு மாளிகைகளையும் ஒரு சேர பார்த்து விட முடியும். ப்ராக்g
மஹால் முழுவதையும் பார்த்து ரசித்த பிறகு நாங்கள் ஆய்னா மஹால் நோக்கிச் சென்றோம்.
ஆய்னா மஹால் - விளக்கு ஏற்றி வைக்க ஒரு வசதி....
ஆய்னா மஹால் - மார்பிள் சிலைகள்....
ஆய்னா மஹால் - Lunar Clock....
1750-ஆம் ஆண்டு இந்தப் பகுதியை
ஆண்டு வந்த மஹாராவ் லக்பத்ஜி என்ற ராஜாவிற்கு இசை, கலை, கட்டிடக் கலை, இலக்கியம்
என பல ஆர்வங்கள். அவருக்கு மேல் நாட்டில் இருக்கும் கட்டிடங்கள் போலவே தனக்கும்,
தனது ஆட்சியில் ஒரு மாளிகை கட்டிக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக
இருந்தது. அதற்குத் தகுந்த கட்டிட நிபுணர்களை அவர் தேடிக் கொண்டிருந்தார். அந்த
சமயத்தில் அவருக்குக் கிடைத்த ஒருவர் தான் ராம்சிங் மலம்! [பெயரே ஒரு மாதிரி
இருக்கே!]. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஹாலந்து நகருக்குச் சென்று கட்டிடக்கலையும்
மேலும் பல விஷயங்களையும் சிறப்பாகக் கற்றுக் கொண்டு வந்தவரை தனது ஆசையை
நிறைவேற்றப் பயன்படுத்திக் கொண்டார் லக்பத்ஜி!
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே.... பாடு ஷாந்தா பாடு!
ஆய்னா மஹால் - இசைக்கென்றே ஒரு அறை....
கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டிவிடு....
அலங்கரிக்கப்பட்ட கத்திகளும் கேடயமும்...
ஆய்னா மஹால் - உள்ளே....
ராஜா லக்பத் பயன்படுத்திய பொருட்கள் - ஒரு அணிவகுப்பு...
ஆய்னா மஹால் - உள்ளே...
இரண்டு மாடிகள் கொண்ட இந்த ஆய்னா
மஹாலிலும் தர்பார் ஹால், கண்ணாடி மாளிகை, ராஜா-ராணிகளுக்கான அறைகள் என பலவும்
உண்டு. இந்த கண்ணாடி மாளிகையின் சுவர்கள் வெள்ளை மார்பிள் கற்களால் ஆனது – அதன்
மேல் கண்ணாடிகள் பதித்ததோடு, தங்கம்-வெள்ளி தகடுகள் பதித்து மிகவும் அழகாக உருவாக்கி
இருக்கிறார் ராம்சிங். மாளிகையின் உள்ளே நிறைய ஓவியங்கள், ராஜா பயன்படுத்திய
ஆயுதங்கள், இசைக்கருவிகள் என நிறைய விஷயங்கள் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த பாஜிராவ் மஸ்தானி என்ற ஹிந்தி படத்தில் வரும் “மஸ்தானி”யின்
ஓவியம் கூட இங்கே உண்டு! வெள்ளியில் செய்யப்பட்ட பல பொருட்கள் இங்கே காட்சியாக
வைத்திருக்கிறார்கள்.
தண்ணீர் வைத்துக்கொள்ள குடுவைகள்...
எந்தத் தண்ணீன்னு கேட்கக் கூடாது!
ஆய்னா மஹால் - உள்ளே...
மஸ்தானி - ஓவியமாக....
ஆய்னா மஹால் - உள்ளே...
ராஜா லக்பத் ஓவியமாக...
ஆய்னா மஹால் - உள்ளே...
இங்கே இருக்கும் ஓவியங்களில் சில
Reverse Glass Painting என்ற வகையைச் சேர்ந்தவை என்ற தகவல் பலகை பார்த்தோம்.
