சின்னச் சின்னதாய்….
இந்த வாரம் கடைத்தெருவுக்குச் சென்ற
போது இந்த குட்டிப் பானைகளை வாங்கினேன். ஒன்று பத்து ரூபாய் வீதம் ஐந்து பானைகள்.
நான் ஒரு செய்முறையை மனதில் வைத்து
அதற்கேற்றாற்ப் போல் "கொஞ்சம் வாய் அகலமா இருக்கற மாதிரி இல்லையா??" என்று
கேட்டதும், இந்த முறை இதை எடுத்துட்டு போம்மா!! அப்புறம் வரைஞ்சு குடும்மா!! அதே மாதிரி
அடுத்த முறை செய்து தரேன் என்று சொன்னார்.
இதை எந்தெந்த விதத்தில் பயன்படுத்தலாம்
என்று உங்கள் டிப்ஸ்களை அள்ளி விடுங்களேன். நான் மனதில் நினைத்த செய்முறையை அப்புறம்
சொல்றேன்.
ஜிலுஜிலு மோர்!
வெயில் ஜோரா இருக்கு. நீர்மோர் இஞ்சி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயம் சேர்த்து பெருக்கி வெச்சிருக்கேன். எடுத்துக்கோங்க
ப்ரெண்ட்ஸ்!!
குட்டிப் பானை அரை தம்ளர் மோர் தான்
பிடிக்குது. அவ்வப்போது பருக, நான் ஒரு அடுக்கில் கரைத்து வெச்சிருக்கேன். வாங்க! வாங்க!!
நேற்றே காலை உணவுக்கு பழைய சாதம் மோர்
விட்டு கரைத்து மாங்காய் ஊறுகாயுடன், செம!! வயிறு குளுகுளு!!
இந்த வார வடாம் கச்சேரி!!
குடியிருப்பில் உள்ள ஒருவரிடம் கேட்டு
தக்காளி அரைத்து சேர்த்திருக்கேன்.. இயற்கையான வண்ணம் மற்றும் ஃப்ளேவருக்காக...:)
பட உதவி :- மகள்!
மகள் வரைந்த ஓவியம்
சற்றே இடைவெளிக்குப் பிறகு மகள்
வரைந்தது…
Aralu sandige - நெல்பொரி
வடாம்!!
இது தான் அரலு சண்டிகே எனும் வடாம். கர்நாடகா ஸ்பெஷல்
என்று இணையத்தில் பார்த்தேன். Amazonல் கூட கிடைக்கிறதாம்.
கார்த்திகைக்கு வாங்கிய பொரி கொஞ்சம்
வீட்டில் இருந்தது. அதை வைத்து என்ன செய்யலாம் என பெரிய மாமியாரிடம் கேட்டேன்.
"வடாம் போடுடி!! நன்னா இருக்கும்” என்றார். ""பாட்டி கங்காளத்துல போட்டு
வெச்சிருப்பா" என்றும் சொன்னார். எப்படி செய்வது என விசாரித்து வந்தேன்.
இணையத்திலும் தேடிப் பார்க்கலாம் என
தேடியதில் மேலதிகத் தகவல்கள் கிடைத்தன. எளிதாகவும் இருந்தது. ஒருவழியாக காயவைத்தும்
எடுத்து விட்டேன். வறுத்து மாலை தேநீருடன் சுவைத்தும் பார்த்தேன். ஜோர்!!!
இன்று ஒரே சிந்தனை!!!
வீட்டில் மூத்தவளாக பிறந்ததால் பொறுப்பும்,
வேலைகளும் தன்னாலே வந்து விட்டது. சூழலும் அப்படி. சிறுவயது முதலே ஆடம்பரத்தை விரும்பியதில்லை.
இப்போதும் கட்டில் இருந்தும் தரையில்
படுப்பது, அழகு சாதனங்களை பயன்படுத்தாதது, (இப்போ வரைக்கும் எதற்காகவும் (திருமணம்
உள்பட) அழகு நிலையத்தின் பக்கம் ஒதுங்கியதேயில்லை..) ஷாப்பிங் செய்வது, வெளியில் சாப்பிடுவது
போன்றவற்றை விரும்பாதது, வாஷிங் மெஷின் இருந்தும் கையில் துவைப்பது என்று இன்றைய சூழலுக்கு
சற்றும் ஒத்துவராதவளாக இருக்கிறேன்...:)
எதையும் மாற்றிக் கொள்ளவும் முடியலை..பெரிதாக
ஆசைகளும் சிறுவயது முதலே கிடையாது. என்னுடன் நட்புக் கொள்ளும் தோழமைகளுக்கும்
"இது வேஸ்ட் கேஸு" என்று தான் தோன்றும் இல்லையா??? இது என்னுடைய ப்ளஸ்ஸா,
மைனஸா???
மகளிர் தினத்தில்…..
