வியாழன், 14 மே, 2015

கையேந்தி பவனில் காலை உணவு


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 15

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

சென்ற பதிவில் சொன்னது போல, வஜ்ரேஷ்வரி தேவியின் திவ்யமான தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வந்தோம்காலை வேளையில் கோவில் சென்று வருவதில் மனதிற்கு ஒரு அமைதி கிடைப்பது நிஜம். மனதில் ஒரு வித திருப்தியுடன் தங்குமிடத்திற்கு திரும்பி அன்றைய தினத்திற்கான பயணத்தினை துவங்கினோம்பயணம் தொடங்குவதற்கு முன்னரே காலை உணவினை முடித்துக் கொண்டு விடலாம் என மனீஷ் சொல்ல, பசித்திருந்த எங்களுக்கும் அது சரியென பட்டது.

ஹிமாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது வட இந்தியாவில் பெரும்பாலான கடைகள்/உணவகங்கள் காலை நேரத்தில் திறப்பதில்லை. மதிய வேளையில் தான் திறப்பார்கள்ஒன்றிரண்டு இடங்களே திறக்கிறார்கள். அங்கேயும் பராட்டாவோ, அல்லது Bread தான் கிடைக்கும். காங்க்ராவும் விதிவிலக்கல்ல. நமது ஊரில் மாலை நேரங்களில் முளைக்கும் சாலை ஓர உணவகங்கள் போலவே அங்கேயும் சில உண்டு. அவற்றில் காலை நேரங்களில்நான்அல்லது பராட்டாக்கள் கிடைக்கும்.

படம்: இணையத்திலிருந்து.....

அது மாதிரி ஒரு கையேந்தி பவனில் காலை உணவு சாப்பிடுவதில் ஆட்சேபனை இருக்கிறதா எனக் கேட்க, அங்கே சென்று பார்க்கலாம் என முடிவு செய்தோம். தங்குமிடத்திலிருந்து சற்றே தொலைவில், நடக்கும் தூரத்தில் தான் நண்பர் மனீஷுக்குத் தெரிந்தவரின் கையேந்தி பவன் இருக்கிறது என அங்கே எங்களை அழைத்துச் சென்றார்காலை நேரத்திலேயே காய்கறி கடைகள் திறந்திருக்க, அவற்றில் குளிர்கால காய்கறிகள் குடைமிளகாய், கேரட், முள்ளங்கி, காலிஃப்ளவர் என நிறைந்திருந்தன. அவற்றையெல்லாம் பார்த்தபடியே நடந்து கையேந்தி பவனை அடைந்தோம்.

படம்: இணையத்திலிருந்து.....

காலை நேரத்திலேயே கடை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தள்ளு வண்டியின் ஒரு பக்கத்தில்தந்தூர்என அழைக்கப்படும் அடுப்புபெரும்பாலும் மண்ணிலே செய்திருப்பார்கள். இந்த மாதிரி தள்ளு வண்டிகளில் தந்தூரில் சற்றே சில மாற்றங்கள் இருக்கும். ஒரு பெரிய இரும்பு Drum-ல் உட்புறங்களில் மண் குழைத்துப் பூசி தந்தூர்-ஆக மாற்றம் செய்திருப்பார்கள்.

அந்த மாதிரி தந்தூர் அடுப்பில் சுடச் சுட தந்தூரி பராட்டாசாதாரணமாக தவாவில் [தோசைக்கல்] பராட்டா செய்தாலே கொஞ்சம் தடிமனாக இருக்கும். இந்த தந்தூரில் செய்யும் பராட்டாக்கள் இன்னும் அதிக தடிமனாக இருக்கும். இரண்டு தந்தூரி பராட்டாக்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அதிலும் பராட்டாவில் வெண்ணையைத் தடவித் தரும்போது நல்ல நிறைவான உணவாக இருக்கும்.

படம்: இணையத்திலிருந்து....

பெரும்பாலான வட இந்திய கையேந்தி பவன்களில் சுத்தம் இருக்காது – “சுத்தமா? அது கிலோ எவ்வளவு?” என்ற வகையில் தான் இருக்கும். ஆனால் இந்த கையேந்தி பவன் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. மனீஷ் விறுவிறுவென தட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகத் துடைத்து புதினா-கொத்தமல்லி சட்னி, வெங்காயம், ஊறுகாய், கொஞ்சம் அமுல் வெண்ணை என தட்டின் ஒவ்வொரு குழிகளிலும் வகைக்கு ஒன்றாக போட்டு தயார் செய்ய, சுடச் சுட பராட்டாக்களை தயார் செய்தார் அந்த கையேந்தி பவன் உரிமையாளர்.

