செவ்வாய், 18 மே, 2021

கதம்பம் - டோரா - ஸ்ரீகண்ட் - பெரியம்மா - பட்டர் ஃபிங்கர்ஸ் - திருச்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே சிந்திப்பீர்கள் என்றால் உங்களுக்கு நாளை சிறப்பாக இருக்காது..!


******



ரோஷ்ணி கார்னர் - டோரா புஜ்ஜி ஓவியம் - 6 மே 2021: 




மகள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - ஸ்ரீகண்ட் - காணொளி - 8 மே 2021: 




சென்ற வாரம் Adhi's kitchen சேனலில் மாம்பழ ஸ்ரீகண்ட் செய்முறை பகிர்ந்துள்ளேன். டெல்லிக்கு செல்லும் ரயில் பயணத்தில் மத்திய பிரதேசத்தின் போபால் ரயில் நிலையத்தில் என்னவர் வாங்கித் தந்து சுவைத்திருக்கிறேன். போபாலில் பால் பொருட்கள் நன்றாக இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும். இது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழ ஸ்ரீகண்ட் செய்து காண்பித்துள்ளேன்.


எப்போதுமே சேனலுக்கான வீடியோ கைவசம் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் சனிக்கிழமைக்கான வீடியோ செவ்வாய்க்குள் தயார் செய்து விடுவேன். நேரமின்மையால் நேற்று மதியம் வீடியோ எடுத்து, மாலை எடிட்டிங், ம்யூசிக், வாய்ஸ் கொடுத்து அப்லோட் செய்தேன்..🙂 இந்த வாரம் இப்படி! அடுத்த வாரம் பார்க்கலாம்..🙂


ஸ்ரீகண்ட்


******


நலம் நலம் அறிய ஆவல் - 11 மே 2021: 


எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன். இந்த வருட ஊரடங்கு ஒன்றும் புதிதாக தோன்றவில்லை. அன்றாட வேலைகள் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. என்னவர் இப்போது எங்களுடன்  இருப்பதால் மனதில் தோன்றும் பதட்டம் இல்லாமல் சற்றே நிம்மதியாக இருக்கிறேன்.


பெரியம்மாவுக்கு (கணவரின் பெரியம்மா) உதவியாக, அவரை காலை எழுந்தது முதல் அவ்வப்போது பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வது, குளிப்பாட்டுவது, உடைமாற்றி தலைவாரி விட்டு உணவு தருவது என்று வேலைகள் சரியாக இருக்கின்றன. என்னவர் வெளி வேலைகளைச் செய்வதோடு, வீட்டு வேலைகளிலும் எனக்கு உதவி செய்கிறார். மகளும் வேளாவேளைக்கு பாட்டிக்கு மருந்துகள் தருவது, நடக்க வைப்பது என்று உதவுகிறாள். 


******


பட்டர் ஃபிங்கர்ஸ் - 11 மே 2021: 





எங்கள் திருமணத்திற்குப் பின், விடுமுறை முடிந்து என் கணவர் அலுவலகம் சென்றவுடன் அவருடன் அந்த செக்‌ஷனில் பணிபுரிந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து கண்ணாடியில் ஒரு டின்னர் செட்டும், Celloware-ல் ஒரு டின்னர் செட்டும், ஜூஸ் டம்ளர்கள், டீ கப்புகள் என்று பரிசளித்தார்கள்.


அதையெல்லாம் எடுத்து வந்ததும் (DH)திவானில் (பாக்ஸ் டைப் கட்டில்) வைத்தது தான் 🙂 வருடங்கள் வேகமாய் ஓட, என்னுடைய தைரியத்தில் உபயோகப்படுத்திய ஜூஸ் டம்ளர்கள், டீ கப்புகளை 'டமால்' பண்ணி விட்டேன் 🙂 19 வருடங்கள் ஆன பின்னும் YERA GLASSWARE மட்டும் தப்பித்துக் கொண்டே இருக்கின்றது 🙂 இந்த முறை வந்தபோது அவற்றில் சிலவற்றை எடுத்து வந்திருக்கிறார். உங்கள் பார்வைக்கு அவற்றில் சில மேலே!


******


திருச்சியும் நானும் - 14 மே 2021: 


கல்லூரியில் படிக்கும் சமயம் உறவினரின் திருமணத்திற்காக மாயவரம் சென்றிருந்தோம். அங்கேயிருந்து நவகிரக கோவில்களுக்குச் சென்று விட்டு, கோவைக்கு திரும்பும் போது நள்ளிரவில் திருச்சியில் இறங்கி அங்கேயிருந்து கோவைக்கு பேருந்து பிடித்தோம். அதுவே நான் திருச்சியில் முதன்முதலாக கால் வைத்த நாள் 🙂


அதற்கு முன் பள்ளியில் படிக்கும் போது ஹிந்தி பிரச்சார சபா மூலம் படித்ததில் விஷாரத் பரீட்சையின் பட்டமளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. அதில் திரு மூப்பனார் அவர்கள் கையால் சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டியது! ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் எங்களால்  போக முடியவில்லை.


