சனி, 29 மே, 2021

காஃபி வித் கிட்டு-112 - அம்மா - ஆப்பிள் - பயமில்லையா - அவசரம் எதற்கு - ஓவியம் - தூதியா கீச் - சுட்டி உலகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நண்பர்களின் பார்வையில் எனது வலைப்பூ பதிவையும் குறும்படப் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


NEVER THINK I HAVE NOTHING…. NEVER THINK I HAVE EVERYTHING…  BUT ALWAYS THINK, I HAVE SOMETHING AND I CAN ACHIEVE ANYTHING!


******



இந்த வாரத்தின் விளம்பரம் - அம்மா


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக, சென்ற ஆண்டு Mother’s Magic Biscuit அன்னையர் தின வெளியீடாக வெளியிட்ட விளம்பரம்.  அதில் வரும் பாட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.  இந்த விளம்பரமும் சிறப்பாக இருக்கிறது.  பாருங்களேன்.


இந்தக் காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், நேரடியாக யூட்யூபில் இங்கே பார்க்கலாம்!


******


பின்னோக்கிப் பார்க்கலாம் - ஆப்பிள்


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.  அன்றைய நாளில் எழுதிய ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிட்ட ஒரு குட்டிக் கதை - படித்ததில் பிடித்ததாக...


ஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.


அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்ணை கேட்டார்: "என் செல்லம், நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"


சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும், அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள்.


அம்மாவுக்கு சற்றே ஏமாற்றம்.


அப்பொழுது, குழந்தை தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள்,  "இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"


முழுப்பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே…


ஃப்ரூட் சாலட் – 135 – நகரும் தோட்டம்! – உணவும் பசியும் – பதில் ப்ளீஸ்!


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - தீநுண்மி - பயமா? எங்களுக்கா?


கடந்த ஞாயிறன்று பெரியம்மாவிற்கு சில மாத்திரைகள் வாங்க வேண்டியிருந்ததால் காலையிலேயே வெளியே சென்றிருந்தேன்.  காலை நேரத்தில் கீழ அடையவளஞ்சான் வீதியில் இயங்கும் காய்கறி மார்க்கெட் கடைகள் இல்லை - சித்திரை வீதியில் இருக்கிறது என்று சொன்னார்கள்.  சரி என்று அங்கே செல்ல, மக்களின் கூட்டம் பார்த்து கதி கலங்கி விட்டது.  அப்படி ஒரு கூட்டம் - ஒருவருக்கும் மாஸ்க் பயன்பாடு குறித்த எண்ணமே இல்லை - தலையிலோ அல்லது தாவாங்கட்டையிலோ தான் மாஸ்க் தொங்கிக் கொண்டு இருந்தது. ஒன்றிரண்டு காய்கறி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டேன்.   அங்கே எனக்குத் தெரிந்த ஒரு முதிய பெண்மணியையும் பார்த்தேன் - உடல் ரீதியாக அவருக்கு நிறைய பிரச்சனைகள் உண்டு - வயது காரணமாக இருக்கும் பிரச்சனைகள்.  Walking Stick வைத்துக் கொண்டு தான் நடப்பார்.  எதுக்காக இந்த நேரத்தில் இப்படி வெளியே வருகிறீர்கள் எனக் கேட்க, “எத்தனை நேரம் தான் வீட்டிலேயே இருக்கறது?” என்கிறார்.  ”சரி சீக்கிரம் வீட்டுக்குப் போங்க” என்று சொல்லி விட்டு  வீடு திரும்பினேன்.  தீநுண்மி குறித்த பயமே இல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.