அவரது கைகளில் என்னவொரு வேகம்பொதுவாக வட இந்தியர்கள் சப்பாத்தி, பராட்டா ஆகியவற்றை குழவி கொண்டு செய்வதில்லை. கைகளால் தட்டித் தட்டியே பெரிதாக்கி விடுவார்கள். முதன் முதலில் இப்படிப் பார்த்தபோது அதிசயமாகத் தான் இருந்ததுஇப்போதெல்லாம் அதிசயம் இல்லை. நானே கூட அப்படி முயற்சித்து செய்ததுண்டு! கிடுகிடுவென பராட்டாக்களை அவர் தயார் செய்ய, ஒவ்வொன்றாக தட்டுகளில் போட்டுக் கொடுத்தபடியே இருந்தார் மனீஷ்.

கையேந்தி பவனில் சாப்பிட வேண்டுமா எனக் கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தவர்களும் முதல் தந்தூரி பராட்டாவினை உண்ட பிறகு இன்னும் ஒரு பராட்டா கூட சாப்பிடலாம் என சாப்பிட்டோம்சுடச் சுட அந்த கடை உரிமையாளர் தயார் செய்து கொடுக்க, சுவையான தொட்டுக்கைகள் இருக்க, மளமளவென பராட்டாக்களை கபளீகரம் செய்தோம். எல்லோரும் சாப்பிட்ட பிறகு உணவிற்கான தொகையைக் கேட்க, கடை உரிமையாளர் வாங்கிக் கொள்ள மறுத்தார்மனீஷ் அழைத்து வந்ததால் எங்களிடம் வாங்கிக் கொள்ள மாட்டாராம்….  அட தேவுடா!

இந்தக் கையேந்தி பவன்களில் விதம் விதமான பராட்டாக்களும், அம்ருத்ஸரி நான் வகைகளும், தந்தூரி ரொட்டிகளும் வகை வகையாக செய்து தருகிறார்கள். பலரும் அந்தக் கடைகளில் சாப்பிடுகிறார்கள். சுத்தமாக இருப்பதால் நல்ல விற்பனை ஆகிறது. காலை நேரத்திலேயே இப்படிச் சுடச் சுட பராட்டாக்களை சாப்பிட்டு விட்டதால் தொடர்ந்து பயணிப்பதில் கஷ்டமில்லை.

ஓட்டுனர் ஜோதியும் அதற்குள் காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அங்கேயே வந்து விட அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தவை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

32 கருத்துகள்:

 1. தங்கள் பயணமும் இடையே கையேந்திபவன்கள் பற்றிய செய்திகளும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இணையத்திலிருந்து எடுத்துப் போட்ட படங்களுடன் தாங்கள் தந்தூரி பாராட்ட சாப்பிட்டது பற்றி விளக்கியதை படித்ததும் உடனே தந்தூரி பாராட்ட சாப்பிட்ட ஆசை வந்தது.மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   நீக்கு
 6. பரோட்டாக்கள் நன்றாக இருக்கின்றன. சாப்பிட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 7. பரோட்டாவில் வெண்ணெயைத் தடவித் தரும்போது நல்ல சுவையாக இருக்கும்..
  என்றும் நினைவிலிருக்கும் சுவை!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 8. பயணம் தொடர ...
  நாங்களும் உங்களை தொடர்கிறோம்..
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 9. உங்களோடு பயணிப்பது இதமாக உள்ளது. இவ்வார கையேந்தி பவனும் நன்று. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. கையேந்தி பவன்கள் சுவை மிகுந்தவை
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. காலையிலே என்றால் மதியம் சாப்பிட கூட தேவையில்லை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. ஆமாம் வீட்டில் என்றால் காலை வேளையில் டீ கூட அவர்கள் ப்ளெயின் பராத்தா சாப்பிடுவார்கள். கடைகள் திறந்திருக்காது. நாங்கள் இந்த தந்தூர் ரொட்டியை ஓரிரு சமயம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறோம். சுவையான பதிவு சகோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 13. பயணம் அருமையான சாப்பாட்டையும் அசைபோட்ட வாரு .தொடர்கின்றேன்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 14. ம்ம்ம்ம்ம் தந்தூரி பராட்டா நாக்கில் நீர் வரவழைக்கிறது....நிறைய சாப்பிட்டிருக்கின்றோம்....வீட்டிலும் செய்வதுண்டு என்ன இது போன்ற தந்தூரி இல்லை....பேக்கிங்க் ஓவனில் க்ரில் மோடில்....செய்வதுண்டு.

  கீதா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 15. தந்தூரி ரொட்டி, கையேந்தி பவன் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

   நீக்கு
 16. பயணங்களில் சாப்பாடுதான் சில சமயம் பிரச்சனை ஆகிவிடும். ஆனாலும் சமாளிச்சுருவேன் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தப் பகுதிக்குச் செல்கிறோமோ அப்பகுதி உணவு எனில் பிரச்சனை இருப்பதில்லை. அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று தோசை தேடினால்....

   வட இந்தியாவாது பரவாயில்லை! வட கிழக்கு மாநிலங்களில் தான் உணவு பிரச்சனை அதிகம்! பெரும்பாலும் அசைவம்! ஆனாலும் சமாளித்து விட வேண்டியது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....