அப்படி வரையப்பட்ட சில ஓவியங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்தோம். ராஜா
லக்பத் ரொம்பவே குஜாலான வாழ்க்கை தான் வாழ்ந்திருக்க வேண்டும். ஆய்னா மஹல் அருகே
இருக்கும் அவரது படுக்கை அறைக்குப் பெயர் ஹீரா மஹல் – ஹிந்தியில் ஹீரா என்றால்
வைரம்! 4.6 X 7.3 மீட்டர் அளவு கொண்ட இந்த படுக்கையறையின் நடுவே ராஜாவின்
பிரம்மாண்டமான அலங்கரிக்கப்பட்ட படுக்கை இருந்ததாம். ஒரு படுக்கையை ஒரு
வருடத்திற்கு மேல் பயன்படுத்த மாட்டாராம். ஒரு வருடம் முடிந்தவுடன் ராஜாவின்
படுக்கை ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கும் பொருளையும் தன்னுடைய ஆடம்பர
வாழ்க்கைக்குப் பயன்படுத்துவாராம் ராஜா லக்பத்! படுக்கை என்றால் சாதாரண படுக்கை
அல்ல! அதன் நான்கு கால்களும் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டவை.
இன்னுமொரு ராணியின் ஓவியம்...
ஆய்னா மஹால் - உள்ளே...
மார்பிளில் சூர்யதேவன்....
ஆய்னா மஹால் - உள்ளே...
கண்ணாடிகள் பதித்த அறையில்...
ஆய்னா மஹால் - உள்ளே...
ராஜா லக்பத் பயன்படுத்திய பொருட்கள் - ஒரு அணிவகுப்பு...
ஆய்னா மஹால் - உள்ளே...
இப்படி ஏலம் விட்ட படுக்கைகள்
நிறையவே. கடைசியாக இருந்த படுக்கையைத் தான் இங்கே கண்காட்சிக்கு
வைத்திருக்கிறார்கள். இந்த அறையில் இருக்கும் மற்ற பொருட்களும் பிரமிக்க வைப்பவை. முகலாயப்
பேரரசர் இரண்டாம் ஆலம்கீர் கொடுத்த, வைரங்கள் பதிக்கப்பட்ட கத்தி மற்றும் கேடயம்
இங்கே தான் வைக்கப்பட்டிருக்கிறது. அறை முழுவதும் 27 முழு அளவு முகம் பார்க்கும்
கண்ணாடிகள் பதிக்கப்பட்டு, விளக்குகள், பூஜாடிகள் மற்றும் விலைமதிக்கமுடியாத
கற்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் அளவிற்கு வைத்திருக்கிறார் ராஜா! இப்போது
இருக்கும் கற்கள் போலியாக இருக்கலாம்! வருபவர்கள் சுரண்டி எடுத்தாலும்
எடுத்துவிடுவார்கள்! நிறைய விஷயங்கள் பார்த்து பிரமித்தபடியே தான் நடக்க
வேண்டியிருந்தது.
ராஜா லக்பத் தர்பார் - ஓவியமாக...
ஆய்னா மஹால் - உள்ளே...
நான் டில்லிக்குப் போறேன் டில்லிக்குப் போறேன்... நானும் ரவுடி தான்..
தில்லிக்குப் பயணிக்கும் ராஜா - ஓவியமாக....
ஆய்னா மஹால் - உள்ளே...
ராஜா லக்பத் இசையை ரசிக்க ஏற்படுத்திய அறை...
ஆய்னா மஹால் - உள்ளே...
ராஜா லக்பத் பயன்படுத்திய பொருட்கள் - ஒரு அணிவகுப்பு...
ஆய்னா மஹால் - உள்ளே...
இசைக்கருவிகள் வைக்கப்பட்ட அறையும்
கொஞ்சம் ஸ்பெஷல் தான். பக்கங்களில், வாசனை திரவியங்கள் நிறப்பப்பட்ட நீரூற்றுகள்
இருக்க, ராஜா பஞ்சு மெத்தையில் அமர்ந்திருக்க, சுற்றிலும் அப்ஸரஸ் பெண்மணிகள்
சாமரம் வீச, இனிமையான இசை முழங்க – கேட்கும்போது ராஜா எவ்வளவு சுகவாசியாக
இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த உணர்வு நமக்குள் வந்து கொஞ்சம்
தொந்தரவும் செய்கிறதல்லவா! என்னுடன் வந்த நண்பர் – கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராய்
“ராஜாவுக்கு மச்சம் யா! என்னமா அனுபவிச்சு இருக்கான் பாரு!” என்று சத்தமாகவே
சொல்லிவிட்டார்! பக்கத்தில் இருந்த ஒரு சக சுற்றுலாப் பயணியிடமிருந்து சிரிப்பொலி
– அவங்களுக்கும் அதே எண்ணம் தான் போலும்.