******


அவசரம் எதற்கு - மாத்திரைக் கடையில்


மாத்திரைக் கடையில் பெரியம்மாவிற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மாத்திரைகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு, அங்கே இருந்த முதியவர் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி எடுக்கும் வரை காத்திருந்தேன்.  அப்போது கடையில் அவரும் நானும் மட்டுமே!  சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் வந்தார்.  சில நொடிகள் காத்திருக்கக் கூட அவருக்கு பொறுமை இல்லை.  இத்தனைக்கும் வெளியே ஒரு நாற்காலி  இருந்தது. அதில் அமர்ந்திருந்தார்.  கடையில் இருந்த பெரியவரை திட்ட ஆரம்பித்தார் - “இது வேலைக்கு ஆகாது! எவ்வளவு நேரம் காத்திருப்பது” என சப்தம் போட, ”அவருக்கு முதலில் கொடுத்து அனுப்புங்கள்” என்று சொல்லி நான் காத்திருந்தேன்.  காத்திருப்பது என்பது ஒரு சிரமமான விஷயம் தான் என்றாலும், கொஞ்சம் கூட பொறுமையே இல்லை பலரிடம்.  கடையில் இருந்த பெரியவர், மற்றவருக்கு மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிய பிறகு, “எப்படி மூஞ்சி காமிக்கிறார் பாருங்க, எவ்வளவு கோபம்? இந்த வயதில் இவ்வளவு கோபம் என்றால் சிறு வயதில் எப்படி கோபப்பட்டிருப்பார் அந்தப் பெரியவர்?” என்று கேட்க, என்னிடம் பதில் இல்லை.  விதம் விதமான மனிதர்கள் - ஒவ்வொருவருக்கும் ஒரு சில பிரச்சனைகள் - என்ன சொல்ல!


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - Yes We Can!:





இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - Yes We Can என்று நம்பிக்கை தரும் ஓவியம்.  பார்த்து ரசிக்கலாமே!



******


இந்த வாரத்தின் உணவு - (Dh)தூதியா கீச் (Gehun Ka Doodhiya Kheech):





இந்த வாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபலமான ஒரு உணவு குறித்துப் பார்க்கலாமா! கோதுமை (மாவு அல்ல! முழு கோதுமை), பால், சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு இது.  கோதுமையை ஊற வைத்து, கொரகொரப்பாக அரைத்துச் செய்யப் படும் ஒரு இனிப்பான இதை செய்ய விரும்புபவர்கள், இணையத்தில் செய்முறை தேடிச் செய்யலாம்!  பார்க்க மட்டும் போதும் என்பவர்கள் படத்தில் பார்த்து ரசிக்கலாம்! 


******


இந்த வாரத்தின் ரசித்த தளம் - சுட்டி உலகம்:


பதிவுலகில் நாம் அறிந்தவர்களான திருமதி ஞா. கலையரசி அவர்களும் திருமதி கீதா மதிவாணன் அவர்களும் இணைந்து ”சுட்டி உலகம்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான வலைக் களஞ்சியம் ஒன்றினைத் தொடங்கி இருக்கிறார்கள்.  சிறுவர்களுக்கான கதைகள், நூல்கள் குறித்த தகவல்களும், சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் என பலவும் இருக்கும் தளம் இது.  உங்கள் வீட்டிலும் சிறுவர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்தத் தளத்தினை அறிமுகம் செய்து வைக்கலாம்!  சிறுவர்களுக்கான தளம் என்றாலும் நாமும் அங்கே சென்று படித்து ரசிக்கலாம் - தவறில்லை - மனதளவில் இன்னமும் சிறு குழந்தையாக இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது சொல்லுங்கள்!  சுட்டிகள் இருக்கும் வார்த்தைகள் தனியாக எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவற்றைச் சுட்டினால் தளம் திறக்கும்!



******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


26 கருத்துகள்:

  1. சுட்டி உலகம் சுவாரஸ்யமா அறிமுகம்.

    பொறுமை இல்லாத பேச்சு...    இன்று பலரிடம் இல்லாதது பொறுமையும் பொறுப்பும்.

    விதம் விதமான ஆகாரவகைகள் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்டிக்கதை மனதை கவர்ந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிக்கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதிவில் அனைத்தும் அருமை.
    காணொளி அருமை. அம்மா மனதை கவர்ந்தார்.
    ஆப்பிள் குட்டிக்கதையும் நன்றாக இருந்தது.
    சுட்டி உலகம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதிவுகள் கதம்ப மாலை . அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நானும் சுட்டி உலகம் ரசித்தேன் வெங்கட்ஜி. கீதாமதிவாணன் தளத்திப் பார்த்து. நன்றாக இருக்கிறது.