காலத்தின் ஓட்டம் என் புகுந்த வீடு திருச்சி ஸ்ரீரங்கத்தில்! டெல்லியில் இருந்து அவ்வப்போது விடுமுறையில் வந்தது, பிரசவ நேரத்தில் இங்கு இருந்தது, பின்பு இங்கேயே செட்டில் ஆனது என்று திருச்சியோடு ஏற்பட்ட பந்தம் தொடர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை. மே 7-ஆம் தேதியோடு திருச்சிக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆச்சு 🙂 ஒரு வாரமாக எழுத நினைத்து நேரமின்மையால் தாமதமாகி விட்டது.


******


அம்பா பெரியம்மா At her Best - 15 May 2021:


ஏண்டி! ஸ்டூல் மேலே ஏறினா உனக்கு தல சுத்தறதாமே??


யார் அப்படி சொன்னா??


கிட்டு தான் சொன்னான்!! (என்னவர்)


ஹா..ஹா..ஹா.


________


ஏண்டி! சாப்பிடல! உனக்கு மசக்கையா???


மயக்கமா வேற இருக்குன்னு சொல்றயே!


யார் சொன்னா இதெல்லாம்???


நீ தான சொன்ன???


ஙேஙேஙேஙே...🙂


ஹா..ஹா..ஹா


________


புவனா!


இதோ வரேன் பெரிம்மா!


முதுக நல்லா தேய்டி!


தலய நல்லா அழுத்தி வாரி விடுடி!


கைகள், கால்களில் Vaseline, moisturising lotion தடவி விட்டதும்...


எந்த ஜென்மத்து பந்தமோ! எனக்கு நீ செய்ய வேண்டி இருக்கு!


__________


ஒரு வாரமா ஃபோன்ல என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிற!


உனக்கு ஒண்ணும் வர மாட்டேங்கிறது!!!


ஹா..ஹா..ஹா


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - அவல் பிடி கொழக்கட்டை - 15 மே 2021:


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் Breakfast & Dinner ரெசிபியாக அவலில் பிடி கொழக்கட்டை செய்து காண்பித்துள்ளேன். இயற்கை உணவாகவும், அடுப்பில்லா சமையலில் இடம்பெறும் அவல் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. என் பாட்டி பிரயாணங்களில் அவல் தான் எடுத்துச் சென்று சாப்பிடுவார்.


அவல் பிடிகொழுக்கட்டை


******


ரோஷ்ணி கார்னர் - 15 மே 2021:


மகளின் சேனலில் இந்த வாரக் காணொளி வெளியிட்டுள்ளாள்.


https://youtu.be/doF7iOfYYKI


******


உலக குடும்ப தினம் - 15 மே 2021:


விட்டுக் கொடுத்தலும், பகிர்ந்து கொள்தலும், சில நேரங்களில் அமைதியாக இருத்தலும் கூட உறவுகள் மேம்பட உதவும்.


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. அனைத்தையும் ரசித்தேன்.  மூவருமே பிளாக் தொடங்கியது போல மூவருமே தனித்த்னியாக யு டியூப் சேனல் வைத்திருப்பதற்கு பாராட்டுகள்.  ரோஷ்ணியின் ஓவியம் வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அனைத்தையும் முகநூலில் வாசித்து மகிழ்ந்தேன். பெரியம்மாவின் உரையாடலை ரசித்தேன்.
    பெரியம்மாவை நன்கு பார்த்துக் கொள்ளும் ஆதிக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கதம்பம் அருமை...

    டோரா புஜ்ஜி ஓவியம் - சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      மகளின் ஓவியம் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் ரசித்தேன்

    ரோஷினியின் ஓவியம் வழக்கம் போல் அருமை. வாழ்த்துகள்!

    பெரியம்மாவை கவனித்துக் கொள்வது நீங்கள் செய்யும் மிகப் பெரிய புண்ணியம். உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருக்கு இறைவனின் அருள் நிச்சயம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை ஆதி!

    பெரியம்மாவின் உரையாடல் ஹா ஹா ஹா ஹா..

    ரசித்தேன் ஆதி. மிக மிக உயர்வான விஷயம் நீங்கள் எல்லோரும் செய்வது. பெரியவர்களை அவர்களின் வயதான காலத்தில் பார்த்துக் கொள்வது என்பது பிரார்த்தனைக்கு நிகரானது அல்லது அதைவிட உயர்வானது.

    காட் ப்ளெஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ரோஷினிக்கு வாழ்த்துகள்! வீடியோவும் பார்க்கிறேன்.

    உங்களின் ஸ்ரீகண்ட் பார்த்தேன் என்று நினைக்கிறேன்...நினைவு..மீண்டும் பார்க்கிறேன்.

    ஆமாம் ஆதி தில்லி போகும் போதெல்லாம் போபால் நிறுத்தம் வருவதை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதுண்டு இந்த ஸ்ரீகண்ட் சாப்பிட!!!

    அனைத்தும் ரசித்தேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கதம்பம் ரோஷிணியின் ஓவியத்திறமை கூடி வருவது மகிழ்வளிக்கிறது..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் சுவை. ஸ்ரீகண்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். பூரி, ஸ்ரீகண்ட் நல்ல காம்பினேஷன். மாம்பழ ஸ்ரீகண்ட் யூ டியூபில்தான் பார்க்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      ஸ்ரீகண்ட் - யூட்யூபில் பார்க்க முடியும். பொதுவாக பதிவில் Embed செய்வதில்லை. காணொளிக்கான சுட்டி இப்பதிவிலும் கொடுத்து இருக்கிறேன். கீழேயும்!

      https://www.youtube.com/watch?v=TTH99C3Yfr8

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....