பெண்களிடத்தில் முன்னேற்றங்கள் இருக்கும்
அதே நேரத்தில் ,ஆங்காங்கே பெண்களுக்கு தீங்குகளும் இழைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன...:(
எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்று
சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும், தன் குடும்பத்துக்காக அயராது பாடுபட்டு சத்தமில்லாமல்
அன்றாடம் பல சிக்கல்களை கடந்து சாதனை படைக்கும் பெண்களுக்கும், என் மகளிர் தின வாழ்த்துகள்.
சாலையோரத்தில் பஜ்ஜி, வடை, சமோசா போட்டு
விற்கும் பெண்மணி. அடுப்பு சூட்டில் தன் குடும்பத்துக்காக வெந்து உழைக்கும் ஜீவன்.
இவர்களுக்கு இந்த மகளிர் தினம் பற்றியெல்லாம் தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இன்றைய
வியாபாரம் ஒழுங்கா நடக்கணும். நாலு காசு சேர்த்து குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கணும்
என்பது தான். இவர்களைப் போல் அன்றாடம் வீட்டை வேலை செய்தும், வியாபாரம் செய்தும் உழைக்கும்
அனைத்து மகளிரையும் நினைவு கூர்வோம்.
இனி வரும் நாட்கள் இனிதாக அமையட்டும்..
நான் செய்த சூடான காரட் அல்வாவைப் போல்..:) எல்லோரும் எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்
பானை படம் சூப்பர்!! அழகு! என்றால் அதில் ஆஹா ஜிலு ஜிலு மோர்....
பதிலளிநீக்குஆதி உங்களுக்கே தெரியும் குல்ஃப்ட் செய்யலாம் பானையில்.....லஸ்ஸி செய்யலாம்னும் தெரிஞ்சுருக்கும் உங்களுக்குத் தெரியாததா என்ன....
ம்ம் இருந்தாலும் ...கேப்பை கூழ்....அப்படிக், கம்பு கூழ் என்றும் செய்யலாம்...மீந்த சாதம் தண்ணீருடன் பானையில் போட்டு வைத்தால் மறுநாள் நல்லாருக்கும்...வெயில் கூடுதல் என்றால் ஃப்ரிட்ஜில்தான்..பானையுடன் ஹா ஹா ஹா (சாதம் ஓவராக வெந்திருந்தால் உதிர் உதிராக இருந்தால் பிரச்சனை இல்லை வெளியில் வைக்க.அதில் பச்சை மிளகாய் சின்னதாகக் கீறிப்போட்டு உப்பும் போட்டு வைத்துவிட்டால் மறுநாள்..யும்மி..)
அப்புறம் தயிர் உரை போடலாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்..குல்ஃபி என்றில்லை எந்த ஐஸ்க்ரீமும் பானையில் உறைய வைக்கலாம்...
கீதா
குல்ஃப்ட் - குல்ஃபி? வடக்கே இப்படி சிறு பானைகளில் கெட்டி தயிர், லஸ்ஸி போன்றவை கிடைக்கும். ரொம்பவே நன்றாக இருக்கும். விலை சற்றே அதிகமாக இருந்தாலும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
பாருங்க நீங்களே பழைய சாதம் போட்டு வைச்சுருக்கீங்க!! ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குதக்காளி வடாம் ரொம்ப நல்லாருக்கும்...சூப்பர்!! அதே போல கொத்தமல்லி, புதினா, ஓமம் எல்லாம் கூட போட்டுச் செய்யலாம் கூழ் வற்றல் வடாம்.... இலை வடாமில் கூட கொத்தமல்லி, புதினா, தக்காளி அரைத்துவிட்டுக் கலந்து நாம் எப்போதும் செய்வது போல் செய்யலாம்...
கீதா
கொத்தமல்லி, புதினா, ஓமம் - போட்டு வடாம். நல்ல ஐடியா தான். கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் செய்யலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நெல்பொரி வடாம் அந்தப் பெயர் எல்லாம் தெரியவில்லை..ஆனால் என் வீட்டில் இப்படி மீறுவதை அவ்வப்போது போட்டு வைத்துவிடுவேன் சம்மர் என்றில்லை...அது போல அவல் பொரி, அரிசிப் பொரி வடாம், குழம்பு வடாம் செய்வோம் இல்லையா அதிலும் போட்டு....ஆதி சும்மா உங்களுக்குத் தோன்றுவதைச் செய்து பாருங்க...புதுசா நல்ல ஒரு டிஷ் வரும்...சும்மா ஒரு பெயரும் வைச்சுருங்க...ஹா ஹா இப்படி என் மகனை ஏமாற்றியதுண்டு...ஹிஹிஹிஹி...இப்ப பையன் ஏமாற மாட்டான் அவனே ஒரு பெயர் வைச்சுருவான்...அம்மா இது உரு மாறின டிஷ் தானே னு கேட்டு...ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குகீதா
பெயர் வைப்பதில் இருக்குது சூட்சுமம். பாதி வீட்டில் இப்படி ரிசைக்கிள் செய்து புதிய பெயர் வைத்து விடுகிறார்கள்! சோதனை எலிகள் இருக்கவே இருக்கே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஆதி உங்களின் சிந்தனையுடன் ஹைஃபைவ்!!!!!! அப்படியே டிட்டோ செய்கிறேன்...இன்றும் நானும் அப்படியே!! நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும்...டிட்டோ டிட்டோ டிட்டோ... கடைசில ஒரு கேள்வி வைச்சுருக்கீங்கலியா....அதுக்கு என் பதில் கதையாக எழுதி வைச்சுருக்கேன் இன்னும் கேட்டுவாங்கிப் போடும் கதைக்கு அனுப்பலை.....ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு விரைவில் அனுப்புங்கள். படிக்க பலர் இருக்கிறோமே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஆதி சத்தியமாக மைனஸ் இல்லை!!!!! கம்பீரமாக நடங்கள்! நாம் நமக்காக வாழறோம்...