    வாசகம் செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. (Dh)தூதியா கீச் (Gehun Ka Doodhiya Kheech)://

    புதியது....பார்த்துவிடுகிறேன் ஜி. பார்க்கவே நாவில் ஊறுது ஆனால் இனிப்பு!! இருந்தாலும் முடிந்தால் செய்து பார்த்துவிடலாம்..

    கோவிட் ஓவியம் ரசித்தேன் அதற்கு மேலே பாரா தொற்று பற்றி பயமில்லா மனிதர்கள்! கூட்டம்...ஹூம் என்ன சொல்ல?

    ஆம் வித விதமான மனிதர்கள். ஆனால் இளம் வயதில் மிகவும் பொறுமையாக இருப்பவர்கள் சிலர் வயதாகும் போது இயலாமையால் கோபம் வரும் எரிச்சல் வரலாம்...பொறுமையும் போகும் தான்..

    விளம்பரம் குறும்படம் போல ரொம்ப ரசித்தேன் பாட்டி கவர்ந்தார்.

    ஆப்பிள் கதை அருமை ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காஃபி வித் கிட்டு மிக அருமை.

    தொற்றின் பயம் மக்களுக்கு இல்லாததால்தான் இப்படிப் பரவுகிறது. அந்த ஓவியம் அருமை என்னதான் எப்படி எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அல்லவா தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    விளம்பரப் படம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சுட்டி உலகத்தை அறிமுகம் செய்திருப்பதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. முதல் இதழை ரோஷ்ணியின் ஓவியம் சிறப்பானதாக்கியிருக்கிறது. மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.

      நீக்கு
  10. பொறுமையில்லாத பெரியவரைப்பற்றி ஒருவரி சொன்னாலும் அருமையாகச் சொன்னார்...சிறுவயதில் உடன் வாழ்ந்தவர்கள் எப்படி அனுபவித்திருப்பார்கள் என நினைக்க. வேதனையாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. உண்மை
    கோரோனா குறித்த விழிப்புணர்வு இன்னும் நம் மக்களிடைய முழுமையாய் வரவில்லை ஐயா
    வேதனையாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பு வெங்கட் அருமையான காஃபி.
    விளம்பரத்தில் வரும் அந்த அம்மாவை மிகவும் பிடிக்கும் காணொளி
    வெகு சுவை சிறப்பும் கூட. நன்றி மா.

    கேஹூ இனிப்பு நன்றாகத்தான் இருக்கும்.
    ஊறவைத்து அரைத்து என்று நீளும் வேலை:)
    இதையெல்லாம் யாராவது வாங்கி அனுப்பினால் தேவலை.:)

    சுட்டி உலகம் சிறக்கட்டும்.
    ரோஷ்ணியின் வளர்ச்சி பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரத்தில் வரும் அம்மா - அவரது வேறு சில விளம்பரங்களும் இங்கே பகிர்ந்ததுண்டு. நல்ல நடிப்பு.

      இனிப்பு - யாராவது வாங்கி அனுப்பினால் தேவலை - :))))

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமையான தொகுப்பு. தூதியா கீச் எனக்கும் அறிமுகம் இல்லாத ஒன்று. பண்ணிடுவோம். விளம்பரம் பார்த்திருக்கேனோ? திரும்பப் பார்த்தால் தான் புரியும். அந்த அம்மா அறிமுகம் ஆனவங்களாய்த் தெரிகிறார்கள். சுட்டி உலகம் பற்றி முகநூலிலும் பார்த்தேன். ரோஷ்ணியின் திறமைகள் எல்லா விதங்களிலும் வெளிப்படுவது மனதுக்கு உற்சாகத்தைத் தரும். குழந்தைக்கு ஆசிகள். இப்போது வெளியே சென்றே ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டபடியால் எல்லோரும் எப்படி மாஸ்க் போடறாங்களா இல்லையானு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பொதுவாக மக்களின் அலட்சியம் கவலைக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூதியா கீச் உங்களுக்கு அறிமுகம் இல்லாததா? ஆஹா... செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....