எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 1, 2015

ஃப்ரூட் சாலட் – 134 – 14 வயது சிறுவனின் தீரம் – பாங்க்ராவும் பரதமும்இந்த வார செய்தி:

 நன்றி: இணையம்

முஸ்லீம் கான் – 14 வயது சிறுவன் – உத்திரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் கங்கைக் கரையின் ஓரமாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கங்கையை கடக்க முயன்று கொண்டிருந்த ஐந்து பெண்களைப் பார்த்திருக்கிறார். அப்போது ஒரு சிறுமி கங்கையின் வேகத்தில் தடுமாறிட, ஐந்து பெண்களும் ஒருவரை பிடிக்க மற்றொருவராக தண்ணீரில் தத்தளித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த அடுத்த நிமிடம், எதைப் பற்றியும் கவலை கொள்ளாது, தன் நீச்சல் திறமையின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டு கங்கையில் பாய்ந்து விட்டார்.

மூன்று பெண்களை, அவர்களது தலைமுடியைப் பிடித்து காப்பாற்றி இருக்கிறார் முஸ்லீம் கான் எனும் அந்தச் சிறுவன். ஆனாலும் இரண்டு அஃப்ரோசா [15 வயது], குல்ஷன் [14 வயது] ஆகிய இரு சிறுமிகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. மூன்று பேரைக் காப்பாற்றி விட்டாலும் இன்னும் இரண்டு பேரையும் காப்பாற்றி இருந்தாலும் இன்னமும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று சொல்லும் அந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம் உண்டாக எனது பிரார்த்தனைகள்.

தீரச் செயல் புரிந்த அந்த இளைஞனுக்கு அரசாங்கம் பாராட்டையும் உதவிகளையும் செய்ய வேண்டும். கங்கையின் பிரவாகத்தில் இப்படி நீச்சல் அடிப்பவருக்கு நல்ல பயிற்சி கொடுத்து நீச்சல் போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய வேண்டும். செய்யுமா உத்திரப் பிரதேச/பாரத அரசாங்கம்?

இளைஞர் முஸ்லீம் கானுக்கு இந்த வாரப் பூங்கொத்து!


இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:


பழகியவர்கள் பிரியும் போது கூட வலிக்கவில்லை.... 
அவர்கள் பழக்கம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்ளும்போது தான் வலிக்கிறது.....
இந்த வார காணொளி:

பாங்க்ரா ஆடிய கால்கள் பரதமும் ஆடும்!.....
Wah Sardarji Tussi Great Ho!


North meets South Amazing dancing style.ഒരു സർദാർജിയുടെ അടിപൊളി ഡാൻസ് ......An awesome dance number
Posted by Subi Suresh on Wednesday, December 3, 2014இந்த வாரக் குறும்படம்:

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம்....
படித்ததில் பிடித்தது:

What is the difference between 
I Like you
I Love you!


Beautifully answered by Buddha....

Buddha's answer was so simple.... "When you like a flower, you just pluck it. But when you love a flower, u water it daily.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. முதல் செய்தியை உங்கள் அனுமதியுடன் பாஸிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

  இற்றை அருமை.

  குறுஞ்செய்தியும்.

  டான்ஸ் வாட்சப்பில் பார்த்திருக்கிறேன்!

  குறும்படம் பின்னர்தான் பார்க்கணும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்லெண்ணத்தைப் பரப்பும் குறும்படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. என்ன இந்தப்பெண்கள் இப்படி:( கங்கையைப் படகில் கடக்கக் கூடாதா?
  முஸ்லீம் கான்... நல்லா இருக்கணும். மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. முஸ்லீம் கான் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  குறும்படம் மிகவும் பிடித்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 5. இந்த வார பழக்கலவையில் குறும்படமும் புத்தரின் பதிலும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
  2. அந்த இளைஞனின் அற்புதமான உதவியைப் படித்து மெய் சிலிர்த்தது.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. அனைத்துமே அருமை.முஸ்லீம் கானுக்கு சிறப்புப் பாராட்டு. தாங்கள் படித்ததில் பிடித்தது எங்களுக்கும் அதிகம் பிடித்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. இளைஞர் முஸ்லீம் கானுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

  நானும் தருகிறேன் உங்களோடு சேர்ந்து! நலமா ! நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 8. தீரச்செயல் புரிந்த கான் - நலம் பல பெற்று நல்வாழ்வு வாழ்க!..