பதிலளிநீக்குமகளிர் தின கருத்துடனும் அப்படியே என் கருத்தும்....
காரட் ஹல்வா மனதை சுண்டி இழுக்கிறது...சூப்பர் ஆதி...கலக்கல்!!! அனைத்துமே!!!
கீதா
காரட் ஹல்வா - நம்ம ஊர் கேரட்டை விட, வடக்கே கிடைக்கும் கேரட்டில் செய்யும் ஹல்வா இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
முகநூலிலேயே பார்த்து விட்டேன் என்றாலும் குட்டிப்பானைகள் அழகாக இருக்கின்றன. கீதா அழகான யோசனைகள் சொல்லியிருக்கிறார்!
பதிலளிநீக்குமுகநூலில் எழுதுவதைத் தான் இங்கே தொகுத்திருக்கிறேன் - ஒரு சேமிப்பாகவும், முகநூலில் இல்லாத நண்பர்கள் படிப்பதற்காகவும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஊரெங்கும் வடாம் திருவிழா! இங்கும் எளிமையாக நடந்தது!
பதிலளிநீக்குஊரெங்கும் வடாம் திருவிழா.... :) உண்மை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். படம் அழகு. மென்மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளை மகளிடம் சொல்லி விடுகிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நெல்பொரி வடாம் கடிக்க சிரமமாக இருந்ததா? காரட் அல்வா சாப்பிடப் பிடிக்காது! ஆனால் படம் அழகாக இருக்கிறது!
பதிலளிநீக்குநெல்பொரி வடாம் கடிக்க சிரமமாக இருந்ததா? பதில் அவங்க வந்து தான் சொல்லணும். நான் இன்னும் சாப்பிடலை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கதம்பம் அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவடாம் இடும் படம் நன்றாக வந்துள்ளது. சிறிய பானைகள் ரசிக்கும்படி இருந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஆதி, ரோஷ்ணி படம் எல்லாம் முகநூலில் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குஅருமையான மண் பானை நீர் மோர். நெல்பொரி வடகம் அருமை.
ரோஷ்ணி எடுத்த படமும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஇப்பதான் புளி உடைச்சு சுத்தம் பண்ணி வச்சாச்சு, இனி வத்தல் வடகம்ன்னு இறங்கனும்.
பதிலளிநீக்குவீட்டுப் புளியா.... நெய்வேலியில் இருந்த வரை வீட்டிலேயே புளிய மரம் இருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
மொத்த கேரட் அல்வாவும் எனக்கே எனக்குதான்
பதிலளிநீக்குமொத்தமும் சாப்பிட்டால் திகட்டும்!.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அருமையான தொகுப்பு. சிறப்பு. படித்தேன் ரசித்தேன். நீங்கள் நீங்களாக இருங்கள். அதுதான் சிறப்பு. ஒவ்வொன்றுக்கும் புகைப்படம் வழங்கியது சிறப்பு. தொடருங்கள். தொடர்வோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.
நீக்கு/இப்போதும் கட்டில் இருந்தும் தரையில் படுப்பது, அழகு சாதனங்களை பயன்படுத்தாதது, (இப்போ வரைக்கும் எதற்காகவும் (திருமணம் உள்பட) அழகு நிலையத்தின் பக்கம் ஒதுங்கியதேயில்லை..) ஷாப்பிங் செய்வது, வெளியில் சாப்பிடுவது போன்றவற்றை விரும்பாதது, வாஷிங் மெஷின் இருந்தும் கையில் துவைப்பது என்று இன்றைய சூழலுக்கு சற்றும் ஒத்துவராதவளாக இருக்கிறேன்...:)/ வெங்கட் என்ன நினைக்கிறார் கொடுத்து வைத்தவர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஅனைத்தும் அருமை... முகநூலில் சிலவற்றை கண்டேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
பதிலளிநீக்கு