எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 29, 2015

ஃப்ரூட் சாலட் – 135 – நகரும் தோட்டம்! – உணவும் பசியும் – பதில் ப்ளீஸ்!
இந்த வார செய்தி:


கொல்கத்தா நகரில் வாடகை கார் ஓட்டுகிறார் திரு [Dh]தனஞ்சய் சக்ரபோர்த்தி. தனது வாகனத்தினை ஒரு சிறிய தோட்டமாகவே மாற்றி இருக்கிறார். வாகனத்தின் மேற்புறத்தில் சில மாற்றங்கள் செய்து, அதில் புற்களை வளர்ப்பது மட்டுமன்றி, வாகனத்தின் உள்ளேயும் தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறார்.  குளிரூட்டப்பட்ட வாகனம் இல்லை என்றாலும் இவரது வாகனத்தில் பயணம் செய்யும் போது சூடு தெரியவில்லை என்று அதில் பயணித்த பலரும் சொல்கிறார்களாம்.

செடிகள் நட்டால் மட்டும் போதாது அவற்றுக்கு தண்ணீர் விட்டு பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்று சொல்லும் இந்த 40 வயது இளைஞரைப் பற்றிய முழு செய்தியும் இங்கே சென்றால் படிக்கலாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

Always smile back at little children. To ignore them is to destroy their belief that the world is good.

இந்த வார குறுஞ்செய்தி:

மீதம் வைத்த உணவில் யாருடைய பசியோ இருக்கிறது.

பின் குறிப்பு: இந்த செய்தியைப் படித்த பிறகு வந்த இன்னுமொரு செய்தி.  எத்தனை கொடுமையான உண்மை.....  :(

The World’s hunger is getting ridiculous. There is more fruit in a rich man’s shampoo than in a poor man’s plate.    

இந்த வார காணொளி:

தழைக்கட்டும் மனிதம்......


It,s nice True Humanity.Must watch
Posted by Malik Tajamul Hayat Khan on Monday, October 20, 2014
ராஜா காது கழுதை காது:

சென்னையின் மின்சார ரயில் பயணத்தின் போது, நான் இருந்த பெட்டியில் பயணித்த குடும்பத்தில் ஒருவர் கைகளை நீட்டியபடி ஆலாபனை செய்து பாட்டுப் பாட ஆரம்பித்தார்.  அப்போது அந்த மனிதரின் பெண் சொன்னது – “அப்பா பாட்டு பாடாதே.... அதுவும் கையை வேற நீட்டிக்கிட்டு பாடற! யாராவது பிச்சை போட்டுட போறாங்க!

படித்ததில் பிடித்தது:

ஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.

அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்ணை கேட்டார்: "என் செல்லம், நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"

சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும், அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள்.

அம்மாவுக்கு சற்றே ஏமாற்றம்.

அப்பொழுது, குழந்தை தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள்,  "இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"

இந்த வார கேள்வி:

பதில் சொல்லுங்க ப்ளீஸ்!மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  இரண்டு மூன்று வாரங்களாக வெள்ளிக் கிழமைகளில் ஃப்ரூட் சாலட் பகுதி வெளியிட முடியவில்லை. இந்த வாரம் முழுவதுமே பதிவுகள் எழுத வில்லை! இடைவிடாத பணிச் சுமை! முடிந்த வரை வாரத்தில் சில பதிவுகளாவது எழுத வேண்டும். ஹிமாச்சலப் பிரதேசம் பயணத் தொடர் வேறு பாக்கி! பார்க்கலாம்! மற்றவர்களின் பதிவுகள் படிக்கவும் முடிவதில்லை! விரைவில் இந்த பணிச் சுமைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம் – அப்போது தொடர்ந்து சந்திப்போம்!
 

44 comments:

 1. //"இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"//

  படித்ததில் பிடித்தது சூப்பர் :)

  காரில் தோட்டம் .... கலக்கல் .... புதுமை, பசுமை, இனிமை. :)

  மற்ற எல்லாமே ஜோர் ஜோர் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. நகரும் தோட்டம் புதுமையான முயற்சி.

  காணொளி அருமை.

  சிறுவனின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்ன :)?

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. பசுமை வாடகைக் கார் மனதைக் கவர்ந்தது. ஓட்டுனரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 4. 'கார்த்தோட்டம்' செய்தி நானும் படித்தேன்.

  மனதைத் தொடும் இற்றை.

