இரு மாநில பயணம் –
பகுதி – 13
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சென்ற பதிவில் இரவு உணவு உண்டது
பற்றிச் சொன்னபோது விடுபட்ட ஒரு விஷயம் அங்கே கிடைத்த இனிப்பு ஊறுகாய். அந்த
இனிப்பு ஊறுகாயின் பெயர் Bபிஜோரா! Bபிஜோரா என்பது நம் ஊரில் கிடைக்கும்
நார்த்தங்காய் தான்! ஆனால் அதில் வெல்லம் சேர்த்து ஊறுகாய் செய்கிறார்கள். நன்றாகவே இருந்தது. ரோட்லி என அழைக்கப்படும்
ரொட்டியுடன் இந்த Bபிஜோரா சேர்த்து சாப்பிடப் பிடித்திருந்தது. இங்கே Bபிஜோரா
கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும். எப்போதாவது தான் கிடைக்கிறது! பார்க்கலாம்.
அப்படிச் செய்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.
உணவுக்குப் பிறகு கிராமிய இசையை ரசித்த பிறகு, மண்மேடையில் மெத்தை விரித்த
படுக்கையில் சுகமானதோர் உறக்கம். காலையில் ஆறு மணிக்கு மேல் கதவு லேசாகத்
தட்டப்படும் ஓசையில் தான் விழித்தேன். தேநீர் தயாராக இருக்கிறது என்பதை அறிவிக்க
வந்திருந்த ஊழியருக்கு நன்றி சொல்லி, சுவையான தேநீர்! காலை நேரத்தில் இப்படி
தேநீர் கிடைத்தால் என்னவொரு சுகம். சர்க்கரை போடாத தேநீர் வேண்டுமென்றால்
முதலிலேயே சொல்ல வேண்டும். அப்படி சர்க்கரை போடாத தேநீருக்குப் பெயர் மோரிஸ்!
சூரியோதயக் காட்சிகள்....
வெளியே வந்து பார்த்தால் அழகிய
சூரியோதயக் காட்சி கண்களில் பட, நானும் நண்பர்களும் வெளியே வந்து சில
புகைப்படங்கள் எடுத்தோம். ஒவ்வொருவராகத் தயாராக வேண்டும் என்பது நினைவுக்கு வர
புகைப்படம் எடுக்காதவர்கள் குளிக்கச் சென்றார்கள். நாங்கள் மேலும் சில படங்கள்
எடுத்துக் கொண்டு எங்கள் Bபூங்காவிற்குத் திரும்பினோம். அப்படியே அந்த
தங்குமிடத்தினையும் ஒரு காணொளியாகவும் எடுத்துக் கொண்டோம். அந்த காணொளி கீழே.
நாங்கள் தயார் ஆவதற்கும் காலை உணவு தயாராவதற்கும் சரியாக இருந்தது. தங்குமிட
உரிமையாளர் காலை உணவினை சாப்பிடலாம் என அழைக்க, உணவகத்திற்குச் சென்றோம்.
போஹா உப்புமா....
தங்குமிடத்திற்கு வந்த சிறுமிகள் - கடைவிரிக்கத் தயாராக........
காதணிகள், மோதிரங்கள் - விற்பனைக்கு....
கழுத்தணிகள் - விற்பனைக்கு....
சீப்பிற்கும் அலங்காரம்....
போஹா எனப்படும் அவலில் செய்த
உப்புமா, Bread-Butter, வாழைப்பழம் என Simple Break-fast. ஆனால் வயிறு நிறைந்தது –
அவர்களின் பாசத்தாலும். உணவு உண்ட பிறகு
சற்றே அமர்ந்திருக்க, தங்குமிட உரிமையாளர் Gகgகன் வீட்டில் இருக்கும் சில
சிறுமிகள் வந்தார்கள் – அவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு அடுக்கி வைக்க,
பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு அந்த இடத்திற்குச் சென்று சில புகைப்படங்கள்
எடுத்துக் கொண்டோம். கவிதா, கோரா, ஷாந்தா, மோனிஷா ஆகிய நான்கு சிறுமிகள் – எல்லோருமே
அழகு! அவர்கள் உடையும், அணிந்து கொண்டிருந்த நகைகளும், உடைகளில் இருந்த
வேலைப்பாடும் அத்தனை அழகு. ஏதாவது
வாங்கிக் கொள்ள வேண்டும்! அனைவருமே பள்ளியில் படிக்கவும் செய்கிறார்கள்.
தனது வேலைத் திறனை காண்பிக்கும் சிறுமி....
இது எப்படி இருக்கு?....
Gகுடியாவும் Gகுடியாவும்!....
ஹிந்தியில் Gகுடியா என்றால் பொம்மை....
காலையில் இப்படி தங்குமிடத்தில்
கடை போட்டு விற்பனை – பிறகு பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும். யார் பொருட்களை
விற்றாலும், அவர்களுக்கு அந்த காசு! [அப்புறமா அப்பாவோ, அம்மாவோ வாங்கிக்
கொள்வார்களாக இருக்கும்!] ஒருவரிடம் வாங்கி, மற்றவரிடம் வாங்காமல் இருக்க வேண்டாம்
என அனைவரிடமும் ஏதாவது வாங்கிக் கொண்டேன் – மகளுக்கான காதணிகள், வளையல், மோதிரம், புடவைக்கான பின், என ஏதோ ஒன்று ஒவ்வொருவரிடமிருந்தும். காசு கொஞ்சம் அதிகம் என்று தோன்றினாலும்
வாங்கியதற்கு ஒரு காரணம் – ஒன்றுமே வாங்கிக் கொள்ளாமல் காசு கொடுத்தால் நன்றாக
இருக்காது என நினைத்ததும் தான்.
