செவ்வாய், 11 மே, 2021

கதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - மண்டலா - ரஸ்மலாய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IF YOU MANAGE TO SMILE AT ANY SITUATION YOU ARE THE WINNER OF HIGHEST NUMBER OF HEARTS IN THIS WORLD.  FACE EVERYTHING WITH A SMILE. 


******



ஆதியின் அடுக்களை - காக்டெயில் - 25 ஏப்ரல் 2021: 





கேரட், தக்காளி, எலுமிச்சை சேர்த்த காக்டெயில் இன்று!! இப்படி ஒரு காக்டெயில் உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்துப் பார்க்கலாமே!


******


தீநுண்மி - 25 ஏப்ரல் 2021: 


நாம் சிறுவயதில் அனுபவித்த, சுற்றித் திரிந்த பள்ளி நாட்களை எப்போது நினைத்தாலும் பசுமையாய் தோன்றும். ஆசிரியர் பாடம் நடத்தத் துவங்கியதும் கண்முன் காட்சிகள் தோன்றி நம்மை அந்த சூழலுக்கே கொண்டு சென்று விடும்.🙂


கொரோனா என்னும் கிருமியைப் பற்றி யாரும் யோசித்தே பார்த்ததில்லை. அது எல்லோரையும் முடக்கிப் போட்டு விட்டது!  


நம் வீட்டு பிள்ளைகள் சென்ற வருடம் முழுவதும் பள்ளிக்கே செல்ல முடியாமல் ஆன்லைன் வகுப்பிலேயே அடுத்த வகுப்புக்கும் சென்று விட்டார்கள்.🙁 இந்த வருடமாவது பள்ளிக்குச் செல்ல வேண்டும்! பள்ளி என்பது எப்படி இருக்கும்! என்று யோசிக்கும் படி ஆகி விடக்கூடாது!


அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்வோம். கொரோனா அரக்கனை உலகத்தை விட்டு விரட்டுவோம். தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தவற வேண்டாம்.


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 26 ஏப்ரல் 2021: 





வெப்பமும், புழுக்கமும் தாங்க முடியாமல் போகும் போது என் மாமியார் மழை வர வேண்டி வீட்டிலிருக்கும் சிறிய நந்தி விக்கிரகத்திற்கு அபிஷேகம் பண்ணி  பிரார்த்தனை செய்து கொள்வார். அதே போல் தான் மகளிடம் இந்த கணேஷாவையும் வரையச் சொன்னேன். அவரவரின் நம்பிக்கை! நல்லதே நடக்கும்!


மழையே மழையே வா வா!

மண்ணை நனைக்க வா வா!


******


ரோஷ்ணி கார்னர் - மண்டலா ஆர்ட் - 30 ஏப்ரல் 2021: 





மகள் வரைந்த Stress buster Mandala ஆர்ட் ஒன்று உங்கள் பார்வைக்கு!


******


யூட்யூப் சேனலில் இந்த வாரம் - ரஸ்மலாய் - 1 மே 2021: 





டெல்லியில் தான் நான் முதன்முதலில் ரசமலாய் சுவைத்தேன். அங்கு திசைக்கொரு ஸ்வீட் ஸ்டால் இருக்கும். பெரும்பாலான இனிப்புகள் பாலில் செய்யப்பட்டவை தான்.  எங்கு பார்த்தாலும் அகர்வால் பெயரில் ஸ்வீட் ஸ்டால்கள் இருக்கும். அதில் நாங்கள் இருந்த 'கிழக்கு தில்லியில்' எங்கள் வீட்டின் எதிர்சாலையில் ஒரு அகர்வால் ஸ்வீட் ஸ்டால் இருக்கும்.


டெல்லி சென்ற புதிதில் என்னவர் ஒருநாள் மாலைநேரத்தில் சில்லென்று குட்டி குட்டியாக கிண்ணங்களில் சீல் செய்யப்பட்ட ரசமலாயும், சுடச்சுட சமோசாவும் வாங்கி வந்தார். அப்போது மூன்று ரூபாய் தான் சமோசா. அதில்  உருளை, பட்டாணி, பனீர், முந்திரி, திராட்சை, பாதாம் என எல்லாம் இருக்கும் 🙂 ஒரு கப் ரசமலாயும், ஒரு சமோசாவும் சாப்பிட்டதில் வயிறு திம்மென்றாகி விட்டது. டின்னரே வேண்டாம் என்பது போலாகி விட்டது 🙂


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் ரசமலாய் செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் 🙂 பாருங்களேன்.


ரஸ்மலாய்


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. இப்போதெல்லாம் அடிக்கடி பேஸ்புக் பக்கம் வருவத்தில்லை என்பதால் சிலவற்றை அங்கே பார்க்க விட்டிருக்கிறேன் என்று தெரிகிறது.  விதம் விதமாய் காக்டெயில் முயற்சிக்கிறீர்கள்.