  குறுஞ்செய்தியும் அவ்வண்ணமே.

  ரா கா க கா - ஹா...ஹா...ஹா..

  ப.பி - ஆஹா....!

  நல்ல கேள்வி.

  காணொளி (எனக்கு) சுற்றிக் கொண்டே இருக்கிறது! மாதக் கடைசி போலும்! வாழ்க பி எஸ் என் எல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. தனஞ்சய் சக்ரபோர்த்தி.அவர்களைப் பாராட்டுவோம்
  காணொளி நெகிழவைத்ததது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. அனைத்து விடயங்களும் அருமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. பசுமை கார் வித்தியாசமான முயற்சி.
  குழந்தை கடித்துக் கொடுத்த ஆப்பிள் அன்பின் சுவை. மொத்தத்தில் இந்த வார புருட் சால்ட் நன்றாகவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 9. அனைத்தும் அருமை சகோ, அதிலும் "இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"
  சூப்பர் இல்ல,,,,,
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 10. ஃப்ரூட் சாலடில் அன்புக் கண்மணி கடித்துக் கொடுத்த ஆப்பிள் சுவையோ சுவை . :)

  கடைச் கேள்வியும் அர்த்தமுள்ளதுதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்‌ஷ்மணன் ஜி!

   Delete
 11. இந்த வாரம் பிடித்தது...குழந்தை ஆப்பிள் பகுதி. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுகிறவர்களுக்கு ஏழையின் துயரம் தெரியவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. புல் தொப்பி அணிந்த கார் ,இந்த தொப்பியை பராமரிப்பது சிரமம்தான் :)
  சாகிற மனிதனைக் காப்பாற்றாமல் படம் பிடிக்கும் உலகில் இப்படி ஆப்பிள் பொறுக்கிற மனித நேயம் அருமை :)
  பிள்ளைக் கடித்த ஆப்பிள் மிகவும் சுவைதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. படித்ததில் பிடித்தது அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. எதைச் செய்தாலும் நேர்த்தியாக செய்கிறீரே எப்படி..
  ஜோரான சாலட்..
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 15. இந்த வார பழக்கலவையும் அருமை. அதுவும் அந்த காணொளி மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. ப்ரூட் சாலடில் பகிர்ந்த அனைத்தும் ரசனை. குறுஞ்செய்தி மட்டும் மனம் நெருடும் நெகிழவைக்கும் யதார்த்தம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   Delete
 17. சாலட்டை ருசித்தேன். அனைத்துமே நன்றாக இருந்தது. ஆப்பிள் கடி அதிகம் ரசித்தேன். பதிவுகளைத் தெரிவு செய்து இடும் தங்களின் பாணி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. //"இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"//
  சிவனுக்கு கண்ணப்பர்! அம்மாக்களுக்கு கண்ணம்மா!
  அனைத்தும் அருமை! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 19. கார் மீது புல் அருமை...

  இற்றை அருமை......., குறுஞ்செய்தி மனதைத் தொட்டது.....

  காணொளி சூப்பர்...

  ராஜா காது .......ஹஹஹஹஹஹ் ரகம்..

  படித்ததில் பிடித்தது ஆஹா! அருமை எங்களுக்கும் பிடித்தது.....

  சிறுவனின் கேள்வி நியாயமாகத்தான் தோன்றுகின்றது...ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. நகரும் தோட்டம் நல்ல யோசனை. எல்லோருமே இப்படிச் செய்யலாம். இவர் செய்வது நல்ல காரியம் என்றாலும் எனக்கு ஏனோ சிறுவனின் தலையிலிருந்து 'கீச் கீச்..' என்று பறவைகள் பறக்குமே அந்த விளம்பரம் நினைவுக்கு வந்தது!
  காணொளி திறக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்து முயற்சி செய்கிறேன்.
  மாணவர்களின் கேள்விகளே அலாதியானதுதான்!
  ருசியான பழக்கலவை! நானும் உங்கள் தளத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நானும் சில நாட்களாக வலைப்பக்கம் வருவது குறைந்து விட்டது..... பணிச்சுமை அதிகம்!

   Delete
 21. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  TM + 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

   Delete
 22. ஆப்பிள் கதை நெகிழவைத்தது! நகரும் தோட்டம் அமைத்த ஓட்டுநர் வித்தியாசமானவர்! பசியை பற்றிய பொன்மொழிகள் கலங்க வைத்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....