தேநீர் கடை - ரொம்ப சுத்தம்!...
ஆய்னா மஹால் - வெளியே...
அர்தி சாய் இப்படித்தான் குடிக்கோணும்!
ஆய்னா மஹால் - வெளியே...
ராஜா லக்பத் அவர்களின் மாளிகையைச்
சுற்றிப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி வெளியே வந்து தேநீர் அருந்தலாம் என
ஒரு கடையில் – அரண்மனை வளாகத்திற்கு வெளியே இருந்த ஒரு கடையில் நின்றோம். சென்ற
குஜராத் பயணத்தில் ருசித்தது போலவே ”அர்தி சாய்!”, கப்பில் [ஒரு கப் சாய் ஆறு ரூபாய்] கொடுக்க, அதை சாசரில்
விட்டு குடித்துப் பார்த்தோம் – குஜராத் மக்கள் குடிப்பது போலவே! அதுவும்
ருசியாகவே இருந்தது. ஆனால் தேநீர் தயாரிக்கும் இடத்தினைப் பார்த்தால் தான் கொஞ்சம்
அருவருப்பு – அவ்வளவு சுத்தம்! தேநீர் அருந்திய பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.
எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
வாழ்க லக்பத்ஜி. வாழ்க ராம்சிங் மாலம்! நிஜமாகவே ரசனையுடன் இருந்திருக்கிறார். மச்சம்தான்! நமக்கும் சுவாரஸ்யமாய்ப் பார்க்க சில இடங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறாரே...!
பதிலளிநீக்குஇது போன்ற மாளிகைகள் ஏற்படுத்தி வைத்திருப்பது நல்லது தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
செம சுவாரஸ்யங்கள்.....ராஜாக்கு மச்சம் தான்...கண்ணாடி அறை, படுக்கை, வாள் கத்தி, இசைக்கருவிகள்...அந்த அறை.... எல்லாமே அழகு..சொகுசு வாழ்க்கை...சூரிய தேவன் அந்த மார்பிள் அழகா இருக்கு ஜி.
பதிலளிநீக்குபீரங்கி கூட இருந்திருக்கு போல.....
ஜி.தில்லிக்கு வரவங்க ரவுடியா. .ஹாஜாஹாஹா...இதை வாசித்ததும் சிரித்து விட்டேன்....
இந்தக் கண்ணாடிகள் பூகம்பத்தில் உடையல.. போல...ஆச்சரியம்...
கீதா
தில்லிக்கு வரவங்க ரவுடியா? :)) சும்மா வடிவேலு ஒரு படத்தில் சொல்வது “நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடி தான்” என்று அவராகவே போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு போவாரே அது நினைவுக்கு வந்ததால் இப்படி எழுதினேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
படங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபழக்கால பொருட்களை பார்ப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு ஜி
பதிலளிநீக்குஉங்களுக்கும் ஆர்வம் உண்டா கில்லர்ஜி. மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜெயப்பூர் கோட்டையிலும் ஒரு கண்ணாடி அறி இருக்கிறது சேஷ் மஹல் என்றுபெயர் உங்களுக்குத் தெரியாததா நான் வரையும் கண்ணாடி ஓவியங்களும் ரிவெர்ஸ் க்ளாஸ்பெயிண்டிங் தான்
பதிலளிநீக்குகண்ணாடிக்கு ஹிந்தியில் சீஷா என்று பெயர். அதனால் சீஷ் மஹல்....
நீக்குஇப்படி சில அரண்மனைகளில் பார்த்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
எனக்கென்னவோ இந்த ராணிகள் அழகிகள்போல் தெரியவில்லை.
