அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நண்பர்களே, நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நம்மிடம் உள்ள ஒரே ஒரு மிகப் பெரிய சொத்து நமது மனம் மட்டுமே. அதைச் சரியாக பயிற்றுவித்தால் அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும்..!
******
ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதோ ஒரு சமையல் குறிப்பு - பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொடுக்கப்பட்டு தொடரும். பாட்டி அம்மாவுக்கும், அம்மா தனது பெண்ணுக்கும், பெண் தனது மகளுக்கும் என சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சமையல் குறிப்பு முக்கியமல்ல என இந்த வரிசையில் இருக்கும் சிலர் நினைக்கக் கூடும். சமையல் குறிப்பை விட, முன்னோர்களின் பாசமும் சேர்ந்தே இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் தான் நல்லது! இந்தக் குடும்பத்திலும் இப்படி ஒரு குறிப்பு - மனதைத் தொடும் விதத்தில் இருக்கும் இந்தக் குறும்படத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!
மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலாதவர்கள் வசதிக்காக, யூட்யூபில் நேரடியாகப் பார்க்க ஏதுவாக அதன் சுட்டியும் கீழே தந்திருக்கிறேன்.
WHAT MAKES A FAMILY RECIPE SPECIAL
நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகிறேன். குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தின் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
நெகிழ்வான குறும்படம். இனிமையான பாட்டி. இடையிலேயே சில உபயோகமான குறிப்புகள் - அன்னாசி, கேரட் போன்றவற்றை எப்படி பார்த்து வாங்குவது என...!
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். உபயோகமான குறிப்புகள் நடுவில்! ஆமாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் வெங்கட்ஜி
பதிலளிநீக்குவாசகம் அருமை..
கீதா
வணக்கம் கீதாஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என் அம்மாவை நினைவுபடுத்திய வீடியோ க்ளிப்
பதிலளிநீக்குகாணொளி உங்கள் அம்மாவை நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் நெகிழ்ந்த்விட்டது ஜி. கண்ணில் நீர் வந்துவிட்டது.
பதிலளிநீக்குபாட்டி அருமை. என்ன டிப்ஸ்!!! சூப்பர்.
எனக்கு என் பாட்டி அம்மா நினைவுக்கு ரொம்பவே வந்தார்கள். ஏனென்றால் நான் பாட்டியிடம் கற்றது நிறைய...இன்னும் எல்லோரிடமும் நான் நிறைய கற்றிருக்க வேண்டும் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டேனே என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன் அதனால் பலரிடமும் சொல்வது இதுதான் எல்லோருடனும் முடிந்த அளவு அன்போடு பழகி நிறைய கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.
அருமையான குறும்படம்
கீதா
காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குபாட்டிகளிடமும் பெரியவர்களிடமும் கற்றுக் கொண்ட விஷயங்கள் எத்தனை எத்தனை. இருக்கும்போது நம்மில் பலருக்கும் அவர்கள் அருமை தெரிவதில்லை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நெகிழ்வான காணொளி... அருமை...
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅருமையான படம். நெகிழ்ச்சியூட்டிய குறும்படம்
பதிலளிநீக்குதுளசிதரன்
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக மிக அருமையான குறும்படம்.
பதிலளிநீக்குநன்றாக எடுத்திருக்கிறார்கள். அருமையான பாட்டி. அருமையான பேரன்.
இதுதான் யதார்த்தம்.
குழந்தைகளை எப்பொழுதும் சரியாக மதிப்பிட வேண்டும். தாயார்களை விடப் பாட்டிகள்
குழந்தைகளுடன் சீக்கிரம்
இணைந்து கொள்வது இது போலத்தான்.
மிக மிக நல்ல காணொளி வெங்கட். நன்றி.
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தொடக்க வாசகம் அருமை. குறும்படம் சூப்பர்.
பதிலளிநீக்குவாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை
பதிலளிநீக்குகுறும்படம் நெகிழ வைத்து விட்டது.
கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
பகிர்வுக்கு நன்றி.
வாசகம் மற்றும் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது தளத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகின்றன...
பதிலளிநீக்குகுறும் படம் அருமை...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
முடிந்த போது வருகை தாருங்கள் - அனைவருக்கும் அவரவர் பணிச்சுமைகள் உண்டே.
நீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.