    தீநுண்மி கால பள்ளி அனுபவங்களே வித்தியாசமானவை.  பாவம் குழந்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபேஸ்புக் - நான் பெரும்பாலும் வருவதில்லை - காலையில் ஒரு முறை பதிவின் சுட்டி கொடுப்பதோடு சரி. பிறகு முடிந்தால் ஒரு பார்வை - அவ்வளவு தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரோஷ்ணி ஓவியம் மிக அருமை.  தும்பிக்கையில் இருப்பது சிலுவை போலவும் தெரிகிறது!!!!  எங்கள் வீட்டில் பாஸ் பிள்ளையாரைத் தூக்கி தண்ணீரில் போட்டு ஒரு பிரார்த்தனை செய்வார்.  அது நிறைவேறும் வரை பிள்ளையார் தண்ணீரில்தான் இருப்பார்!!  மண்டலா ஆர்ட்டும் அருமை.

    ரசமலாய் பார்க்கவே அருமையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியமும் மண்டலா ஆர்ட்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பாஸின் பிரார்த்தனை - :) நம்பிக்கை தானே எல்லாம்.

      ரஸ்மலாய் - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. Stress buster Mandala Art அற்புதம்... அன்பு மகளுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த மண்டலா ஆர்ட் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. மகளை வாழ்த்தியதற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள் ஓவியம் அருமை.

    தீநுண்மி விரைவில் ஒழியும் இறையருளால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தீநுண்மி - விரைவில் ஒழிய வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும் பிரார்த்தனையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மண்டலா ஆர்ட் சூப்பர் ரோஷினி! வாழ்த்துகள் பாராட்டுகள்!

    பிள்ளையாரும் அழகாக இருக்கிறார்.

    காக்டெயில் யும்மி! அசத்துங்க ஆதி!

    ரசமலாய் ஆஹா போட வைக்கிறது. யுட்யூப் பார்க்கிறேன்..

    தீநுண்மி என்ன சொல்ல? விரைவில் எல்லாம் சரியாகணும்..

    அனைத்தும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தீநுண்மி - விரைவில் சரியாக வேண்டும் என்பதே நம் அனைவருடைய ஆசையும் பிரார்த்தனையும். நல்லதே நடக்கும். நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஓவியம் அழகு...
    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆதியின் முகநூலில் பார்த்தேன் இந்த பகிர்வுகளை.
    கதம்பம் மிக அருமை.
    ஆதி, ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

    தீநுண்மி விரைவில் சரியாகவேண்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தீநுண்மி - விரைவில் சரியாக வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும் பிரார்த்தனையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக அருமையான ஓவியங்கள் ரோஷ்ணி வரைகிறார்.

    குழந்தைக்கு அன்பு வாழ்த்துகள்.
    ஆதியின் காக்டெயில், ரஸ்மலாய் இரண்டும்
    காண்பதற்கே அருமை.

    பள்ளிக்கூடம் இங்கே எல்லாம் திறந்தாச்சு.
    நிறைய குழந்தைகள் போகவில்லை.

    அடுத்த வருட ( செப்டம்பர்)ஆரம்பத்தில் போக வேண்டி இருக்கும்.

    தீனுண்மி அதற்குள் ஓடிவிட்டால் தேவலை.
    பத்திரமாக இருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பள்ளிக்கூடம் இங்கே திறக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்று புரியாத சூழல் தான்.

      நீங்களும் கவனமாகவே இருங்கள் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. முகநூலில் பார்த்தேன் எல்லாவற்றையும் ரோஷ்ணியின் திறமை அதுவும் மண்டேலா ஓவியங்கள் அருமை. பிள்ளையாரை ஆதி வரையச் சொன்ன மாதிரி நான் ஏதேனும் வேண்டிக் கொண்டு பிள்ளையாரை ஓர் டப்பாவில் போட்டு மூடி விடுவேன். வேண்டுதல் நிறைவேறியதும் பிள்ளையாரை வெளியே எடுத்து கொழுக்கட்டை நிவேதனத்தோடு வெளியே வைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டப்பாவில் போட்டு மூடி விடுவீர்களா? ஆஹா... பாவம் பிள்ளையார்! கொழுக்கட்டை நிவேதனத்தோடு வெளியே வைப்பீர்களா! அப்ப சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. மழை அதிகம் பெய்து நிற்காவிட்டால் அம்மிக்குழவியை ஒரு சின்னத் துணியைச் சுற்றிவிட்டு மழைநீரில் நனைந்து கொண்டே இருக்கும்படி நட்ட நடுவே போடச் சொல்லுவார்கள். குழந்தை நனைகிறதே என இரக்கப்பட்டு வருணன் தன் பொழிவை நிறுத்திப்பான் என ஐதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மிக்குழவி - நானும் இந்த விஷயம் கேள்விப்பட்டு இருக்கிறேன். பெரியம்மாவின் அத்தை விஜயவாடாவில் ஒரு முறை இப்படிச் செய்ததாகச் சொல்வார்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....