அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கமலா பெரியம்மா பதிவையும் இன்று காலை வெளியிட்ட குறும்படப் பகிர்வினையும் படித்து/பார்த்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்தப் பதிவை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நேரம் போய்க் கொண்டே தான் இருக்கும்.. எனவே நீ செய்ய வேண்டியதை செய்.. அதுவும் இப்போதே செய்.. காத்திருக்காதே..!
******
ஒரே நாளில் இரண்டு குறும்படமா? இது உங்களுக்கே அதிகமாத் தெரியலையா என்று நீங்கள் யோசிக்கலாம். அடுத்த வாரம் வெளியிடலாம் என்று தான் நினைத்தேன் - ஆனால் இன்றைய (சில இடங்களில் நேற்றைய) ஈகைப் பெருநாளுக்கு உகந்த காணொளி என்பதால், வேறு வழியின்றி இன்றே, இரண்டாவது குறும்படமாக/பதிவாக இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தீநுண்மிக்கான தடுப்பூசி குறித்தும் இந்தக் காணொளி சொல்கிறது. ஹிந்தியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு என்பதால் அனைவருக்கும் பார்ப்பதில்/புரிந்து கொள்வதில் பிரச்சனை இல்லை. பாருங்களேன்.
முகநூல் இத்தனை பயனுள்ளதா என்ற கேள்வியும் எழலாம். பயனுள்ளதா, பயனில்லாததா என்ற விவாதத்தை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, இப்போதைக்கு இந்த காணொளியை ரசிக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கே பகிர்ந்து கொண்டேன்.
ஈகைப் பெருநாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
காலம் யாருக்காகவும் காத்திருக்காதுதான்
பதிலளிநீக்குஅருமை
நன்றி ஐயா
குறும்படம் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காணொளி அருமை... பின்னணியில் வரும் பாடல், மொழி புரியாவிட்டாலும் உற்சாகம் தருகிறது...
பதிலளிநீக்குஒரே நாளில் இரண்டு குறும்படம் போடலாம்... தவறில்லை ஜி...!
பின்னணியில் வரும் பாடல் மொழி ஹிந்தி தான் தனபாலன். உங்களுக்கும் காணொளி பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஒரே நாளில் இரண்டு காணொளி - :) போடலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல வாசகம்.
பதிலளிநீக்குஅருமையான காணொளி. கண்ணீரை வரவழைத்து விட்டது.
ஈகைப் பெருநாளுக்கு உகந்த காணொளி தான்.
வாசகமும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கண்கலங்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அற்புதமான காணொளி...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான காணொளி.
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழுதுட்டேன். அருமையான காணொளி. இயல்பான யதார்த்தமான நடிப்பு. உரையாடல். இந்த ஈத் திருநாளுக்கு ஏற்றதொரு பதிவு. மனதைத் தொட்டது. முகநூலுக்கு ஓர் விளம்பரம் என்றாலும் அதன் மூலமும் நல்லவை நடக்கும்/நடக்கிறது/நடந்தது என்பதைச் சொல்லும் குறும்படம். பின்னணி இசை மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. உண்மையில் இப்படி நடக்கிறதோ இல்லையோ, விளம்பரப் படத்திலாவது இப்படிப் பார்க்க முடிகிறதே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.