மொபைல் வைத்துக்கொள்ள ஒரு பை....
கண்களில் தெரியும் குறும்பு....
வெறும் ஃபோட்டோ மட்டும்தான் எடுப்பீங்களா?.... என்று பார்க்கிறாரோ?
நால்வர் அணி....
மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன்....
இந்தச் சிறுமிகளின் படங்கள்
ஏற்கனவே என் பதிவொன்றில் வெளியிட்டு இருக்கிறேன். வலைப்பூவின் முகப்பிலும் நான்கு
சிறுமிகளின் புகைப்படங்கள் அலங்கரித்தது நினைவிருக்கலாம். அதிலும் அந்த சிறுமிகள்
புன்னகையும், எங்களிடம் பேசிய கபடமில்லா பேச்சும் இன்றைக்கும் நினைவில்
இருக்கிறது. “மாமாஜி, என் கிட்டயும் நான் செஞ்ச தோடு, வளையல், மோதிரம் எல்லாம்
இருக்கு, வாங்கிட்டு போய் உங்க மகளுக்குக் கொடுங்களேன்” என்று சொன்ன சிறுமிகள் –
அவர்கள் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும் இவர்களிடம் என் மகளுக்கு வாங்கி
இருப்பேன் – மகளுக்கு ஒரு தோடு என்றால், இந்தச் சிறுமிகளுக்கு உழைப்பிற்கான பரிசு.
இந்த போஸ் எப்படி இருக்கு?
என் பேரு குஷால்! நான் போட்டுருக்க தோடு உங்களுக்கு பிடிச்சுருக்கா?
உரிமையாளர் Gகgகன் அவர்களின் மகன்.....
இதுல நீ எவ்வளவு அழகா இருக்கே பாரு!....
நான் எடுத்த புகைப்படத்தினைக் காண்பித்த போது....
எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு
புறப்பட நினைத்தபோது, உரிமையாளர் Gகgகன் அவர்களின் மூத்தவர் ”எங்கள் வீட்டுக்கு
வந்து அங்கேயும் பார்த்துச் செல்லலாமே?” என அழைக்க, வாகனத்திலேயே அங்கே சென்றோம்!
அங்கே பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில்
சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
முதல் படமே ஈர்த்துவிட்டது....
பதிலளிநீக்குகாதணிகள், அனைத்தும் அவ்வளவு அழகு
அந்தக் குட்டிப்பாப்பா புகைப்படம் முன்பு பார்த்த நினைவு
படங்கள் அனைத்தும் அழகு...இதோ பதிவை வாசிக்கிறேன்...
கீதா
படங்கள் குட்டி சுட்டீஸ் பதிவுகளில் வந்திருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மோரிஸ் தெரிந்து கொண்டோம்...
பதிலளிநீக்குஆமாம் ஜி குட்டிப்பாப்பாக்களை பார்த்த நினைவு நன்றாகவே இருக்கு தளத்தின் முகப்பாகவும் இருந்தனரே!!!! அத்தனை கைவேலைப்பாடுகளும் செமையா இருக்கு...குஜராத், ராஜஸ்தான் வேலைப்பாடுகள் எப்பவுமே ரொம்ப அழகா இருக்கும்....நல்ல அனுபவம்...ஜி!!
கீதா
உண்மை தான். அவர்களது வேலைப்பாடுகள் பிரமாதமாக இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
பிஜோரா ஊறுகாய் .....ஓ!! நார்த்தங்காயா...கிட்டத்தட்ட நம்மூரில் வெல்லம் போட்டு செய்வது போல இருக்கும் போலத் தெரியுது...ரெசிப்பி பார்க்கணும்....சூப்பரா இருக்கு
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நார்த்தங்காய் தான்! :) ரெசிப்பி இணையத்தில் உண்டு. செய்து பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அருமை
பதிலளிநீக்குஅருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅருமை வெங்கட்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குகுழந்தைகள் அழகு அதுவும் பெண்குழந்தைகள் இன்னுமழகு மலர்ந்தும்மலராத என்பதுபோல்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஆகா...
பதிலளிநீக்குஅந்தக் குழந்தைகளின் கள்ளங்கபடமில்லாத முகமும் சிரிப்பும்...
மனதைக் கொள்ளை கொள்கின்றன...
அழகான படங்களைத் தந்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குசிறுமிகள் அழகாக இருக்கின்றனர்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபடங்கள எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபொருட்களை விற்று அதன் பின்
படிப்பு என்று இருக்கும் குழந்தைகளிடம் பொருட்கள் வாங்கியது மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குசிறு குழந்தை படங்கள் முன்னமேயே பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇனிப்பு ஊறுகாய் சுவை.
தங்குமிடத்துக்கு எவ்வளவு ஆனது என்பதை பிறகு எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன். சைவம்/அசைவம் கலந்ததா?
சைவம் மட்டுமே... அசைவம் இங்கே இல்லை. தங்குமிடத்திற்கு நாள் வாடகை தான் - அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
எல்லாமே வண்ண மயம். குழந்தைகளின் குதூகலம் தொற்றிக் கொள்கிறது. வளையல்கள் பிரமாதம். இது ஒரு தனி உலகம். நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குஆ.... இது நான் பார்க்காத பதிவு போல... என் கமெண்ட்டையே காணோம்! ஆனால் படித்துப் பார்த்தால் ஏற்கெனவே படித்த நினைவு இருக்கிறது... எப்படி கமெண்ட் போடாமல் போனேன்?
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் வந்த சில படங்கள் நீங்கள் பார்த்திருக்கலாம். இதற்கு வந்த உங்கள் கருத்து இது மட்டுமே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.