  பதிவின் மற்ற அனைத்தும் அருமை..
  புத்தரின் பொன்மொழி - சிந்தையில் குடி கொண்டது.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. Buddha's answer was so simple! Yes, I like it! I like it! I love Buddha.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 10. முஸ்லிம் கானுக்கு பராட்டுக்கள்

  பரதம் இனிமை

  அன்பின் காணொளி மனதை தொட்டது

  புந்தரின் பதில்..விருப்பம், அன்பின் விளக்கம் அருமை சகோ. தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 11. பதிவில் அனைத்துமே ரசிக்க வைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. Muslim Khan story is so endearing. thanks Venkat. both videos are very nice. especially the short movie..I hope that boy gets recognised. I still cannot figure out what those girls were doing without the guidance of elders. So sad.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 13. சிறுவனின் தைரியமும் மனித நேயமும் பிரமிக்க வைக்கிறது...அரசாங்கம் அக்கறை இன்றி அசட்டை செய்தாலும் அங்குள்ள பெரிய மனிதர்கள் யாராவது ஏதோ ஒரு வகையில் இச்சிறுவனின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவலாம்...அப்படி ஒரு உதவி கிடைக்கும் என்று நம்புவோம்.

  புத்தரின் வார்த்தைகள் மனதை கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.

   Delete
 14. முஸ்லீம் கானுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. முஸ்லீம் கானுக்குப் பாராட்டுக்கள். பரத நாட்டியம் ஆடும் சர்தார்ஜி சூப்பராக ஆடுகிறார். நடனம் தெரிந்தவராக இருப்பாரோ? குறும்படத்தின் செய்தி மனதைத் தொட்டது. புத்தரின் விளக்கம் அருமை. முஸ்லீம் கானின் கருணை மிகுந்த செயல், குறும்படம், புத்தரின் விருப்பம், மற்றும் நேசிப்பிற்கான விளக்கம் எல்லாம் ஒன்றுக்கொன்று complimentary ஆக அமைந்தது தற்செயலா?
  அருமையான பழக்கலவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
  2. //What is the difference between
   I Like you
   I Love you!

   Beautifully answered by Buddha....

   Buddha's answer was so simple.... "When you like a flower, you just pluck it. But when you love a flower, u water it daily. //

   புத்தர் காலத்தில் ஆங்கிலம் இருந்ததா அல்லது புத்தர் ஆங்கிலம் like love போன்றவற்றை உருவாக்கினாரா.

   தலாய் லாமா சொன்னார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

   அது சரி like love என்பவற்றை எப்படி தமிழில் சொல்வது. விருப்பம் காதல் என்றா? காதல் என்றாலே தமிழில் வேறு அர்த்தம் ஆகிவிடுகிறதே.

   --
   Jayakumar

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. நெகிழ வைக்கும் செய்திகள் .. மகிழ வைக்கும் ஒளிப்படக்காட்சி, புத்தரின் அருமையான விளக்கம் என களைக்கட்டுகிறது ஃ புருட் சாலட்.. Keep it up ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார் ஜி!

   Delete
 17. ஒவ்வொன்றும் அசத்தல் புத்தரின் விளக்கம்,பென்சில் தத்துவம் சிறுவனின் வீரம் அருமையோ அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 18. முஸ்லீம் கானுக்கு பாராட்டுக்கள்! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 19. முஸ்லிம்கானின் தீரச்செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது. விருப்பத்துக்கும் நேசத்துக்குமான வேறுபாடு - புத்தரின் பதிலில் மனம் ஈர்க்கிறது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 20. குறும்படம் நெகிழ்த்தியது.. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 21. முஸ்லீம்கானுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 22. Like - ஆசை. இதில் Own பண்ணவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். Love - காதல். இதில் நேசம்தான் இருக்கும். தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிரதானமாகாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 23. மிக அருமையான பகிர்வு. முஸ்லிம்கானின் தீரச்செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது. எல்லாமே ஜோராகத்தான் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 24. முஸ்லிம்கானின் செயல் பாராட்டிற்குரியது...

  சிங்கின் பரதனாட்டியம் சிரிப்புடன் ரசிக்க வைத்தது...

  இறையும், குறுஞ்ச்செய்தியும் அருமை...

  டாப் குறும்படம்.....அதுவும் இறுதியாக அந்த நாய்குட்டிகளை மழையில் நனையாமல் செய்வது அருமை பப்பிஸ் ஸோ க்யூட் அண்ட் ஸ்வீட்....
  புத்தரின் பதில் அருமையான ஒரு பாடம்...பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....