பதிலளிநீக்குஅரச மாளிகை நல்லாத்தான் இருக்கு. நான் லண்டனில் வைர நகைகள் (அரச குடும்பத்தையது) பார்த்திருக்கிறேன். கண்ணைப் பறிக்கும் வைரங்கள். ம்ம் (பெருமூச்சு)
ராணிகள் அழகிகள் போல தெரியவில்லை! இருக்கலாம். ஒவ்வொருவர் பார்வையும் வேறல்லவா... என்னைப் பொறுத்தவரை இறைவனின் படைப்பில் எல்லாமே அழகு தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
ஆய்னா மஹால் குறித்த தகவல்கள் அற்புதம்! ஓவியங்கள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன! சிறப்பான தொடர்! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஐபேட் மூலமா போட்ட பின்னூட்டம் எங்கே? ஸ்பாமுக்குப் போயிட்டதா?
பதிலளிநீக்குநேற்று புகைப்படப் புதிர் வெளியிட்டதால், பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டு இருக்கின்றன. இப்போது தான் வெளியிட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நேரில் பார்த்த உணர்வை தருகிறது படங்களும், வர்ணனைகளும்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குமிக அருமையான செழிப்பான படங்கள். என்ன லக்சரி. ஹ்ம்ம்.
பதிலளிநீக்குஇதற்குக் கொடுத்து வைத்த ராஜாவின் டில்லி சவாரி ஆஹா.
திருஷ்டிப் பரிகாரம் அந்த டீக்கடை. மிக நன்றி வெங்கட்.
டீக்கடை திருஷ்டிப் பரிகாரம்! :) இதுவும் ஒரு விதத்தில் இருந்தால் தானே நல்லது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான இடங்கள்.அதை அற்புதமாக விளக்கியிருக்கிறீ்ர்கள். உங்கள் பதிவை படிக்கும் போது உங்களுடனேயே மஹால் முழுவதும் சுற்றிய உணர்வு கிடைக்கிறது.
ராஜா வைரங்கள் தங்கங்கள் எனவசதி நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். கொடுத்து வைத்தவர்தான்.
போட்டோக்கள், ஓவியங்கள் இசைக்கருவிகள் மார்பிள் சிலைகள் ராஜா பயன்படுத்திய பொருள்கள் என அனைத்தும் அருமை.
ஒவ்வொன்றிருக்கும் தாங்கள் கொடுத்திருக்கும் வர்ணனைகள் சுவாரஸ்யம்.
/இசையென்ற இன்ப வெள்ளத்திலே/ அந்த வர்ணனை சிரிக்க வைத்தது. அங்கு ஓரத்தில் இருவர் நின்று கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கும் அந்த வசனம் பொருந்தும்.
அருமை!பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொடுத்து வைத்தவர்கள் தான் அந்தக் கால ராஜாக்களும் இந்தக் கால அரசியல்வாதிகளும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
வாவ்! செல்வமும் கலைநயமும் .. ராஜ வாழ்க்கை தான்! மற்றப் பதிவுகளையும் ஒவ்வொன்றாகப் படிக்கவேண்டும். நன்றி அண்ணா
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
ஆய்னா மஹால் பார்த்திருக்கோம். லக்பத் ராஜாவைக் குறித்த கர்ணபரம்பரைக் கதைகள் பிரபலம். அது சரி, புஜ் சிறப்பு உணவான டபேலி சாப்பிட்டீங்களா? கராச்சி ஸ்வீட்? அப்புறமா வெள்ளியினால் ஆன பொருட்கள் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குடபேலி எனக்குப் பிடிக்கவில்லை. கராச்சி ஸ்வீட் சாப்பிடவில்லை. தில்லியிலேயே கிடைக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
20 வருஷங்களுக்கு முன்னால் பார்த்தது என்றாலும் நினைவு கொஞ்சம் கொஞ்சம் இருக்கு! துணி வகைகளும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதுணிக்கடைக்கு போகவில்லை. இருந்தது கொஞ்சம் நேரம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
Prag Mahal & Aina Mahal மிகச் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.
நீக்கு